ஆடி(ய)யோ காலங்கள் - 1

இன்னிக்கும் கூட நீங்க கிராமத்து பக்கம் போனீங்கன்னா இரவு நேரங்களில் இசை தாலாட்டு கேட்டவாறே ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் நபர்களை காணமுடியும்! வானொலி ஒலிபரப்புகள் முடிந்ததுமே, அடுத்து உடனடியாக ஆடியோ கேசட்களில் பக்தி,பழைய அல்லது புதிய பாடலக்ள் ஒலிக்கதொடங்கிவிடும்! இப்படியான இசைக்கு அடிமையானவர்கள் கண்டிப்பாக இந்த வார்த்தைக்கும் அடிமைப்பட்டே கிடப்பவர்கள்!

அசெம்ப்ள்டு செட்!

பெரும்பாலும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் இது போன்றவர்களின் அசெம்ப்ள்டு ஆடியோ செட்கள் ஆசையை நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அதுவும் பொய் இல்லை!

சும்மா ஒரு 300 - 500க்குள் ஒரு சின்ன ரேடியோ & ஆடியோ அப்புறம் ரெண்டு ஸ்பீக்கர் ரெண்டு ட்விட்டர்கள் கொடுத்தாக்கா அப்படியே காசு கொடுத்தவன் அடுத்த நிமிஷமே ஆடியோ உலகத்தில் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான்!



இதுவே கொஞ்சம் காசு அதிகம் உள்ள பார்ட்டீயா இருந்தா அவருக்கேத்த மாதிரி அவரோட ஆசைகளை பூர்த்தி செஞ்சு ஒரு ஆடியோ சிஸ்டம் ரெடி பண்ணிக்கொடுக்கவும் ரெடியா ஆட்கள் இருப்பாங்க! வேணும்ங்கறவங்க என்ன மாதிரியான எபெக்ட்ஸ் என்ன மாதிரியான சவுண்டு இருக்கணும் (தம்பி சவுண்டு வைச்சா தெருவே சும்மா கடந்து அல்லோலகல்லோலப்படணும்ம்ப்பா!) இப்படியான யூசர் ப்ரெண்ட்லியா சிஸ்டம் ரெடி பண்ணி கொடுத்துக்கிட்டே இருப்பாங்க!

இதுல முக்கியமான கட்டமே டெஸ்டிங்க்த்தான்! இதுலதான் பயபுள்ளைங்க ஏமாறதும், அப்பாவிகளை ஏமாத்துறதும் நடக்குற கட்டம்! பாட்டு போட்டு அதை கேட்டுட்டுத்தான் மிச்ச பணம் கையில கொடுக்க முடிவா இருப்பாங்க வாங்க வந்தவங்க! எப்படியாவது சிஸ்டத்தை தலையில கட்டிட்டு கையில இருக்கற காசை வாங்கறதுல குறியா இருப்பாங்க விக்கிறவங்க! இந்த இரண்டு பேருக்கும் நடுவுல கஷ்டப்படுறது யாருன்னு கேட்டா அக்கம்பக்கத்துல நிக்கிறவங்க,கடை வச்சிருக்கறவங்க இது மாதிரி ஆளுங்கதான்!

சிலவிபரமான ஆளுங்க கையில கேசட்டை கொண்டு வந்து கொடுத்து போட்டு பாடச்சொல்லி கேக்குவாங்க! அப்பத்தான் பழைய டேப்ரெக்கார்டருக்கும் புதுசுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம்னு! ஆனா பாருங்க,விக்கிற ஆளுங்க வாங்குற ஆளுங்க கொடுக்கற கேசட்டை பத்தி ஆயிரம் குறை சொல்லி நாங்க இப்ப போட்டுக்காட்டுறோம்! சவுண்ட் எபெக்ட் எப்படி கிழியுது பாருங்கன்னு சொல்லி இந்த பாட்டை போட்டதுமே எல்லா விவரமானவங்களும் ஏமாளியாக மாறி ஆடியோ சிஸ்டத்தை எடுத்துக்கிட்டு நடையை கட்டுவாங்க!

அப்படி என்ன இருக்கு அந்த பாட்டுலன்னு கேட்கறீங்களா?

ஒண்ணுமில்லைங்க! சிலு சிலு சிலுன்னு சவுண்ட் அப்புறம் புரியாத மொழி வேகமான பாடல் இது எல்லாத்தையும் கேட்டா வாங்க வந்தவங்க அப்படியே தன்னையே மறந்துட மாட்டாங்களா....???


