Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

நார்த்தங்காய் ஊறுகாய்!


”பேரைக்கேட்டாலே நாக்குல எச்சி ஊறுதுல்ல” அப்படின்னு டைட்டில் போட்டு டெரர் காமிக்கலாம்தான்..! ஆனா நிறைய பேருக்கு இந்த நார்த்தங்காய் ஊறுகாய் பத்தின செய்திகள் தெரியாத அளவுக்கு இந்த ஊறுகாய் நினைவிலிருந்து, உணவிலிருந்தும் காணாமலே போய்டுச்சுல்ல :-(

வீடுகளில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் பிரியாவும் ஆச்சியும் அடுக்களையிலோ அல்லது பிரிட்ஜுக்குள்ளோ சாப்பாட்டுக்கு தொட்டுக்க ரெடியா இருக்காங்க அப்புறம் இந்த மாதிரி விசயங்களை எல்லாம் யார் போய் தலையிட்டு மாட்டிக்கிடறது நோ ரிஸ்க்! (அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது இல்லேன்னா என்னமோ இனிப்புமில்லா உப்புமில்லாத ஒரு வஸ்துவா இருக்கு!)

நேத்து மிளகாய் கிள்ளி சாம்பார்ரை பார்த்ததுமே எனக்கு டக்குன்னு ஞாபகத்துக்கு வந்தது இந்த நார்த்தங்காய் ஊறுகாய்தான்!

எங்கயாச்சும் ஊருக்கு போய்ட்டு வந்தாலோ அல்லது இரவு நேரங்களில் சாதம் சமைக்க வேண்டியிருந்தாலோ இந்த மெனுதான் எங்க வீட்லயும் பாசிப்பருப்பு அப்புறம் வெங்காயம்,தக்காளி,மிளகாய் மற்றும் இன்ன பிற ஐட்டங்களை போட்டு கொதிக்கவிடும்போதே வாசனை பசியை கிளப்பிவிட்டுடும் பிறகு அதுல வெங்காய வடகத்தை தாளிச்சு கொண்டும்போது கையில தட்டோட “அம்மா பசிக்குது அம்மா பசிக்குது” அப்படின்னு டைமிங்கல ரைமிங்கா பாடிக்கிட்டே வந்து அடுப்பாங்கரையில உக்காந்துட்டா வேற வழியே இல்ல சுடச்சுட அப்படியே சாதத்தையும் சாம்பாரையும் ஊற்றி ஆகவேண்டிய கட்டாயம் பாட்டிக்கு!

வடகம் சுட ஆயத்தபடும் வேளையில் அவ்ளோ நேரமெல்லாம் தாங்காது என்ற அலறலில் வரும் ஐட்டம்தான் நார்த்தங்காய் ஊறுகாய் உப்பு போட்டு நல்லா காஞ்சு இருக்கும் அதை தின்னவே பிரம்மபிரயத்தனபடவேண்டியிருக்கும் ஆனாலும் சுடுசோறு சாம்பார் + ஊறுகாய் வைச்சுக்கிட்டு தின்னா..!

இந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப சிக்கனமானதொரு தயாரிப்புன்னு சொல்லலாம் பெரும்பாலான வீடுகளில் அப்போ எலுமிச்சை மரம் நார்த்தமரம் எல்லாம் இருக்கும் அதுல இருந்து பறிச்சுக்கிட்டு வந்து அழகா அறுத்து (அது ஒரு விதமான டிசைனா அறுத்து வைப்பாங்க) உப்பு மற்றும் இன்னும் எதோ - பார்முலா மறந்துப்போச்சு யாராச்சும் சொல்லுங்கப்பா - போட்டு ஊறவைப்பாங்க!

கொஞ்ச நாள் பிறகு அதை எடுத்து வெயிலில் காயப்போட்டால் ஊறுகாய் ரெடி! அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க! வெய்யிலில் தொங்கும்போதே அதை எடுத்து திங்க தோணும், ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது!

