Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

கடகம்

டிஸ்கி:- பதிவெழுத வந்த கதையை பத்தி சொல்லுங்கன்னு சிநேகிதி கூப்பிட்டாங்க அப்புறமா தம்பியண்ணே கோபி கூப்பிட்டாங்க ஆனாலும் நேரம் காலம் ரொம்ப மோசமா போயிட்ட காரணத்தினால[இப்பவெல்லாம் ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்ய சொல்லி ரொம்ப கொடுமை பண்றாங்க!] ரொம்ப லேட்டாத்தான் எதோ எழுதிட்டேன்!

************************************************************************



நிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு!

2003 சகோதரர் மூலம் அறிமுகமான தமிழ் இணைய உலகம் நெட் செண்டர்களில் மாதத்துக்கு ஒரு முறை செல்லும்போது பார்க்கும் விசயமாகத்தான் இருந்துச்சு பிறகு சும்மா வெளையாட்டுக்கு ஒரு ப்ளாக் ரிஜிஸ்டர் பண்ணி வைச்சதோட சரி! அதுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் அப்புறம் வெட்டியா இருந்த காலகட்டத்திலதான் மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!

டிராக் பேக் செஞ்சு எப்படி நுழைஞ்சோம்ன்னு சொல்றதுக்கு பதில் நுழைஞ்ச பிறகு மனசில இருந்த விசயங்களை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேனுங்க!
எப்படியோ ஒரு வழியா பேரெல்லாம் செலக்ட்டி ப்ளாக்கு ஒபன் செஞ்சு அதுக்கு தோரணமெல்லாம் கட்டி தொங்கவிட்டப்பிறகுதான் ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!

டெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு பிறகு என்ன எழுதலாம் எழுதலாம்ன்னு நினைப்பே ரொம்ப டெரர் காமிச்சுக்கிட்டிருந்துச்சு சரி கொஞ்ச நாள் படிப்போம்ன்னு கம்முன்னு படிக்க ஆரம்பிச்சா,அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு - அதுக்குத்தான் எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னா மத்தவங்களை படிக்க ஆரம்பிங்க உங்களுக்குள்ளயே ஒரு நம்பிக்கை ஸ்ட்ராங்காயிடும்ன்னு எல்லாரும் அட்வைஸ் சொல்றாங்க - பள்ளிகூடத்து நினைப்பு ஊர் நினைப்பு அப்படின்னு ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்!

சாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க! ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க! அதை பாக்குற நமக்கு பீறிட்டு வர்ற கோபத்தை அப்படியே கொண்டாந்து ப்ளாக்ல கொட்டலாம்.அப்படித்தான் நானும் செய்ய நினைச்சேன் ஆனா செய்யல!

கலவர பூமியில வேடிக்கை மட்டும் பார்ப்போம்ன்னு ஒன்லி வாட்சிங்க்! - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம்! [அவுட் ஆப் சிலபஸ் போயிட்டேன் சாரி]

ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...!

ஆரம்ப கட்டத்தில பொழுது போகாத சூழலில் வேறு வழியே இல்லாத நிலையில் ப்ளாக் படிக்க துவங்கியதும் விடுமுறை நாட்களில் முழு இரவும் பதிவுகளை படித்து ஊர் ஞாபகங்களை மனசுக்குள் ரெப்ரஷ் செய்துகொண்டதும் தான் வழக்கமாய் அமைந்திருந்தது!

நாமும் எதேனும் கிறுக்க தொடங்கலாம் என்று ஆரம்பித்து எந்தவொரு எல்லைகோடும் வரைந்துகொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதிட - தொடர்ந்துகொண்டிருக்கிறேன்! துறை சார்ந்த பதிவுகளினை எழுத வேண்டும் என்ற நெடு நாள் ஆசை இன்னமும் மனசுக்குள்ள போட்டு பூட்டி வைச்சிருக்கேன் என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு!

இந்த சில காலங்களில் பதிவுலகில் நான் பெற்ற நட்புக்கள் - ஹாய் சொல்வதிலிருந்து, ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்.நட்புகளின் எண்ணிக்கை கூடவும்,இருக்கும் நட்புக்கள் இனி வரும் காலங்களிலும் கூட வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!

தீபாவளி

தீபாவளி பற்றிய என் கேள்விகளுக்கு பதிலளியுங்களேன் என்று நானானி அம்மா கூப்பிட்டிருந்தாங்க உடனே டக்குன்னு ஒடியாந்தாச்சு!

1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

சிறு குறிப்பு வரைக அப்படின்னு கொஸ்டீன் பேப்பர்ல பார்த்தாலே ஆஹா சிக்கிடுச்சுடா நம்ம கொஸ்டீனு ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு வந்து உக்கார்ந்துச்சு! (அதுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான்!) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு! இணையம்,நட்புக்கள் & உறவுகள் தொடர்பில் போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

வீட்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்த தருணங்கள் தான் ஞாபகத்துக்கு வருது ! இப்ப குடும்பத்துல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபொழுதில் ஒன்றாய் இணைந்து கொண்டாட விருப்பமாய் இருக்கிறது பணிச்சூழல் தடுக்கிறது!

