சப்பாத்தியை உருளைக்கிழங்கு குருமா காம்பினேஷன்ல தின்னு பார்த்துடணும்ன்ன் நொம்ப்ப்ப்ப்ப நாளா ஒரு ஆசை!
இங்க இருக்கிற மலையாளிங்க கடையில காலையில உருளைகிழங்கு குருமா இருந்தா சப்பாத்தி இருக்காது சாயந்திரம் சப்பாத்தி இருந்தா உருளைகிழங்கு குருமா இருக்காது ஸோ லேப்ல செஞ்சு திங்கிறதுதான் ஒரே வழி - செய்யுற காலகட்டம் வர்ற வரைக்கும் நினைச்சுக்கிட்டே நாக்கை நனைச்சுக்கிட்டிருந்தேன்!
சரி இன்னிக்கு ரொம்ப வெட்டியாத்தானே ( அட டெய்லியும் நீ அப்படித்தாண்டா இருக்கன்னு ஒளிஞ்சுக்கிட்டு சொல்ற நல்லவனுங்களையெல்லாம் கண்டுக்காதீங்க) இருக்கோம் லேப்ல டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம்ன்னு முடிவு எடுத்து ஹோம் ஓர்க் செஞ்சுக்கிட்டேன்! (அதாங்க நெட்லேர்ந்து வழிமுறைகள் முறைகள் ஸ்டெப்ஸ் எப்படி அப்படின்னு)
என்கிட்ட இருக்கிற பொருட்களை வைச்சு சமைக்க எந்த ஒரு இணையத்திலயும் குறிப்பு இல்ல! இணையத்தில இருக்கிற குறிப்புபடி என்னால இந்த நாள் மட்டுமில்ல எந்த நாளுமே சமைக்கமுடியாதுன்னு முடிவு பண்ணி ரோட்ல இருந்த கோட்டை மட்டும் கவனமா பார்த்துக்கிட்டேன்!
திடீருன்னு ஒரு சந்தேகம் நமக்குத்தான் உருளைக்கிழங்கு காரக்கறி செய்ய தெரியுமே அப்ப இதுக்கும் உருளை கிழங்கு குருமாவுக்கு அப்படி என்ன பெரிய வித்தியாசம்ன்னு ஒரே மண்டை குடைச்சல் சரி யார்க்கிட்டயாச்சும் சின்ன முயற்சி எடுத்தாவது கேட்டு கிளியர் பண்ணிக்கிடலாம்ன்னு, சகோதரி ஒருத்தங்ககிட்ட கேட்டு ஒரளவுக்கு சமாதானமாகிகிட்டேன்!
ஆயத்தபணிகளை செஞ்சுக்கிட்டிருக்கும்போது திரும்பவும் ஒரு டவுட்டு அதான் ஐடியா நோ ப்ராப்ளம் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு ஆரம்பிச்சாச்சு!
நான் எடுத்துக்கிட்ட மூலப்பொருட்கள்:-
உருளைகிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சைமிளகாய்
இஞ்சி
உப்பு
வறுக்கற வாணலி
வேகவைக்கிற பாத்திரம்
அப்புறம் ஒரு கரண்டி
ஒரு டம்ளர்
ஒரு ஸ்பூன்
ஒரு வேஸ்ட் துணி
(போதுமா இல்ல இன்னும் டீடெயிலா....?)
உருளைகிழங்கு வேகவைக்கிற பாத்திரத்தில தண்ணி ஊற்றி மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு உப்பு போட்டு வேக வைச்சுட்டேன் (திடீர்ன்னு எங்கேர்ந்து மஞ்சள் பொடி வந்துச்சுன்னுல்லாம் கேக்காதீங்க அது அப்படித்தான்!)
வெங்காயத்தை நீள வாக்குல ஸ்லைஸ் அட அதாங்க வில்லைகளாக வெட்டி வைச்சுக்கிட்டேன் பிறகு இஞ்சியும் தக்காளியும் முறையே கடினமான இலகுவான வேலையாக செய்துமுடித்துவிட்டேன்!
பச்சை மிளகாய் மட்டும் பாக்கி ப.மி ரெண்டு ரிஸ்கு இருக்கு!
1.சின்னசின்னதா ரவுண்ட் சைசில வெட்டி போட்டா நாக்குல பட்டு நல்லா உறைக்கும் கஷ்டமாகிடும் அப்புறம் அழுதுடுவேன்.
