வாழ்த்துக்கள் அமைச்சரே! - தங்கம் தென்னரசு


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்காக காரியாபட்டியில் ஒரு வளாக நேர்காணல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், பள்ளிக்கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு. சென்னையை மையமாகக் கொண்ட ஐம்பதுக்கும் அதிகமான நிறுவனங்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் இந்த நேர்காணல் தேர்வில் பங்கெடுக்கின்றனர். இதன் மூலம் பல படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர்.

இதைப் பின்பற்றி, இன்னும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் இதுபோன்ற நேர்காணல்களை நடத்த முற்படுவார்கள் என்பது மட்டுமல்ல, பல்வேறு தொழில் நிறுவனங்களும் கிராமப்புறத் திறமைகளை அடையாளம் கண்டு வேலைவாய்ப்பு அளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த நேர்காணல் ஏற்படுத்தித் தரும் என்று நம்பலாம்.

நன்றி - தினமணி

மேலும் இவர்தம் சாதனைகளுள் சிலவாக,

பாடப்புத்தகங்கள் சிறப்பாக வடிவமைத்து அதை இணையத்தளங்களில் காணச்செய்தது!

எல்லோருக்கும் அடிப்படை கல்வி தேவையின் நலன் கருதி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தலில் கொடுத்த முக்கியத்துவம்!

வெகுவிரைவிலேயே, அமல்படுத்தபடப்போகும் ஒவ்வொரு 5 கி.மீ சுற்றளவிலும் ஒரு பள்ளி அமைந்திருக்கவேண்டும்! என்றதொரு திட்ட முடிவு! கண்டிப்பாக கிராம புற மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சமாக இருக்ககூடும்!கிராமப்புறங்களில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் பெண் மாணவிக்களுக்கு நிச்சயம் நல்ல விஷயம்தான் இது!

தொடரட்டும் இவர்தம் சாதனைகள்!

தொடரட்டும் இவர்தம் எண்ணங்களை செயலாக்கும் அரசுத்துறையினரின் ஒத்துழைப்பு !

ஸ்டாப் தம்!

மே 31 சனிக்கிழமை உலக முழுவதும், சிகரெட் குடிக்காதீங்கப்பா, அதுவும் வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் வாலிப பசங்களே நீங்க இந்த மோசமான பழக்கத்துக்கு அடிமையாகிடாதீங்கன்னு வற்புறுத்தும் விதமாக புகை பிடிக்ககூடாதுங்கறத ஞாபகத்துல வைச்சிக்கணும்ங்கற மாதிரி இன்றைய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது!

சிகரெட் சில மணித்துளிகள் குடிப்பதால் உண்டாகும் பலனை விட, அதை விட்ட அடுத்தடுத்த நிமிடங்களில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள்!

சிகரெட் பிடிப்பதை விட்ட 20 நிமிட நேரத்திற்குள்

ரத்த அழுத்தம் சீராகும்.
நாடித்துடிப்பு சாதரணமாகும்.
கை மற்றும் பாதங்களில் உடல் வெப்பம் சீராகும்.

எட்டு மணி நேரத்திற்குப்பிறகு,

ஏற்கனவே ரத்ததில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு நிக்கோடின் குறைய தொடங்கி பழைய நிலைமைக்கு திரும்ப ஆரம்பிக்கிறது!
ரத்ததில் ஆக்ஜிஜனின் உயர்ந்து சாதரண நிலைக்கு வருகிறது!

24 மணி நேரத்திற்கு பிறகு,

ஹார்ட் அட்டாக் ரிஸ்கிலிருந்து மெல்ல விடுபட ஆரம்பிக்கிறீர்கள்.
நுரையிரலீல் படர்ந்திருந்த விஷப்பொருட்கள் மெல்ல காலியாகின்றன!

48 மணி நேரத்திற்கு பிறகு,

உண்ர்வு நரம்புகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வாசனை மற்றும் சுவையுணர்வினை உணர முடியும்!

72 மணி நேரத்திற்கு பிறகு,

மூச்சு விடுதல் மிகச்சுலபமானதாக தோன்றும்
உடல் சக்தி வலுப்படும்.

