படிச்சு முடிக்கிற இடத்துல மட்டுமில்ல அதுக்கு பிறகு வருகின்ற முக்கியமான கட்டங்களில் எல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்!
டீசண்ட் ஒரு வேலை கிடைச்சா போதும்?
டீசண்டான ஒர்க் பண்ற பையன் கிடைச்சா போதும்? இன்னும் பலவிதமான டீசண்ட் கோட்பாடுகள் இருக்கு !
இதுல மிக முக்கியமான பெரும் ஆதரவோட இருக்கிற விசயம் டீசண்ட் ஒர்க் - இதை எந்த ஸ்கேல் வைச்சு அளந்து சொல்லியிருக்காங்கன்னுல்லாம் தெரியாது! டீசண்டான வேலை என்பதே, நாம் எதிர்பார்க்கின்ற அதிகபட்ச தேவைகளாகவே இதுவரையிலும் இருந்துவருகின்றது -அதற்கேற்ற வகையில் நிறுவனங்களோ அல்லது அரசோ தலையாட்டுவதும் அரிது!
ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு விதமான ஸ்கேல் கொண்டு ஃபிக்ஸ் பண்ணிக்கிறதுதான் டீசண்ட் ஒர்க் ரூல்!
மாசா மாசம் சம்பளம் கரீக்டா வரணும்,வருசத்துக்கு போனஸ் கரீக்டா வரணும் லீவு நாள் ரொம்ப குறைச்சலா இருக்ககூடாது அதிகமா வேலை செய்ய சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது என்பது ஒரு விதமான ஸ்கேல்!
எந்தவிதமான தொல்லையும் இருக்ககூடாது நாம நம்மளுக்குன்னு கொடுத்த வேலையை செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு நினைக்கறது இன்னொரு டைப்!
இப்படி ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொருவிதமான ஃபீலிங்க்ஸ் உண்டு - டீசண்ட் ஒர்க் அப்படிங்கற விசயத்தில ஆனா பொதுவாகவே நல்லதொரு தன்னார்வத்துடன் மகிழ்ச்சியாக செய்யப்படும் எந்த பணியுமே நல்ல பணிதான்!
உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மை குறைக்கப்படும் இந்நேரத்தில் தனிமனிதனுக்கு தகுதிக்குரிய வேலை அடிப்படை வசதிகள் மற்றும் சமூகத்தில் எல்லாருக்கும் உரிய இணையான அந்தஸ்தினை பெறுகிறார்களா என்று கண்காணித்திடவும், குறைகளினை நிறைவேற்றிடும் முயற்சிகளினை மேற்கொள்ளவும்,வேலை வாய்ப்புக்களில் பெண்களின் உரிமையினை நிலைநாட்டவும், உலக நாடுகளில் இயங்கிவருகின்ற தொழிலாளர் சங்கங்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 07 - WORLD DECENT WORK DAY
சரி நாம பாக்குற பணி டீசண்டானதுதானா அப்படின்னு எதாச்சும் நெருடல் வருதா? வரக்கூடாது ஏன்னா மனிதர்களால் செய்யக்கூடிய எல்லா பணிகளுமே கண்ணியமானதுதான் டீசண்டானதுதான் - அதை நேசிக்கும்போது!
டீசண்ட் ஒர்க் அப்படின்னு நாம எந்த எல்லைக்கோடும் (செட்) பண்ணிக்கிடவேண்டாம்! பொதுவாக நாம செய்யகூடிய பணிகளில், கீழ்கண்ட விசயங்களில் ஈடுபாடு காட்டினாலே போதும் அந்த பணி கண்டிப்பாக மிகுந்த மனநிறைவினை தரும் பணியாகவே இருக்கும்!
-வரையறுத்துக்கொண்ட உரிமைகள் எந்த நெருக்கடியிலும் விட்டுக்கொடுக்காத தன்மை (நமக்கென இருக்கும் ரெஸ்பான்ஸபிலிட்டியை விட்டுக்கொடுக்காதிருத்தல்)
-கட்டளையிடாமலே தம் கட்டுக்குள் எந்த ஒரு பணியினையும் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் (ஆர்டர் போட்டாத்தான் நான் என்னோட ஒர்க் செய்வேன்னு நினைக்காதிருத்தல்)
-தொடர்கின்ற அல்லது செய்துக்கொண்டிருக்கின்ற பணியினை தன்னார்வத்துடன், மேம்படுத்திக்கொள்ள முயலும் தன்மை (நம்ம பணியினை இன்னும் எப்படியெல்லாம் ஃபைன் ட்யூன் பண்ணி செய்யமுடியும் அப்படிங்கற ஆர்வம்)
டிஸ்கி:-அடைப்புக்குறிகளில் நம்ம தமிழ்ல எழுதியிருக்கேன் கஷ்டமா இருந்தா சொல்லுங்க !
23 பேர் கமெண்டிட்டாங்க:
//எல்லா பணிகளுமே கண்ணியமானதுதான் டீசண்டானதுதான் - அதை நேசிக்கும்போது!//
மிகச் சரி.