2 வது ரிஸ்க்கு நீளவாக்கில வெட்டி போட்டா திங்க ஸ்டார்ட் செய்யறதுக்கு முந்தியே தூக்கி எல்லாத்தையும் பொறுக்கி கடாசிடலாம் ஆனா, நீளவாக்குல வெட்டுறதுல விரலுக்கு பயங்கர ரிஸ்க்கு !
ப.மிளகாய் பத்திரமா நிக்கவைச்சு நீட்டு வாக்குல இரண்டாக்குறதுல பொறுமை ரொம்ப அவசியம் இல்லாங்காட்டி விரலு வீங்கிடும் (கட்டு போட்டு)
வாணலி - சட்டி - இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி கடுகு போடுங்க (எண்ணெய் ஊத்தினா கடுகு போட்டு தாளிக்கணும்ங்கறாது ஒரு மனக்கணக்கு!) அதுல வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டுடுங்க! கொஞ்சம் நிமிசம் கழிச்சு வேக வைச்ச உருளைகிழங்க எடுத்து அதுல போட்டு ஒரு பிரட்டு பிரட்டிடுங்க ! எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனாதும் ஒரு வாசனை வரும் கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க! டிரையா இருந்தா கார கறி கொஞ்சம் தண்ணியா - கூழ்மமா - லிக்விடா இருந்தா குருமா!
ஒ.கே டன்!
இனி இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான், சப்பாத்தி, இட்லி அல்லது தோசை இப்படி எதாச்சும் ஒரு சைடு டிஷ் வைச்சுக்கிட்டு!

70 பேர் கமெண்டிட்டாங்க:
ம்ம்..டேஸ்டாதான் இருக்கும் போல இருக்கு..
தின்னதப் பத்தி சொல்லவே இல்ல..ஒரு வேளை லேப்ல இருந்து நேரடியா குப்பைதொட்டிக்கு போயிடுச்சோ
//உங்களுக்கு புடிச்ச ஒண்ணு//
புடிச்சது எது வேண்ணாலும் எடுத்து அடுப்புல வைக்கலாமா பாஸ்
// அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க! டிரையா இருந்தா கார கறி கொஞ்சம் தண்ணியா - கூழ்மமா - லிக்விடா இருந்தா குருமா!
//
தண்ணிய ஊத்தி உடனே சாப்டவா? அப்புறம் கொதிக்க வைக்க யாரு வருவா?
சிக்கன் இல்லாத ஐட்டத்துக்கெல்லாம் குருமான்னு பேர் வைக்க தடா போடணும்.
எப்படிங்க இத்தையெல்லாம் திங்கறீங்க? சப்புன்னு இல்ல? :)
நைஸ் ரைட்டிங் தோ ;)
செஞ்சு முடிச்சபிறகு அதையும் படம் பிடிச்சு போட்டிருக்கணுமா இல்லையா?
இதுல தக்காளி ஸேர்க்காமல் கொஞ்சம் பச்சை பட்டானி, கொஞ்சம் இஞ்சி துருவல் ஸேர்த்து வேகவைத்தால் சப்பாத்திமசால் மற்றும் பூரீ மசால் ரெடீ. கொஞ்சம் ஸேம்பு போட்டால் வாசனை இருக்கும்(கவனம் ரொம்ப கொஞ்சம் போடனும்). சப்பாத்தியில் கொஞ்சம் நெய் அல்லது ஜிஞ்சிலி ஆயில் (நல்லெண்ணை) ஸேர்த்து பிசைந்தால் சாப்ட்டனா சப்பாத்தியும் தயார். அப்பிடியோ எவனாது இளிச்சவாயன் நன்பன்(ஓசி கிராக்கி) மாட்டுனா லேப்புக்கு எலியும் ரெடீ.
அய்யோ பாஸ் வேண்டாம் நிறுத்துங்க...
சொன்னா கேளுங்க பாஸ்..இப்ப என்ன ஆகிருச்சு??
என்ன கஷ்டம் வந்தாலும் நாங்க இருக்கோம்ல அதுக்காக தற்கொலைக்கு முயற்சி பண்ணலாமா?
//ஒ.கே டன்! //
எம்புட்டு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறீங்க... சரி ஓக்கே உங்க விருப்பம்
//இயற்கை said...
