ஆட்டோ கேட்


கம்யூட்டர் அப்படின்னா என்னான்னு தெரியாத காலகட்டத்தில ஆட்டோகேட் படிங்கன்னு அட்வைஸ் மட்டும் கேட்டு தலையாட்டிக்கிட்டிருந்த மாதத்தின் ஏதோ ஒரு சுபயோக நன்னாளில் மயிலாடுதுறை பாரத் கம்யூட்டர்ஸின் படியேறி (ஆமாங்க மூணாவது மாடி) சேர்ந்த படிப்பு ஆட்டோகேட் கூட படிக்கிற மக்கள்ஸ் - ஒன்லி ஆண்கள் :( - கோபாலு பாக்ஸ்புரோ பேசிக்கு விண்டோஸு அப்படின்னு ஏதேதோ டாஸ் புராம்ப்ட்ல செஞ்சுக்கிட்டிருக்கா நாங்களும் (ரெண்டு பேர்தான்) ஆரம்பிச்சோம் டாஸ் ஆப்ரேடிங்க் சிஸ்டம்ல ஆட்டோகேட் ரீலிஸ் 11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்ஷன்!

இருந்த 7 சிஸ்டத்தில ஒரே ஒரு சிஸ்டம் மட்டும்தான் விண்டோஸ் 95இயங்குறது மத்ததெல்லாம் டாஸ்! ஆட்டோகேட்ல படம் போடறதா இருந்தாஒன்லி இடது வலது மேலும் கீழும் அப்படின்னு கீ போர்டு தான் பயன்படுத்தணும்! (மவுஸ்ன்னா என்னான்னே தெரியாத வகையில படிச்சு முடிச்சு பழகஆரம்பிக்கும்போதுதான் அதனோட மகத்துவம் புரிஞ்சுது !)

3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்!

பாடமாக சொல்லி கொடுத்த விசயங்கள் ஆட்டோகேட் ரீலிஸ் 12 ஆகஇருந்தாலும் பயிற்சி பெற்றது ரீலிஸ் 11 (புக்கு கிடைச்ச அளவுக்கு சாப்ட்வேர்கிடைக்கறது அப்போ அவ்ளோ ஈசியில்ல இப்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு - ஆச்சர்யப்படக்கூடிய வகைகளில் ஒரிஜினல் ரீலிஸ் ஆனாதும் கூடவே காப்பிஅடிச்சு அனுப்பிடறாங்க! (நானெல்லாம் கம்பெனி வாங்கி வைச்சிருக்கிறதாம்லயூஸ் பண்றோம்!) புத்தகங்களும் கூட இணையத்தில் நிறையவே கிடைக்கின்றஎன்ன ஒன்று பொறுமை அதிகம் தேவை படித்து பயில்வதற்கு....!

இதே டைம்ல ஒரிஜினல் வைச்சுக்கிட்டு சொல்லிக்கொடுக்கிற கம்பெனிக்காரங்க (CADD CENTER) காலேஜ் பாலிடெக்னிக்குன்னு கடை பரப்ப ஆரம்பிச்சாங்க! எங்கபாலிடெக்னிக்கலயும் வந்து ஒரு நாள் டெமோவெல்லாம் பண்ணினாங்க, ஏதோகிளாஸ் கட் ஆனா சரின்னு நினைச்சு போய் உக்காந்து படம்பார்த்துக்கிட்டிருந்தேன், கம்யூட்டர்ல எல்லாமே புதுசாவே தெரியுது ஏன்னா அதுரீலிஸ் 12 புது வர்ஷன் என்ன என்னமோ சொல்லுறாங்க...?!

எனக்கு எங்க கம்ப்யூட்டர் செண்டர் கேட் வாத்தியார் மட்டும் மினுங்கி மினுங்கிதெ()ரியிறாரு,எண்ட் கார்டு போடற டைம்ல யாரெல்லாம் ஆட்டோகேட்படிக்கிறீங்க கை தூக்குங்கன்னு கேள்வி வர நண்பர்களெல்லாம் ரொம்பபெருமையா என்னைய மட்டும் கை காமிக்க,எனக்கோ ஒரே ஆனந்த கண்ணீருநாம ஒண்ணு படிக்கிறதும் இங்க ஒண்ணு பாக்குறோம்ன்னு ) அப்படியேசமாளிச்சு பாலன்ஸ் பண்ணிட்டு கமுக்கமா உக்காந்திட்டேன்! அந்த டைம்ல ஒருஉந்துதல் இருந்துச்சு எப்படியாச்சும் அந்த விசயத்தை தெரிஞ்சிடணும்ன்னு... !

