சித்து - ஒவ்வொரு பற்களிலும் சிரிக்கும் .:: மை ஃபிரண்ட் ::. :-)



எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

Hey ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே

கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்

மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
கரை முழுதும் உந்தன் சுவடுகளா
அலை முழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே

வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே........

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃமைபிரண்டு:).

said...

சூப்பர் பாடல்.. சித்து எகிறி எகிறீ குதிப்பார்.. அப்படியே பொம்மனி கீஸ்தே பாடலும் போட்டிருக்கலாம். ;-)

said...

@ரசிகன்:

நன்றி ரசிகன். :-)