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

தோஹா - கத்தாரில் இருக்கிறேன்!

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

என்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும்! சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது.! உறவுகளை பிரிந்து வந்திருந்தாலும் கூட இருக்கும் இடத்திலும் விழாக்காலத்தின் இனிய தருணங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகிறார்கள் இங்கு தீபாவளி கொண்டாடும் நட்புகள்!



5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
எப்பொழுதும் வாங்கி தைப்பதுதான் பழக்கம்! அதுவும் சிறுவயதில் ஒரு மாதத்திற்கு முன்பே டைலர் வீட்டிற்கு வந்து அளவெடுத்து சென்று விட்டு திரும்ப தைத்த துணிகளை கொண்டு வந்து தரும்போது - அதன் வாசம் பிடித்தப்படியே - வாங்கி வைத்துக்கொண்டு தீபாவளி கனவுகளில் மூழ்கிய நாட்கள் இப்பொழுது கொசுவர்த்தியாகிறது !

இந்த முறை ஊரிலிருந்து வரும்போதே தைத்துக்கொண்டுவந்து போட்டும் கொண்டாகிவிட்டது !

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

1ம்மில்ல!

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

இந்த முறை வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு உடன் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொண்டதோடு முடிவுற்றது - அரட்டைகளிலும் மின்னஞ்சல்களிலும் - வேலை பளு காரணமாக சிறப்பாய் 1ம் செய்ய இயலவில்லை (அட! நம்புங்கப்பா பிசியோ பிசி!)

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

ஊரிலிருந்து காலத்தில் 10 மணி வரையிலும் வெடிகள் வெடித்துவிட்டு,டிவியில் வந்து உக்கார்ந்துவிடுவேன்.- வெளியில் சுற்றுவது கிடையாது - தெருவில் வெடியை வைச்சுட்டு வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்துக்கொள்ளும் தைரியசாலிகள் மீது நம்பிக்கை வைத்து வெளியில் சுற்றுவது கிடையாது !

அதிக நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு வழங்கும் டிவிக்களால் கண்டிப்பாக விசேஷ நாளின் மகிழ்ச்சி சற்று குறைந்துதான் போகிறது!

9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்வேன்!

10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?

கயல்விழி முத்துலெஷ்மி - கண்டிப்பாக தீபாவளி சம்பந்தமாக சிறுமுயற்சி எதேனும் செய்திருப்பார்கள் அது தொடர்பில் பதிவு வரும் அதான் நான் முந்திக்கிட்டேன்

சந்தனமுல்லை - பப்புவோட இளம்பிராயத்தில் நொம்பத்தான் தலையை விட்டு டிஸ்டர்ப்பு செஞ்சாலும், என்னாமா நோட் பண்றாங்க...!( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே? - அவ்வ்வ்வ்வ்வ் )

ராமலக்ஷ்மி இவுங்ககிட்ட தீபாவளி பத்தி கேக்கலைன்னா எப்பூடி [கட்டாயம் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பத்தி, போட்டோக்களோட எதிர்பார்க்கிறேன் அக்கா.]

நிஜமா நல்லவன் - தீபாவளி கொண்டாடியது பத்தி சொல்றதை விட சின்ன வயசு கொசுவர்த்தி சுத்திவிடறதுக்குன்னே கூப்பிடறேன்!

32 கேள்விகள்.!

32 கேள்விகள் ஓரளவுக்கு பதில் சொல்லியாச்சு!

நான் பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நிக்கிறேன் நீங்க படிச்சு பார்த்துட்டு வாங்க...! (பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!)

****************************************
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அது வரவில்லை:-)
நானே வைத்துக்கொண்டேன். எனது சொந்தப் பெயரில் எழுதுவதைவிட இப்படியொரு புனைபெயர் வைத்து எழுதுவதில் ஒரு இரகசியக் குறுகுறுப்பு இருந்தது.சொந்தப் பெயரை யாராவது ஞாபகப்படுத்தவேண்டியிருக்குமளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் அதைப் பிடித்திருக்கிறது - தமிழ்நதியக்கா சொன்ன அதே பதில்தான் என் மனசில இருந்ததும்!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பாட்டி உடலால் எங்களை விட்டு பிரிந்த அன்று!

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அழகாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு கறுப்பு பேனாவில் எழுதி பார்ப்பது என்பது அலாதி ஆர்வம் :)

4. பிடித்த மதிய உணவு என்ன?

சாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

வாழும் வாழ்க்கை வானமாக இருந்தால் அதில் நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு வேண்டும் - வேண்டுகிறேன்

ஒரு ஸ்மைலி போதுமே - எல்லோருமே நண்பர்கள்தானே!

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்க பிடிக்கும் :) - ஆற்றில் குளிக்க அதிகம் பிடிக்கும்!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பொதுவான தோற்றம் - உடைகள்,முகப்பொலிவு
(ப்ரெஷா இருந்தா சரி நாம கொஞ்சம் பேச டிரைப்பண்ணலாம்ன்னு யோசனை வரும்! அதே டல்லா இருந்தா ஏற்கனவே தூங்கிக்கிட்டிருக்காரு எதுக்கு டிஸ்டர்ப்பண்ணனும் கம்முன்னு கிட ஸ்டைல்தான்!)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

ஆன்மீகம் !