2- 12 வாரங்களில்
ரத்தம் ஓட்டம் சும்மா அந்த மாதிரி இருக்கும் எப்பவுமே ஃப்ரஷா இருக்கறாப்ல ஃபீல் பண்ணுவீங்க!

இப்படியே நிறைய நல்ல விஷயங்கள் இருக்குங்க இதெல்லாம் ரொம்ப சிகரெட் குடிக்கிறவங்களுக்கு விட்டுடலாம்னு மனசு ஓரத்துல கொஞ்சமா எண்ணத்தை விதைக்கிற முயற்சிதான்!

இது நம்ம ஊரு நியூஸ்!

வரும் 2010ஆண்டிற்க்குள் சென்னை டெல்லி,மும்பை அகமதாபாத் ஆகிய நான்கு நகரங்களிலும் புகைப்பிடித்தலை தடைச்செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்போகிறதாம்! காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிப்பதற்குள் இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

அமைதியாக சொல்லி புரியவைப்பது,
அதட்டிச்சொல்லி புரியவைப்பது,
அதிகாரமாக சொல்லி புரியவைப்பது,
என வித விதமான வடிவங்களில் என்னதான் மெசேஜ் சொன்னாலும்,
மக்களே நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான்!
அவ்ளோதான் சொல்லலாம்!

( பய புள்ள என்னாமா ஃபீல் பண்ண வைச்சிருச்சுன்னு டென்ஷன்ல இப்ப போய் சிகரெட் பத்தவைக்கவேணாம்! அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!)

சீனா பூகம்பமும், ஷெரான் ஸ்டோனின் ”கர்மா”வும் மற்றும் இன்ன பிற சங்கதிகளும்!

சுமார் 68000 ஆயிரம் பேரினை பலி வாங்கிய பூமி அன்னையின் செயலால் ஸ்தம்பித்துப்போய் நிற்கும் சீனாவிற்கு - இந்த காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளையும் வேறு நடத்தியாகவேண்டும் - கொஞ்சம் சிரமாமான காலகட்டம்தான்!

இந்த நேரத்தில்தான் கேன்ஸ் படவிழாவிற்கு வந்திருந்தா ஷெரான் ஸ்டோனிடம் ஒரு கேள்வியினை கேட்டிருந்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.

ப:- சீனா பூகம்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று? ( இதுவும் வழக்கமான பத்திரிக்கைக்காரர்களின் கொலவெறி கேள்விதான். ஸ்டேன் புத்தமதத்திற்கு மாறியவர். சமீபத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவிடம் அழகாய் வணங்கி ஆசி பெறுவதை அகில உலகமே ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றுதான்!)
இந்த கேள்விக்கு,மிக்க ஆர்வத்துடன் பதிலளித்த ஸ்டோன் ” எனக்கு முதலில் சீனா திபெத்திடம் நடந்துக்கொள்ளும் முறை வெறுப்படைய செய்கிர்றது. கருணையே இல்லாத செயலாக எனக்கு தெரிகிறது! எல்லா செயல்களும் எல்லா சோகங்களும் சீனாவிற்கு நிகழ்வதற்கு காரணம் கர்மா திபெத்தியர்களுக்கு அவர்கள் செய்த பாவச்செயலுக்கு பலன்தான் என்ற ரீதியில் கூறிச்செல்ல,- நீங்களும் இங்க போய் பார்க்கலாம்!

இப்ப அந்த மேட்டர்தான் சீன பத்திரிக்கைகளின் சூடான இடுகை பகுதிக்கு போயிருக்கு!

கிழிடா போஸ்டரை, படப்பொட்டியை தூக்கிட்டு போங்கடா அதையும் மீறி படத்தை போட்டிங்கன்னா தியேட்டரை எரிப்போம், அப்படின்னுல்லாம் மக்கள் மிரட்டாம, டைரக்டா கவர்ன்மெண்ட்டே சொல்லிடுச்சு இதையெல்லாம் செய்யாதீங்கடாப்பான்னு!?

இப்படிப்பட்டதொரு கடுமையான எதிர்ப்பினை கிளப்பிய இந்த செயலில் அதிகம் பாதிக்கப்பட்டது தியார் என்னும் அலங்கார பொருட்கள் சந்தைப்படுத்தும் நிறுவனம்தானாம்! ஏகப்பட்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஸ்டோனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததால் அனைத்து பொருட்கள் + விளம்பரத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்பு வந்து இப்போதைக்கு கம்பெனி ஸ்டோனை கழட்டி விட்டுவிட்டது!

