நார்த்தங்காய் ஊறுகாய்!


”பேரைக்கேட்டாலே நாக்குல எச்சி ஊறுதுல்ல” அப்படின்னு டைட்டில் போட்டு டெரர் காமிக்கலாம்தான்..! ஆனா நிறைய பேருக்கு இந்த நார்த்தங்காய் ஊறுகாய் பத்தின செய்திகள் தெரியாத அளவுக்கு இந்த ஊறுகாய் நினைவிலிருந்து, உணவிலிருந்தும் காணாமலே போய்டுச்சுல்ல :-(

வீடுகளில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் பிரியாவும் ஆச்சியும் அடுக்களையிலோ அல்லது பிரிட்ஜுக்குள்ளோ சாப்பாட்டுக்கு தொட்டுக்க ரெடியா இருக்காங்க அப்புறம் இந்த மாதிரி விசயங்களை எல்லாம் யார் போய் தலையிட்டு மாட்டிக்கிடறது நோ ரிஸ்க்! (அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது இல்லேன்னா என்னமோ இனிப்புமில்லா உப்புமில்லாத ஒரு வஸ்துவா இருக்கு!)

நேத்து மிளகாய் கிள்ளி சாம்பார்ரை பார்த்ததுமே எனக்கு டக்குன்னு ஞாபகத்துக்கு வந்தது இந்த நார்த்தங்காய் ஊறுகாய்தான்!

எங்கயாச்சும் ஊருக்கு போய்ட்டு வந்தாலோ அல்லது இரவு நேரங்களில் சாதம் சமைக்க வேண்டியிருந்தாலோ இந்த மெனுதான் எங்க வீட்லயும் பாசிப்பருப்பு அப்புறம் வெங்காயம்,தக்காளி,மிளகாய் மற்றும் இன்ன பிற ஐட்டங்களை போட்டு கொதிக்கவிடும்போதே வாசனை பசியை கிளப்பிவிட்டுடும் பிறகு அதுல வெங்காய வடகத்தை தாளிச்சு கொண்டும்போது கையில தட்டோட “அம்மா பசிக்குது அம்மா பசிக்குது” அப்படின்னு டைமிங்கல ரைமிங்கா பாடிக்கிட்டே வந்து அடுப்பாங்கரையில உக்காந்துட்டா வேற வழியே இல்ல சுடச்சுட அப்படியே சாதத்தையும் சாம்பாரையும் ஊற்றி ஆகவேண்டிய கட்டாயம் பாட்டிக்கு!

வடகம் சுட ஆயத்தபடும் வேளையில் அவ்ளோ நேரமெல்லாம் தாங்காது என்ற அலறலில் வரும் ஐட்டம்தான் நார்த்தங்காய் ஊறுகாய் உப்பு போட்டு நல்லா காஞ்சு இருக்கும் அதை தின்னவே பிரம்மபிரயத்தனபடவேண்டியிருக்கும் ஆனாலும் சுடுசோறு சாம்பார் + ஊறுகாய் வைச்சுக்கிட்டு தின்னா..!

இந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப சிக்கனமானதொரு தயாரிப்புன்னு சொல்லலாம் பெரும்பாலான வீடுகளில் அப்போ எலுமிச்சை மரம் நார்த்தமரம் எல்லாம் இருக்கும் அதுல இருந்து பறிச்சுக்கிட்டு வந்து அழகா அறுத்து (அது ஒரு விதமான டிசைனா அறுத்து வைப்பாங்க) உப்பு மற்றும் இன்னும் எதோ - பார்முலா மறந்துப்போச்சு யாராச்சும் சொல்லுங்கப்பா - போட்டு ஊறவைப்பாங்க!

கொஞ்ச நாள் பிறகு அதை எடுத்து வெயிலில் காயப்போட்டால் ஊறுகாய் ரெடி! அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க! வெய்யிலில் தொங்கும்போதே அதை எடுத்து திங்க தோணும், ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது!

ம் ம் வாய்ப்பு இருக்கறவங்க தின்னு பாருங்க, இல்லாதவங்க வழக்கம்போல ச்சும்மா படத்தை பார்த்துட்டு போகாம, வீட்ல செஞ்சு தின்னு பாருங்க! சிம்பிள்தான்!

