Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

புறா!

ஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்!



வார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு!

வார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை!

எல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு! பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்!

கூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது! நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது! முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!

சற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?

ஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது!



கூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்!

ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!

வானொலியில் பாடல்கள் கேட்பது என்பது ஒருவித அலாதியான இன்பம்! என்னவிதமான பாடல்கள் யாருடைய இசை ஆர்வத்திற்கேற்ப ஒலிக்கும் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாத வகையில் - எதிர்பாரா இன்பம் தரும் ஒரிடம் வானொலி!

தினமும் வானொலியில் பாடல் கேக்கும் பழக்கம் அதுவும் ஃஎப்.எம் ரேடியோவில் மட்டுமே அதிக அனுபவம் 5 வகையான நிலையங்களாக பிரித்து புதுப்பாடல் இளையராஜா மற்றும் .ஆர்.ஆர் மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் நாம் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் மிக சவுகரியம்!

எதேச்சையாக கேட்ட பாடல் ஆயிரத்தில் ஒருவன் (2009) படத்தில் இடம்பெற்றிருக்கும் "பெம்மானே" என்று தொடங்கும் பாடல்

திருமுறைகளில் உள்ள பாடல் வரிகளினை பாடுவது போன்றதொரு எண்ணம் ஆரம்பித்து வைக்க, முழுமையாக கேட்டு முடிக்கும்போது மனம் சாதாரண நிலையில் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!



பெம்மானே பேருலகின் பெருமானே..
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்!
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ..!
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்!
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே..! (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை..!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்..!
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடை கோனே!

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்!
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்,
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே..!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ..!
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே..!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ..!

பெம்மானே பேருலகின் பெருமானே..!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!

பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்

பெம்மானே பேருலகின் பெருமானே..

பதிவர் கதியால் அவர்களோட பதிவில் இந்த பாடல் பற்றி விவரமா சொல்லியிருக்காங்க!

வரிகளில் வலிகள்



ஜெயிக்கவும் முடியாமல் திரும்பி செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்துக்கிடக்கின்றன.

விருப்பம் தோற்றுப்போகும் போது கிடைப்பதை பற்றிக்கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள் ஆனால் அடிமனதில் ஒரு பூரானைப்போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம்...
எஸ்.ராமகிருஷ்ணன்

And, Now...


பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று, என்னிடம் இருந்தது. காலேஜ் விட்டு வந்ததும் அதை எடுத்து தள்ளிக்கொண்டே, தெருக்களில் சென்று ஃபிகர் பார்த்துகொண்டிருப்பேன்!

வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த எம்80யும் ஒருநாளில்...

அத்துடன் என் ஃபிகரும்....!


டிஸ்கி:- ஆச்சியின் பதிவு இங்கன இருக்கு!

சின்னப்புள்ளதனமால்ல இருந்திருக்கேன்!


ஜீவ்ஸ் அண்ணாச்சி, கோட்டித்தனமா ஒரு பதிவு எழுதச்சொல்லி டேக் பண்ணிட்டு போயிட்டாங்க! கோட்டி தனமான்னா முதல்ல எப்படி எழுதறது என்னாத்தை எழுதறதுன்னே பிரியல! :-(

சரி எதாச்சும் சின்னபுள்ளதனமா செஞ்ச காரியத்தை சொல்லிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டேன்! (நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!)

கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு!

பல வகுப்புக்களுக்கும் சென்று பழகும் நண்பர்களை மிக பொறாமையுடன் பார்க்கும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த எண்ணிக்கையின் அருமை புரிந்திருக்கவில்லை என்னை பொறுத்தவரையில் நாம் நிறைய நட்புக்கள் பெற வேண்டி இருக்கும் போல என்ற எண்ணம்தான்!

கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள் வந்தாலும் கூட டக்கென்று மறக்கடிக்கும் சூழலே இருந்து வந்ததால் எந்தவொரு நிகழ்வுமே பெரியதாக இழப்பினையோ அல்லது மனகுழப்பங்களையோ கொண்டிருக்கவில்லை !