சரி! அப்படி என்ன, கர்மாவில அப்படின்னு கேட்கறவங்களுக்கு கர்மா - இந்துக்களும் சீக்கியர்களும் புத்தமதத்தினை சார்ந்தவர்களிடையே அதிக புழக்கத்தில் இருக்கும் சொல்லாகும்!

கர்மா என்பதன் பொருள் வினை அல்லது செயல் என்று கூறலாம் (சரியான்னு சொல்லுங்கப்பா!)

ஏற்கனவே செய்த செயலுக்கான பலனாகவும் இந்த கர்மா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது!

ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது பொது!

கர்மா என்பது அவரவர் வினைப்பயன்,அதாவது அவரவர் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு ஏற்றாற்போல பலன் வந்து சேரும்! நம் தமிழில் இதற்கு ஊழ் வினை என்றும் கூட பெயருண்டு!

சரி இத விட்டுதள்ளுங்க அப்புறம் பார்த்துக்கலாம் ஷெரான் ஸ்டோனுக்கு என்னாச்சுன்னு சொல்லணும்ல....

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைச்சா கெட்டதுதான் நடக்கும்ங்கற விஷயத்தை தான் அந்தம்மா சொல்லியிருக்காங்கன்னு பலர் ஸ்டோனின் கருத்துக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க, கடைசியா ஸ்டோன் சொன்னது:

நான் எதுனா தப்பா சீனா மக்களை பத்தி சொல்லியிருந்தா அதப்பத்தி கண்டுக்காதீங்க! நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!

(அப்படின்னுத்தானே சொல்லியாகணும் இல்லாங்காட்டி தியார் எவ்ளோ காசு போட்டு விளம்பரம் எடுத்து எல்லாத்தையும் பொட்டியில போட்டு பூட்டி வைக்கறதுக்கா!?)

ILA - இளா 2008

ஒவ்வொரு முறையும் இவரின் நிகழ்வுகள்!
எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
நீண்ட காலமாக இவரின் செயல்பாடுகள் நம் பாரம்பரியத்தையும் சுட்டிகாட்டும் விதமாகவே இருந்துவந்துள்ளது!

சில காலங்கள் இயங்க முடியாத சூழல் இருந்தும் கூட, பெரும்பாலோனரின் முயற்சியில் மீண்டும் ஆட தொடங்கிவிட்டார்கள்!

சாரங்க் (மயிலாக மாறியவள்)


மயில் தோகை விரித்து ஆடும் இயந்திரபறவைகளாய் நம் இந்திய ஹெலிகாப்டர்கள் பறந்து ஆடிக்கொண்டிருக்கும் பெர்லின் நகரம்!

ஜெர்மனியின் பெர்லினில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விமான கண்காட்சியில் உலகில் சுமார் 37 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட விமானங்களின்,அணிவகுப்புகளுடன் தொடங்கி,போய்க்கொண்டிருக்கிறது!

உயர்ந்துக்கொண்டே இருக்கும் பெட்ரோலிய பொருடகளின் விலைகள் அதற்கேற்றார்போல மாற்றி அமைக்கவேண்டிய சூழலில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதுவே இந்த கண்காட்சியின் முக்கியமானதொரு அம்சமாக எதிர்பார்க்கப்படுகிறது!


புதிய ரக விமானங்களின் அறிமுகங்களும் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இந்த கண்காட்சியில் பல நாடுகளின் கொள்முதல் ஆர்வத்தை தூண்டு விதமாக புதிய வடிவமைப்பில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு சாம்பிள்தான் இந்த நியோ (குட்டியூண்டு ஹெலிகாப்டருங்க அனேகமா,கார் மக்களின் அடுத்த ஆர்வமிக்க பொருளாக மாறக்கூடும்!)