எனக்கு தெரிஞ்ச வரையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்திலிருந்த ஆல்ப பாடல் இதுவாகத்தானிருக்கும் - அதுவும் வேற எந்த ஒரு ஆல்ப பாடலகளும் வெளிவந்திராத காலகட்டத்தில்...! (நான் சொல்வது சரிதானே...??)

29 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆமா...ஆமா...!

said...

///எனக்கு தெரிஞ்ச வரையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்திலிருந்த ஆல்ப பாடல் இதுவாகத்தானிருக்கும்///


ஆமாம். ஆமாம். நான் பல தடவை கேட்டிருக்கேன். இப்ப கேட்டாலும் நல்லா தான் இருக்கு. பதிவுக்கு மிக்க நன்றி ஆயில்ஸ்.

said...

///இன்னிக்கும் கூட நீங்க கிராமத்து பக்கம் போனீங்கன்னா இரவு நேரங்களில் இசை தாலாட்டு கேட்டவாறே ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் நபர்களை காணமுடியும்! ///


இப்பவும் ஊரு பக்கம் போறப்ப நான் இப்படித்தாங்கோ.

said...

///அசெம்ப்ள்டு செட்!///



அடடா அடடா இந்த அசெம்ப்ள்டு செட் விஷயத்தில் என்னமா ஏமாத்த பார்ப்பாங்க பயபுள்ளைங்க. நாங்க ஏமாற மாட்டோம்ல:)

said...

///(நான் சொல்வது சரிதானே...??)///

நூத்துக்கு நூறு!

said...

தலைப்பு சூப்பர்! இப்ப ஆட முடியாதுல்ல?

said...

///தமிழன்... said...
ஆமா...ஆமா...!///



தமிழன் அண்ணா உங்க ஊருலயும் அப்படித்தானா?

said...

நம்ம ஊருலயும் சில பசங்களுக்கு இருக்கும் இந்த ஆர்வம்....:)

said...

எனக்கெல்லாம் பாட்டு வீடு மழுக்க நிறையணும் ஆனா சத்தம் அந்த பாட்டை பொறுத்து இருக்கும்...

said...

அண்ணே மை டைம் இஸ் ஓவர் அப்பாலிக்கா சாயந்தரம் வாறேன்..:))

said...

கத,கவிஜனு அவனவன் மண்டைய பிச்சு எழுதுற நேரத்துல, சும்மா, மொள்கா பொடி, ஆடியோ பெட்டினு அசத்துறீங்களே ஆயில்யன்!

வாழ்த்துக்கள்!!!!

said...

என்ன குரல் என்ன குரல் .. அலிஷா பாடல் அப்ப பட்டி தொட்டி எல்லாம் ப்ரபலமாச்சே..

@ நிஜம்மா நல்லவன் ..இத்தனை பின்னூட்டமா அதான் உங்க பேரு பின்னூட்டம் போட்டவங்கள்ள வீங்கிதெரியுது..

said...

கலக்கல் பாட்டு இது, நானும் ஊரில் இருந்த காலத்தில் இந்திய சினிமா இசை தவிர கேட்ட முதல் ஆலபம் இது.

ஆடியோ காலங்கள் பற்றி நிறையச் சொல்லலாமே, சட்டுன்னு முடிச்சிட்டீங்களேப்பு

said...

//தமிழன்... said...
ஆமா...ஆமா...!
//

கரெக்ட்டா சொல்லியிருக்கேனா?

நன்றி :)

said...

// நிஜமா நல்லவன் said...
///எனக்கு தெரிஞ்ச வரையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்திலிருந்த ஆல்ப பாடல் இதுவாகத்தானிருக்கும்///

ஆமாம். ஆமாம். நான் பல தடவை கேட்டிருக்கேன். இப்ப கேட்டாலும் நல்லா தான் இருக்கு. பதிவுக்கு மிக்க நன்றி ஆயில்ஸ்.
//

தாங்க்ஸ்ப்பா :)) (யப்பா பேர மாத்திடாதீங்கப்பா! பாவம் வந்து சேரும் உங்களுக்கு :)) )

said...

//நிஜமா நல்லவன் said...
///இன்னிக்கும் கூட நீங்க கிராமத்து பக்கம் போனீங்கன்னா இரவு நேரங்களில் இசை தாலாட்டு கேட்டவாறே ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் நபர்களை காணமுடியும்! ///
இப்பவும் ஊரு பக்கம் போறப்ப நான் இப்படித்தாங்கோ.
//

அவ்வ்வ் போறப்பவே இப்படி நினைச்சுத்தான் போவீங்களா நானெல்லாம் போய் ஃபீல் பண்ணுவேனாக்கும் :)

said...

