Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

வெட்கம்!


பார்க்கும் விழிகள் ஏற்படுத்துகின்ற கேலித்தனம் நிறைந்த கருத்துக்களால் நாம் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணம் ஏற்படுகையில் நமக்கு ஒரே வெக்கம் வெக்கமா வரும்!

வெட்கமும் தயக்கமும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், பிறரிடத்தில் உண்டாகும் பயம் கலந்த மரியாதை அல்லது அந்த ரீதியிலான ஏதோ ஒன்றில் தனித்து நிற்கிறது - தயக்கம்!

சமூகத்தில் பல நிலைகளிலும் காணும் காட்சியாக பெற்றோர்கள் பீற்றிக்கொள்ளும் பிள்ளைகளையும் - ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெட்கப்படுவாங்க என்ற பெருமிதமோ - அல்லது ஒரு மனிதன் இருக்கிறான் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வெட்கம் நிரம்பி வழிய வாழ்க்கை நடத்தும் மனிதர்களை சமூகத்தில் நிறையவே நீங்கள் காண முடியும்!

சரி வெட்கம் நல்லதா கெட்டதா என்று எழும் கேள்விக்கு பல சூழல்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது .கே நல்லதுதான் என்றே தோன்றும் சில விசயங்களில் ஆஹா அப்படி ஆகப்பிடாதே ரொம்ப தப்பு என்றும் சொல்லவைக்கும்!

யாரோ வெட்கப்படாமல் செய்த ஆராய்ச்சியில் - படிக்கும் காலத்தில் ரொம்பவே வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கும் பிள்ளைகள் படிப்பில் கெட்டியாக இருக்கிறார்களாம்! மற்றவர்களோடு அதிக நேரம் செலவிட தேவையின்றி படிப்பினில் கவனம் செலுத்துவதினால் இப்படியான திறன் மேம்படுத்தப்படுகின்றதாம்!

சரி
இப்படியே படிச்சு பெரிய லெவல்ல மார்க்கெல்லாம் எடுத்துட்டு வேலைக்குன்னு வர்றப்ப இந்த வெட்க நிலை வேதனையளிக்கும் விசயமாக கூட பணி புரிவர்களிடத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் தொடர்பு நிலையில் உள்ள யாரிடமும் எளிதில் தொடர்பு கொள்ளமுடியாதபடி செய்துவிட அந்த கட்டத்தில் வெட்கம் ரொம்ப தப்பும்மா என்று உணர்வு எழும்புகிறது!

மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால் கொஞ்ச காலம் வெட்கம் இருந்துவிட்டு போகட்டும் தொடரவிடவேண்டாம் என்ற சிந்தனையே பெஸ்ட் என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.

பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம்! இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை பயணத்தில் இழக்கும் விசயங்கள் நிறையவே இருக்கக்கூடும்!

சரி சிம்பிளான வழிமுறைகள் கடைப்பிடிச்சு இந்த வெட்கத்தை தொலைச்சு கட்டமுடியுமான்னா - முடியும்! சில சின்ன சின்ன வழிமுறைகளில் அதை ஒரளவுக்கு குறைக்கமுடியும்!

நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் - அப்பிடின்னா என்னான்னு சொல்றதுக்கு இப்ப எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?

Fair & லவ்லி


கருப்பா இருக்கேன்னு என்னிக்கும்மே கவலைப்படாதடா நீ மனசு வைச்சா இன்னிக்கே சிவப்பாகிடமுடியும் ஸோ டோண்ட் ஒர்ரி (கவலைப்படாதேவும் டோன் ஒர்ரியும் வந்தாலே அவன் எல்.கே.ஜியில ஆரம்பிச்சிருக்கான் படிப்பைன்னு அர்த்தம் வைச்சுக்கிடணும் - நாங்க ஸ்கூல்ல அப்புடித்தான் வைச்சுப்போம்!)

