ஜி ஃபார் GIS


காலேஜ்ல படிச்சுக்கிட்டே இருக்கற காலகட்டத்தில ஜாப் சர்ச் பண்ணின ஆளுங்களா இருந்தா கண்டிப்பா இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கும் - ஆப்ஷன் நிறையா இருக்கேன்னு நினைச்சு சந்தோஷம் ஒரு பக்கம் - டெஸ்க்ரிப்ஷன்ங்கற பேர்ல வேலைக்கு சம்பந்தமே இல்லாம நமக்கு காலேஜ்ல கத்துக்க வாய்ப்பில்லாத நிறைய நிறைய விசயங்களை ரெக்கொயர்மெண்டா <போ>கேட்டிருப்பாங்க அதை நினைச்சு துக்கம் கண்ணை அடைச்சு உலகமே இருண்ட மாதிரி ஆகிடும் !

லைட்டா படிச்சு முடிச்சுட்டு ஒடியாந்துட்டா படிப்புக்கேத்த மாதிரி கை பை நிறையிற அளவுக்கு ஒரு வேலை கெடைச்சுப்புடும் சீக்கிரமே ஊர்ல பெரபலமாகிடலாம்ன்னு போட்ட தப்பு கணக்குகள் அப்புறம் அருணாச்சலம் ரஜினி கணக்கா ஃபிகர் வீட்டு முன்னாடி பத்து காரை நிப்பாட்டலாம்னு போட்ட கணக்கெல்லாம் அப்படியே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சரிஞ்சுக்கிட்டு வரும்! அந்த டைம்ல வரும் பாருங்க ஒரு நினைப்பு - அட அவுங்க கேட்டிருக்கிறதை படிச்சு கத்துக்கிட்டா போச்சுன்னு - செம டெரர்!

அப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு!

அப்படி ஒரு ஆறு அளவுக்கு ஓடிக்கிட்டிருக்கிற கானல் நீர்தான் ஜிஸ்ஸு! அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது! பெஸ்டா பண்ணனும்ன்னா 1 ஹைதராபாத் போங்க இல்லாட்டி பம்பாய்க்கு ஓடிப்போய்டுங்கன்னு எதோ ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு!

அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு கிணற்றுதவளை மூளையோட படித்துறை பாண்டி கணக்கா, யெம்மா தைரியமா இரும்மா உம்புள்ள இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி காட்டுறேன்மா ரேஞ்சுக்கு சொல்லிப்புட்டு லோக்கலயே ரெண்டு மூணு பொட்டியில தட்டுற விசயத்தை கத்துக்கிட்டு ஒருவழியா வந்து சேர்ந்தாச்சு! ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்காட்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும்! அது மாதிரிதான் ஜிஸ்!ஏன்னா இன்னிக்கு உலக ஜிஸ் [GIS] நாள் !

இன்ஜினியரிங்க் படிப்புலயே செம கடியான சப்ஜெக்ட்டு சொல்லணும்ன்னா ஜியோலஜி தான் பெரும்பான்மை ஆதரவோட தனிச்சு நிக்கிறது அதுக்கு பிறகு எட்டிப்பார்ப்பது கணக்கு!

GIS பத்தி இண்ட்ரோ லெவல்ல சொல்லணும்னா சாட்டிலைட்கள் மூலம் பெறப்படுகின்ற டிஜிட்டல் இமேஜ்களை கொண்டு புவியில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும்,இயற்கை சீரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும்,இயற்கை வளங்களினை பற்றிய தகவல்களை பெறவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

GIS [Geographic Information Systems ] அடிப்படையா ஜியோலஜி நிறைய தெரிஞ்சிருக்கணும்! புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு! புதிது புதிதாய் சாப்ட்வேர்களின் அறிமுகம் மட்டுமின்றி நிலத்தினை -உலகினை - பற்றிய பல புதிய அறிவியல் தகவல்களும்,ஆராய்ச்சிக்களும் நடைப்பெற உதவிபுரிகின்றன.

GIS பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கிடணும்ன்னு ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த பக்கம் போய் பாருங்களேன்...!


GIS விக்கிபீடியா -
Guide to GIS

21 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல தகவல்கள்.

ஜிஸ் ஆசை புஸ்னு போனாலும்
படித்துறைப் பாண்டி பலபடி தாண்டி
வெற்றிக்கொடி பிடித்து
வியக்கத்தான் வைக்கிறார்
இனியும் வைப்பார், பாருங்க:)!

said...

பாஸ்...நீங்க ஒரு ஜீனியஸ் பாஸ்!! GIS பத்தி பிச்சு ஒதறிட்டீங்க போங்க....நாங்க இந்த பேப்பரை ஆப்ஷனிலே விட்ட ஞாபகம்! :)) பை தி வே பாஸ்..இன்னும் GIS முன்னேறலை போல இருக்கே..இந்தியாலே..ஏன் சொல்லுங்க?? நீங்கதான் தோஹா போய்ட்டிங்க இல்ல!! எப்பூடி!!

said...

பாஸ் குட் போஸ்ட்!

said...

/இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி /

பாஸ்...ஒரே ஆனந்த கண்ணீரா வருது பாஸ்!! சொன்னதை செஞ்சு முடிச்சீங்களா பாஸ்!! :))

said...

GIS யைப் பத்தி சுருக்கமா அழகா சொல்லியிருக்கீங்க பாஸ். இப்படி உலகத்துல இருக்குற எல்லா ‘நாள்’களையும் தெரிஞ்சு வச்சு ஒரு மினி ‘விக்கிபீடியா’வாவே நீங்க இருக்கீங்க பாஸ்

said...