//நிஜமா நல்லவன் said...
///அசெம்ப்ள்டு செட்!///

அடடா அடடா இந்த அசெம்ப்ள்டு செட் விஷயத்தில் என்னமா ஏமாத்த பார்ப்பாங்க பயபுள்ளைங்க. நாங்க ஏமாற மாட்டோம்ல:)
//
அப்ப நீங்க விக்கிற ஆளுங்களா இருக்கும்! :)

said...

//நிஜமா நல்லவன் said...
///(நான் சொல்வது சரிதானே...??)///

நூத்துக்கு நூறு!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நானெல்லாம்க்கூட நூத்துக்கு நூறு எடுக்கிறேனா?????

said...

// நிஜமா நல்லவன் said...
தலைப்பு சூப்பர்! இப்ப ஆட முடியாதுல்ல?
//
மனசுல நினைச்சுக்கிட்டா எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் ஆடலாமப்பா! உலகம் ஒரு நாடகமேடை :))) (இது 999 !)

said...

//நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...
ஆமா...ஆமா...!///
தமிழன் அண்ணா உங்க ஊருலயும் அப்படித்தானா?
///

அப்படித்தான் இருக்கும்போல..!

said...

//தமிழன்... said...
நம்ம ஊருலயும் சில பசங்களுக்கு இருக்கும் இந்த ஆர்வம்....:)
//
அப்ப தமிழனுக்கு ஆர்வம் கிடையாதா இசையில்....!????

said...

//தமிழன்... said...
எனக்கெல்லாம் பாட்டு வீடு மழுக்க நிறையணும் ஆனா சத்தம் அந்த பாட்டை பொறுத்து இருக்கும்...
//

இருக்கு!
இருக்கு!!
நொம்ப இருக்கு :))

said...

//தமிழன்... said...
அண்ணே மை டைம் இஸ் ஓவர் அப்பாலிக்கா சாயந்தரம் வாறேன்..:))
//
ஒ.கேய்!!

said...

//வெயிலான் said...
கத,கவிஜனு அவனவன் மண்டைய பிச்சு எழுதுற நேரத்துல, சும்மா, மொள்கா பொடி, ஆடியோ பெட்டினு அசத்துறீங்களே ஆயில்யன்!

வாழ்த்துக்கள்!!!!
//

வாங்க அண்ணே வாங்க!
நன்றி...!

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
என்ன குரல் என்ன குரல் .. அலிஷா பாடல் அப்ப பட்டி தொட்டி எல்லாம் ப்ரபலமாச்சே..
//
தாங்க்ஸ்க்கா!

said...

//கானா பிரபா said...
கலக்கல் பாட்டு இது, நானும் ஊரில் இருந்த காலத்தில் இந்திய சினிமா இசை தவிர கேட்ட முதல் ஆலபம் இது.

ஆடியோ காலங்கள் பற்றி நிறையச் சொல்லலாமே, சட்டுன்னு முடிச்சிட்டீங்களேப்பு//

நன்றி கானா பிரபா!

என்னது முடிச்சிப்புட்டேனா? இல்லையே இல்லவே இல்லை அதன் பார்ட்டூ போட்டிருக்கேனே...! (ஆமாம் போட்ட பார்ட்டெல்லா பாதியிலயே நிக்குதேன்னு? நீங்க கேட்கப்பிடாது!)

Anonymous said...

இந்த அலிஷா மாதிரி சுனிதா ரெட்டியோ என்னவோ, அவங்க ஆல்பமும் கேட்டிருக்கேன். நல்லா இருக்கும். அப்ப கேசட் எல்லாம் வாங்கி வைக்கற அதிகாரம் நம்ம கையில இல்லை. அம்மா அப்பா அதெல்லாம் விடமாட்டங்களே. டீ வீல போடும்போது பாத்ததோட சரி.

said...

@ ஆயில்யன்...
//
அப்ப தமிழனுக்கு ஆர்வம் கிடையாதா இசையில்....!????///


பாட்டு பெரிய சத்தமா கேட்குறேனோ இல்லையோ நான் பெரிய சத்தமா பாடி (கத்தியே) நம்ம தெருவையே திணற வச்சிருவேன்ல...
அப்படிப்பட்ட ரசிகன் நான்;)

said...

அசெம்ப்ளி செட்...ஆகா ஆகா

அலிஷா..அட்ரா அட்ரா :)))