கவியரசரின் பிறந்த நாளில்..!

Photo  Sharing and Video Hosting at Photobucket


உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.

உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.

- கவியரசு கண்ணதாசன்
கவியரசரின் பிறந்த நாளில் -
ஜூன் 24 1927

20 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.//

அரசவாக்கு பின்பற்றப்பட வேண்டியதே!!

said...

மறைந்தாலும் நம் மனங்களை ஆண்டபடியேதான் இருக்கிறார் கவியரசர்.

மிக நல்ல பகிர்வு ஆயில்யன்.

நன்றி.

said...

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள்.//

இது தான் சூப்பரப்பு.. :) மேலே சொன்னதெல்லாம் கேக்கறேன் பேர்வழின்னு எல்லாஇடத்திலயும் முட்டாள் ஆக கூடாதில்ல..

said...

"எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் ,இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்.கவியரசரின் பிறந்தநாளில் நம்முடைய விருப்பமாக இருக்கட்டும்.

said...

கவியரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Anonymous said...

நன்றி ஆயில்யன் :)

said...

கவியரசருக்கு மனமார்ந்த வணக்கங்கள் ;)

said...

தமிழர்கள் அனைவரும் கவியரசுவின் நினைவைப் போற்றுவோம்...

said...

சொன்னவாரே செய்தவர்\

" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்.
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலுமெ எனக்கு மரணமில்லை."

வாழ்க கண்ணதாசன் புகழ்.

said...

ஆபில்யன்,அருமையான பகிர்வு.

சாந்தி நிலையம் திரை படத்தில் வரும் பாடல் நான் சிறுமியாய் இருக்கும் போது அடிக்கடி பாடும் பாடல்.

ஒவ்வொரு வரியும் அற்புதமானவை.

இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.

அவருடைய அனுபவ வார்த்தைகள்
பின்பற்ற வேண்டியவையே.

said...

மிக நல்ல பகிர்வு ஆயில்யன்.

கண்ணதாசருக்கு இந்த தாசனின் பணிவான வணக்கங்கள்!

said...

வாழும் கவிக்கு வாழ்த்துக்கள்

said...

சொன்னவாரே செய்தவர்\

\\" மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்.
அவர் மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலுமெ எனக்கு மரணமில்லை."

வாழ்க கண்ணதாசன் புகழ்.\\

:-))

said...

கானா பிரபா said...

வாழும் கவிக்கு வாழ்த்துக்கள்...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உங்களையா சொல்றாரு...?

said...

மனிதருள் மாணிக்கம்...

போற்றிப்புகழவேண்டிய தெய்வம் கவி கண்ணதாசன் நினைவை கூர்ந்தமைக்கு நன்றி ஆயில்ஸ் பாஸ்...

said...

நல்ல பதிவு.. கவியரசர் புகழ் வாழ்க!!

said...

நல்லதொரு பதிவு ஆயிலயன்.
இந்த எண்ணத்தை நானூறு பதிப்பாகக் கூடப் போடலாம். எத்தனை கோடி எண்ணங்களை மனதில் தூவினார் அவர்.
கவிஞருக்குப் பிறந்த நள் வாழ்த்துகள். அவரை நினைக்க வைத்த உங்களுக்கும் தான்.

said...

//ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்// :)

நினைவாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஆயில்யன்.

said...

//புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.//

said...

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்::))

thanks for ur post! nice its