டிரெஸ் சென்ஸ் :-(
அழகா ஒரு டிரெஸ் கூட செலக்ட் பண்ண தெரியலயே...???

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டுட்டேன் !

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் குடும்ப உறவுகள்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சாய்ஸ்ல விட்டுட்டேன் - இதெல்லாம் ஒரு கொஸ்டீனா? அப்படின்னு பத்தாவது பரீட்சையில கணக்கு கொஸ்டீன் பேப்பரை பார்த்து ஆன அதே டென்ஷன் மீண்டும் வந்துச்சு :)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சிஸ்டம் மானிட்டர் பார்த்துக்கொண்டு கந்த சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டு...!

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?

கோவிலில் குங்குமம் விபூதி எண்ணெய் நெய் கற்பூரம் என கலந்து வரும் ஒரு வாசம்

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தமிழ்பிரியன்

( ரெண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்காமதான்,எழுதுவாங்கன்னு ஒரு தைரியத்துலதான்! ரெண்டு பேர்கிட்டயும் பிடித்த விசயம்ன்னா, முக்கியமா எவ்ளோதான் வயசானாலும், இன்னும் 16ல இருக்கிற சின்னபசங்கதான்னு காமிக்கிறதுக்காக என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறது மட்டுமே!- கூப்பிட்டுட்டு போகட்டுமே..! அதனால என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது?)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

பப்பு பற்றிய குறிப்புக்களடங்கிய பதிவுகள் ( எப்படி இப்படி பொறுமையா வாட்ச பண்ணமுடியுது வாவ்..! என்று வியந்த தருணங்கள்! சனியனே என்று டென்ஷனாகும் அம்மாக்களுக்கு மத்தியில் ஆச்சி டிபரெண்ட் கேரக்டர்தான்)

நாமக்கல் சிபி அண்ணாச்சி - கலாய்த்தல்கள் !

17. பிடித்த விளையாட்டு?

முன்பு கிரிக்கெட் பிறகு கேரம் இப்பொழுது ஒன்றுமில்லை :(

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை

20. கடைசியாகப் பார்த்த படம்?

முழு நீள திரைப்படமெனில் - ஆண் பாவம் & கடலோர கவிதைகள் போன வாரம் பொழுது போகாத வெள்ளி கிழமையில

21. பிடித்த பருவ காலம் எது?

மார்கழி அதிகாலை பொழுதுகள் - இங்கு வந்த பிறகு ஊருக்கு செல்லும் விடுமுறை காலங்கள் - எந்த பருவமாகிலும்..!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் - ரொம்ப காலமா படிச்சுக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் ஸ்லோ நானு!


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


நாளுக்கு நாள் என்ற கணக்கு இல்லை! புரொபைல் படம் மாறும் பொழுதுகளில்...!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அதிகாலை வேளை ஆன்மீக பாடல்கள்

அனாவசியமான ஹாரன் சத்தங்கள்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தோஹா கத்தார் சில ஆயிரம் மைல்கள் இருக்கும்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஏதோ இருப்பதாக நினைக்கும் ஒரு திறமை இருக்கிறது

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இருவர் உரையாடுகையில் மூன்றாம மனிதரை பற்றி கேலி பேசுதல் - அந்த மூன்றாம் மனிதர் அங்கு இல்லாத வேளைகளில்..!

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மயிலாடுதுறை

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
தனக்கென்ற சிறப்பு தகுதி உடையவன் என்ற எண்ணத்தோடு வாழ்வில் பயணித்தல்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
_____________________________________
அப்பாலிக்கா ஃபில் அப் செஞ்சுக்கிடலாம்ன்னு இன்னும் ஒர் சாய்ஸ் !


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?


நாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை.



டிஸ்கி:- இந்த 32 தொடர்ந்து 50 & 100 போச்சுன்னா அப்புறம் எப்படி இருந்த மக்கள்ஸ் எல்லாம் இப்படி ஆயிடுவாங்க சாக்கிரதை ! இத்தோட நிப்பாட்டிக்கிடலாம்!

வைச்சுக்கவா உங்களை மட்டும் டெஸ்க்-டாப்புல...!



கடந்த ஆகஸ்ட் 2007 மாசத்துலேர்ந்து கிட்டதட்ட ஒரு 8 மாசமா இந்த படம்



அப்புறமாட்டிக்கு ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்ல கிடைச்ச இந்த போட்டோ



நடுவாப்புல கொஞ்சம் மாசம் தலைவரு ரிடர்ன்




பெறவு இவுங்க




இப்ப லேட்டஸ்டா இந்த படம்தான் இப்போதைக்கு (போதைக்கு!?) டெஸ்க்டாப்பினை அலங்கரிச்சுக்கிட்டிருக்கற படம்! (டெஸ்க்குடாப்புல இவுங்க அழகா இருக்காங்களா? இல்ல இவுங்க அழகா இருக்கறதால, டெஸ்க்டாப்பு அழகா இருக்கான்னு திடீர் திடீர்ன்னு கவுஜ எல்லாம் வருது! - ஆண்டவா என்னிக்கு அதெல்லாம் பதிவா வரப்போகுதோ?!!)


