சத்திய சோதனை!


1986 காந்தி ஜெயந்தி நாளின் விடுமுறையில் ஆடி களைத்து வந்த அண்ணனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசாக வந்ததுதான் BSA சிவப்பு கலர் சின்ன சைக்கிள் -அப்பெல்லாம் தீபாவளி பொங்கல் அப்புறம் இது மாதிரி விசேஷ தினங்களுக்குத்தான் புதிய விசயங்கள் காணக்கிடைக்கும் கையில் கிடைக்கும்! (இப்பவெல்லாம் அந்த மாதிரி,நல்ல நாள் மகிழ்ச்சியான தருணங்கள் அப்படின்னு குறிப்பா செய்யமாட்டிக்கிறாங்க) - அன்றிலிருந்து அண்ணனுக்கு ஏக குஷி தினமும் பொறுப்பாக கடைத்தெருவிற்க்கு, வீட்டில் வேலையே கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி செல்வது,சின்னகடைத்தெரு பேப்பர்கடையில் குமுதம் ஆனந்த விகடன் வாங்கி வருவது என்று பொறுப்புக்களை எல்லாம் தானாகவே எடுத்துக்கொண்டு ரொம்ப பிசியாக இருந்த நாட்கள்! வருடா வருடம் சைக்கிளுக்கு பிறந்த நாள் வேறு கொண்டாடி,பின்னர்,கொஞ்சம் கொஞ்சமாய் அண்ணன் சீனியராக மாறியதும், என் கைக்கு சைக்கிள் வந்து சேர அந்த நானும் அதே பணியினை தொடர, இப்பொழுது காட்சிப்பொருளாக முதல் மாடியில் தனி அறையில் தனித்து நிற்க அவ்வப்போது அப்பாவின் கண்ணில் பட்டு சைக்கிளுக்கும் அவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் சுவாரசியமாக இருக்கிறது. இங்கிருந்து கொண்டு நினைக்கையில்....!

>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்தியா முழுவதும் இன்று முதல் பொது இடங்களில் புகை பிடித்தல் தடைச்செய்யப்படுகின்றது! பொதுவாக பார்த்தால் ரொம்ப சாதாரணமான விசயமாக தெரிந்தாலும் (அட யாரு கடைபிடிக்கப்போறாங்கன்னு அலட்சியம்!?) ரொம்ப தேவையான ஒன்று!

பொது இடங்களில் பிடிக்க முடியாதவர்கள் இனி வீட்டில் குடிக்க முயற்சிப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் கொஞ்ச நாட்களிலேயே வீட்டு சூழல் பிள்ளைகள் என பல காரணங்களால் விட்டுவிடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பாயிண்ட்ஸ் இங்கே...

1.புகை பழக்கம் நிறுத்துவதன் மூலம் பெரிய சாதனை செய்த அளவுக்கு எண்ணங்கள் வலுப்படும்! (எம்புட்டு நாளா விட்டு விடணும்ன்னு இருந்தேன் சாதிச்சிட்டேம்ப்பான்னு!)
2.கொஞ்சம் காசு சேமிக்க முடியும்!
3.ஒரு சிகரெட் குடிக்காம விட்டீங்கன்னா உங்களோட லைப்ல 5 நிமிசம் கூடுதாம்ங்க! (ஏட்டிக்கு போட்டியா எதாச்சும் கணக்கு போட்டுட்டு வந்து காட்டாப்பிடாது ஆமாம் சொல்லிப்புட்டேன்!)
4.நிம்மதியா மூச்சு (பெருமூச்சு!?) விடலாம்!
5.அட நீங்களும் வருங்கால தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கலாம்ங்க!.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது என்னோட சத்திய சோதனை!
ஒரு வழியா கொஞ்ச காலத்தை அயலரபு நாட்டில் ஓட்டியாச்சு - நல்லபடியாவும் போய்க்கிட்டிருக்கு! ஏதாச்சும் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் வழி இருக்கான்னு பார்த்தா நிறைய ஃபீல்டுல டெவல்ப்பும் ஆகிக்கிட்டே இருக்கேன்!(அதாங்க ஜிடாக்கு,டிவிட்டரு அப்புறம் விதவிதமா மொக்கை பதிவுகள் இப்படியாக...!- ரொம்ப பெருமையா இருக்கு!)