கான்வர்சேஷனை வைச்சே தீர்மானிச்சுடலாம் செவப்பாகுறதுக்கு எம்புட்டு கஷ்டப்பட்டேன்னு - அட்வைஸெல்லாம் கேட்டு (அதுவும் இங்கீலிசுல எல்லாம் பேசுவாங்க எப்புடி இருக்கும் தெரியுமா? - சொன்னா மன்ச்சு வலிக்கும்!)

அப்பவெல்லாம் நொம்ப்ப பேமஸான விளம்பரமா இருந்த ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு - அது பொம்பளை புள்ளைங்க முகத்துல போட்டுக்கிடற கீரிம்ன்னு விளம்பரம் வர்றப்பவெல்லாம் ரெண்டு கையையும் எடுத்து முகத்துல பொத்திக்கிட்ட எனக்கு எப்படி தெரியும்!

சரி ஆசை யாரை விடும் ஏழு நாளுதானே வாங்கி டிரைப்பண்ணி பார்க்கலாமேன்னு ஒரு அசட்டு தைரியத்தில வாங்கி வந்தாச்சு பேர் & லவ்லியை! மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!

பவுடர் போடாம வெளியில போனதா சரித்திரமே இல்லாத என்னோட ஆட்டோபயோகிராபி பக்கங்களில் இந்த பேர்&லவ்லி வந்து பிரச்சனையை கிளப்பிடுமோன்னு லைட்டா ஒரு பயம் வந்துச்சு! பவுடர் போட்டுக்கிட்டு கீரிமை தடவிக்கிடலாமா இல்லாட்டி கீரிமை தடவிக்கிட்டு பவுடர் போட்டுக்கிடலாமான்னு கன்ப்யூசன் அப்புறம் பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீரிம் போட்டு ரெண்டு லேயர் பவுடர் போட்டா போதும்ன்னு மனசு திருப்தியாச்சு! ஆச்சு 7 நாளு ப்ராகிரஸ் ஒண்ணுமே இல்ல ஆனா ஒர்க் கண்டினியூ ஆகிக்கிட்டிருந்துச்சு! சரி வேற யார்க்கிட்டயாச்சும் அட்வைஸுங்கன்னு கேப்போம்ன்னு இன்னும் ரெண்டு மூணு பேரை புடிச்சா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அட்வைசு சொல்றானுங்க!

கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)

கிரீம் போட்டுட்டு போனா உடனே வியர்க்க ஆரம்பிச்சு பவுடர் எல்லாம் வழிஞ்சு போயிடும் ஸோ நீ கையில எப்பவுமே கொஞ்சம் பவுடர் வைச்சுக்கிட்டு அடிச்சுக்கோடான்னு இன்னொரு ப்ரெண்ட் அட்வைசு!

பேர் & லவ்லியோட சேர்த்து எந்த பவுடர்டா போட்டுக்கிட்ட...?

ம்ம்ம் பாண்ட்ஸ் பவுடரு!

அடேய் படுபாவி அந்த காம்பினேஷன்ல நீ என்னிக்குமே செவப்பாகமுடியாது! பேர்&லவ்லிக்கு சரியான காம்பினேஷனு கோகுல் சாண்டல்தான்! எப்படி அப்ளை பண்ணினாலும் - தனித்தனியா பர்ஸ்ட் & செகண்ட் லேயாராவோ இல்லாட்டி ரெண்டையும் கொழைச்சுக்கிட்டோ - கூடிய சீக்கிரமே செவப்பாகிடுவேன்னு சொன்னான் 3வதா ஒரு ப்ரெண்ட்டு! 3 தான் எனக்கு ராசி & ஒர்க் அவுட் ஆகும்! ஸோ அவன் சொன்னத நம்பித்தான் இப்ப கோகுல் சாண்டல் வாங்க கடைக்கு கிளம்பிக்கிட்டிருக்கேனாக்கும்!