தின்னதப் பத்தி சொல்லவே இல்ல..ஒரு வேளை லேப்ல இருந்து நேரடியா குப்பைதொட்டிக்கு போயிடுச்சோ//
தின்னதுக்கு அப்புறம் இப்பவே எப்படி சொல்லுவாரு.... மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு சொல்லுவாரு ராஜீ
//இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு//
பாஸ் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் பாஸ்
யார் யார் சாப்பிட்டீர்கள் என்ற குறிப்பும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் எழுதாத ஆயில்யனைக் கண்டிக்கின்றேன்
//என்கிட்ட இருக்கிற பொருட்களை வைச்சு சமைக்க எந்த ஒரு இணையத்திலயும் குறிப்பு இல்ல! //
வெறும் அடுப்பும் ஒரு வாணலியும் மட்டும் வைச்சுகிட்டு எதுவும் சமைக்க முடியாது :)
இஞ்சி எது, பச்சை மிளகாய் எது, வெங்காயம் எதுன்னு தெரியாத என்னை மாதிரி ஆளுங்களுக்கு படம் போட்டு பேரும் போட்டதுக்கு ஓஓஒ:)
//2 வது ரிஸ்க்கு நீளவாக்கில வெட்டி போட்டா திங்க ஸ்டார்ட் செய்யறதுக்கு முந்தியே தூங்கி எல்லாத்தையும் பொறுக்கி கடாசிடலாம்//
தூங்கிட்டா எப்படி பொறுக்கறதுன்னு ஒரு அசைபடம் போடுங்க பாஸ்
//☀நான் ஆதவன்☀ said...
//இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு//
பாஸ் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் பாஸ்
//
rotfl
//ஆயத்தபணிகளை செஞ்சுக்கிட்டிருக்கும்போது திரும்பவும் ஒரு டவுட்டு அதான் ஐடியா நோ ப்ராப்ளம் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு ஆரம்பிச்சாச்சு!//
ஆயில்யன் ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு.யாருக்கும் என்னாச்சும் ஆச்சின்னா...!செய்து சாப்பிட்ட்ட அப்புறமும் என்னா ஆச்சுன்னும் போடணும் இனி.
சைபர்சிம்மன் தளத்தில் ஒருமுறை உங்களிடம் இருக்கற சமையல் பொருளுக்கு, குறிப்பு தர தளம்ன்ன்னு அறிமுகப்படுத்தி இருந்தார் .. தேடிப்பார்க்கவும்..
நல்லாத்தான் இருக்கு ..குருமான்னா தேங்காய் சீரகம் அரைச்சு கொஞ்சமா மசாலாத்தூள் போட்டுப்பாருங்க..
picture composition நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் Focal Length’லே கரக்ட் பண்ணிருந்தா படம் சூப்பரா வந்துருக்கும்... :))
// இராம்/Raam said...
picture composition நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் Focal Length’லே கரக்ட் பண்ணிருந்தா படம் சூப்பரா வந்துருக்கும்... :))//
என்ன கொடுமை ஆயில்ஸ் இது !!!
போட்டோல வெங்காய வடகம்னு ஒன்னு இருக்கே அது எதுக்கு?? இதை செய்யும் போது அதை சாப்டுக்கிட்டே செய்யனுமா???
பெஸ்ட் ரெஸிபி வேணும்னா நம்ம கவிதாயினி காயத்ரி கிட்ட கேளுங்க.. ஆனா உருளைக்கிழங்கு குருமானு கேட்டா கொஞ்சம் முழிப்பா.. உருளைக்கிழங்கு கொழம்புனு கேளுங்க கரெக்டா சொல்லி தருவா :))))
சரி பாஸ்.. நீங்க ஏன் சமைச்சு முடிச்சப்புறம் போட்டோ எடுக்கலை????
செஞ்சு முடிச்சபிறகு அதையும் படம் பிடிச்சு போட்டிருக்கணுமா இல்லையா?//
இது கேள்வி..
பாஸ் பதில் சொல்லுங்க. சீக்கிரம் இன்னொரு வாட்டி செஞ்சு படத்தோட பதிவு போடுங்க.
//☀நான் ஆதவன்☀ said...
//இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு//
பாஸ் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் பாஸ்
//
rotfl
பாஸ், ஏதாவது பத்தியத்துல இருக்கீங்களா பாஸ்?? உப்பில்லாம சமைச்சு சாப்பிடறீங்களே அதான் கேட்டேன் :)))
பாஸ் குருமா வைக்கும் மூலப்பொருளில் தேங்காய் மிஸ்ஸிங்க்...
குருமா இல்லாம ச்சே,, தேங்காய் இல்லாம வைக்கற்துக்குப் பேரு குருமா இல்ல பாஸ்.
இப்படிக்கு
சகட்டு மேனிக்கு சமையல் செய்வோர் தலைமையிடம்
சைதை மாவட்டம்
வாணலி - சட்டி - இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு
ப்ளாஸ்டிக் பக்கெட்ட வைக்கலாங்களா ??????????
பாஸ் துறை சார்ந்த பதிவு போடறதா சொல்லிக்கிட்டு இருந்தீங்களே
அது இதுதானா பாஸ் :)))))))))))
//இனி இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான், சப்பாத்தி, இட்லி அல்லது தோசை இப்படி எதாச்சும் ஒரு சைடு டிஷ் வைச்சுக்கிட்டு!//
குருமாவுக்கு சப்பாத்தி, தோசை, இட்லியெல்லாம் சைடு டிஷ்ஷா?
:))
//
http://tamil-paadal-varigal.blogspot.com/2008/05/maama-un-ponna-kudu-lyrics.html
கண்ணபுரம் போனதில்ல பாஞ்சாலிய பாத்ததில்லை
ஆமா காஞ்சிபுரம் போனதில்லை காமாட்சியை கண்டதில்லை
அட பட்டணம்தான் போனதில்லை பத்தினியைப் பாத்ததில்லை
பட்டணம் தான் போனதில்லை பத்தினியைப் பாத்ததில்லை
ஆயிரம் இருந்தாலும் உன் பொண்ணைப் போல வருமா
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா//
எனக்கு ஒரு டவுட் வாழை பூ குருமா எப்படி இருக்கும் பாஸ்? :)
/*G3 said...
சரி பாஸ்.. நீங்க ஏன் சமைச்சு முடிச்சப்புறம் போட்டோ எடுக்கலை????
*/
அதானே!!!! ஏன்??
// கைப்புள்ள said...
//
http://tamil-paadal-varigal.blogspot.com/2008/05/maama-un-ponna-kudu-lyrics.html
கண்ணபுரம் போனதில்ல பாஞ்சாலிய பாத்ததில்லை
ஆமா காஞ்சிபுரம் போனதில்லை காமாட்சியை கண்டதில்லை
அட பட்டணம்தான் போனதில்லை பத்தினியைப் பாத்ததில்லை
பட்டணம் தான் போனதில்லை பத்தினியைப் பாத்ததில்லை
ஆயிரம் இருந்தாலும் உன் பொண்ணைப் போல வருமா
மணக்குது தெரு எல்லாம் அட வாழை பூவு குருமா//
எனக்கு ஒரு டவுட் வாழை பூ குருமா எப்படி இருக்கும் பாஸ்? :)///
பாஸ்!!!!!!!!!
குருமாவுலயே வாழைப்பூ குருமாதான் பாஸ் செம டேஸ்ட்டு !
அய்ய்யோ அய்யோ ஞாபகப்படுத்திட்டீங்களே நான் எங்க போய் தேடுவேன் வாழைப்பூ :((
சாதம் +புளிக்குழம்பு +வாழைப்பூ குருமா காம்பினேஷன்
io
io
io
முடிஞ்சா கிடைச்சா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன் பாஸ் :))
நீங்க இங்க போயி தெரிஞ்சுக்கோங்க
http://samayal.yavum.com/2009-08-25-11-14-42/462-2009-08-28-04-47-05
என்னங்க ஆயில்யன் இது இப்டி காமடி பண்றீங்க!வெறும் தண்ணி விட்டு கொதிக்க வச்ச எப்டிங்க இருக்கும்??எந்த கமேண்ட்ச்க்கும் பதில் போடல?நல்லா தானே இருக்கீங்க?:))))))))))நைஸ் ட்ரை..
அன்புடன்,
அம்மு.