விமானங்களில் திங்கிறதுக்கு சோறும் குடிக்கிறதுக்கு கொடுக்கப்படும் தண்ணியும் வைக்க பயன்படுத்தப்படும் கண்டெய்னர்களுக்கு செலவிடப்படும் இடமும், மின் வசதியையும் குறைக்கும் நோக்கத்தில் பாக்கெட்வடிவில் கூல் ஆக்வும் ஹாட்டகவும் அதே சமயத்தில் குறைந்த இடவசதியோடும் இருக்கும் வகையிலான பேக்குகளும் கூட இந்த கண்காட்சியின் ஸ்பெஷல் ஐட்டங்களாம்!

ரொம்ப தூரம் நீண்ண்ட நேரம் பயணிப்பவர்களின் வசதிக்காக அதுவும் எகனாமிக் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அரெஸ்ட் ஆகி இருக்கும் நிலைமையை விடுவித்து, அங்க இங்க அலையறதுகும், அப்பப்ப உடம்பை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி சாதனங்களை நிரப்பப்போகிறார்களாம் அதுவும் கூட இந்த கண்காட்சியின் இன்னுமொரு ஸ்பெஷல்!





இன்னும் கூட நிறைய ஸ்பெஷல்கள் 1ண்ணு 1ணா வெளியே வரும் இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல :-)

அட்டகாசமான ஒரு விளம்பரம்!

கிட்டதட்ட ஒரு அம்பது விதமான பொருட்களை கொண்டு,
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
அப்புறமா அதை எக்ஸ்க்யூட் பண்ண
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
கடைசியா வர்ற புராடெக்ட்
ரெண்டே இரண்டு நிமிஷம்தான்!

எவ்ளோ அட்டகாசமா,
எவ்ளோ கலக்கலா இருங்குன்னு,
நீங்களே பாருங்களேன்!

நான் அப்பவே சொன்னேன்ல - சைக்கிள் ஸ்டேண்ட்!

நம்மளோட நிலைமை;
பூமியோட நிலைமை;
நாட்டோட நிலைமை;
இதையல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்தா கஷ்டமாத்தான் இருக்கு! :-(

எவ்ளோ பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க! உங்க லைப் ஸ்டைல மாத்திக்கோங்கப்பா! மாத்திக்கோங்கப்பான்னு, ஆனாலும் அக்கம்பக்கத்தில் கடனை வாங்கியாவது வண்டி வாங்கி ஊர சுத்த சொல்லுது மனசு!

இப்ப வண்டி வாங்குறதுக்கு கடன் கொடுத்த காலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இனி பெட்ரோல் வாங்குறதுக்கு பங்க்ல பாங்க் ஒபன் பண்ணி கடன் கொடுக்கற நிலைமை வர்ற வரைக்கும் ஆடுங்க மக்கா ஆடுங்க அப்படின்னுத்தான் சொல்லத்தோணுது! நம்ம ஆளுங்க விதவிதமான ஸ்பீடுகளில் & ஸ்டைல்களில் வண்டி மாடல் பார்த்து பார்த்து வாங்கறதுல்ல ஆர்வமா இருக்கோம்!

பெரிய பெரிய நாட்டுல இருக்கறவங்களெல்லாம் இப்ப சைக்கிள் சவாரி தான் அதிகம் செய்யிறாங்க! சைக்கிள் சவாரிகள் அதிகமான அதுக்கேத்த மாதிரி பார்க்கிங், பிராப்ளங்களையும், சைக்கிளை பத்திரமாவும் பாதுகாத்து அதே சமயத்தில் நல்ல இடவசதியோடயும் ரொம்ப ஈசியாக்கிற மாதிரி விதவிதமாவும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க!

எது எப்படியோ போனாலும் ஒரு காலகட்டத்தில நாமும் இந்த மாதிரி ஒரு நிலைமைக்கு கண்டிப்பா வரப்போற நாளும் வரக்கூடும்ல அப்ப நமக்கும் இது மாதிரியான ஒரு ஏற்பாடும் வேண்டியிருக்கும்!



அதனாலதான் மக்களே! இப்பவே வெளிநாட்டுக்காரனுங்க ஐடியாவை மேலோட்டமா நான் சொல்லிடுறேன்! அப்புறம் உங்க திறமையில இத நீங்க நல்ல டெவலப் பண்ணி வைச்சீங்கன்னா வரும் கால வரலாற்று புத்தகத்தில உங்க பேர நல்ல அழுத்தமா பதிக்க முடியும்!