ஓரங்க நாடகம்/ஸ்டேஜ் ஷோ

பள்ளிக்கூட ஆண்டுவிழாக்கள் கல்லூரி வருட இறுதி கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் அதிகம் ஆர்வம் செலுத்தும் மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே மிக அரிதாக இந்த ஓரங்க நாடகம் கான்செப்ட் எடுத்துக்கொண்டு கலக்குறத்துக்கு முயற்சி செய்வாங்க! பள்ளிக்கூட லெவலில் பாரதி காந்தி ..சி போன்ற வேடங்களை கொண்டு நாடகம் நடத்த கொஞ்சமாக முயற்சிக்கும் ஆசிரியர்களும் உண்டு! ஆனால் பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை! (அப்பத்தான் பசங்களும் நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார்!)

சரி அந்த விசயமெல்லாம் வேண்டாம் நாடகம் பத்தி பேசுவோம் நானெல்லாம் ஸ்கூல்ல படிச்ச காலத்துல ஆண்டுவிழாவிற்கு ஒரு மாதம் முன்பே அருமையான சப்ஜெக்ட் எடுத்து வைச்சு யார் யாரு என்ன என்ன கேரக்டருன்னெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு முடிஞ்சா ரிகர்சல் பாக்கலாம்ன்னு முடிவு பண்ணினதோட சரி ரொம்ப சீக்கிரத்துலயே செலக்ஷன் கமிட்டிகூடி நீங்க என்னா செய்யப்போறீங்கன்னு கேக்கப்போற நாளும் வந்து அன்னிக்குன்னு பார்த்து டைரக்டரா இருக்கறேன்னு சொன்ன பய வராததால என்/எங்களோட ஓரங்க நாடக கனவு கம்பெனி இழுத்து மூடப்பட்டது! ( ஒரு நல்ல கலைஞனை இந்த சமூகம் இழந்துருச்சு! - அட நான் இல்லைங்க நாங்க போட்ட ப்ளான் படி நடிக்க இருந்த ஹீரோ! நிறைய மேனரிசமெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருப்பான்!)

பிறகு பாலிடெக்னிக்ல சுத்திக்கிட்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஆசை வந்துச்சு ஆனா செலக்ஷன் பண்ணப்போற வாத்தி எங்க குரூப்பு மேல செம கடுப்புல இருந்ததால நாங்களே வேண்டாம் பொழச்சுப்போங்கன்னு விட்டுட்டோம். ஆனா அந்த டைம்ல எங்க ப்ரெண்ட்ஸ் குரூப்பு செஞ்ச நாடகம் செம க்ளாப்ஸ் வாங்கினுச்சு! - கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்ஷன்! ஸ்டூடன்ஸ் லெக்சரர் பிரின்ஸ்பால் இப்படி எல்லாருக்கும் அடக்க முடியாத சிரிப்பு நடிச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அவுனுங்க ஃபிகருங்ககிட்டேர்ந்துல்லாம் வந்துச்சுன்னா பார்த்துக்கோங்களேன்!!

ஓரங்க நாடகங்கள் இப்போதைய காலகட்டத்தில் ரொம்ப குறைஞ்சுடுச்சுன்னு பொதுவாக பார்க்கும்போதே தெரியுது. துணுக்கு தோரணங்களாக வர்ணிக்கப்பட்ட நகைச்சுவை நாடக அரங்கேற்றங்கள் ஆடியோ கேசட் ரீலிசுகள் சுத்தமா நின்னுப்போச்சு அல்லது அது பற்றிய செய்திகள் காணக்கிடைப்பதில்லை! இதெல்லாம் விரும்பாத அளவுக்கு மக்கள் சந்தோஷமாக இருக்காங்களோன்னு நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு!

டிவிக்களில்
முழு நேரமும் தொடர்களும்,திரும்ப திரும்ப ஒளிபரப்பாகும் ஒரே நகைச்சுவை காட்சிகளும் மக்களை கட்டிப்போட்டுவைத்திருக்கிற உண்மையினை நாடகம் நடத்துறவங்க நல்லா புரிஞ்சுக்கிட்டு கம்முன்னு இருக்காங்க போல...!