ம் ம் வாய்ப்பு இருக்கறவங்க தின்னு பாருங்க, இல்லாதவங்க வழக்கம்போல ச்சும்மா படத்தை பார்த்துட்டு போகாம, வீட்ல செஞ்சு தின்னு பாருங்க! சிம்பிள்தான்!

உருளைக்கிழங்கு குருமா - செஞ்சதும் & தின்னதும்

சப்பாத்தியை உருளைக்கிழங்கு குருமா காம்பினேஷன்ல தின்னு பார்த்துடணும்ன்ன் நொம்ப்ப்ப்ப்ப நாளா ஒரு ஆசை!

இங்க இருக்கிற மலையாளிங்க கடையில காலையில உருளைகிழங்கு குருமா இருந்தா சப்பாத்தி இருக்காது சாயந்திரம் சப்பாத்தி இருந்தா உருளைகிழங்கு குருமா இருக்காது ஸோ லேப்ல செஞ்சு திங்கிறதுதான் ஒரே வழி - செய்யுற காலகட்டம் வர்ற வரைக்கும் நினைச்சுக்கிட்டே நாக்கை நனைச்சுக்கிட்டிருந்தேன்!

சரி இன்னிக்கு ரொம்ப வெட்டியாத்தானே ( அட டெய்லியும் நீ அப்படித்தாண்டா இருக்கன்னு ஒளிஞ்சுக்கிட்டு சொல்ற நல்லவனுங்களையெல்லாம் கண்டுக்காதீங்க) இருக்கோம் லேப்ல டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம்ன்னு முடிவு எடுத்து ஹோம் ஓர்க் செஞ்சுக்கிட்டேன்! (அதாங்க நெட்லேர்ந்து வழிமுறைகள் முறைகள் ஸ்டெப்ஸ் எப்படி அப்படின்னு)

என்கிட்ட இருக்கிற பொருட்களை வைச்சு சமைக்க எந்த ஒரு இணையத்திலயும் குறிப்பு இல்ல! இணையத்தில இருக்கிற குறிப்புபடி என்னால இந்த நாள் மட்டுமில்ல எந்த நாளுமே சமைக்கமுடியாதுன்னு முடிவு பண்ணி ரோட்ல இருந்த கோட்டை மட்டும் கவனமா பார்த்துக்கிட்டேன்!

திடீருன்னு ஒரு சந்தேகம் நமக்குத்தான் உருளைக்கிழங்கு காரக்கறி செய்ய தெரியுமே அப்ப இதுக்கும் உருளை கிழங்கு குருமாவுக்கு அப்படி என்ன பெரிய வித்தியாசம்ன்னு ஒரே மண்டை குடைச்சல் சரி யார்க்கிட்டயாச்சும் சின்ன முயற்சி எடுத்தாவது கேட்டு கிளியர் பண்ணிக்கிடலாம்ன்னு, சகோதரி ஒருத்தங்ககிட்ட கேட்டு ஒரளவுக்கு சமாதானமாகிகிட்டேன்!

ஆயத்தபணிகளை செஞ்சுக்கிட்டிருக்கும்போது திரும்பவும் ஒரு டவுட்டு அதான் ஐடியா நோ ப்ராப்ளம் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு ஆரம்பிச்சாச்சு!

நான் எடுத்துக்கிட்ட மூலப்பொருட்கள்:-
உருளைகிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சைமிளகாய்
இஞ்சி
உப்பு
வறுக்கற வாணலி
வேகவைக்கிற பாத்திரம்
அப்புறம் ஒரு கரண்டி
ஒரு டம்ளர்
ஒரு ஸ்பூன்
ஒரு வேஸ்ட் துணி
(போதுமா இல்ல இன்னும் டீடெயிலா....?)


உருளைகிழங்கு வேகவைக்கிற பாத்திரத்தில தண்ணி ஊற்றி மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு உப்பு போட்டு வேக வைச்சுட்டேன் (திடீர்ன்னு எங்கேர்ந்து மஞ்சள் பொடி வந்துச்சுன்னுல்லாம் கேக்காதீங்க அது அப்படித்தான்!)

