
என் நினைவின் வெளியின் கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும்...!
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!
***********************************
காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
***********************************
எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்
போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!
***********************************
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்கலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...
***********************************
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!
***********************************
அவள்
ஓடிக்களைத்ததில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!
***********************************
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.
***********************************
காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இன்னமும் ஈரமாய்...
நானும் நீயும் வாழ்ந்த ஊரில்
நம் வருகைக்காய்......