மதியம் புதன், ஜூலை 30, 2008

ஹீரோக்களாய்...!

வன்முறை ஆட்டம் ஆடி, பின் ஓடிய

வில்லன்கள் மட்டுமே இப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளை!

எந்த விளம்பரமுமின்றி...!

எந்த பலனையும் எதிர்நோக்கா, எமனை எதிர் நோக்கிய பணிகளில் இவர்கள்...

மெளனமாய், என்றும் ஹீரோக்களாய்....!



எங்கள் ஹீரோக்களாய்...!

*******************

பிற்சேர்க்கையாய்....!

ஆபத்தினையே பணியாக கொண்ட இவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், - நடக்காமல் நடந்துக்கொண்டிருக்கிறது இது வரை - இவர்களின் குடும்பத்தினரை காத்துக்கொள்ள உதவும் வகையிலான நடவடிக்கைகள் சாதாரண ஊழியர்களின் நிலையிலேயே இருக்கிறது - இனஷுரன்ஸ் கூட இவர்களுக்கு கிடையாது!

- நன்றி புதுகை தென்றல் & ஜீவ்ஸ்

8 பேர் கமெண்டிட்டாங்க:

Thamiz Priyan said...

ஆமா ஆயில்யன், உயிரை பணயம் வைத்து நம்மை பாதுகாக்கும் இராணுவ வீரர்களும், மனித தன்மையற்றவர்கள் வைக்கும் குண்டுகளை கண்டுபிடிக்கும் முயற்சில் இருக்கும் இவர்களும் தான் உண்மையான ஹீரோக்கள்.

Thamiz Priyan said...

சினிமா ஹீரோக்களுக்கு செலவழிக்கும் பணத்தில் இந்த நிஜ ஹீரோக்களுக்கும் கொஞ்சமாவது நாம் செலவழிக்க வேண்டும்

MyFriend said...

படம் சூப்பர். ;-)

நிஜமா நல்லவன் said...

நிஜ ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

இவர்களுக்கு இன்சூயூரன்ஸ் கூட கிடையாதாம்.

உண்மையான ஹீரோக்களுக்கு என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளூம்.

Sen22 said...

உண்மையான ஹீரோ இவர்கள் தான்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீடியாக்களில் இந்த் ஹீரோக்களைபோட்டு பாராட்டுறது
எனக்கு பயமா இருக்கு..
ஏன்னா அவங்களுக்கு இதனால பாதிப்பு ஏதும் ஏற்படுமோன்னு.. நம்ம சினிமால எல்லாம் அப்படித்தானே ஆகும்.. :(

குசும்பன் said...

அன்று டீவியில் பார்த்த பொழுது சொன்னேன்.

கையில் உறை கூட இல்லாமல் ...நினைக்கவே பயமாக இருக்கிறது. அவர்கள் போட்டு இருக்கு கவசமும் சும்மா ஒரு இதுக்காகதானாம்.அத்தனை சக்திவாய்தது எல்லாம் இல்லையாம்.