Showing posts with label ஊர். Show all posts
Showing posts with label ஊர். Show all posts

கோவில் மணிகள்!



கோவில் கதவுகளில் அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகளை பார்த்தால் ஒசை எழுப்பிவிடாமல் செல்ல எத்தனை பேருக்கு மனசு வரும்?!

மணி ஓசை கேட்டு செல்லுதலும், மணி ஓசை கேட்க செய்வது என்பதும் எல்லோருக்குமே ஒரு அலாதி பிரியம்தானே!

முன்பெல்லாம் - இப்பொழுதும் கூட பழங்காலத்து கோவில்களில் பெரியபெரிய 10’ நுழைவாயில் கதவுகளினை அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் அத்தனை கனமான அந்த மணிகளினை, அதிகம் யாராலும் சீண்டப்படாத அந்த மணிகளினை காணும்போதெல்லாம் எதோ மனத்தில் பாரமேற்றும் நினைவுகள் வந்து செல்லும் எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன!

விடுமுறைகளில் சொந்த ஊருக்கோ அக்கம் பக்கத்து ஊர்களுக்கோ செல்ல திட்டமிடுபவர்கள் கண்டிப்பாக ஊரின் அருகில் இருக்கும் பழங்காலத்து கோவில்களுக்கு ஒரு முறை விசிட் செய்து மணி ஓசை ஒலிக்க செய்துவிட்டு வாருங்களேன்! - கட்டிடக்கலையில் நம் முன்னோர்களின் திறமையினை காணுகின்றோம் என்ற எண்ணத்தின் வழியாகவும் கூட உங்களின் கோவில் தரிசனம் இருக்கட்டுமே....!