இனிய நண்பர் தமிழன் - ஏண்டா இவனை எழுத சொன்னோம்ன்னு பீல் பண்றீங்களா? நல்லாவே பீல் பண்ணுங்க! அந்த மிதிவண்டி இடைவெளியில நான் மொபைல் போன் டெஸ்க்டாப்பு படம் அப்புறமாட்டிக்கு ஆபிஸ்ல இருக்கற டெஸ்க் டாப்பு படம் எல்லாம் ரெடி பண்ணனும்!


சரி நாமளும் ஒரு நாலு முக்கியமான ஆளுங்களை கூப்பிட்டுட்டு போவோம்!

1.முத்துலெஷ்மியக்கா (அக்கா பிசியா இருந்தாலும் கூட,இதுக்கும் கொஞ்சம் டைம் பிசியா ஒதுக்கிக்கோங்க ஒ.கேய்!)

2.கப்பி (அண்ணாச்சி!இந்த தடவை மட்டும்
மி(எ)ஸ்ஸான அப்புறம் டீக்குளிக்கிறதுதான் ஒரே வழி!)

3.சந்தனமுல்லை (தங்கச்சி ஒரே பப்பு படமாத்தான் வைச்சிருக்கும்ன்னு ஒரு நினைப்பு!)

4.சுடர்மணி (கொஞ்சமா நல்லவராம் - இருக்கட்டும்!இருக்கட்டும்!)


டிஸ்கி:- எல்லாமே டைல்தானான்னு டென்ஷானக்குறவங்களுக்கு - ஒரே போட்டோவை எம்புட்டு நாளைக்குங்க பாக்குறது அதான் நிறைய்ய்ய்ய? (பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)

நானும் சினிமாவும் - இன்னொருவாட்டி!

சினிமா பத்தி எழுதணும்ன்னு நினைச்சாலே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்திச்சு! எம்புட்டு விசயம் இருக்கு எல்லாம் பிளாஷ் அடிச்சுட்டு அடிச்சுட்டு மறைந்துக்கொண்டே இருந்துச்சு! முதல்ல பார்த்த படம் இதுவோ அதுவோன்னு ஒரு கன்ப்யூசன்! எப்படியோ ஒரு மாதிரியா போட்டு ஒப்பேத்தியாச்சு! (இன்னும் கிடைக்கவேண்டிய இடத்திலேர்ந்து ரிப்ளை கிடைக்கல! - அட பிரதர் கிட்டேருந்துதான்! ஆனா கிடைச்ச சேதிப்படி நான் tag பண்ணிவிட்டவங்க கலக்கியிருக்காங்க!)

நேத்து பதிவு எழுதி முடிச்ச பிறகும் கூட யாரோ கூப்பிடற மாதிரி ஒரு நினைப்பு இன்னிக்கு பார்த்த மெயில் வல்லியம்மா கூப்பிடிருந்தாங்க எதிர்ப்பார்ப்பு வைச்சிருந்தா ஏமாத்தகூடாதுன்னு இன்னும் ஒரு வர்ஷன் போட்டாச்சுப்பா!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


எங்க ஊர் கொத்ததெரு மாரியம்மன் கோயில் திருவிழா ஸ்பெஷலா புரொஜெக்டர்ல்லாம் வைச்சு தெருவையே பிளாக் பண்ணி அதிகாலை வரைக்கும் முழிச்சியிருந்து படம் பார்த்துதான் நான் பப்ளிக்கா -பப்ளிக்கே- பார்த்த முதல் படம்:- அதுவும் கந்தன் கருணை! (அதுலயே நான் பாதி படத்துல மயங்கிட்டேன்!)

******************


அண்ணன் அக்கா,நானு அம்மா பாட்டி என்று எல்லோரும் போய் பார்த்த கடைசிப்படம்ன்னா அது அஞ்சலி தான்! அதுக்கு பிறகு ஏனோ எல்லாரும் சேர்ந்து போய் பார்க்கற அளவுக்கான சூழ்நிலைகள் அமையவே இல்லை! (கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு எல்லாம் பறந்துப்போச்சு ஸ்டைல்தான்!)

******************

ரொம்ப பயந்துக்கிட்டே போய் படம் பார்த்துட்டு திரும்ப வரும்போதும் பயந்துக்கிட்ட வந்ததுன்னு சொல்லணும்னா மை டியர் குட்டிசாத்தான் படம்தான்! - போகும் போது படத்தை பத்தின பயம்! திரும்ப படம் முடிஞ்சு வரும்போது பையில மறைச்சி வைச்சு கொண்டு வந்த கண்ணாடியை தியேட்டர்காரன் பறிச்சிடுவானோன்னு பயம் அம்புட்டுதான்!