1.வண்டியை அப்படியே மேலாக்க நிப்பாட்டிடணும்
2.முன்னாடி சக்கரத்தோட லாக் ஆகிடுடற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு அது அப்படியே ஆட்டோமேடிக்கா லாக் பண்ணிக்கும்!
3.இப்ப நீங்க ஸ்டார்ட் பண்ணனும்
4.இப்ப நீங்க ஒரு கைரேகை வைக்கணும் ( இது திருட்டு போகாம இருக்க)
5.ஒ.கே பண்ணுனா வண்டி சர்'ருன்னு மேலே போயிடும்! (ஒரேடியா இல்லைங்க கொஞ்ச தூரத்துக்குத்தான்!)

குறிப்பு :- ”நான் அப்பவே சொன்னேன்ல” இது என்னோட ஹிஸ்டரி ரெபரன்ஸ்க்கு! :-)

உலகமே பார்க்கும் அர்விந்த கண் மருத்துவமனை - மதுரை


40 வருடகால மருத்துவசேவையில் அதுவும் மிக மிக முக்கியமான உலகை காணும் உறவைக் காணும் உண்மையை காணும் ஒரே உறுப்பாக செயல்படும் இரு ஜோடிக்கண்களின் எந்த பிரச்சனைகளாகிலும் கவனமுடன் கையாண்டு பலருக்கு பார்வை பிச்சை அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனை

மதுரை கோவிலுக்கும் மல்லிக்கைப்பூவுக்கும் இட்டிலிக்கும் மட்டுமல்ல இந்த மருத்துவமனைக்கும் கூட நல்ல பேரும் புகழும் உண்டு இது எங்கள் மாவட்டங்களில் மட்டும்தான் என்று நான் நினைத்திருந்தது ஆனால் உலகம் முழுவதும் இந்த மருத்துவ சேவையின் அருமை பெருமைகள் பலரால பலரிடத்திலும் பரப்பபட்டு இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளும் படியான ஒரு சேதிதான் இது!

2008 ஆம் ஆண்டிற்கான கேட்ஸ் விருது - உலக அளவில் மருத்துவ துறையில் இதுதான் அதிக மதிப்புமிக்க பரிசுப்பொருளாம் - $1 மில்லியன் டாலர் பெற்றுள்ளது.


1976ல் ஜி.வெங்கடசுவாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையின் சேவையில் 2.4மில்லியன் மக்களினை பார்வை அளித்து பயனான வாழ்வினையும் பெற்று தந்துள்ளதாம்!


எங்கள் ஊர்லிருந்தும் பலரும் சென்று பார்வை பெற்று திரும்பிய அனுபவங்களை நேரில் கண்டவன் என்ற முறையில் இந்த மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

தொடரட்டும் தொண்டுள்ளம் கொண்ட மக்களின் சேவைப்பணிகள்!


அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை பற்றி பதிவர் யாத்தீரிகனின் பதிவிலிருந்து

காற்றாய்த்தான் போனது - இரவல் கவிதைகள்

பருத்தி பூ
பரவிக்கிடக்கும்
கரிசல் காட்டில்
கிழக்குச் சூரியனின்
பிறப்பின் ரகசியம்...
தங்க வரிகளாய்
புழுதி பூமியில்
வெளிச்ச வெப்பங்கள்..

பறவைகளின்
பல மொழிகள்...
செவிகளுக்குள்
செல்லமாய்
முத்தங்கள்...
பாதங்களின் உரசலில்
பாட்டிசைக்கும்
கொலுசுக்கொஞ்சல்கள்...

மாடுகளின் கழுத்தசைவு
மணி யோசனையின் மது ஒலிகள்...

கிராமத்து பதுமைகளின்
இடுப்பு குடத்தை
வளைத்திருக்கும்
வளையல் கைககள்...
ஒரவிழி
மவுனப்பார்வைகள்
கிண்டல் சிரிப்பில்
வெட்க வெளிச்சங்கள்...
விழிப்பார்வையில்
உரசும் உறவுகள்...

