..::மைபிரண்டு::.. - இணைய நட்பின் அதிசயம்!




பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்!

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்!

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே


பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே



இத்தனை அதிசயங்களுமே அசந்து போகும் அதிசய நட்பு - ..::மைபிரண்டு::..


சகோதரியின் பிறந்த நாளில்,வரும்,பெறும் வெற்றிகள் பெரும் வெற்றிகளாக இருக்கும் என்று வாழ்த்தி மகிழ்கிறோம்!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தசாவதாரத்துக்கு அடுத்து இவங்க வாழ்த்துப் பதிவு தான் அதிகம் ;-)

said...

///தசாவதாரத்துக்கு அடுத்து இவங்க வாழ்த்துப் பதிவு தான் அதிகம் ;-)///

ரிப்பீட்டு...:)

said...

நம்மோட வாழ்த்துக்களும்...:)

said...

அசந்து போகும் அதிசய நட்பு - ..::மைபிரண்டு::..

இந்த வார்த்தைக்கு எம்புட்டு ரிப்பீட்டு போட்டாலும் தகும்.

முக்கு முகம் தெரியாத நான் அனுப்பிய மடலுக்கு பதில் கொடுத்து, என்னையும் வலைப்பூ துவங்க தூண்டியது, எனக்குத் தெரியாத பல விடயங்களுக்கு உதவியது..

மிக்க நன்றி மை ஃபிரண்ட்.

said...

மை ஃபிரண்ட்

வாழ்த்துக்கன்

said...

சூப்பர் பாட்டு. சுஜாதா& உன்னி அசத்திட்டாங்க. இதை வலையில் போட்டு அசத்திட்டார் ஆயில். :-)

said...

@கானா பிரபா:

அன்புக்கு தலை வணங்குகிறேன். :-)

@தமிழன்:

உங்களுக்கும்தான் ;-)

@புதுகைத் தென்றல்:

ஹீஹீ.. ரொம்ப புகழாதீங்க.. இங்கே வெள்ளம் ஏறிப்போச்சு. :-P

@மதுரை சிடிஸன்:

நன்றி :-)