******************

சொந்தக்கார பயமக்களோட படம் பார்க்க அடம்பிடிச்சு போனது சுந்தரகாண்டத்துக்கு ஆனா அதுக்கு டிக்கெட் கிடைக்காம ஒபன்ல கிடந்த ரிக்‌ஷாமாமா போனது தான் நான் முதலும் கடைசியுமாகி போன இரவு நேர இரண்டாம் ஆட்ட சினிமா!

******************

ரொம்ப ஆர்வப்பட்டு,(மணி,ரகுமான் & ஐஸ்வர்யா) அவஸ்திபட்டு, நேரம் போயி, வெய்யில்ல நின்னு வெளுத்துப்போயி (வெள்ளை கருப்பானா கருப்பு வெள்ளையாத்தானே ஆகும்!) பார்த்து ஆனாலும் மத்தவங்க மாதிரி பாதியிலே எழுந்து போகாம பார்த்த படம்ன்னா அது இருவர்தான்! - பாதி இண்டர்வெல்ல பின்னாடியும் சரி முன்னாடியும் சரி ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் தென்பட்டிருக்க வெளியில படம்முடிஞ்சு வரும்போது ஒரு 10 -15 பேர்தான் :-(

ஆனாலும் எனக்கு இப்பவும் பார்க்க பிடிக்கிது :-)

******************

பாலிடெக்னிக் கடைசி செமஸ்டர் கடைசி பரீட்சை முடிஞ்சு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நியாபகமா படம் பார்த்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்டான்னு முடிவு பண்ண ஒ.கே பண்ணிட்டு மாரியப்பா தியேட்டருக்கு போனா காலேஜே அங்கதான் நிக்கிது (படம் - காதலுக்கு மரியாதை!) பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல்,ஆனால் கூட்டம் ஒத்துவராது வேணும்னா இன்னொரு படத்துக்கு போவோ அதுவும் ஜூப்பரா இருக்குன்னு சொன்னாங்க என்று நான் சொன்னதை நம்பி வந்து,படத்தையும் பார்த்துவிட்டு இன்று வரை மறக்காமலே இருக்க வைத்த படம் - நாம் இருவர் நமக்கு இருவர் (போயும் போயும் இப்படி ஒரு படமாடா நமக்கு எண்ட்டூ கார்டு போடணும்ன்ன்னு நொம்பவே ஃபீல் பண்ணிட்டானுங்க நண்பர்கள்!)

******************

பயங்கரமா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஆனாலும் வேற வழியே இல்லாம வெறுப்பாய் தியேட்டருக்குள் சென்று 3 மணி நேரம் அமர்ந்திருந்து சில காட்சிகள் சில பாடல்கள் மட்டும் பார்த்து மற்ற நேரங்களில் கிடைத்த தீனிப்பண்டங்களை தின்றுகொண்டு வாரந்தாவிற்கும் தியேட்டருக்குள்ளும் நட(ன)மாடி இருந்துவிட்டு இப்பொழுது பாடல்கள் கேக்கும்போது பார்க்கவேண்டும் என்று நினைக்கவைக்கும் படம் - பாண்டி நாட்டு தங்கம்!

******************

கடைசியா ஆனா கலக்கல்ன்னு நான் நினைச்ச விசயம்:))


படையப்பா ரீலிசு!
பியர்லெஸ் தியேட்டர்ல பெரிய பெரிய சவுக்கை கட்டைகளையெல்லாம் கட்டி வழி அமைச்சு வைச்சிருக்காங்க!- ஏதோ பெரிய பார்ட்டீ மீட்டிங்க் மாதிரி! (அந்த காலகட்டத்தில இருந்த எங்க ஊரு சப்கலெக்டர் ஐடியா!) காலையில 8.30 மணிக்கு முதல் ஷோ! பேப்பர் வாங்க கடைக்கு வந்திட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருந்த எனக்கு ஒரு சின்ன ஆசை போய்த்தான் பார்ப்போமே! (அந்த டைம்ல அண்ணன் ஊர்ல கிடையாது!) சைக்கிள் எதிர்ல இருந்த லைப்ரயில பேப்பரோட தள்ளிவிட்டுட்டு ஓடினேன்! ஒடினேன் கவுண்டரின் முன் வரைக்கும் ஒடினேன்! ஒரு சிக்கலும் இல்ல! டிக்கெட் வாங்கியாச்சு கடும் ஆரவாரத்திற்கிடையில் படமும் பார்த்து திருப்தியாகியாச்ச்சு - அதிலிருந்து தொடர்கிறது ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ! :-)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்த பதிவு மூலமாவும் நான் ஒரு ஐந்து பேரை சினிமா பற்றி எழுத அழைக்கின்றேன்! கேள்விகள் பார்க்க இங்கு போய்ட்டு வரவும்!

மழை - ஸ்ரேயா

ஸ்கிரிப்பிளிங் ஸ்க்ரைப் - சங்கீத்

செல்லம் - ஸாவரியா

தயாமலர் - தினேஷ்

டிவிங்கிள் டிவிங்கிள் - சபரி

நானும் சினிமாவும்!