வெங்காயத்தை நீள வாக்குல ஸ்லைஸ் அட அதாங்க வில்லைகளாக வெட்டி வைச்சுக்கிட்டேன் பிறகு இஞ்சியும் தக்காளியும் முறையே கடினமான இலகுவான வேலையாக செய்துமுடித்துவிட்டேன்!

பச்சை மிளகாய் மட்டும் பாக்கி ப.மி ரெண்டு ரிஸ்கு இருக்கு!

1.சின்னசின்னதா ரவுண்ட் சைசில வெட்டி போட்டா நாக்குல பட்டு நல்லா உறைக்கும் கஷ்டமாகிடும் அப்புறம் அழுதுடுவேன்.

2 வது ரிஸ்க்கு நீளவாக்கில வெட்டி போட்டா திங்க ஸ்டார்ட் செய்யறதுக்கு முந்தியே தூக்கி எல்லாத்தையும் பொறுக்கி கடாசிடலாம் ஆனா, நீளவாக்குல வெட்டுறதுல விரலுக்கு பயங்கர ரிஸ்க்கு !

ப
.மிளகாய் பத்திரமா நிக்கவைச்சு நீட்டு வாக்குல இரண்டாக்குறதுல பொறுமை ரொம்ப அவசியம் இல்லாங்காட்டி விரலு வீங்கிடும் (கட்டு போட்டு)

வாணலி - சட்டி - இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி கடுகு போடுங்க (எண்ணெய் ஊத்தினா கடுகு போட்டு தாளிக்கணும்ங்கறாது ஒரு மனக்கணக்கு!) அதுல வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டுடுங்க! கொஞ்சம் நிமிசம் கழிச்சு வேக வைச்ச உருளைகிழங்க எடுத்து அதுல போட்டு ஒரு பிரட்டு பிரட்டிடுங்க ! எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனாதும் ஒரு வாசனை வரும் கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க! டிரையா இருந்தா கார கறி கொஞ்சம் தண்ணியா - கூழ்மமா - லிக்விடா இருந்தா குருமா!

ஒ.கே டன்!

இனி
இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான், சப்பாத்தி, இட்லி அல்லது தோசை இப்படி எதாச்சும் ஒரு சைடு டிஷ் வைச்சுக்கிட்டு!

நினைத்தாலே உறைக்கும்!


டிஸ்கி:- படிச்சப்பிறகு நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு உக்காந்திருக்ககூடாது சட்டுப்புட்டுனு போய் காரியத்தை கச்சிதமா முடிச்சுட்டு வந்து கமெண்ட்ல ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்னு சொல்லிட்டு போகணும் ஒ.கேய்ய்!

எங்க ஊரு மக்களுக்கு நாளும் கிழமையும்ன்னா கண்டிப்பா காலையில வீட்ல இட்லிதான் போடுவாங்க திங்கிறதுக்கு!

நாளும் கிழமையும்ன்னா நல்ல நாட்கள், விசேஷ நாட்கள் மற்றப்படி கிருத்திகை,பெளர்ணமி அப்புறம் இன்ன பிற விரத நாட்கள் வெள்ளி ஞாயிறு இப்படியான நாட்கள்ன்னு வைச்சுக்கலாம்!

மத்த நாட்களில் எதாச்சும் டிபன் ஐட்டம்ன்னு சொல்ற தோசை,உப்புமா,பொங்கல் அல்லது வடக்கத்திய ஐட்டம்ங்கள் பூரி சப்பாத்தின்னு ஓடிக்கிட்டிருக்கும் ஆனா இந்த நாளும் கிழமையும்ன்னு சொன்னா ஒன்லி இட்லி ஐட்டம்தான் அதுக்கு சைடு கட்டி வைச்சு தட்டறதுக்கு சட்னி அல்லது சாம்பார் ஐட்டங்கள்!

இந்த சைடு ஐட்டங்கள் நார்மலா செய்யுறது,சில சமயங்கள் ட்யூ டூ அர்ஜென்சிக்கு (அம்மா பசிக்குதும்மா!) செய்யுற சைடு ஐட்டம்தான் நான் இங்க சொல்லி, நீங்க செஞ்சு திங்கப்போறது

சிவப்பு மிளகாய் பொடி - ஆக்சுவலா இப்படித்தான் நாங்க ஜொள்ளுவோம்! ஆனா இது துவையல் கேரக்டர்!

