நானும் சினிமாவும்!

கடந்த 25 வருடகாலத்தில் சினிமா சமபந்தமாக எதையும் கலந்தாலோசித்ததே கிடையாது பிரதரிடம்! அப்படியே பேசியிருந்தாலும் ரஜினி படத்தினை பற்றியதாகவே இருக்கும் அதுவும் கூட ஒரு சில வரிகளும் சில மெளன புன்னகையும்தான்! (இன்றும் கூட அப்படியே அண்ணனின் ஜெராக்ஸ்த்தான்! - பதிவுகள் தவிர்த்து!)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

இன்னும் கூட யோசித்து யோசித்து பார்த்தாலும் சரியாக ஞாபகத்து வரமறுக்கிறது! என்றாலும் இன்னும் கூட தெளிவாக நிற்பது அப்பாவுடன் மாலை நேரக்காட்சி நாயகன் கண்டு பின் மயூரா ஹோட்டலில் எனக்கே எனக்காய் ஒரு முழு நீள ரவா தேசை உண்டு வந்த நாள்தான்! (எனக்கும் கூட அதுதான் அப்பாவோடு நான் சேர்ந்து பார்த்த முதலும் கடைசியுமான படம்!)

இந்த கேள்விக்கு பிறகு எழுந்த சந்தேகங்களில் ஒரு வேளை இந்தபடமாக இருக்குமோ அல்லது வேற படமான்னு நிறைய படங்கள் பிளாஷ் ஆகி ஆகி மறைந்தன அவைப்பற்றியும் ஒரு சில வரிகள்

ரஜினி கமல் நடித்த படம் பெயர் ஞாபகத்து வரவில்லை என்றாலும் ரஜினி வில்லனாக ஒருவரை கிண்ற்ற்டியில் வைத்து கொலை செய்யும் காட்சி மட்டும் மனதில் பதிந்திருக்கிறது என்ன படம் பெயர் என்று தெரியவில்லை இன்னும் கூட...!

ஒரு முறை வைத்தீஸ்வரன் கோவில் சண்முகாவில் முதல்காட்சி அருணகிரிநாதர் பார்த்ததும் கூட அப்படியே மனதில் ஆழ பதிந்திருக்கிறது!

இவை தவிர அவ்வப்போது அப்பா வாங்கிவரும் திரைக்கதை வசன கேசட்களில் ஞாயிறுகளின் மத்தியத்தில் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் அலுத்துப்போன படம் வருசம் 16!
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சமீபத்தில் குசேலன்! மற்றைய நடிகர்களின் படங்களின் வரிசையில் சொல்லவேண்டுமானல் போன ஜனவரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் பார்த்தா பீமா!
(ஆனாலும் ஒவ்வொரு முறையும் டிக்கெட் கவுண்டரில் நிற்கும்போது,நமக்கு டிக்கெட் கிடைக்குமா என்று விரல் நுனியில் பல் வைத்து பரபரத்திருக்கும் தருணங்களை நினைக்கும்போது அப்ப்டி ஒரு அவஸ்தை தேவைதான என்று எண்ணம் வந்தாலும் - தியேட்டர்ல பாக்குறது ஒரு ஜாலிதாங்க!)

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி பார்த்த சினிமாங்கள் வரிசை கொஞ்சம் குறைவுதான்! ஆனாலும் ஒரு இனிய வியாழனில் விளம்பரங்களில் அசத்திக்கொண்டிருந்த குங்குப்பூ பாண்டாவின் படத்தினை பார்த்துமே டக்கென்று ஆன்லைனில் அலசி பார்ப்போம் என்று அலசியதில் கிடைத்த லைவ் சினிமா லிங்கும் அதை தொடர்ந்து 1மணி 20 நிமிட காலங்களும் பெரு மகிழ்ச்சி வரவழைத்தது! (பின்ன தியேட்டரில் அன்னிக்குத்தான் ரிலிசான படம் ஆச்சே!)

