மதியம் வெள்ளி, அக்டோபர் 17, 2008

கண்ணதாசன் நினைவு நாளில்....

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!

நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்


கண்ணதாசன் நினைவு நாளில்....

சில பாடல் வரிகளுடன்..!

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி

>>>>>>>>>>>>>>>>>

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

>>>>>>>>>>>>>>>>>

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

>>>>>>>>>>>>>>>>>

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா..

>>>>>>>>>>>>>>>>>

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

>>>>>>>>>>>>>>>>>

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

>>>>>>>>>>>>>>>>>

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!

39 பேர் கமெண்டிட்டாங்க:

Unknown said...

Wow super anna..!! :)) Enakkum Kannadhasan romba pidikkum..!!:))

Anonymous said...

அருமையான பதிவு...

rapp said...

நான் என் வணக்கங்களை பதிஞ்சிக்கறேன்:):):)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு சிரித்தது
கருடா சௌக்கியமா?

யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.

கருடன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது.

யப்பா யப்பப்பா நமக்கும் கண்ணதாசனோட பாடல்கள் என்றால் உயிர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தேடிப் பிடிச்சு பதிவிடுவீர்களோ. அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

கண்ணதாசனின் அர்த்தமுள்ள் இந்துமதம் இணையத்தில் படிக்க கிடைக்குமா.
இருந்தால் லின்க் கொடுக்கவும்.

தமிழன்-கறுப்பி... said...

மறக்க முடியாத கவிஞர் ஒருவர்...

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

எடுத்துப்போட்டிருக்கிற வரிகள் எல்லாம் சூப்பர்...!!

நல்ல படங்களும் ரசனையான பாடல்களும்...

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு!

அமுதா said...

எவ்வளவு அழகான வரிகள் அவரது பாடல் வரிகள். நினைக்க வைத்ததற்கு நன்றி

கானா பிரபா said...

கண்ணதாசன் சொன்னதே அவருக்கு பொருத்தமானது "நான் நிரந்தரமானவன், எப்போதும் எனக்கு அழிவில்லை"

gayathri said...

hai friend naan ippa than unga pathiva pakuren nalla than eluthe irukenga

ராமலக்ஷ்மி said...

"கண்ணதாசன் நினைவு நாளில்...."
நெஞ்சிலிருந்து நீங்கவே முடியாத
நினைவிலிருந்து அகலவே இயலாத
அற்புதமான வரிகளைப் பதிவிட்டு
அவருக்குப்
பெருமை சேர்த்து விட்டீர்கள் ஆயில்யன்!

Thamiz Priyan said...

கண்ணதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் உள்ளங்களில் இருந்து மறையவில்லையே

உண்மைத்தமிழன் said...

அன்பரே..

காவியக் கவிஞனின் கவிதை வரிகளுடன் நினைவு கூர்ந்திருக்கும் உமது நன்றியினில் நானும் கலந்து கொள்கிறேன்..

கவிஞரின் வாழ்க்கையே நமக்கு ஒரு பாடம்.. அவரது வார்த்தைகளே நமக்குக் கிடைக்கும் ஒரு ஆறுதல்..

வாழ்க கவிஞர் புகழ்..

வல்லிசிம்ஹன் said...

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்//

ithaivida Nam ammaavai yaaravathu solla mudiyuma.
AYILYAN THANKS THANKS THANKS.

THAMIZH FONTS VARALAI.SORRY.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யா ...

ராசா...

கலக்கிட்டீங்க...

எங்கயோ போய்ட்டீங்க...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

பத்தாம் வகுப்பு படிக்கும்போதே
அர்த்தமுள்ள இந்துமதம் வாங்கி
தந்த எனது பெருமைக்குரிய
தந்தையை இச்சமயத்தில் நினைவுகூறுகிறேன்!

நன்றி!!!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ அப்படியெல்லாம் இருந்திருக்கிறேன், ஆகவே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூற அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! - அர்த்தமுள்ள இந்துமதம்.

இவ்வரிகளும் இச்சமயத்தில் நினைவுகூற தக்கவை!.

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
Wow super anna..!! :)) Enakkum Kannadhasan romba pidikkum..!!:))
///

அட வெரிகுட்!

ஆயில்யன் said...

//Thooya said...
அருமையான பதிவு...
//
நன்றி :)

ஆயில்யன் said...

//rapp said...
நான் என் வணக்கங்களை பதிஞ்சிக்கறேன்:):):)
//

கொஞ்சம் அழுத்தி பதிஞ்சுட்டீங்க போல ஈசியா காப்பி பண்ணி எடுக்க முடியல :))))))

ஆயில்யன் said...

//AMIRDHAVARSHINI AMMA said...
பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு சிரித்தது
கருடா சௌக்கியமா?

யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.

கருடன் சொன்னது
இதில் அர்த்தம் உள்ளது.

யப்பா யப்பப்பா நமக்கும் கண்ணதாசனோட பாடல்கள் என்றால் உயிர்.
//

ம்ம் பாடல் வரிகளை டக்குன்னு எடுத்து சொல்றத பார்த்தாலே தெரியுது

ஆயில்யன் said...