கடந்த 25 வருடகாலத்தில் சினிமா சமபந்தமாக எதையும் கலந்தாலோசித்ததே கிடையாது பிரதரிடம்! அப்படியே பேசியிருந்தாலும் ரஜினி படத்தினை பற்றியதாகவே இருக்கும் அதுவும் கூட ஒரு சில வரிகளும் சில மெளன புன்னகையும்தான்! (இன்றும் கூட அப்படியே அண்ணனின் ஜெராக்ஸ்த்தான்! - பதிவுகள் தவிர்த்து!)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

இன்னும் கூட யோசித்து யோசித்து பார்த்தாலும் சரியாக ஞாபகத்து வரமறுக்கிறது! என்றாலும் இன்னும் கூட தெளிவாக நிற்பது அப்பாவுடன் மாலை நேரக்காட்சி நாயகன் கண்டு பின் மயூரா ஹோட்டலில் எனக்கே எனக்காய் ஒரு முழு நீள ரவா தேசை உண்டு வந்த நாள்தான்! (எனக்கும் கூட அதுதான் அப்பாவோடு நான் சேர்ந்து பார்த்த முதலும் கடைசியுமான படம்!)

இந்த கேள்விக்கு பிறகு எழுந்த சந்தேகங்களில் ஒரு வேளை இந்தபடமாக இருக்குமோ அல்லது வேற படமான்னு நிறைய படங்கள் பிளாஷ் ஆகி ஆகி மறைந்தன அவைப்பற்றியும் ஒரு சில வரிகள்

ரஜினி கமல் நடித்த படம் பெயர் ஞாபகத்து வரவில்லை என்றாலும் ரஜினி வில்லனாக ஒருவரை கிண்ற்ற்டியில் வைத்து கொலை செய்யும் காட்சி மட்டும் மனதில் பதிந்திருக்கிறது என்ன படம் பெயர் என்று தெரியவில்லை இன்னும் கூட...!

ஒரு முறை வைத்தீஸ்வரன் கோவில் சண்முகாவில் முதல்காட்சி அருணகிரிநாதர் பார்த்ததும் கூட அப்படியே மனதில் ஆழ பதிந்திருக்கிறது!

இவை தவிர அவ்வப்போது அப்பா வாங்கிவரும் திரைக்கதை வசன கேசட்களில் ஞாயிறுகளின் மத்தியத்தில் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் அலுத்துப்போன படம் வருசம் 16!
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சமீபத்தில் குசேலன்! மற்றைய நடிகர்களின் படங்களின் வரிசையில் சொல்லவேண்டுமானல் போன ஜனவரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் பார்த்தா பீமா!
(ஆனாலும் ஒவ்வொரு முறையும் டிக்கெட் கவுண்டரில் நிற்கும்போது,நமக்கு டிக்கெட் கிடைக்குமா என்று விரல் நுனியில் பல் வைத்து பரபரத்திருக்கும் தருணங்களை நினைக்கும்போது அப்ப்டி ஒரு அவஸ்தை தேவைதான என்று எண்ணம் வந்தாலும் - தியேட்டர்ல பாக்குறது ஒரு ஜாலிதாங்க!)

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி பார்த்த சினிமாங்கள் வரிசை கொஞ்சம் குறைவுதான்! ஆனாலும் ஒரு இனிய வியாழனில் விளம்பரங்களில் அசத்திக்கொண்டிருந்த குங்குப்பூ பாண்டாவின் படத்தினை பார்த்துமே டக்கென்று ஆன்லைனில் அலசி பார்ப்போம் என்று அலசியதில் கிடைத்த லைவ் சினிமா லிங்கும் அதை தொடர்ந்து 1மணி 20 நிமிட காலங்களும் பெரு மகிழ்ச்சி வரவழைத்தது! (பின்ன தியேட்டரில் அன்னிக்குத்தான் ரிலிசான படம் ஆச்சே!)

சென்ற வருட விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த போது முதன் முதலாய் பரிச்சயமான கலைஞர் டிவியில் ஒரு மதிய வேளையில் நான் பார்த்த சினிமா போர்ட்டர் ரங்கன் - சங்கிலி தொடர்களாய் ஒன்றுக்கொன்று தொடர்புடைய காட்சிகளாக சோக சம்பவங்கள் நீண்டு பிறகு தொடர்ச்சியாக எல்லாமே சுபமாக முடியும் அந்த படம் இன்னும் கூட நினைவுகளில் காட்சிகள் சுழல்கின்றன்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அந்தளவுக்கு எனக்கு சினிமா ரசிப்புதிறமை இருக்குமோ என்று மிக நுட்பமாய் யோசிக்கிறேன் - இல்லை - அம்புட்டு பெரிய அளவுக்கு யோசிக்க வேணாம்ன்னு விட்டுடறேன்!