28 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//
கொஞ்ச நாள் பிறகு அதை எடுத்து வெயிலில் காயப்போட்டால் ஊறுகாய் ரெடி! அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க! வெய்யிலில் தொங்கும்போதே அதை எடுத்து திங்க தோணும், ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது!
//

இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நார்த்தங்காய் ஊறுகாய்க்கு சைட் டிஷ் வேண்டுமா... வெட்கம்!!!! அப்படியே சாப்பிட முடியாதா ... அவமானம். யாரங்கே இவரைப் பிடித்து கொட்டடியில் அடைத்து 10 நாளைக்கு நார்தங்காய் ஊறுகாயை கண்ணில் மட்டும் காட்டவும்.

said...

http://abiappa.blogspot.com/2008/05/03.html

இங்க இருக்கு நார்த்தங்காய் ஊறுகாய் செய் முறை இருக்குப்பா!

said...

நார்த்தங்காய் ஊறுகாய்!//

superu, பாஸ் பாஸ் உங்க அடுத்த படத்துக்கு இதையே டைட்டிலா வச்சிடுவோமா

said...

நார்த்தங்காய் ஊறுகாய் படம் கேட்டு இருந்தா கொடுத்திருப்பேனே:))

Anonymous said...

//ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது!//

நார்த்தங்காய் ஊறுகாய்க்காத்தான் சாப்பிடுவோம். ஆசையைக்கிளப்பி விட்டுட்டூங்களே!!! இங்க வேற கிடைக்காதே

said...

:))))))))))))))))))))

said...

இன்டைக்குத்தான் நம்ம வீட்டில புது ஊறுகாய் போத்தல் உடைச்சோம். நிரு பிரான்ட் ஊறுகாய்.

கறி சரியில்ல என்டால் சோறும் தயிரும் ஊறகாயும்தான்.

என் பழைய பதிவொன்றில் ஊறுகாய் பற்றி எழுதியிருக்கிறேன். ஊரில குசினி யன்னலால ஒராள் நிண்டு ஊறுகாய் சப்ளை பண்ண (களவாத்தான்) மிச்சாகள் யன்னல் கம்புக்குள்ளால கைவிட்டு ஊறுகாய் வேண்டி நக்குவம் :)

said...

//ம் ம் வாய்ப்பு இருக்கறவங்க தின்னு பாருங்க, இல்லாதவங்க வழக்கம்போல ச்சும்மா படத்தை பார்த்துட்டு போகாம, வீட்ல செஞ்சு தின்னு பாருங்க! சிம்பிள்தான்!//

:-((((((

said...

//இன்னும் எதோ - பார்முலா மறந்துப்போச்சு//

:))!

said...

காயப் போட்டு சாப்பிட்டா அது நார்த்தங்காய் வத்தல்(இதுல வத்தல் குழம்பு பண்ணா, ஆகா). காயப்போடம சாப்பிட்டா அது ஊறுகாய். இதுதயாரிக்கற மெனு நமக்கு கொஞ்சம்தான் தெரியும்(சாப்பிட நல்லா தெரியும்) நறுக்கு உப்பில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஊறப்போட்டு அந்த தண்ணீரை வடித்துவிட்டு அந்த உப்புக்கண்டத்தில் ஊறுகாய் விழுதை சுடும் நல்லெண்ணயுடன் சேர்த்து கலக்கி ஜாடியில் இட்டு மெல்லிய துணியால் மூடிவைக்கவேண்டும். பின் ஒரு நாள் கழித்து எடுத்தால் ஊறுகாய் ரெடி. காலையில் பழைய சாதத்துடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் கண்டிப்பா அலுவலகத்தில் மெமோ கிடைக்கும் சும்மா கும்னு இருந்த தூக்கம் வராம என்ன செய்யும். இந்த விழுது செய்யத்தான் தெரியாது(வறுத்த மிளகாய், மிளகு,கொத்தமல்லி(தனியா),சீரகம் எல்லாம் சேர்த்து அரைத்தால் விழுது ரெடி.

said...

//அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது //

புதுசா இருக்கே:)?

said...

அடடா படிக்கும் போதே, சாப்பிட்ட ஒரு எஃப்ஃபெக்ட்... :)

said...

/*வீட்ல செஞ்சு தின்னு பாருங்க! சிம்பிள்தான்!
*/
கிச்சன் கிங் ஆயில்யனுக்கு எல்லாமே சிம்பிள் தான் :-))

said...

நாங்க ஊர்ல செய்து சாப்பிட்டு இருக்கோம்.ஆனால் தேசிக்காய் ஊறுகாய் போல வராது ஆயில்யன்.

said...

ஐயோ வடை போச்சே என் பின்னூட்டம் எங்கே எங்கே எங்கே

said...

எப்படியாச்சும் பல்கலை வித்தகர்னு பட்டம் வாங்கிருவீங்க போல..

நல்லா இருக்கு உங்க பதிவுகள்.

ஜெயக்குமார்

said...