//AMIRDHAVARSHINI AMMA said...
தேடிப் பிடிச்சு பதிவிடுவீர்களோ. அருமை
//
ஆமாம் வாழ்க்கையில ஒரு தேடல் இருக்கணும்ன்னு சொன்னதை நான் இது மாதிரி தான் பயன்படுத்திக்கிட்டு வரேனாக்கும்!

ஆயில்யன் said...

/AMIRDHAVARSHINI AMMA said...
கண்ணதாசனின் அர்த்தமுள்ள் இந்துமதம் இணையத்தில் படிக்க கிடைக்குமா.
இருந்தால் லின்க் கொடுக்கவும்.
//

இப்போதைக்கு வாய்ப்புக்கள் இல்லை என்றே நினைக்கிறேன் காலம் செல்ல செல்ல வரக்கூடும்!

ஆயில்யன் said...

//தமிழன்...(கறுப்பி...) said...
எடுத்துப்போட்டிருக்கிற வரிகள் எல்லாம் சூப்பர்...!!

நல்ல படங்களும் ரசனையான பாடல்களும்...
//

நன்றி தமிழன்! (கறுப்பி சேர்ந்துட்டாங்க போல! )

ஆயில்யன் said...

//ஜீவன் said...
நல்ல பதிவு!
//
நன்றி ஜீவன்

ஆயில்யன் said...

//அமுதா said...
எவ்வளவு அழகான வரிகள் அவரது பாடல் வரிகள். நினைக்க வைத்ததற்கு நன்றி
//

தாங்க்ஸ்க்கா!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
கண்ணதாசன் சொன்னதே அவருக்கு பொருத்தமானது "நான் நிரந்தரமானவன், எப்போதும் எனக்கு அழிவில்லை"
//

எத்தனை அருமையான வரிகள் அவை!
நன்றி தல!

ஆயில்யன் said...

//gayathri said...
hai friend naan ippa than unga pathiva pakuren nalla than eluthe irukenga
//

அட நம்ம ப்ரெண்ட்டு!

எப்பிடியோ கண்டுபிடிச்சு வந்துட்டீங்க அதுக்கும் நன்றிகள்!

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...
"கண்ணதாசன் நினைவு நாளில்...."
நெஞ்சிலிருந்து நீங்கவே முடியாத
நினைவிலிருந்து அகலவே இயலாத
அற்புதமான வரிகளைப் பதிவிட்டு
அவருக்குப்
பெருமை சேர்த்து விட்டீர்கள் ஆயில்யன்!
//
நன்றி ராமலஷ்மியக்கா!

ஆயில்யன் said...

/ தமிழ் பிரியன் said...
கண்ணதாசன் மறைந்தாலும் அவரது பாடல்கள் உள்ளங்களில் இருந்து மறையவில்லையே
//
நன்றி தமிழ்பிரியன் காலத்தால் அழியாத காவியங்களல்லவா படைத்து சென்றிருக்கிறார்!

ஆயில்யன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
அன்பரே..

காவியக் கவிஞனின் கவிதை வரிகளுடன் நினைவு கூர்ந்திருக்கும் உமது நன்றியினில் நானும் கலந்து கொள்கிறேன்..

கவிஞரின் வாழ்க்கையே நமக்கு ஒரு பாடம்.. அவரது வார்த்தைகளே நமக்குக் கிடைக்கும் ஒரு ஆறுதல்..
வாழ்க கவிஞர் புகழ்..
//

நன்றி உண்மைத்தமிழன்!

நீங்கள் கூறும் வார்த்தைகள் மிகச்சரி ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு கவிதைகளிலும் ஒவ்வொரு நூல்களிலும் நமக்கு சொல்லி சென்றவை ஏராளம்!

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்//

ithaivida Nam ammaavai yaaravathu solla mudiyuma.
AYILYAN THANKS THANKS THANKS.

THAMIZH FONTS VARALAI.SORRY.
//

நன்றி வல்லிம்மா!

MSK / Saravana said...

நான் கண்ணதாசனை கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன்.. பாடல்களை கேட்டதுமில்லை...
:((

Sangeeth said...

கண்ணதாசன் மதிரி ஒரு கவிஞன் இனி இந்த உலகத்தில் பிறப்பது சாத்தியமானு தெரியல. Share பண்ணினதுக்கு நன்றி!

குட்டிபிசாசு said...

ஆயில்யன்,

சினிமா கேள்வி-பதில் தொடர் விளையாட்டாம், நீங்களும் வாங்கோ!!

http://kuttipisasu.blogspot.com/2008/10/blog-post.html

நாணல் said...

அவரோட அர்த்தமுள்ள இந்துமதம் ரொம்ப பிடித்த நூல்..
எப்ப எனக்கு ஏன்டா வாழ்கைன்னு தோணுதோ, அர்த்தமுள்ள இந்து மதம் எடுத்து படித்தி விடுவேன்..
முதல் பாகத்தை முழுசா படிக்கறத்துக்கு முன்னாடியே தெளிவாகிடுவேன் ... ஆனால் எல்லா பகுதியையும் படிக்கணும்னு ரொம்ப ஆசை...