/அட டெய்லியும் நீ அப்படித்தாண்டா இருக்கன்னு ஒளிஞ்சுக்கிட்டு சொல்ற நல்லவனுங்களையெல்லாம் கண்டுக்காதீங்க/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
இதெல்லாம் ஓக்கே...கட் பண்ணதெல்லாம் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும் பாஸ்! செஞ்சு முடிச்சப்பறம் எப்படி இருந்துச்சுன்னு காட்டுங்க, பார்க்கலாம்!! :))))
// இராம்/Raam said...
picture composition நல்லா இருக்கு... இன்னும் கொஞ்சம் Focal Length’லே கரக்ட் பண்ணிருந்தா படம் சூப்பரா வந்துருக்கும்... :))//
:))))) இனிமே குருமா செய்வீங்களா..செய்வீங்களா?!!!
//கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க!//
சரிதான்:)!
//உப்பு, எண்ணெய் மற்றும் இன்னபிற ஐட்டங்கள் இங்க இருக்கிறதா நினைச்சுக்கோங்க//
சமைக்கும் போது போட்டுட்டதா நினைச்சுக்கிட்டாவே போதுமா
//பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி//
வறுத்து எடுத்துக்கிட்டு யார் பின்னால பாஸ் போகசொல்றீங்க??
//சந்தனமுல்லை said...
இதெல்லாம் ஓக்கே...கட் பண்ணதெல்லாம் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும் பாஸ்! செஞ்சு முடிச்சப்பறம் எப்படி இருந்துச்சுன்னு காட்டுங்க, பார்க்கலாம்!! :))))//
அப்படியே தீஞ்சுபோன சட்டியையும் ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்ல. :)
இன்னிக்கு செஞ்சு பார்த்திட வேண்டியது தான்
// G3 said...
சரி பாஸ்.. நீங்க ஏன் சமைச்சு முடிச்சப்புறம் போட்டோ எடுக்கலை???? ///
தண்ணிய பாத்திரத்துல ஊத்துறத்துக்கு பதில அடுப்புல ஊத்திட்டாராம். so சமையல் இன்னும் முடியல...
தொடரும்...
இயற்கை said...
தின்னதப் பத்தி சொல்லவே இல்ல..ஒரு வேளை லேப்ல இருந்து நேரடியா குப்பைதொட்டிக்கு போயிடுச்சோ//
அதை எல்லாம் போட்டா கொலக் கேஸ் ஆயிரும்யா
சின்னப்பாண்டி
பாமாவோ வால் பேப்பரை சுவரில் ஒட்ட கோந்து தேடிட்டிருந்தீரே கிடைச்சுதா?
பி.கு: பதிவையும் பின்னூட்டத்தையும் சம்பந்தப்படுத்தினால் பின்னூட்டுபவர் பொறுப்பாளி அல்ல
உருளைக்கிழங்க் குருமாவுக்கு உப்பு போடு!
அந்த குருமா செஞ்ச கைக்குத்தான் சூடு போடு!!
குருமா..குருமா....
உருளை...உருளை....
(ஹீஹி...சுட்ட பாட்டுதான்!)
//கானா பிரபா said...
சின்னப்பாண்டி
பாமாவோ வால் பேப்பரை சுவரில் ஒட்ட கோந்து தேடிட்டிருந்தீரே கிடைச்சுதா?
பி.கு: பதிவையும் பின்னூட்டத்தையும் சம்பந்தப்படுத்தினால் பின்னூட்டுபவர் பொறுப்பாளி அல்ல//
அல்டிமெட்!! :)))
//இனி இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான்//
கடைசி வரைக்கும் அந்த குருமாவை (குருமாதான்னு நினைக்கிறேன்) சாப்பிட்டேன்னு சொல்லவேயில்லயே பாஸ்.. :-)
படிச்ச எனக்கே இப்படி கண்ணுல தண்ணி வருதே.. சாப்பிட்ட உங்களுக்கு என்னென்ன வந்திருக்கும்..!!!
//ரங்கன் said...
படிச்ச எனக்கே இப்படி கண்ணுல தண்ணி வருதே.. சாப்பிட்ட உங்களுக்கு என்னென்ன வந்திருக்கும்..!!!