அன்னிக்கு ஆரம்பிச்ச தேடல்தான் ஒரு 2 அல்லது 3 வர்ஷன் சிடி புடிச்சு அதைஇன்ஸ்டால் செஞ்சு படிச்சு ஒரு வழியா தேறி வந்தாச்சு! இப்ப ரீலிசாகியிருக்கிறஆட்டோகேட் 2010 நினைச்சுபார்த்தாலே எல்லாமே அதிசயம் ஆச்சர்யமாவேஇருக்கு!

ஓவ்வொரு ரீலிஸ்களிலும், ஆட்டோகேட் மேம்படுத்தி ஏகப்பட்ட புதியநுட்பங்களை இணைத்து கொண்டு வரும்போது எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது! அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்!

கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொழில் ரீதியாக என்னுடனேபயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோகேட் மென்பொருளுக்கும் (ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) அது பற்றிய முயற்சிகளில் தீவிரமாகஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்!

47 பேர் கமெண்டிட்டாங்க:

said...

3 மாசக் course 11 மாசம் படிச்சீங்க சரி எத்தின மாசத்துக்கு pay பண்ணினீங்கள் :) பெட்டி பெட்டியா படம் எல்லாம் கீறுவீங்கள் அதானே இது?

said...

/(ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) /


:))

said...

nice post.

Same blood here when I studied Cobol, Oracle 7 version, SAP.

Those days it was a great pantha having COMPUTER POINT, NIIT, SSI bags on hand.

Anonymous said...

கலர்கலரா படம் போடறதில இருந்தே தெரியுதே உங்க நன்றி :)

said...

yaaru firstu boss???

said...

//ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்!//

நன்றிக்காக கடன் குடுக்கறீங்களா பாஸ்?? எம்புட்டு குடுக்கறீங்க?? 1 லட்சம் / 1 கோடி??? :P

said...

ஆரம்பிச்சிட்டீங்க்ளா மாஸ்டர்..
அறிமுகம் நல்லா இருக்கு :)

said...

vadai enaku thana?

said...

ஹ்ம்ம்ம்ம் :)))

said...

பாஸ்.. இது எதும் ரயில்வே கேட் மாதிரியா பாஸ்? :))

said...

/*(ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) */
:-)))

said...

பாஸ் 3Dயில எக்கசக்க சாப்ட்வேர் வந்தாலும் இன்னும் 2Dயில ஆட்டோ கேடை மிஞ்ச ஒரு சாப்ட்வேரும் வரல.

said...

//எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது! அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்!//

அட அப்ப 2010 கிடைச்சாச்சா? பாஸ் லின்ங் இருந்தா அனுப்புங்க பாஸ். டவுண்லோட் பண்ணிக்கிறேன்.

said...

\3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்\\

அட நம்ம கேசு ;))

said...

//ஒன்லி ஆண்கள் :( /// இதுக்கே ஏறத்தாழ ஒரு வருஷம் படிச்சி இருக்கீங்க‌;-))

said...

3 மாச கோர்ஸ ஒரு வருஷம் படிச்சி கடைசிலயாவது பாஸ் பண்ணீங்களா இல்லையா பாஸ்

said...

தலைப்ப பார்த்துட்டு தானா திறக்குற வாசற்கதவைப் பற்றிய பதிவுன்னு நினைச்சேன்!

said...

11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன்!

இதப் படிக்க ஒரு வருஷமாஆஆஆஆஆஅ

said...

- கோபாலு பாக்ஸ்புரோ பேசிக்கு விண்டோஸு அப்படின்னு ஏதேதோ டாஸ் புராம்ப்ட்ல செஞ்சுக்கிட்டிருக்கா நாங்களும் (ரெண்டு பேர்தான்)

:))))))))))))))

said...

