மதியம் சனி, ஜூலை 26, 2008

பயம் - பெங்களூரு குண்டு வெடிப்புகள்!


பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!

ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா!

இது தொடர்பான சம்பவங்களும் அதாவது பயத்தின் அடிப்படையிலேயே நிறைய சம்ப்வங்கள் நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன நிகழ்ந்துக்கொண்டும் இருக்கின்றன!

ஜம்ப் ஆகும் பூட்ஸ் மாட்டின திருடர்கள்!
தானாகவே எரியும் வீடுகள்!
சைக்கோ திருடர்கள்! என ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விசயங்கள் பிரபலமாகியிருந்தாலும் கூட முழுமையான விசாரணையில் இது மாதிரியான சம்பவங்கள் நடைப்பெற்றது பயத்தினை அனைவர் மத்தியிலும் வரவழைக்கவேண்டும் என்பதாகவே இருக்கும்!

இந்த அடிப்படையினைத்தான் தற்போது பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு தெரிவிக்கின்றன! ஏற்கனவே பெங்களூருவின் அறிவியல் கல்லூரியில் நிகழ்த்தப்ட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சுட்டு நிகழ்வுகளும் கூட இந்த செய்தியைத்தான் நமக்கு தெரிவித்தன!

ஏன் பெங்களூரூ தேர்ந்தெடுக்கப்படுகிறது? என்ற விஷயத்தில் நிறைய காரணங்களும் இருக்கின்றன! இதில் அரசியல் மட்டும் சுட்டிக்காட்டப்படுவது அவ்வளவாக சரியான விஷயமில்லை!

இந்தியாவின் சாப்ட்வேர் பூங்காவாக இருக்கும் நாடுகள் அனைத்திலும் தம் உதவியினை தினமும் தந்துக்கொண்டிருக்கும் ஒரு மையமாகவும் இப்போது பெங்களூரு திகழ்ந்துக்கொண்டிருக்கிறது!- இங்கு ஒரு சின்ன வன்முறை செய்திகூட அது பெருமளவில் பேசப்படக்கூடிய அளவு உலகளவில் தகவல் தொடர்பு துறை மிக விழிப்பாகவே இருக்கிறது!

இத்தனைக்கும் இப்போது பெங்களூரு பெருமளவு படித்தவர்களின் கட்டுபாட்டிலேயே உள்ளது! அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் - அதிலும் ஜனத்திரள் அதிகம் உள்ள இடங்கள் என்ற செய்தி வேறு - வேறு என்ன சொல்வது எல்லோருமே எவனா இருந்தா எனக்கென்ன மனநிலையிலேயே தத்தமது தினசரி வாழ்க்கையினை பழகிவருகிறார்கள்....!



கிட்டதட்ட 9 இடங்களில் குண்டுகள் வைக்கப்படுகின்றன, வெடிக்கச்செய்யப்படுகின்றன! யாராவது ஒருவர் கண்ணில் கூடவா இந்த காட்சி பட்டு சந்தேகம் எழுந்திருக்காது?

எழுந்திருந்திருக்கலாம்!

ஆனால்,

பயம்

கேள்வி கேட்பதில் பயம் - நீ என்ன செய்கிறாய்? என்று கேள்வி கேட்பதில் பயம்!

பொது இடங்களில் யாரும் யாரிடமும் கேள்வி கேட்கமுடியும்தானே!

இனி வரும் நாளிலாவது நாம் இந்த பயத்தினை தொலைத்து, வாழ முயற்சிப்போம்!

”வாழ்க்கையில பயம் இருக்கலாம் ஆனா பயமே வாழ்க்கையா இருக்ககூடாது”

தப்பே இல்ல! இந்த வார்த்தைகளினை பெரிதாக ப்ரேம் போட்டு வீட்டில் மாட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம்!

இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும்,பாதிப்பில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அடையவேண்டி பிரார்த்தனையோடு....!

7 பேர் கமெண்டிட்டாங்க:

Iyappan Krishnan said...

:((

Sangeeth said...

rombha sari!:(

Thamiz Priyan said...

:((

ராமலக்ஷ்மி said...

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது பயம் அகமதாபாத்தையும் கவ்விக் கொண்டிருக்கிறது:(!

//கிட்டதட்ட 9 இடங்களில் குண்டுகள் வைக்கப்படுகின்றன, வெடிக்கச்செய்யப்படுகின்றன! யாராவது ஒருவர் கண்ணில் கூடவா இந்த காட்சி பட்டு சந்தேகம் எழுந்திருக்காது?//

இன்று ஃபோரம் மாலுக்கு எதிரே பத்தாவதாய் வெடிக்க இருந்ததை சந்தேகத்தின் பெயரில் கண்டு பிடித்துச் செயலிழக்க வைத்திருக்கிறார்கள்!

Anonymous said...

கோவை குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் எல்லாம் ஒரு 3 மணி நேரத்தில் பஸ்ஸிலும், நடந்தும் போயிருக்கிறேன். அதற்குப்பின் எத்தனை நாள் கடையடைப்பு, பொருள்நட்டம்.

கோவை விஜய் said...

//வாழ்க்கையில பயம் இருக்கலாம் ஆனா பயமே வாழ்க்கையா இருக்ககூடாது//

அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ஆயில்யன் said...

/////வாழ்க்கையில பயம் இருக்கலாம் ஆனா பயமே வாழ்க்கையா இருக்ககூடாது//

அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

//

தலைவர் சொன்ன விஷயமாச்சே நல்லாத்தான் இருக்கும் :))