பொதுவாகவே நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் நட்புக்களை காயப்படுத்தாத வகையில்தான் இருக்கும் என்றாலும் கூட, அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பாக சிறிய நிகழ்வினை கூட அலட்சியமாக்கியும் விடக்கூடும் அல்லது நட்பில் உரசல்களை கொண்டு வந்து விட்டுவிடக்கூடலாம்!

எல்லா நட்புக்களிடமும் கூடிய மட்டும் தொடர்ச்சியான தொடர்பினை கொண்டிருந்த எனக்கு சில நேரங்களில் சில நட்புகளின் பழக்கங்களில் தொடர்பு கொள்ளும் பழக்கம் வெறுத்துப்போக செய்தது !

ஒரு கட்டத்தில் அடப்போடா...! நீயா வந்து பேசுறவரைக்கும் நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்ற வைராக்கியம் அவ்வப்போது வந்து மறைந்து க்கொண்டிருந்தது (ஆமாங்க கொஞ்ச நாள் இருக்கும் பிறகு சந்திக்க நேர்ந்தால் எல்லாம் மறந்து போகும்,திரும்ப வரும்!)

வேலை விசயமாக வெளியூரில் இருந்தாலும் கூட தொடர்புகளும் இது போன்ற பிரச்சனைகளும் வந்துக்கொண்டுத்தான் இருந்தன! ஒரு கட்டத்தில் சிலரிடம் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பேசவே இல்லை (இப்ப நினைச்சா கூட அடேங்கப்பா ரொம்ப இஸ்ட்ராங்காத்தாண்டா இருந்திருக்க என்று நினைச்சு சிரிச்சுப்பேன்!)

வழக்கமான பிரச்சனைதான்! எப்பொழுதுமே ஒன்வே மாதிரி நான் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டுமா அவர்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளட்ட்டுமே என்ற எண்ணம்தான்!

அந்த காலகட்டங்களில் நினைவுகள் வரும்போகும் நினைவுகளிலேயே எனக்காய் நிறைய உதவிகள் செய்திருந்த நட்புக்களுக்கு நன்றி சொன்னாலும் கூட ரியாலிட்டின்னு வரும்போது அடப்போடா..! நான் போன் பண்ணமாட்டேன் என்று மனம் அடம்பிடித்த சூழல்தான்!

ஆனாலும், சென்னை போன்ற சூழல் கண்டிப்பா நிறைய நினைவுகளையும் உறவுகளை நட்புக்களை பிரிந்திருக்கும் சூழலினை விளங்க வைக்க நிறைய சோதனைகளினை தரும் அது போன்றதொரு ஒரு உடல் நலக்குறைவு தருணத்தில்தான் எனக்கு சுற்றமும் நட்பும் தெளிவாக புரிந்தது!

உதவிக்கொரு ஆள் இல்லாத சூழலில் ஒவ்வொருவரினை பற்றியும் நினைவுகள் மாறி மாறி பயணிக்க,எடுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் நாம இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு உறுதி எடுத்தாச்சு!

நம்மை தொடர்பு கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் சில நேரங்களில் மனமே கூட இல்லாமல் இருக்கலாம் அதை பற்றிய கவலை எல்லாம் நாம் எதற்கு எடுத்து நம் தோளில் சுமக்க வேண்டும்!

நாமே வலிய போய் நின்னாலும் கூட அவர்கள் வலிந்து ஒரு புன்சிரிப்பினை உதிர்ந்த்துதானே ஆகவேண்டும் அப்படின்னு முடிவா முடிவு பண்ணிட்டேன்!

கோபப்பட்டதும் அதனால் சில காலங்கள் பேசாமல் இருந்ததையும் நினைத்து நினைத்து சின்னபுள்ளதனமால்ல நடந்துக்கிட்ட்டோம்ம் நினைத்து எனக்குள் நானே கேவலப்பட்ட விசயத்தை எல்லாருக்க்கும் சொல்லிட்டேன்ப்பா!

வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!

தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!