ரொம்ப சிம்பிளான செய்முறைதான் ஆனா திங்கிறப்பத்தான் சும்மா ஜிவ்வுன்னு காரம் தூக்கி கலக்கும் !

செய்யிறது எப்பிடின்னு நானே கூடச்சொல்லிடுவேனாக்கும்

நல்ல நாலு காஞ்ச மிளகாய் அப்புறம் கொஞ்சம் சின்ன வெங்காயம்,கொஞ்சம் உப்பு அம்புட்டுத்தேன்!

இந்த ஐட்டங்களை சேர்த்து,கொஞ்சமா தண்ணி தெளிச்சு விட்டு,அம்மியில வைச்சு விழுதாக அரைக்கணும்! ச்சும்மா வெண்ணெய் பதத்துக்கு அரைக்கணுமாக்கும்!

கடைசியா கொஞ்சம் கடுகு பொரிச்சு போடணும்!

அவ்ளோதான் புராடெக்ட் ரெடி!

இனி நல்லா சப்பணம் போட்டு உக்காந்துக்கிட்டு,சுடச்சுட இட்லியை டைரக்டா இட்லிபானையிலேர்ந்து அப்படியே தட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்ட்டு, அரைச்சு வைச்சா மிளகாய் பொடி/துவையலை ஒரங்கட்டி நடுவில குழிவிட்டு நல்லெண்ணை விட்டு கொஞ்சமா கலக்கி வைச்சுக்கிட்டு (ரொம்ப எண்ணெய் விட்டா நல்லா இருக்காதுப்பா!)
இட்லியை பிட்டு அதை சிவப்பு மிளகாய் பொடி/துவையல்ல தோய்த்து ச்சாப்ட்டா...!

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)

டெவல்ப்மெண்ட் ஸ்டடீஸ்க்கு :-

1.சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயும் ச்சூப்பரா இருக்கும்!.

2.இந்த ஐட்டங்களோட கொஞ்சம் பூண்டு சேர்த்து அரைச்சா அதுலயும் கொஞ்சம் டிபரெண்ட் டேஸ்ட் காமிக்கும்

3.சின்னவெங்காயத்துக்கு பதிலா பெரியவெங்காயமும் போடலாம் பட் பெரியவெங்காயத்தை கொஞ்ம் பொன்னிறமா வறுத்துப்போடா இன்னும் சூப்பரா இருக்கும்!


ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!



ஒ.கேய்ய்ய்ய் !

அப்பத்தான் நினைத்தாலே இனிக்கும்!

கோழி :-(

எங்களின் வாழ்க்கையும் பூஜ்யத்திலிருந்தேதான் - முட்டையில் ஆரம்பிக்கும் வாழ்க்கை!

எங்களின் கூட்டத்தோடே குதூகலித்திருக்கும் சில கால வாழ்க்கை!

சிறகுகள் இருந்தும் பறக்க இயலாத பறவைகள் நாங்கள்!

பறக்க நினைத்தாலும் பறக்க இயலாத பறவைகளாய் நாங்கள்!

பறக்க மட்டுமல்ல சுதந்திரமாக நடக்க கூட முடியாத நாங்கள்!

சுதந்திர காற்றை எங்களால் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரையிலும் சுவாசிக்க முடிவது இல்லையே ஏன்...?

உங்களால் மட்டுமே முடிகிறது மிக விரைவிலேயே எங்களின் வாழ்க்கை பயணமும்,

கொஞ்சம் யோசியுங்களேன்.......!
உங்களால் உங்களுக்கும் நலம்!

உங்களால் எங்களுக்கும் நலம்!

பொங்கல் - பானையில் பழகுவோம் வாருங்கள்!


ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!

பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!

எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!

இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!

நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!

வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?

சிந்திப்போம்!

பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!

வரும் தமிழர் திருநாளில்...!

பில்டர் காபி? - இது துருக்கிஷ்ம்மா..!