ஹைய் பாஸ்

எங்க வீட்டுல இந்த ஊறுகாய் இருக்கு பாஸ் இன்னும்.

என்ன நமக்குத்தான் உள்ள இறங்காது :))))))))

மாங்காய் ஊறுகா தான் நம்ம ஃபேவரிட்.

செம பதிவு பாஸ்.

said...

ஒளிமயமான எதிர்காலம்.....:-)) சீக்கிரம் செய்முறையை கத்துக்கிட்டு போஸ்ட் போடுங்க பாஸ்!! :-)

said...

கிச்சன் கில்லாடி ஆயில்ஸ் வாழ்க‌:-)

said...

இந்த கொசுவத்தியோட மாடிஃபைடு வர்ஷன் வித் மாங்காய் எனக்கும் இருக்கு பாஸ்!! :))

said...

ஆனா நார்த்தங்காய் கொஞ்சம் பழுத்தமாதிரி இருந்தா அதை உப்பு வச்சி சாப்பிட்டுருக்கோம் பாஸ்...செமையா இருக்கும்...உப்பு..புளிப்பு..இனிப்பு..திடம்,மணம், சுவை மாதிரி!! :))

said...

நான் சொன்ன வரை சரிதான்
அதுக்கு பின்ன "ஆயில்ல" வெந்தயம், கடுகு உ.பருப்பு , மி தூள் தாளிச்சு அந்த ரவுண்டு டிசைண் எல்லாம் 1 இன்ச் சைஸ்ல கட் பண்ணி போட்டு திரும்ப ஜாடில போட்டு சில்க் சுமிதா தான். ஜோருகாய் சூப்பர் ஸாரி ஊறுகாய் ச்சூப்பர்

said...

நாரத்தங்காய் ஊறுக்கய்க்கு இருக்கிற
இன்னொரு விசேசம் சமீபாட்டில் பிரச்சி
னை உள்ளவர்களுக்கு இந்த ஊறுகாய்
அதை நிவர்த்தி செய்துவிடும்.பத்திய
மாகச்சாப்பிடுகிறவர்கள் கூட் இந்த
ஊறுகாய்ச் சேர்த்துக்கொள்ளலாம்.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ :)

said...

\\
நிஜமா நல்லவன் said...
நார்த்தங்காய் ஊறுகாய் படம் கேட்டு இருந்தா கொடுத்திருப்பேனே:))
\\

நீங்க ஊறுகாயே கொடுப்பிங்கன்னு கூட எங்களுக்கு தெரியும் பாஸ், சரி..சரி இதெல்லாம் பப்ளிக்குல எதுக்கு?

:)

said...

அண்ணா நார்த்தங்கா ஊறுகாய் வேற. அது எலுமிச்சை மாதிரியே போடுவாங்க. காரமெல்லாம் போட்டு.. நீங்க சொல்லிருக்கறது 'உப்புல போட்ட நார்த்தங்காய்'.. நேத்துதான் சாப்டேங்கறது கூடுதல் தகவல்.. ஹி ஹி ஹி :))))))))

said...

ஆயில்யன்,

நார்த்தங்காயை சுருள் சுறுளா நறுக்கி, அதுல கல்லுப்பு அடைத்து ஜாடியில் போட்டு வேடு கட்டி வைக்கணும்.

இரண்டாம் நாள் மஞ்சள் பொடி பிசிறி மூடி வைக்கணும். மூணாம் நாள் அப்படியே முறத்தில கொட்டி மெல்லிய வேஷ்டி போட்டு மூடி வெய்யில்ல வச்சு வச்சு எடுக்கணும்.

நல்லாக் காய்ஞ்சதுனா உப்பு நார்த்தங்காய் ரெடி. இதையே ஈர நார்த்தாங்காயா போடணூம்னா சின்ன துண்டுகளாக் கட் பண்ணிட்டு உப்பு பிசிறி வச்சு, மஞ்சள் பொடி பச்சை மிளாகாய் திருத்திப் போட்டு
ஊற வைக்கணும் . மூணாம் நாள் ஈர நார்த்தங்காய் ரெடி.

கார ஊறுகாய் வேணூம்னால்
சிகப்பு மிளகாய் பெருங்காயம், மெந்தியம் எல்லாத்தையும் வறுத்துப் பொடி பண்ணிச் சேர்க்கணும். எல்லாம் தேவைக்கேத்த மாதி போட்டுக்க வேண்டியதுதான்:)
இதுல நல்லெண்ணை காய்ச்சி விட்டு . வெய்யிலில் வச்சு எடுத்த வெய்யில் வாசனையோட நல்லா இருக்கும்.

said...

ஊறுகாய் மிகவும் அருமை