//பாஸ்...ஒரே ஆனந்த கண்ணீரா வருது பாஸ்!! சொன்னதை செஞ்சு முடிச்சீங்களா பாஸ்!! :))//

பாஸ் அதுக்கு அஞ்சு நிமிச பாட்டு வேணும். பிண்ணனியில ‘லாலாலாலா’ பாட ஆள் வேணும். நீங்க ரெடியா?

Anonymous said...

பாஸ், நான் கூட படிக்கும்போது Earn while you learn ல வேலை பாத்து சம்பாதிச்சிருக்கேன் பாஸ்.

said...

/
அப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு!/

அது என்ன சில... "பல" ன்னு உண்மையை உரக்கச் சொல்லுங்க பாஸ்...!! ஹிஹி

said...

/சந்தனமுல்லை said...

பாஸ்...நீங்க ஒரு ஜீனியஸ் பாஸ்!! GIS பத்தி பிச்சு ஒதறிட்டீங்க போங்க....பை தி வே பாஸ்..இன்னும் GIS முன்னேறலை போல இருக்கே..இந்தியாலே..ஏன் சொல்லுங்க?? நீங்கதான் தோஹா போய்ட்டிங்க இல்ல!! எப்பூடி!!/


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

said...

\\ ☀நான் ஆதவன்☀ said...
GIS யைப் பத்தி சுருக்கமா அழகா சொல்லியிருக்கீங்க பாஸ். இப்படி உலகத்துல இருக்குற எல்லா ‘நாள்’களையும் தெரிஞ்சு வச்சு ஒரு மினி ‘விக்கிபீடியா’வாவே நீங்க இருக்கீங்க பாஸ்
\\

ரீப்பிட்டே ;)

said...

பாஸ்

அய்யோ பாஸ்

ஆமாம் பாஸ்

எஸ் பாஸ்

சும்மா பாஸ்

காசு பாஸ்

GIS பாஸ்

ஆதவன் பாஸ்

முல்லை பாஸ்

முடியல பாஸ்

அவ்வ்வ்வ்வ்வ்வ்fவ்வ்வ் பாஸ்

ஆயில்யன் பாஸ்

என்ன கொடுமை பாஸ்

விட்டுடுங்க பாஸ்

நல்லாயிருங்க பாஸ்

நான் ஆஸ்பித்திரிக்கு போறேன் பாஸ்....

ரைட்டு பாஸ்...

said...

//நிஜமா நல்லவன் said...

/சந்தனமுல்லை said...

பாஸ்...நீங்க ஒரு ஜீனியஸ் பாஸ்!! GIS பத்தி பிச்சு ஒதறிட்டீங்க போங்க....பை தி வே பாஸ்..இன்னும் GIS முன்னேறலை போல இருக்கே..இந்தியாலே..ஏன் சொல்லுங்க?? நீங்கதான் தோஹா போய்ட்டிங்க இல்ல!! எப்பூடி!!/


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்//

ஆயில் பாஸ் இந்த பாஸ் எப்பவும் வெறும் ஸ்மைலி இல்லைன்னா “ரிப்பீட்டு” மட்டும் எஸ்ஸாகிடுறார்....என்னென்னு கேளுங்க பாஸ்

said...

பை தி வே பாஸ்..இன்னும் GIS முன்னேறலை போல இருக்கே..இந்தியாலே..ஏன் சொல்லுங்க?? நீங்கதான் தோஹா போய்ட்டிங்க இல்ல!! எப்பூடி!!//

முல்லைக்கு என் பாராட்டுக்கள்

said...

☀நான் ஆதவன்☀ said...
பாஸ் குட் போஸ்ட்!

ரிப்பீட் பாஸ்

said...

அப்பவே நினைச்சேன் நீங்க இப்படித்தான்னு... படிப்ஸா?? ;))))))))

said...

ஏன் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பழைய காலப் படம் மாதிரி ,
பாஸ் செய்துகிட்டு இருக்கீங்க:))
அதான் இப்ப டெரர் லாங்க்வேஜா!!!

ஜிஸ் பத்தி இன்னும் நீங்களே உங்க எழுத்திலயே சொல்லுங்க. இன்னும் கத்துக்கறோம்.
''படித்துறை பாண்டி''
இவரைப் பத்திக் கதை இருந்தாலும் சொல்லுங்க:)

Anonymous said...

எனக்கு ஜியாக்ரஃபி ரொம்ப புடிச்ச சப்ஜக்ட். எங்கயாச்சும் போனா அந்த ஊரோட மேப் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கும்.. :) ஆனா டெக்னாலஜிக்கும் நமக்கும் ஒத்து வராதுப்பா

said...

hmmm...aaranglaas geographye arrears vachu padichen..ithula GIS!!! romba kushtamappa

said...

சந்தனமுல்லை said...
பை தி வே பாஸ்..இன்னும் GIS முன்னேறலை போல இருக்கே..
இந்தியாலே..ஏன் சொல்லுங்க?? நீங்கதான் தோஹா போய்ட்டிங்க இல்ல!! //

repeatu ;)

said...

//ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு!//
அதுசரி... யாரு ஃ ப்ரெண்டுன்னு காட்ட வேணாமா...

//ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும்!//
இங்க என்னமோ உள்குத்து இருக்கு???

அருமையான பதிவு.

said...

அன்பின் ஆயில்ஸ் பாஸ்

ஜிஸ் - தெரியாடஹ் சப்ஜெக்ட் - வெளுத்து வாங்குங்க

பாஸ் - சின்ன வயசுல ஆசைப்பட்டதெல்லாம் இப்ப நிறைவேறினாக் கூட சரிதான் பாஸ்

நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்