நானும் கோவாலு, பாக்ஸ்புரோ எல்லாம் படிச்சிருக்கேன். என்னான்னுதான் இன்னும் தெரியலை.

கேட் 2000 படிச்ச கோஸ்டி நான். அதிலேயே மாடலிங்ல தாஜ்மஹால் (மாதிரியே) பில்டிங் கட்டினவனாக்கும் நான். ஹிஹி..

இடையில் கொஞ்ச காலம் படம் வரைந்து பின்னர் வேற டிபார்மெண்ட் போயி.. இப்ப டச் விட்டுப்போச்சி.!

said...

ஆட்டோ கேட் ல என்ன செய்யறீங்க?

//தலைப்ப பார்த்துட்டு தானா திறக்குற வாசற்கதவைப் பற்றிய பதிவுன்னு நினைச்சேன்!// கல் தோன்றா காலத்தில் முன் தோன்றிய தமிழில் இருக்கும் பிரச்சினை. "G" க்கும் "K" க்கும் ஒலியில் வேறுபாடு காட்ட முடியாது. அது போலவே "P" க்கும் "B" க்கும்

said...

பெருமிதத்தோடுஆயில்யன். ம்.
தேடல்கள் எப்பவும் வீணாய்ப்போகாது.

said...

/தலைப்ப பார்த்துட்டு தானா திறக்குற வாசற்கதவைப் பற்றிய பதிவுன்னு நினைச்சேன்!/
haahaahahahha....LOL!

said...

அதென்னவோ பாலிடெக்னிக் பசங்களுக்கு ஆட்டோகேட் தெரிஞ்ச அளவுக்கு இஞ்ஜினியரிங் பசங்களுக்கு தெரிவதில்லை..ஏனுங்க ? :)

said...

// சினேகிதி said...

3 மாசக் course 11 மாசம் படிச்சீங்க சரி எத்தின மாசத்துக்கு pay பண்ணினீங்கள் :) பெட்டி பெட்டியா படம் எல்லாம் கீறுவீங்கள் அதானே இது?//

அதே! அதே!!

இவுனுங்களை விடக்கூடாது அப்படின்னு கொஞ்சம் பவுண்ட்டேஷன் ஸ்ட்ராங்கா போட்டுட்டாரு வாத்தியார் ஞான் எந்தா செய்யும் பாஸ்...? :))

said...

//Blogger நிஜமா நல்லவன் said...

/(ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) /


:))//

நன்றிங்கண்ணா!

said...

//ராம்ஜி.யாஹூ said...

nice post.
Same blood here when I studied Cobol, Oracle 7 version, SAP.
Those days it was a great pantha having COMPUTER POINT, NIIT, SSI bags on hand.//
NIIT APTECH அப்படின்னு கம்ப்யூட்டர் செண்டர்ஸ் வந்து பிளஸ்-2 முடிச்சுட்டு வாங்க உங்களை எங்கேயே கொண்டு போறோம்ன்னு சொல்லி கேன்வாஸ் செய்த காலமும் கூட அப்பொழுது ! அப்படி போனவர்களும் இன்னைக்கு நல்ல பொசிசன்ல இருக்காங்க அப்படிங்கறதும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம் ! :)

said...

//சின்ன அம்மிணி said...
கலர்கலரா படம் போடறதில இருந்தே தெரியுதே உங்க நன்றி :)//

ப்ளாக்ல அதிகமா யூஸ் பண்ணினது கிடையாது பட் பண்றதுக்கு நிறைய ப்ளான் பண்ணி வைச்சிருக்கேனாக்கும் :)

said...

//G3 said...

yaaru firstu boss???//

என்ன பாஸ் இப்புடி கேட்டுப்புட்டீங்க படிக்கிற விசயத்துல என்னிக்கு நான் பர்ஸ்டா வந்திருக்கேன் :-) சொல்லிக்கொடுத்த வாத்தியார்தான் பர்ஸ்ட்டு வெளியில போனாரு நல்லா புரிஞ்சுக்கிட்டு :))))

said...

// G3 said...

//ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்!//

நன்றிக்காக கடன் குடுக்கறீங்களா பாஸ்?? எம்புட்டு குடுக்கறீங்க?? 1 லட்சம் / 1 கோடி??? :P///

எதையாச்சும் கொளுத்திப்போட்டுடாதீங்க அப்புறம் என் சட்டைய புடிச்சிடப்போறாங்க எங்கடா கடன் அப்படின்னு...? :)

said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆரம்பிச்சிட்டீங்க்ளா மாஸ்டர்..
அறிமுகம் நல்லா இருக்கு :)//

அக்கா இதுவும் ஒரு சிறுமுயற்சிதான்! :)
பை தி பை அந்த தாழ்வாரத்துக்கு மூடி போடறது பத்தி என்னன்னமோ தேடி பார்த்துட்டேன் ம்ஹும் நாம புதுசா எதாச்சும் R&D செஞ்சு பாக்கணும்!

said...

// Porkodi (பொற்கொடி) said...

vadai enaku thana?//

ஆனாலும் நீங்க எல்லா ப்ளாக்லயும் வடையே கேட்டுக்கிட்டிருக்கீங்க! ஜி3க்கிட்ட சொன்னா எம்புட்டு வேணுமோ அம்புட்டும் பார்சல் பண்ணிடப்போறாங்க ! :)

said...

//Blogger ஸ்ரீமதி said...

ஹ்ம்ம்ம்ம் :)))//

ம்ம்!

said...

// SanjaiGandhi said...

பாஸ்.. இது எதும் ரயில்வே கேட் மாதிரியா பாஸ்? :))///

ஆட்டோடெஸ்க் ஆண்டவரே இந்த மனிதரை மன்னித்துவிடுங்கள்! :))

said...

// அமுதா said...

/*(ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) */
:-)))///

எம்புட்டு சந்தோஷம் ! :)

said...

//☀நான் ஆதவன்☀ said...

பாஸ் 3Dயில எக்கசக்க சாப்ட்வேர் வந்தாலும் இன்னும் 2Dயில ஆட்டோ கேடை மிஞ்ச ஒரு சாப்ட்வேரும் வரல.//

கரீக்ட்டு பாஸ்! இதே ரீதியில சில சாப்ட்வேர்கள் வந்தும் இந்தளவுக்கு ரொம்ப எளிமையா வெகு சீக்கிரம் புரிஞ்சிக்கிடற அளவுக்கு மத்தவைகளால பர்ஃபாம் பண்ணமுடியாம போச்சுன்னு சொல்லலாம்!

said...

// ☀நான் ஆதவன்☀ said...

//எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது! அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்!//

அட அப்ப 2010 கிடைச்சாச்சா? பாஸ் லின்ங் இருந்தா அனுப்புங்க பாஸ். டவுண்லோட் பண்ணிக்கிறேன்.//

பாஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ் :(

said...

//கோபிநாத் said...

\3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்\\

அட நம்ம கேசு ;))///

எஸ் பாஸ்! :)

said...

//இய‌ற்கை said...

//ஒன்லி ஆண்கள் :( /// இதுக்கே ஏறத்தாழ ஒரு வருஷம் படிச்சி இருக்கீங்க‌;-))///

ஆமாம் பாஸ் ஆமாம் :( பட் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போறோம்ன்னு அலம்பல் செஞ்சுக்கிட்டு போனதெல்லாம் நான் சொல்லலையே! :)

said...

//இய‌ற்கை said...

3 மாச கோர்ஸ ஒரு வருஷம் படிச்சி கடைசிலயாவது பாஸ் பண்ணீங்களா இல்லையா பாஸ்///

எக்ஸாமு ரிசல்ட்டு பாஸு அதெல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தா அங்க ஒரு வருசமாவா சுத்திக்கிட்டிருந்துருப்போம் ஹய்யோ ஹய்யோ!!

said...

// வால்பையன் said...

தலைப்ப பார்த்துட்டு தானா திறக்குற வாசற்கதவைப் பற்றிய பதிவுன்னு நினைச்சேன்!//

சாரி வால்! கொஞ்சம் பதட்டத்துல போஸ்ட் போடறச்ச ஆங்கில டைட்டில் கட் ஆகியிருச்சு :(

said...

/ அமிர்தவர்ஷினி அம்மா said...