சென்ற வருட விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த போது முதன் முதலாய் பரிச்சயமான கலைஞர் டிவியில் ஒரு மதிய வேளையில் நான் பார்த்த சினிமா போர்ட்டர் ரங்கன் - சங்கிலி தொடர்களாய் ஒன்றுக்கொன்று தொடர்புடைய காட்சிகளாக சோக சம்பவங்கள் நீண்டு பிறகு தொடர்ச்சியாக எல்லாமே சுபமாக முடியும் அந்த படம் இன்னும் கூட நினைவுகளில் காட்சிகள் சுழல்கின்றன்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அந்தளவுக்கு எனக்கு சினிமா ரசிப்புதிறமை இருக்குமோ என்று மிக நுட்பமாய் யோசிக்கிறேன் - இல்லை - அம்புட்டு பெரிய அளவுக்கு யோசிக்க வேணாம்ன்னு விட்டுடறேன்!

அடிக்கடி பார்த்து மகிழ்ந்த என்னை அசத்திய சினிமான்னு சொல்லணும்னா ஆண்பாவம்,பாட்ஷா & அன்புள்ள ரஜினிகாந்த்



உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பெரிய பெரிய சினிமா கலைஞர்களெல்லாம் தனித்தோ அல்லது பிரிந்தோ நிற்பது! (இதுவும் கூட அரசியல்தானே!) - இணைந்திருந்தால் சினிமா உலகம் நல்லதொரு வளர்ச்சி பெறும் என்பது என்னோட எண்ணம்!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலரில் ஆரம்பித்து குமுதத்தில் தொடர்ந்து,ஆனந்த விகடன் வந்து இப்பொழுது இணையம் ஏறி நிற்கிறேன்! அம்புட்டுதான்!(கிசு கிசுக்களை கண்டுபிடிப்பதில் மண்டை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு ரசிகனாக இருந்ததும் ஒரு காலகட்டம்!)

தமிழ் சினிமா இசை?

இன்றும் இரவு நேரங்களினை, இனிய நேரங்களாக மாற்றிக்கொண்டு தமிழ் உலகை தாலட்டி வரும் தேர்ந்தெடுத்த பாடல்கள்! சமீபத்தில் என்னோட பாஸ்(மலையாளி) என்னிடம்,தமிழ்பாடல்கள் தொகுப்பு தர முடியுமா? என நீண்டகால விருப்பம் என்று கேட்டதும் குறிப்பாய் இளையராஜா இசைத்தொகுப்பினை! அப்படியே கொஞ்சம் மிதப்பாகவே இருந்துச்சு!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப கவலையாத்தான் இருக்கு!

பிலிம் இன்ஸ்ட்டீயுட்லேர்ந்து இப்ப ஆளுங்க வர்ற மாதிரியே தெரியல :-(
எந்த துறையாக இருந்தாலும் அதுக்குன்னு சில பல அடிப்படைகள் வேணும் அதை தெரிஞ்சுக்கிட்டு வரணும்! அப்பத்தான் தொழில் பக்தி,துறையில் முழுமையான ஈடுபாட்டினை அளிக்க முடியும் அப்படிங்கறது என்னோட எண்ணம்!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சிரமமாகத்தான் இருக்கும் மீடியா உலகம்!

சென்னை பெரும் சேதாரத்திற்குள்ளாகலாம்!?

தமிழர்களுக்கு 1ம் ஆகாது! சினிமா அற்ற தொலைக்காட்சி தொடர்களில் ஆர்வம் மற்றும் அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவுகள் போன்றவை அதிகரிக்கலாம் :-)


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....!

அப்பாடா எப்படியோ முடிச்சாச்சு!

அடுத்து நான் அழைக்கும் ஐவர்!
1.கானா பிரபா
2.முத்துலெஷ்மியக்கா!
3.சந்தனமுல்லையக்கா!
4.தமிழ்பிரியன்
5.யாத்ரீகன்

என்னை அழைத்த உடன்பிறப்பிற்கும், உடன் பிறவா சகோதரிக்கும் நன்றிகளுடன்....!