அடிக்கடி பார்த்து மகிழ்ந்த என்னை அசத்திய சினிமான்னு சொல்லணும்னா ஆண்பாவம்,பாட்ஷா & அன்புள்ள ரஜினிகாந்த்



உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பெரிய பெரிய சினிமா கலைஞர்களெல்லாம் தனித்தோ அல்லது பிரிந்தோ நிற்பது! (இதுவும் கூட அரசியல்தானே!) - இணைந்திருந்தால் சினிமா உலகம் நல்லதொரு வளர்ச்சி பெறும் என்பது என்னோட எண்ணம்!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலரில் ஆரம்பித்து குமுதத்தில் தொடர்ந்து,ஆனந்த விகடன் வந்து இப்பொழுது இணையம் ஏறி நிற்கிறேன்! அம்புட்டுதான்!(கிசு கிசுக்களை கண்டுபிடிப்பதில் மண்டை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு ரசிகனாக இருந்ததும் ஒரு காலகட்டம்!)

தமிழ் சினிமா இசை?

இன்றும் இரவு நேரங்களினை, இனிய நேரங்களாக மாற்றிக்கொண்டு தமிழ் உலகை தாலட்டி வரும் தேர்ந்தெடுத்த பாடல்கள்! சமீபத்தில் என்னோட பாஸ்(மலையாளி) என்னிடம்,தமிழ்பாடல்கள் தொகுப்பு தர முடியுமா? என நீண்டகால விருப்பம் என்று கேட்டதும் குறிப்பாய் இளையராஜா இசைத்தொகுப்பினை! அப்படியே கொஞ்சம் மிதப்பாகவே இருந்துச்சு!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப கவலையாத்தான் இருக்கு!

பிலிம் இன்ஸ்ட்டீயுட்லேர்ந்து இப்ப ஆளுங்க வர்ற மாதிரியே தெரியல :-(
எந்த துறையாக இருந்தாலும் அதுக்குன்னு சில பல அடிப்படைகள் வேணும் அதை தெரிஞ்சுக்கிட்டு வரணும்! அப்பத்தான் தொழில் பக்தி,துறையில் முழுமையான ஈடுபாட்டினை அளிக்க முடியும் அப்படிங்கறது என்னோட எண்ணம்!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சிரமமாகத்தான் இருக்கும் மீடியா உலகம்!

சென்னை பெரும் சேதாரத்திற்குள்ளாகலாம்!?

தமிழர்களுக்கு 1ம் ஆகாது! சினிமா அற்ற தொலைக்காட்சி தொடர்களில் ஆர்வம் மற்றும் அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவுகள் போன்றவை அதிகரிக்கலாம் :-)


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....!

அப்பாடா எப்படியோ முடிச்சாச்சு!

அடுத்து நான் அழைக்கும் ஐவர்!
1.கானா பிரபா
2.முத்துலெஷ்மியக்கா!
3.சந்தனமுல்லையக்கா!
4.தமிழ்பிரியன்
5.யாத்ரீகன்

என்னை அழைத்த உடன்பிறப்பிற்கும், உடன் பிறவா சகோதரிக்கும் நன்றிகளுடன்....!

இணையத்தில் என் தினம்! -


தினந்தோறும் சென்றுவரும் பதிவுகள் அப்படின்னா இதெல்லாம் தினமும் மூச்சு விடற மாதிரி!

இந்த தளங்களுக்கு போயிட்டு வர்லைன்னா கையெல்லாம் நடுங்கும் மனசுல அப்படியெ படபடப்பாவே இருக்கும்! வாயெல்லாம் குழறும்! பேசுறது எல்லாம் புரியாது! மத்தவங்க பேசுறது கேட்கவே கேட்காது! நேர்ல பார்க்கிறவங்களலெல்லாம் யாருன்னு சரியா புரிபடாது! என்பது போன்ற எந்த எபெக்ட்டும் கிடையாதுங்க ஆனாலும் ஏதோ இதாலதான் உசுரு ஓடிக்கிட்டிருக்குன்னு ஒரு பீலிங்க்ஸ்! - அட என்னைய மாதிரி ஒத்தையா வெளிநாட்ல குந்திக்கினு இருக்கற ஆளுங்களுக்கு மட்டும்தான்ங்க!

தமிழ்மணம் - என்ன சொல்றது? எல்லாவிதமான செய்திகளையும் ஒரு மணி நேர அவகாசத்தில் தெரிந்துவிடுகிறது.ஏராளமான பொழுதுப்போக்கு விஷயங்கள்,மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பதிவுகள் என இணைய தினம் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது!

ஜிமெயில் - டெய்லி வரும் ஒன்றிரண்டு மெயில்களை காண்பதிலும் நண்பர்களுக்கு மெயில் அனுப்புவதிலும் இருக்கற சந்தோஷமே தனி!

பிளாக்கர் - இது இல்லாமல் நான் என்பது எது?

தமிழ் தினசரி காலண்டர் - டெய்லி காலண்டர் அதுவும் நம்மூரில சுவத்துல மாட்டி வைச்சுப்பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கோட பார்க்கற தளம்!

யாகூ மெயில் - இதுவும் மெயில்களுக்கும் மற்றும் உறவுகள் நட்புகளுடமான தொடர்புகளுக்கும்!

ரஜினிஃபேன்ஸ் - பின்னே! இது பார்க்காம தினப்பணிகள் ஸ்டார்ட் ஆகுமா?