//
பாட்டு வந்துச்சு தம்பி :)))
குருமாவும் நீயே காரகறியும் நீயே
சப்பாத்தியுடன் கலந்து திங்கும் டிபனும் நீயே
சிக்கன் குருமா மட்டன் குருமா கண்டறியோனே
வயிறு வலிக்க செய்யும் நான்வெஜ்னை தின்றறியேனே
எங்களுக்கோர் குருமா செய்ய யாருமில்லையே
எங்களுக்கோர் குருமா செய்ய யாருமில்லையே
இதை அறியாதோர் பிளாக்கர்ஸ்தானே என்றாறிவாயே
குருமா குருமா குருமா குருமா
குருமா குருமா
//இனி இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான்//
இனி இதை எடுத்து சைடுல கொட்டிட்டு... அப்பிடின்னு இருக்கணுமோ? :))))))
செஞ்ச பிறகு ஒரு போட்டோ எடுக்காதன் மர்மம் என்னவோ???
சாதத்தையே கருக விடும் ஆளு நீங்க இத எப்படி செஞ்சு இருப்பீங்கன்னு யோசிக்கிறேன்:))))
idhule enga kurumaa irukkunnu theriyalaiye :)
senjadhukku appram photo potrundhaa nambi iruppom :)
பரவால்லயே வெங்காயமெல்லாம் அழகா கட் பண்ணிருக்கீங்க.. :))) படம் வரைஞ்சு இதுல பாகம் வேற குறிச்சிருக்கீங்க :))) பச்சை மிளகா கட் பண்ண பாயிண்ட் போட்டு சொல்லனுமா?? சரிதான்.. :)) செஞ்சதும் ஏன் படம் புடிக்கல?? அதுகுள்ள காலி பண்ணியாச்சா??? :)) (நீங்க என்னமோ இதுக்கெல்லாம் வந்து பதில் சொல்ல போற மாதிரி நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.. ஹய்யோ ஹய்யோ.. :)) )
// ஸ்ரீமதி said...
(நீங்க என்னமோ இதுக்கெல்லாம் வந்து பதில் சொல்ல போற மாதிரி நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.. ஹய்யோ ஹய்யோ.. :)) )///
டோட்டல் டேமேஜ் செஞ்சுட்டீயே டங்கச்சி ! :(
அப்ப கூட பதில் சொல்லலயே... நான் சொன்னது நிஜம் தானே?? ;)))
//Blogger ஸ்ரீமதி said...
அப்ப கூட பதில் சொல்லலயே... நான் சொன்னது நிஜம் தானே?? ;)))///
தங்கச்சியக்கா சொன்னா உண்மையாத்தான் இருக்கும்!
//எங்களுக்கோர் குருமா செய்ய
யாருமில்லையே
எங்களுக்கோர் குருமா செய்ய
யாருமில்லையே//
ஆயில்யன் இந்த பாடலின் அர்த்தம்
இந்த அம்மாவிற்கு புரிந்து விட்டது.
கடைசிவரைக்கும் யாருமே, டைட்டில சொன்ன உருளைக்கிழங்கு எங்கடா படத்துல காணோம்ன்னு கேக்கலயே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :)
mr,ayils, idhuku urulai vendama? thedi thedi pathuten?
yabba 63avadha naanu.. enna koduma idhu?
ada neengale othukitingla urulaiye illainu! seriya pochu.. idhula pacha molaga narukradha pathi lecture vera.. idhukellam ambi training institute vechurkare, first join pannunga boss.
எப்பவோ போட்ட குப்புசு,யோகர்ட் படத்து நெனப்புல வந்தா குர்மா!வெறுந்தட்டுல உட்கார்ந்துகிட்டு வெங்காயம்,தக்காளி வகையறாக்கள் பல்லக் காட்டுது:)
//குருமான்னா தேங்காய் சீரகம் அரைச்சு கொஞ்சமா மசாலாத்தூள் போட்டுப்பாருங்க..//
எங்க ரெசிபில மசலா வாடையவே காணோமின்னு பார்த்தேன்.முத்துலட்சுமி சரியாக குறிப்பு தந்திருக்காங்க.தேங்காய் சீரகம்,மசாலா கலந்தாத்தான் குர்மா:)
good
very good
excellent
i am proud of you my brother...
அது தானே என் சகோதரனா இருந்திட்டு, இதை கூட பண்ணலன்ன..எப்படி?
கிகிகிகி
super
very good idea. Thanks. mayiladuthurai, viralur nanda
Post a Comment