11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன்!

இதப் படிக்க ஒரு வருஷமாஆஆஆஆஆஅ///

அதை சொல்லவே உங்களுக்கு இம்புட்டு இழுக்குதே... எதோ ஒரு வருசத்துல முடிச்சுட்டோமேன்னு சந்தோஷப்படுக்கிட்டிருக்கோம்! :))

said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

நானும் கோவாலு, பாக்ஸ்புரோ எல்லாம் படிச்சிருக்கேன். என்னான்னுதான் இன்னும் தெரியலை.
கேட் 2000 படிச்ச கோஸ்டி நான். அதிலேயே மாடலிங்ல தாஜ்மஹால் (மாதிரியே) பில்டிங் கட்டினவனாக்கும் நான். ஹிஹி..
இடையில் கொஞ்ச காலம் படம் வரைந்து பின்னர் வேற டிபார்மெண்ட் போயி.. இப்ப டச் விட்டுப்போச்சி.!///

கோவாலு பாக்ஸ்புரோவெல்லாம் பேசிக்கா தெரிஞ்சுக்கிட்டு போனவங்கதான் இன்னிக்கு ஐடி பீல்டுல சக்க போடு போடுறாங்களாம் பாஸ்!

தாஜ்மஹால் எல்லாம் செஞ்சீங்களா...! யாருக்குன்னு நான் கேட்கமாட்டேனே...! :)

said...

// அமர பாரதி said...
ஆட்டோ கேட் ல என்ன செய்யறீங்க?
//தலைப்ப பார்த்துட்டு தானா திறக்குற வாசற்கதவைப் பற்றிய பதிவுன்னு நினைச்சேன்!// கல் தோன்றா காலத்தில் முன் தோன்றிய தமிழில் இருக்கும் பிரச்சினை. "G" க்கும் "K" க்கும் ஒலியில் வேறுபாடு காட்ட முடியாது. அது போலவே "P" க்கும் "B" க்கும்//

படிக்கிறா காலத்தில என்ன செய்யுறதுன்னு புரியாம உக்காந்திருந்தோம்
அப்புறம் ஓரளவுக்கு தெளிவாகி பில்டிங்க்ஸ் சம்பந்தப்பட்ட டிராயிங்க்ஸ் பண்ணிக்கிட்டிருந்தோம்! இப்ப தெரிஞ்சதை வைச்சுக்கிட்டு டிராப்ட்ஸ்மேனை வதம் செஞ்சுக்கிட்டிருக்கோம்! :)

said...

/ஹேமா said...

பெருமிதத்தோடுஆயில்யன். ம்.
தேடல்கள் எப்பவும் வீணாய்ப்போகாது.///

அதே! தேடல்கள் ஆர்வத்துடன் இருந்தால் அது கண்டிப்பாக நல்லதொரு வழியில் பயணிக்கவைக்கும் இது ஒரு பாடம் எனக்கு :)

said...

//அன்புடன் அருணா said...

/தலைப்ப பார்த்துட்டு தானா திறக்குற வாசற்கதவைப் பற்றிய பதிவுன்னு நினைச்சேன்!/
haahaahahahha....LOL!///

ஆஹா டீச்சர் பாடம் சம்பந்தமா சொல்லியிருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்! :))

said...

// ஆளவந்தான் said...

அதென்னவோ பாலிடெக்னிக் பசங்களுக்கு ஆட்டோகேட் தெரிஞ்ச அளவுக்கு இஞ்ஜினியரிங் பசங்களுக்கு தெரிவதில்லை..ஏனுங்க ? :)//

அதாகப்பட்டது டிப்ளமோ முடிச்சதும் எடம் புரியாம அலைபாஞ்சு இது மாதிரி விசயங்களை போய் கத்துக்கிட்டுவாங்க! பட் இன் ஜினியரிங்க்ல படிச்சு முடிச்சவங்க நேரா இந்த சப்ஜெக்ட்ல நுழையாம வேற இன்ன பிற ஐடி ரிலேட்டட்ல பூந்துடுவாங்க - அதுலதான் நல்ல ஸ்கோப் இருக்குன்னு (இது கடந்த பத்து வருடத்து கதைதான்!)