சாதரணமா ஆபிஸ்க்கு, எதோ வந்தோமா எப்பவாவது டீ குடிச்சோமா, போனோமான்னுதான் இருந்துக்கிட்டு இருந்தேன்! கொஞ்ச நாள் வரைக்கும்!

ரமலான முடிஞ்சதுக்கப்புறம்தான், இந்த மிசிரிக்காரங்க,லாஸ்ட் 30 நாள்ல குடிக்க மறந்த டீ இன்ன பிற சமாச்சரங்கள் கேட்டு, வாங்கி அடிச்சு, தள்ளிக்கிட்டிருந்தாங்க!

நான் மட்டும் பாத்துக்கிட்டு சும்மா இருப்பேனா? நாமளும் ஸ்டார்ட் பண்ணுவோம்னு ஆரம்பிச்சதுதான்!

டீ பாய்க்கிட்ட மாமு..! எப்பவும் குடுக்கற டீ வேணாம் வேற எதாவது ரெடி பண்ணி எடுத்துட்டு வான்னு சொல்லி அடுத்த பத்தாவது நிமிசம் இந்த துர்க்கிஷ் காபி கொண்டு வந்தாப்ல.., வந்த வாசமோ காபிடா காபிடான்னுன் மனசு அடிச்சிக்குது!


அய்யோ காபியேதாங்க! வாசனை வைச்சே ஆஹா நாம தேடி அலுத்து போன ஐட்டம்டான்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோஷம்! டக்குன்னு எடுத்து வாயில் வைக்கப்போன என்ன டீ பாய் தடுத்து கொஞ்சம் பொறுங்க அஞ்சு நிமிஷம் கழிச்சு குடிங்கன்னு சொல்ல, மோப்பம் புடிச்சிக்கிட்டே இருந்தேன்!
ஆரம்பிச்சிட்டேன்...!

காப்பி தூளை போட்டு நல்லா கொதிக்கவைச்சு அப்படியே கருப்பு கலருக்கு வந்தப்புறம், அப்படியே எடுத்து ஒரு ச்சின்ன கப்ல ஊத்தி,டேபிள கொண்டாந்து வைக்கும்போது, கிளம்புற காபி வாசனை என்னைய மயூரா ஹோட்டல் டபுள் ஸ்ட்ராங் காபிய ஞாபக்ப்படுத்திக்கிட்டே இருக்கும்! என்ன ஒண்ணு பால் மட்டும் மிஸ்ஸிங்!!

நான் நினைச்சத விட பல மடங்கு ஸ்ட்ராங்காவே, எனக்கு கிடைச்சிடுச்சிங்கோஓஓஒ.....!

(எங்க ஊர்க்காரங்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த விஷயத்தை எங்க வீட்ல சொல்லிப்புடாதீங்க! தலை வெள்ளையா போயிடும்டா வேணாம்டா ராசான்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க....!!!! )

பவன்களால் வரும் பலன் – நல்லா சாப்பிடலாம் வாங்க...!

சில மாதங்களுக்கு முன்பு தான், முதன் முதலாக சைவத்திற்கென்று தனியாக ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டது இங்கு!

வசந்தபவனின் மேனேஜ்மெண்டில், பாரத் பவன் என்ற பெயரில்,துவங்கிய நாள் முதல் கத்தாரின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம், தமிழ்நாட்டு ஹோட்டல் என்று விரும்பி வர ஆரம்பித்தனர்!

Photo Sharing and Video Hosting at Photobucket

அதைத்தொடர்ந்து, ஹோட்டல் ஆர்யாஸ் தன் கிளையினை தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில், வியாழன் அன்று மற்றுமொரு கிளை தொடங்குகிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket

இதிலிருந்து உங்களுக்கு தெரிந்திருக்கும், ஹோட்டல்களின் வரவில் உள்ள வரவேற்புக்கு!

