வாழ்த்துக்கள் புதுகை தென்றல்


புதுக்கோட்டை - விடுமுறைக்கு அதிகம் சென்ற ஒரே ஒரு ஊர் !சின்னஞ்சிறுவயதில் என்றாலும் இன்றும் கூட மனதில் பதிந்து நிறைந்திருக்கும் புதுக்கோட்டை - எதோ ஒரு வெள்ளிகிழமைகளின் மதிய வேளையில் கூகுளில் பயணம் மேற்கொள்வேன்!

ஊர் பெயர் மூலம் அறிமுகம் பெற்ற இணைய நட்பு! அன்பு காட்டவும் எப்பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியவர் புதுகை தென்றல் கலா அக்கா! இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனியவேளையில் வாழ்த்துக்களுடன் கலா அக்கா அவர்களின் பழைய நினைவுகள் பதிவு ஒன்றினை பகிர்ந்துக்கொள்கிறேன்!

இந்த பதிவு படித்தப்பொழுது எனக்குள் என் விடுமுறைக்கால புதுகை ஞாபகங்கள் தாலாட்டின :)

***************
எங்கள் புதுகை சின்ன ஊர்தான். காலை 5 மணி, 9 மணி, பகல் 12 மணி, சாயந்திரம் 5 மணி, மற்றும் இரவு 8 மணிக்கு சாந்தாரம்மன் கோவில் அருகில்
இருக்கும் மார்க்கெட்டிலிருந்து சங்கு ஒலி கேட்கும்.(இன்றும் இப்பழக்கம் இருக்கிறது) இதை வைத்தே நேரத்தை கணக்கிட்டுக்கொள்வோம்.

(அதற்கு முன்னரே பக்கத்துவீட்டில் மாடு கறக்க கோனார் வந்துவிடுவார்.) பால் கறந்த கையோடு(3 மணிக்கு) முதல் பால் டெலிவரி எங்கள் வீட்டிற்குத்தான். பால் சொம்போடு வந்து என்னைத்தான் எழுப்புவார் மோகனம்மா. (மோகன் அவர்களின் பையன்) அப்போது எழுந்து (சமையற்கட்டு மேடை மீது அமர்ந்து (சிம்மாசனம் :) ) படித்துவிட்டு 5 மணி சங்கு ஊதியதும் வந்து படுத்துக்கொண்டு அதிகாலையை ரசிப்பேன்.

அதிகாலை 5 மணி சங்கு ஒலிக்கேட்ட கொஞ்ச நேரத்தில்பள்ளிவாசலின் பாங்கு ஒலி கேட்கும். 10 நிமிட கழித்து வீட்டுக்கருகில் (வடக்கு 4ல் எங்கள் வீடு)இருக்கும் சர்ச்சில் ஜபம் தொடங்கும். இன்று என்ன பாடல் போடுவார்கள் என்றுகாத்திருப்பேன்.யேசு ராஜா முன்னே செல்கிறாரா..இல்லை வேறு எந்தப் பாட்டு என்று என் மனதும் நானும் பந்தயம் கட்டிக்கொள்வோம்.

வாசல்
பெருக்கும் சத்தம், பால்வண்டி மணி, இவைகளுடனே துவங்கும் நாள்.

மார்கழி மாதக் குளிருக்கு பயந்து மஃப்ளர் கட்டிக்கொண்டு ரோடை அடைக்க கோலம் போடுவது தனி சுகம்..அந்த நேரத்தில் சைக்கிள் எடுத்துக்கொண்டு கீழராஜவீதியில் போவது ஒரு சுகம்.:) 6.30 மணிவாக்கில் கீரை, பூசணிக்காய், உப்பு விற்பவர்கள், ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும தண்ணீரை பிடித்து வைக்க குடம் தூக்கிப்போகும் பெண்கள்.“எனக்கும் ரெண்டு குடம் தண்ணிக்காஎன்று சைக்களில் குடம் கட்டி வரும் பையன்கள்,குழாயடி சண்டை. வாகனங்கள் அதிகம் போகத் துவங்கியிருக்காத என வீதியே அழகாய் இருக்கும் அந்தக் காலை நேரத்தில்.பல்துலக்கி,குளித்து கல்லூரிக்கு ரெடியாகும் வரைதோழி ஒலித்துக்கொண்டிருப்பாள்.( ரேடியோவில் பக்திமாலை, செய்திகள்.. எக்ஸ்ட்டரா...)

நான் மிகவும் ரசித்த தருணங்கள்!


***************


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !

26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அக்காவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))

said...

அக்காவை புகழ்ந்து எந்த ஒரு கவிதையும் போடவில்லை இதனால் ஆயில் அண்ணாச்சிக்கு என்னோட மனமார்ந்த கண்டனங்கள் ;))

said...

வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்.. :)

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !

said...

வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்...

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))

said...

ஆயில்யன்,
அருமையான புதுகைக் காலையைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் நன்றி.

அன்பு கலாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உடல் நலம்,தேறி இன்னும் நிறைய எழுதவும் என் பிரார்த்தனைகள்.

said...

புதுகைத் தென்றலுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;)

said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!

said...

தென்றலின் நினைவுகள் தென்றல்.!

புதுகைத்தென்றலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.!

said...

//மார்கழி மாதக் குளிருக்கு பயந்து மஃப்ளர் கட்டிக்கொண்டு ரோடை அடைக்க கோலம் போடுவது தனி சுகம்//

77லா?

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புதுகை தென்றல்

said...

புதுகைத்தென்றலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

புதுகை தென்றல் கலா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா..!

said...

உங்கள் அனைவரின் அன்பு மழையில் நனைந்தேன். அனைவருக்கும் நன்றி.

பதிவிட்ட அன்புத் தம்பிக்கு நன்றிகள்.

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

said...

சகோதரிக்கு வாழ்த்துகள்.

said...

புதுகை தென்றலுக்கு,
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

said...

காலைப் பொழுதை நீங்கள் ரசித்தமாதிரி
நாங்களும் உங்களுடன் சேர்ந்து ரசித்தோம்.

நன்றி ஆயில்யன்.

Anonymous said...

புதுகைத்தென்றலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்