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Me the First :)

said...

அழைப்புக்கு நன்றிண்ணே! முயற்சி செய்துடலாம்... :)

said...

நெகஸ்ஸ்ஸ்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ... ;)))

said...

அதென்ன மை ப்ரண்ட் ஆயில்யனையும் ஆயில் மை ப்ரண்டையும் கூப்பிடறதா..இப்படியே போனா டேக் அடுத்த கட்டத்துக்கு நகரவே நகராதே..

:)

said...

சீ போங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருது ;‍)

உங்களின் கேள்வி பதில் இயல்பா இருக்கு, ஆனா பள்ளிக்காலத்தில் பழகின பழக்கமோ என்னவோ ஒண்ணையும் முழுசா பதில் சொல்லாம மழுப்புறது, இது ஆவறதில்லை மரியாதையா பதில் சொல்லாத கேள்விகளையும் நிரப்பவும்.

said...

உங்களையும் நான் டாக் பண்ணேன் இங்க வந்து பார்த்தா பதிவே போட்டுட்டீங்க..!! :))நல்லாருக்கு..!! :))

said...

//உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பெரிய பெரிய சினிமா கலைஞர்களெல்லாம் தனித்தோ அல்லது பிரிந்தோ நிற்பது! (இதுவும் கூட அரசியல்தானே!) - இணைந்திருந்தால் சினிமா உலகம் நல்லதொரு வளர்ச்சி பெறும் என்பது என்னோட எண்ணம்!//

சூப்பர். :-)

said...

//நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)//

:-)))))

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

அதென்ன மை ப்ரண்ட் ஆயில்யனையும் ஆயில் மை ப்ரண்டையும் கூப்பிடறதா..இப்படியே போனா டேக் அடுத்த கட்டத்துக்கு நகரவே நகராதே..//

இது எப்போ? எங்கே? :-P

said...

//கானா பிரபா said...

சீ போங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருது ;‍)//

அலோ பிரதர்.. முன்னால நான் உங்களுக்கு கொடுத்த ஒரு டேக்கையே நீங்க எழுதி முடிக்கல..

சென்ஷிண்ணே.. நீங்களும்தான்..

said...

//ஸ்ரீமதி said...

உங்களையும் நான் டாக் பண்ணேன் இங்க வந்து பார்த்தா பதிவே போட்டுட்டீங்க..!! நல்லாருக்கு..!!
//

அண்ணன் கொஞ்சம் ஃபாஸ்ட்டூ. ;-)

said...

நல்லா இருக்கு :))

said...

//This blog does not allow anonymous comments.
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

புரிஞ்சது

said...

படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்துட்ச்சு...
இன்னும் கூட நாலு கேள்வி கேட்டுருக்கலாம் :(

said...

நல்லாயிருக்குணே ;)

said...

இயல்பா நல்லா இருக்கு

said...

அழகா எழுதி இருக்கீங்க. ஆயில்யன் முதல்லியே இதைப் படிக்காம விட்டுட்டேன்.

அப்பா கூடப் பார்க்கிற படமெல்லாம் மறக்காது போல:)

said...

மழுப்பலா பதில் சொன்னா காபிரபா மாஸ்டருக்கு கம்பெடுத்து கொடுத்திடுவேன்...:)

said...

\\
தியேட்டர்ல பாக்குறது ஒரு ஜாலிதாங்க!
\\

உண்மைதாங்க...:)

said...

\\
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)
\\

ஆமா நீங்க நிறைய மலையாளப்படம் பாப்பிங்கன்னு சொன்னாங்க...;)

Anonymous said...

சுவாரசியமாக இருந்தது..

said...

http://www.scribblingscribe.com/2008/10/post.html

ingathan ezhuthierukken.

said...

இங்க போய் படிங்க

நானும் சினிமாவும் :) (cinema question/answer marathon)


http://ithyaathiithyaathi.blogspot.com/