பதிவுலகத்தில கூட அவ்வப்போது நாடக டைப்புல பதிவுகள் வந்துக்கிட்டிருக்கும் இப்பவெல்லாம் சுத்தமா நின்னுப்போச்சு! டெரர் காமிக்கிற பதிவுகள் தான் எழுதறவங்களும் படிக்கறவங்களும் அதிகம் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க போல..!

தேவைப்படும் போது தேவைப்படற விசயம் கிடைக்காம போச்சுன்னா அக்கம்பக்கத்துலேர்ந்து வாங்கிகிடலாமாம் - காபி தூள் சக்கரைக்கு பக்கத்து வூட்டுல போய் கடன் கேட்டு வாங்கியாச்சும் ஃபில்டர் காபி குடிக்கிற மாதிரி - இப்ப ஸ்டேஜ் ஷோவுக்கு சாம்பிள் எதாச்சும் காமிக்கலாம்னு தேடி அலைஞ்சா ஒண்ணுமே சரியா சிக்கல சரின்னு எண்ட தேசம் பக்கம் போயி புடிச்சுட்டு வந்துட்டேன்!

பைஜு {Byju} காமெடி - பயபுள்ள டாப் லெவல்ல இருக்கிற மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாம் தண்ணிப்போட்ட மாதிரி நடிக்கிறதுல கில்லாடியாம்! அதுமாதிரியான கேரக்டர்தான் நல்லா பேரு வாங்கி கொடுத்து இப்ப உலகம் பூரா சுத்தி சுத்தி ஷோ போட்டுக்கிட்டிருக்காராமாம்!


பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!




பத்தாவது முடிச்ச கையோட பாலிடெக்னிக்ல சேர்ந்த புதுசு முதன் முதலா பொம்பளை புள்ளைங்க கூட சேர்ந்து படிக்கற கிளாசுல உக்கார இடம் வேற கிடைச்சிருந்தாலும் மனசு மகிழ்ச்சியா இல்ல காரணம் அட்மிஷன் நான் நினைச்ச காலேஜ்ல கிடைக்கலன்னுதான்! [சரி அந்த கதையை இப்ப ரொம்ப விரிவா சொல்லமுடியாது!]

இப்ப டைட்டிலுக்கு வருவோம்! முதல் வருசம் முழுசா கணக்கு வாத்தியார்க்கிட்டயும், கெமிஸ்ட்ரி & டிராயிங்க் வாத்தியார்ங்ககிட்டயும் மல்லுகட்டி படிச்சு ஒரு வழியா ரெண்டாவது வருசம் ஒதுக்கப்பட்ட டிபார்மெண்ட்ல வந்து உக்காந்தாச்சு! முதல் வருசமாச்சும் ஒரளவுக்கு 60:40 விகிதத்தில பெண்களும் ஆண்களும் இருந்த வகுப்பு! ரெண்டாவது வருசம் எங்களோட பழமையான டிபார்மெண்ட்டுக்கு முதல் நாள் வந்த விகிதாச்சாரம் கூட அதே ரேஞ்சுதான் ஆனா ஒரு வாரத்துல பெரும் கும்பலே பொட்டி தட்டுற கிளாசுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாங்க எங்க கிளாஸ்ல : 24 பெ:5 ஆகிப்போச்சு!

ஒரு வழியா தட்டு தடுமாறி,கான்கீரிட் சும்மா அளந்து அளந்து கொட்டி,ஹைட்ராலிக்ஸ் லேப்ல சாக்கடை தண்ணீர்க்கு சகலமும் கண்டுபுடிச்சு இது நல்ல தண்ணி கிடையாது குடிக்கப்புடாதுன்னு நிறையா தெரிஞ்சுக்கிட்டு மூணாவது வருசம் வந்து சேர்ந்தோம்!