பெரும்பாலும் தமிழ்நாட்டினர், ஈழத்தமிழர்கள், & வட இந்திய தமிழர்களின் வருகையில்,ஹோட்டல் நிர்வாகத்தினர் வரவேற்று மகிழ்கின்றனர்! அது மட்டுமல்லாமல், அலுவலகங்களில், நடைபெறும் விருந்துகளிலும் சைவ உணவு வகைகள் – தமிழ்நாட்டிலிருந்து – தூள் கிளப்புகின்றன!

வசந்தபவன், ஆர்யாஸினை தொடர்ந்து, மூன்றாவதாக உலக அளவில் புகழ்பெற்ற சரவணபவனும் தம் கிளையினை இன்னும் சில மாதங்களில் திறக்கக்ப்போவதாக அறிவித்துள்ளது!

Photo Sharing and Video Hosting at Photobucket

தமிழ் சங்கமிக்க, புதிதாக இடங்கள் வரத்தொடங்கிவிட்டன!

இனி இங்கும் சுவைப்போம் தமிழை –

உணவுகளோடும்...!

நட்பின் உறவுகளோடும்...!

வாங்க..! சாண்ட்விச் சாப்பிடலாம்..!

காபி குடிச்ச டேஸ்ட்டு, இத்தனை நேரமும், இருந்திருக்கும் நினைக்கிறேன்..!? இப்ப கொஞ்சம் லைட்டா, பசிக்க ஆரம்பிச்சிருச்சில்ல? வாங்க ஒரு சாண்ட்விச் சாப்பிடலாம்...!

நான் ரொம்ப நாளா டிரை பண்ணி கடைசியா கண்டுபிடிச்சேன்ங்க கரெக்ட்டான பேரு ஃபலாபல் - சாண்ட்விச்ன்னா இதுதான் இங்க கத்தார்ல.! எல்லாருக்கும் காலை உணவு!

இது அரபிக்களின் பாரம்பரிய உணவு ஐட்டம்ங்களில் ஒண்ணு! ஆனா பாருங்க நம்ம தமிழ் ஆளுங்க இத கொஞ்சம் கொஞ்ச்ம பேரு மாத்தி மாத்தி கடைசியா பலாபழமாக போறதுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான்!

பொதுவாக இங்கு காலை வேளைகளில் இந்த ஐட்டம்தான் பலரது பசியை போக்கும் பிரேக் பாஸ்ட் ஐட்டம்..!



Photo Sharing and Video Hosting at Photobucket


படத்த பார்த்த எதோ மசால் வடை மாதிரி இருக்கேன்னு தானே பார்க்குறீங்க..!


அதே, அந்த ஒரு காரணம்தான் நான் இத, வாங்கி சாப்பிட காரணமா இருந்தது - இப்பவும் இருக்கறது!



Photo Sharing and Video Hosting at Photobucket


இது மசால் வடை மாதிரி! ஆனா, அந்த டேஸ்ட்ல கொஞ்சமா கசக்குது என்னான்னு தெரியலை!

எப்படி பண்றாங்கன்னு சொல்றேன் கேளுங்க..!

ஏறகனவே நான் உங்களுக்கு குப்பூஸ் காமிச்சிருக்கேன்! அதுல ஒரு ரெண்ட எடுத்து (பொதுவா ஒண்ணுத்தான் ஆனா நான் ரெகுலர் கஸ்டமருங்கறாதால ரெண்டு!)



Photo Sharing and Video Hosting at Photobucket


அதுக்கு நடுவாப்பல இந்த ஃபலாபல் ரெண்டு வைச்சு,கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பச்சைமிளகாய் கட் பண்ணி போட்டு,கொஞ்சம் கொ.கடலை பேஸ்ட் தடவி,அப்படியே கொஞ்சமா, ஹீட்டாக்கி, ரோல் பண்ணி கொடுத்துடுவாங்க! அத, அப்படியே வாங்கி தின்னுட்டு, ஒரு டம்ளர் தண்ணி குடிச்சா போதும், அடுத்த அஞ்சு மணி நேரத்துக்கு நோ பிராப்ளம்!

சரி இத, சாப்பிட்டு வேலைய பாருங்க! நான் ஆபிஸ் பக்கம் போய் தலைய காமிச்சிட்டு வந்திடுறேன்..!!!