பட்...! நாம படிச்ச ஃபீல்டுல என்னத்தை சாதிச்சோம்ன்னு ஒரு ரெண்டு மணி நேரம் மல்லாக்கப்படுத்து விட்டத்தை பாத்து யோசிச்சதுல 1ம் பெருசா இல்லடா ராசான்னு தேவமொழியில வந்த சேதியை நல்லா கிரகிச்சுக்கிட்டேன்! ஒரு மண்டலம் விரதம் இருந்து ஒம் மந்திரத்தை, அலுவலக வேலை நேரம் தவிர்த்து (சில சமயம் அலுவலகத்திலும் கூட) மற்ற நேரங்களில் ஓதி வந்தால் எதாச்சும் கொஞ்சமாவது தேறும்ன்னு மெசேஜ் ரீசிவ் பண்ணிக்கிட்டேன்! என்னோட சோதனையை நான் இன்னியிலேர்ந்து ஆரம்பிக்கிறேன்! நல்லதா கெட்டதான்னு ஒரு கை பார்த்துட்டு வந்துடறேன்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காந்தி பிறந்த நாள் எதாச்சும் செஞ்சே ஆகணும்ன்னு ரொம்ப முட்டி மோதியதுல ஒரு விட்ஜெட் பாக்ஸ் புடிச்சு போட்டுக்கேன்! பிளாக்கு பக்கம் அப்பப்பா வர்றவங்க கொஞ்சம் கொஞ்சமா அந்த பொட்டியிலேர்ந்து எடுத்து எல்லாருக்கும் நிறைய கொடுத்து செல்வு பண்ணுங்க!

மாற்றம் என்று ஒன்றினை நீங்கள் நினைத்தால், அதை உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்! (நானும் ஆரம்பிச்சிட்டேன்! பார்ப்போம்!)

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:-))))...

said...

காந்தியின் விட்ஜெட் போட்டமைக்கு நன்றி.

said...

//ஏதாச்சும் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் வழி இருக்கான்னு பார்த்தா நிறைய ஃபீல்டுல டெவல்ப்பும் ஆகிக்கிட்டே இருக்கேன்!(அதாங்க ஜிடாக்கு,டிவிட்டரு அப்புறம் விதவிதமா மொக்கை பதிவுகள் இப்படியாக...!- ரொம்ப பெருமையா இருக்கு//


காந்தி ஜெயந்திக்கு மட்டும் தான் உண்மை பேசுவீங்களாண்ணா?

said...

புகை பழக்கம் நிறுத்துவதன் மூலம் பெரிய சாதனை செய்த அளவுக்கு எண்ணங்கள் வலுப்படும்......உண்மை!

பத்து வருசமா இருந்த புகை பழக்கத்தை நிறுத்தியவன் நான் !
இந்த பழக்கத்தை மட்டும் நிறுத்தாவிட்டால், வாழ்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று எனக்கு நானே சொல்லி கொள்வேன். அப்போது !

said...

be the change you want to see the world.. எனக்கு மிகப்பிடித்தமான கோட்.. :)

said...

கேட்ஜெட் ஐடியா நல்லாருக்கே.

said...

Oct 2nd,..Romba Super!!!

said...

Appadaa! Gandhi Jayanthiya Munnittu oru nalla pathivu :) :) :)

said...

மாற்றம் என்று ஒன்றினை நீங்கள் நினைத்தால், அதை உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்! (நானும் ஆரம்பிச்சிட்டேன்! பார்ப்போம்!)

NICE & GOOD

said...

:)) காந்தி விட்ஜெட்ல கிளிக்குனாதான் கோட் வருமா??

said...

ஆயில்ஸ்,

நல்ல பதிவு. இன்னும் சிறிது முனைப்புடன் எழுதினால், சுவையான பல பதிவுகள் வரலாம் உங்களிடமிருந்து. நகைச்சுவை, அனுபவம் (வயசு இல்லை, அனுபவம்) எல்லாம் இருக்கிறது உங்களுக்கு.

காந்தியின் பொன்மொழிகள் நல்ல சிந்தனை. பிற அறிஞர்களின் வாசகங்களும் சேர்க்கக் கூடுமா?

வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

said...

விட்ஜெட் நல்லா இருக்கே!!! நன்றி...

Anonymous said...

//இப்பொழுது காட்சிப்பொருளாக முதல் மாடியில் தனி அறையில் தனித்து நிற்க அவ்வப்போது அப்பாவின் கண்ணில் பட்டு சைக்கிளுக்கும் அவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் சுவாரசியமாக இருக்கிறது. இங்கிருந்து கொண்டு நினைக்கையில்....!
//

அழகு...