தமிழ் ரேடியோ - கிட்டதட்ட 5 சேனல்களில் வித விதமாய் பாடல்களை கேட்டு மகிழ்....! ( ஒரே பாட்டுக்கள் தான் ரிபிட் ஆனாலும் கூட நல்லா இருக்கு!

சூரியன் எப் எம் - இனிய இரவு தினமும் கேட்பது!

ஆஹா எப் எம் - இப்ப புதுசா கொஞ்ச நாளா - வைரமுத்து நேரம் சூப்பரா இருக்குங்க!

ஆஸ்திரேலிய வானொலி - http://s7.viastreaming.net/7920/listen.asx - இது இப்ப சமீபத்தில சேர்ந்தது அட நம்ம கானா வெள்ளிகிழமையும் புதன் கிழமையும் கலக்குறாருங்க! -அவுங்களுக்கு துணையா வரப்போறவங்க ( ஏற்கனவே பார்ட்டி சிக்கியிருக்கா இல்லையான்னு கன்பார்மா தெரியலப்பா..?!) ரொம்ப குடுத்துவைச்சவங்க! ரொம்ப பொறுமையான மனுசன்! (அப்புறம் இந்த லிங்க் அப்படியே மீடியா ப்ளேயர்ல ஒபன் உரல் போட்டீங்கன்னா நல்லா பாடும்!)

தினமணி - இது தமிழ் பேப்பரு ஆனா அப்படியே உலகத்தை ரவுண்டு அடிச்சு லோக்கல்ல கொண்டாந்து விட்டுடும்!

தினத்தந்தி - இது ஒன்லி லோக்கல் ஊரு நீயுஸ் பார்க்கறதுக்கு!

இந்தியன் எக்ஸ்பிரஸ் - அட நானெல்லாம் இங்கிலீபிசுல டெவலப ஆகறதுக்குத்தான்!

டைம்ஸ் ஆப் இந்தியா - இதுவும் கூட டெவல்ப்மண்ட் ஸ்டடீஸ்தான்!

டூயுப் தமிழ் - உடனுக்குடன் திரையிடப்படும் சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகள் அவ்வப்போது புதிய் படங்கள் பாடல்கள் காண...!

இன்னும் சில தளங்கள் வெளியாகும் படங்களினை உடனுக்குடன் பார்க்கும் வகையில் அயலகத்தில் வாழும் எம்போன்றோருக்காக தம் சேவைகளினை செய்து தரும் சில தளங்கள்! - அதெல்லாம் சாய்ஸ்ல விட்டு எஸ்ஸாகிட்டோம்ல!

சரி புதுசா சில தளங்களை இண்ட்ரோ பண்ணிவிட்டு போறேன்!

இது மழலைகள் தளம் தமிழ் மொழி பற்றிய ஆழ்ந்த அறிவு பெற..! - எல்லா வயதினருக்கும் கூட..!

வள்ளலார் - எப்பொழுதும் அல்ல எப்போதாவது கூட இந்த தளங்கள் தேவைப்படக்கூடும்

கணீர் குரலில் தேவாரம் கேட்பது என்பது எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமானதொரு நிகழ்வாகவே இருக்கின்றது! ஸோ தினமும் இந்த சைவம் தளத்திலிருந்து ஒரு பாடல் எப்படியும் ஒலித்துக்கொண்டிருக்கும்!


பழந்தமிழ் சொற்கள் பற்றி படித்து கஷ்டப்பட்டு எழுத்துக்களை கூட்டி படிப்பதென்பது ஒரு வித்தியாசமானதொரு ஆர்வமூட்டும் அனுபவம்! அதற்கேற்ற இந்த தளம் தேவாரம்

தமிழ் நேஷன் - எத்தனை எத்தனை தகவல்கள் தமிழ் பற்றியதாய் மட்டுமே இருக்கும் இத்தளம் அவ்வப்போது சென்று கண்டு கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளினை தெரிந்துக்கொள்வதும் உண்டு!

தமிழ் மொழி இந்த பெயரிலேயே ஒரு இணையத்தளம் அனைத்து விதமான தலைப்புக்களிலும் இங்கு தமிழ் சேகரிக்கப்படுகிறது - நாளைய கணினி தலைமுறைக்காக சேர்க்கப்படுகிறது!

மேலும் மூவரை அழைக்கவேண்டும் என்றார்கள்! இந்த முறை எந்தவித முன்னறிவிப்பு அழைப்பிதழும் அனுப்பாமல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மூவரை அழைக்கின்றேன்!

நீங்க எப்ப வேணும்னாலும் பதிவு போடுங்க என்ற கண்டிஷனோட...!

இணைய உறவுகளில் இவர்கள் மூவர்

யாத்ரீகன்
விக்னேஷ்வரன்
தமிழ்பிரியன்


(ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்! அடுத்து யாராச்சும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா நீங்கள் டெய்லி சாட்டில் சந்திக்கும் நபர்களை பற்றி சொல்லுங்கள்ன்னு கேட்டுப்புடாதீங்க! - நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!)