ஈடுபாடு காட்ட வேண்டிய விஷயங்களாகக் குறிப்பிட்டிருப்பவையும் அருமை.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ஆயில்யன்.
பாஸ் ஃபார்முக்கு வர ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம்.
குட்1
//பாஸ் ஃபார்முக்கு வர ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம்//
ஆமான்னு டீசண்டா சொல்லிக்கிறேன்!
வாழ்த்துகள் பாஸ்
//சரி நாம பாக்குற பணி டீசண்டானதுதானா அப்படின்னு எதாச்சும் நெருடல் வருதா? வரக்கூடாது ஏன்னா மனிதர்களால் செய்யக்கூடிய எல்லா பணிகளுமே கண்ணியமானதுதான் டீசண்டானதுதான் - அதை நேசிக்கும்போது!//
மிகச்சரியான வார்த்தைகள்...
கடைசியா சொன்ன இரண்டாவது பாயிண்ட் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. நானும் முயற்சி செய்றேன்.
க. பாலாஜி...(மயிலை)
(balasee.blogspot.com)
டீசண்டா இருக்கு பதிவு. டீசண்டா எழுதியிருக்கீங்க... :-))
Decent post boss !
Mike Rowe இன் Dirty Jobs Program பாத்தா, நம்ம செய்யுற வேலை ரொம்ப Decent ஆ தெரியும்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பாஸ் பதிவு டீசண்டா இருக்குன்னு சொல்லலாம்னு வந்தா அதையே நிறைய பேரு சொல்லிட்டாங்க :)
இருந்தாலும் சொல்றேன் “டீசண்டான பதிவு” பாஸ் :)
பாஸ்..டீசண்டா பின்னூட்டங்கள் பெற்ற இடுகை பாஸ்!! ஹிஹி!!
/
டீசண்டான ஒர்க் பண்ற பையன் கிடைச்சா போதும்? இன்னும் பலவிதமான டீசண்ட் கோட்பாடுகள் இருக்கு !/
இதுதான் இந்த இடுகைக்கே காரணமா பாஸ்?!! :))))
/
டிஸ்கி:-அடைப்புக்குறிகளில் நம்ம தமிழ்ல எழுதியிருக்கேன் கஷ்டமா இருந்தா சொல்லுங்க !/
அதை மட்டும்தான் படிச்சி புரிஞ்சுக்கிட்டேன் பாஸ்!! :)) டீசண்ட் ஒர்க் பாஸ்!! :))
/டீசண்ட் ஒரு வேலை கிடைச்சா போதும்?
டீசண்டான ஒர்க் பண்ற பையன் கிடைச்சா போதும்? இன்னும் பலவிதமான டீசண்ட் கோட்பாடுகள் இருக்கு !/
உங்க கடந்த கால வாழ்க்கையையும் தற்போதைய நிலையையும் இரண்டே வாக்கியத்துலே என்னமா சொல்லிட்டீங்க பாஸ்!! சுருங்க சொல்லி விளங்க வைக்கறதுலே நீங்கதான் பாஸ்!! :))
செய்யும் வேலையைத் திருப்தியுடனும் அக்கறையுடனும் செய்தாலே டீசென்ட் வந்திடுமே.
இதைத்தான் எம் பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள் "செய்யும் தொழிலே தெய்வம்"ன்னு.
அண்ணே நீங்க ஒரு டீசண்ட் ண்ணே ;))
//எல்லா பணிகளுமே கண்ணியமானதுதான் டீசண்டானதுதான் - அதை நேசிக்கும்போது//
குட்...
அன்புடன்,
அம்மு.
//நாமக்கல் சிபி said...
//பாஸ் ஃபார்முக்கு வர ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம்//
ஆமான்னு டீசண்டா சொல்லிக்கிறேன்!
//
நானும் சொல்லிக்கறேன்.
//நாமக்கல் சிபி said...
//பாஸ் ஃபார்முக்கு வர ஆரம்பிச்சதுல ரொம்ப சந்தோஷம்//
ஆமான்னு டீசண்டா சொல்லிக்கிறேன்!
//
நானும் ஆமான்னு டீசண்டா சொல்லிக்கறேன்.
ரொம்ப டீசன்ட்டான பதிவு அண்ணா... :)
டீசண்ட் வொர்க்கை பத்தி டீசண்ட் கம் டிஃபெரெண்ட்டா சொல்லியிருக்கீங்க டீசண்ட் பாஸ் :)
வெரி டீசண்ட் இடுகை - டீசண்டா இருக்கு - இப்படித்தான் டீசண்டா வேலை செய்யணும் - எங்கே வுடுறாணுங்க
ஆயில்யன்,
எல்லோருமே டீசண்டா எழுதிட்டீங்கனு சொல்லிட்டாங்க. நா வேறென்ன சொல்றது. டீசண்டா ஒதுங்கிக்கிறேன்.
Post a Comment