
உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
காலம் ஒடிக்கொண்டிருக்கிறது
ஐயோ! மரணபயம் வருகிறது!
நான் ஒரு நாள் மடிந்து போவேன்!
அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!
ஆனந்தத்தில் புரளவேண்டும்
போய்விடு!
சுரண்டி தின்னாதே!
சூழச்சி செய்யாதே
என் நண்பர்களே ஓடி வாருங்கள்!
ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே
உண்ணுங்கள்
தேன் வேண்டுமா?
பால் வேண்டுமா?
கனி வேண்டுமா?
தெவிட்டாது உண்ணுங்கள்
உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
காலம் ஒடிக்கொண்டிருக்கிறது
நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!
இடைக்காலத்தை வீணாக்காதீர்!
உண்போம்!
புதுமை செய்வோம்!
பெருமை கொள்வோம்!
மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்
விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!
நாம் அனுபவிப்போம்
வாரி வழங்குவோம்!
நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்
கண்ணதாசன் நினைவு நாளில்....
சில பாடல் வரிகளுடன்..!
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி
>>>>>>>>>>>>>>>>>
எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்
>>>>>>>>>>>>>>>>>
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
>>>>>>>>>>>>>>>>>
பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா..
>>>>>>>>>>>>>>>>>
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
>>>>>>>>>>>>>>>>>
மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு
>>>>>>>>>>>>>>>>>
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!