நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!
வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!
காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
//பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!
ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா! // பெங்களூரூ குண்டு வெடிப்பு தொடர்பான பதிவிலிருந்து...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தெளிவாய் ஒரு சேதியினை சொல்லியிருக்கிறது!
இந்தியாவில் மனிதர்களை பீதியில் ஆழ்த்துங்கள்!
ரொம்ப சிம்பிளான சினிமாக்களில் கூட எடுத்து கையாண்ட விசயம்தான் இந்த கான்செப்ட்!
ஆனாலும் கூட அரசு தன் பாதுகாப்பு எந்திரங்களினை எந்த அளவுக்கு முடுக்கி விட்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது! (இன்னும் லூசாக்கதான் இருக்காங்க போல - இத்தனைக்கும் கடும் பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைந்த டெல்லியில் சர்வசாதாரணமாக வந்து குப்பை தொட்டியில் குண்டினை போட்டு செல்கின்றனர்!
ஆனால் இந்த முறை ஒரே ஒரு முன்னேற்றம் - லைவ்வாக இருந்த குண்டினை பாம் ஸ்குவாடு அகற்றி அழகாய் கான்கீரிட் மிகஸ்ர் மிஷினை போன்றதொரு உருவமுடைய சிமுலேட்டரில் போட்டு சின்னதாய் வெங்காய வெடியாக வெடிக்க வைத்து அதை டிவிக்களில் லைவ் செய்துள்ளனர்!
குண்டுவெடிப்புக்கள் லைவ் ஆகாமல் இருக்க லையர்கள் ஆட்சிபீடத்தில் இருந்தபடியே ஏதேனும் செய்யவேண்டும் அட்லீஸ்ட் செய்வது மாதிரியாகவாவது நடித்து மக்களிடமுள்ள பீதிகளினை குறைக்கவேண்டும்!
மொக்கையாய் சில கேள்விகள்?
1.கேப்டன் விஜயகாந்த படங்கள்ல அதிகம் வர்ற இந்த உளவுத்துறை போன்ற துறைகள் ஏதேனும் இயங்கிக்கிட்டிருக்கா மத்திய அல்லது மாநில அரசுகளிடம்?
2.நான் பார்த்தேன் அவன் குப்பைதொட்டியில போட்டான்ங்கற ஸ்டேட்ட்மெண்ட்களெல்லாம் மேட்டர் ஓவரானதுக்கப்புறம் அழகா சொல்றாங்களே ஏன் அந்த ஆளு குப்பை தொட்டியில குண்டு வைக்கும் போது ஒண்ணுமே தெரியாத மாதிரி விட்டுட்டுப்போறாங்க?
3.உலக அளவில ஐடி டெக்னாலஜி கம்ப்யூட்டர் டெக்னாலஜி அல்லாத்துலயும் நம்ம ஆளுங்க கொடி கட்டி அது மேல குந்தியிருக்கும்போது ஒரு சாதாரண இமெயில் குறைந்த பட்ச நேரத்தில டிரேஸ் பண்ண முடியமாட்டிக்கிதே ஏன்?
4.மாநில செய்திதாள்கள், அடுத்த இலக்கு நம்ம ஊருதான் என்று சுய தம்பட்டம் அடிப்பது காரணம் என்ன? அலர்ட் பண்றாங்களா? இல்ல டெரரிஸ்ட்களிடம் இது உங்க டார்கெட்ல இருக்கா இல்லீயான்னு கொஸ்டீன் போடறாங்களா?
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் இனிய பருவமுள்ள இளங்குயிலே (2) ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத
நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி காலம் வரும் வரை பொருத்திருந்தால் கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே காலம் என்றைக்குக் கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ மாலை மலர் மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்
(இதழில்)
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா அழகைச் சுமந்து வரும் அழகரசி (2) ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாறன் கணை வந்து மார்பினில் பாயுது காமன் கணைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது
(சில நேரங்களில் இங்கன இந்த பாட்டு தெரிய்லைன்னா அங்கன போய் பார்த்துட்டும் வரலாம்!)
டிஸ்கி :- நாம எழுதுன பதிவுகள்லேர்ந்துதான் மீள் பதிவு போடமுடியுமா? ஏன் மத்தவங்க பதிவுலேர்ந்து சுட்டு போட்டா அது மீள் பதிவு வகையில் வராதா?? என எனக்குள்ளே பீறிட்டு வந்த எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் இந்த மீள் பதிவு! பாட்டு கேட்டு பாருங்க எத்தனை பேர் எத்தனை தடவை மீள் பதிவா போட்டாலும், போய் பார்த்து கேட்க துடிக்க வைக்கற ரகம்தான்!
விடுமுறை நாள்! இரவு நேரம் இது போன்ற ரா(ர)கங்களில் பாடல்கள் கேட்பது ஒரு வித சுகானுபவம்தானே!