மதியம் வெள்ளி, ஜூலை 18, 2008

Mentholலில் விளை சுகமே....!

எனக்கு வர்றப்ப பாரின் சிகரெட்டு வாங்கிட்டு வா மாப்ளே!

டேய்...! பாரின் ரிடர்ர்ன்னு பாரின் சிகரெட்டு ஒண்ணும் வாங்கிட்டு வர்லையாடா?மச்சி!

உங்க ஊர்லெல்லாம் சிகரெட்டு மென் தால் தானாம்ல அது பத்தி ஒண்ணும் சொல்லமாட்டிக்கிறியேடா? ஒண்ணும் வாங்கி வந்துருக்கலாம்ல!

இப்பபடி பலரிடரிமிருந்தும் கோரிக்கைகள், கேள்விகள் தொடர்ந்த, பதில்கள் ஆதங்கங்கள் சந்தேகங்கள் எழவைக்கும் அந்த பாரின் சிகரெட்ல அப்படி என்னதாங்க விஷயம் இருக்கு.???



அப்படின்னு பார்த்தா பெருசா ஒண்ணும் விஷயம் இல்லைங்க! கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம் மட்டும் இருக்கறதுமட்டும்தான்!

அதிக புகையில்லாத அதே சமயத்தில் அதிக ஆபத்தினை விளைவிக்க கூடிய நிக்கோடின் அளவினை அதிகமாக கொண்ட இந்த மென்தால் வகை சிகரெட்டுக்கு இப்ப ரொம்ப நல்ல கிராக்கியாம்!

பொதுவாக பற்பசைகளிலும்,இருமல் சிரப்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மென்தால் ஒரு கூலிங்க் எபெக்டினை மட்டுமே தரும் வேறு எதுவும் பிரத்யோகமான மருத்துவ குணங்கள் கொண்டவையாக இருப்பதில்லை! இந்த சங்கதியினை சிகரெட்டினில் நுழைத்து, இப்போது அதிக அளவில் பலரது விருப்பமான பொருளாக சிகரெட்டினை மாற்றியதும் இந்த மென்தால்தான்!

இந்த சிகரெட்டுகளை ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அந்த பழக்கத்தினை விட்டுச்செல்வது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறும் அளவுக்கு உங்களை அடிமைப்படுத்தும் அதிசயம்தான் அந்த மென்தாலின் மூலம்!




முன்பெல்லாம் மேம்போக்காக சிகரெட் குடித்தவர்கள் இந்த மென்தால் சிகரெட்டில் நீண்ட இன்ஹேலில் இன்பம் எய்துகிறார்களாம்! பாவம் அவர்களுக்கு தெரியாது அதிகம் நிக்கோடினையும் கார்பன் மோனாக்சைடினையும் கூடவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று !

8 பேர் கமெண்டிட்டாங்க:

ambi said...

அருமையான தகவல்களை ரொம்ப எளிமையா சொல்றீங்க.

ஆயில்யன் said...

//ambi said...
அருமையான தகவல்களை ரொம்ப எளிமையா சொல்றீங்க.
//

அருமையான தகவல்களா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

Unknown said...

:-( ithula ivlo irukka anna?? ella anna's saarbaa ungalukku thanks.!! :-)

Thamiz Priyan said...

உங்க பதிவுகளிலெல்லாம் சமூகத்தின் மேல் கொண்ட அக்கறை தெளிவா இருக்குண்ணே....
பாராட்டுக்கள்... :)

புதுகை.அப்துல்லா said...

கடைசி வரைக்கும் சிகிரட்ட குடிக்கலாமா,வேனாமான்னு சொல்லவே இல்லையே??????

ஆயில்யன் said...

// Sri said...
:-( ithula ivlo irukka anna?? ella anna's saarbaa ungalukku thanks.!! :-)
//

நன்றிகளுக்கு நன்றி அக்கா :))

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
உங்க பதிவுகளிலெல்லாம் சமூகத்தின் மேல் கொண்ட அக்கறை தெளிவா இருக்குண்ணே....
பாராட்டுக்கள்... :)
/

தமிழ் என்ன கோபம் எம்மேல....????

ஆயில்யன் said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
கடைசி வரைக்கும் சிகிரட்ட குடிக்கலாமா,வேனாமான்னு சொல்லவே இல்லையே??????
//

பாவம் அவர்களுக்கு தெரியாது அதிகம் நிக்கோடினையும் கார்பன் மோனாக்சைடினையும் கூடவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று
சொல்லியிருக்கேன் :))