அந்த நேரத்துல டிபார்மெண்ட் ஹெட் ரிடையர்ட்மெண்ட் வந்து ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து பிரிவுபசார விழா செய்யுறதா ப்ளான் பண்ணி பயபுள்ளைங்க எவனாச்சும் அவர பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா பேசணும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க! எல்லாருக்கும் முன்னாடி பேசுறதுன்னா பசங்க பயங்கர டெரர் ஆகிட்டாங்க!அது மட்டுமில்ல அந்த பைவ் ஸ்டார்களில் ஒரு ஸ்டாரை கரீக்ட் செய்யவும் பயங்கர போட்டி வேற..! ஸோ எதாச்சும் செஞ்சு அசிங்கப்பட்டுக்ககூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும் !

நான் மட்டும் தைரியமா, என்னோட ப்ரெண்ட்டுக்கிட்ட கவலைப்படாத நண்பா டோண்ட் ஓர்ரி நான் ஸ்கிரிப்ட் எழுதி தாரேன் நீ மேடைக்கு போற, நிக்கிற, சரசரன்னு பேப்பர்ல இருக்கிறதை படிச்சுட்டு வர்ற; டீல் .கேவான்னு கேட்டு .கே வாங்கிட்டேன்! அவனும் எதோ ஒரு நினைப்புல .கேவும் சொல்லிட்டான்!

சரி நாம என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு ம்ஹும் இது சரி வராது வழக்கமா அரசியல்வாதிங்க மாதிரி ஆரம்பிச்சுடவேண்டியதுதான்ன்னு இங்கு வீற்றிருக்கும் துறை தலைவரே,துறை ஆசிரியர்களே, மாணவ மாணவிகளேன்னு சொல்லி முடிச்சப்பிறகு என்னா சொல்றதுன்னு ரோலிங்க் ஆக ஆரம்பிச்சுடுச்சு!

ரிடையர்ட்மெண்ட் ஆகற வாத்தியார பத்தி எதாச்சும் சொல்லணும்ல? யோசிச்சா ஒண்ணும் வரமாட்டிக்கிது,அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது! யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு! நாலு வரிதான் நாலே வரிதான் டக்கரா சூட் ஆகிடுச்சு!(எந்த படம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்,
விண்ணை நீலம் பிரிந்தாலும்,
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் அப்படின்னு கொண்டு போய்ட்டு, நீங்க சொல்லிக்கொடுத்த படிப்பை மறக்க மாட்டோம், அப்புறம் காலேஜை மறக்கமாட்டோம், இப்படியே ஒரு கண்ட்ரோலே இல்லாம போய்க்கிட்டே இருக்க, ஒருவழியா பதட்டத்தை குறைச்சு,அத்தோட முடிச்சுகிட்டு,பேப்பரை நாலா மடிச்சு கையில வைச்சுக்கிட்டா தெரியாதுன்னு ஐடியாவும் கொடுத்தாச்சு!

பங்ஷன் அன்னிக்கு பயபுள்ள சொன்னமாதிரியே எல்லாமும் செஞ்சுடுச்சு,அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா நாலஞ்சு பிட்டை போட்டு பேசுனதுமில்லாம, ஒரு இடத்துல நிக்காம ,லெப்ட்ல ஒரு ரெண்டு அடி ரைட்டுல ஒரு ரெண்டு அடி பின்னாடி முன்னாடின்னு ஒரு வட்ட ஆட்டமே போட்டுட்டான்!அதை பார்த்த பைவ் ஸ்டார்ஸ் மட்டுமில்ல எல்லாருக்குமே ஒரு சந்தோஷ புன்னகை பூக்க....!

நண்பா நல்லா பேசுனேனாடா!

.கேடா நல்லா பேசுன, அதை விட நீ டான்ஸ் ஆடிக்கிட்டே பேசுனதுதான் கலக்கல்ன்னு பெருமையா சொல்ல..

ஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க! தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....!?

நீயுமாடா....?!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!