நடைபயிலும் பெண்கள் இடுப்பு சிவப்பில் சிதறி
மினு,மினுக்கும் தண்ணீர் துளிகள்...
கடந்துபோன
காதல் தினசரிகள்...
பளிச்சிடும் பல் வரிசைக்குள்
பரவிக்கிடக்கும்
வார்த்தை ஜாலங்கள்...

நகமும் சதையுமாய்
நீலவானமும் நிலவுமாய்
மூச்சும் காற்றுமாய்
நேசத்தின் உறவுகளோடு
காதல் முகவரி எழுதிய
காலங்கள்...

ஆம்... காற்றாய்த்தான்
கடந்துப்போனது!

இதோ - இந்த
கிராமத்து பதுமைகளில்
என்னவளும் ஒருத்தி
பிறை போன்ற நெற்றியில்
புதிதாய் குங்குமம்
விரல்களில் - புது
விலாசம் பேசும்
மெட்டிகள்
வெப்ப மூச்சில்
பயணிக்கும்
மார்பின் உரசலில்
புதிதாய் - ஒரு
மஞ்சள் கயிறு

காதல் தேசம்
பொய்யானது...
'துரோகம்' கிராமத்துக்கும்
சொந்தமானதுதான்

தினமலர் -வாரமலரிலிருந்து

மீன் மாத்திரை

1985களின் மத்தியில் பள்ளிகூட சத்துணவு சாதத்தை ஒரு முக்கு முக்கிட்டு ரொம்ப டைட்டாக உக்கார்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்த ஒரு இனிய மாலைப்பொழுதில், டேய் பசங்களே எல்லாரும் வாங்கடா லைனா? ஒண்ணாம் டீச்சர் கூப்பிடும் சத்தம் கேட்டு எந்திரிச்சு சாரி சுதாரிச்சு அக்கம்பக்கம் திரும்பி பார்த்தா அம்புட்டு பயமக்களும் என்னைய அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டானுவோ! அதுக்கும் காரணம் இருக்கு!

எப்போதுமே ஒண்ணாம் டீச்சர் எங்களுக்கு உதவும் கரம் மாதிரிதான்!கடுப்பேத்திக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து வெளியேற வேண்டுமெனில் கடவுளே டீச்சர் கூப்பிடணும் கிரவுண்டுக்கு அப்படின்னுத்தான் வேண்டிக்குவோம்!

அப்படி ஒரு ஹெல்பிங்க் ஹாண்ட் டீச்சர்! எப்போதுமே, கிரவுண்டுக்கு வாங்கடா போட்டி வைக்கப்போறேம் அல்லது எதாவது விசேஷமான செய்தி அப்படியில்லாங்காட்டி முனிசிபால்டியிலிருந்து வந்திருக்கும் மீன் மாத்திரை டிஸ்டிரிப்பியூசன்!

மீன் மாத்திரை பேரைக்கேட்டாலே யாருக்குமே எஸ்கேப்பாகணும்னு எண்ணம் வராது! ஏன்னா அப்படிப்பட்டதொரு மாத்திரை மத்த மாத்திரைங்களைமாதிரி கசக்குறதோ அல்லாங்காட்டி கல்லுமாதிரி இருக்கறதோ கிடையாது!

இது குருவி ஸ்டைல்ல மொழ, மொழன்னு யம்மா யம்மா வாகத்தான் இருக்கும்! எதோ உடம்புக்கு நல்லதுன்னு கொடுப்பாங்களாம்! அது சரி நமக்கு ஃப்ரியா கிடைச்சாத்தான் நோ கொஸ்டீன் ரைசிங் ஆச்சே!
பயலுக கையில கொடுத்த திங்காம தூக்கி போட்டுடுவானுவேன்னு நினைச்சு எல்லாரையும் லைன் கட்டி கையையும் கட்டி வாயை மட்டும் ”ஆ” தொறக்க சொல்லி மீன் மாத்திரைய போடுவாங்க! நாங்களும் அந்த நிமிசம் கரெக்ட்டா வாயால காட்ச் பிடிச்சு மறுநிமிசம் இடம் மாறி கைக்கு மாத்திடுவோம்!
அதுக்குப்பப்புறம் என்ன நடக்கும் சண்டைதான்!

ஒருத்தனுக்கொருத்தன் மாறி மாறி மாத்திரையை பாக்குறேன் சொல்லி பொறமை புடிச்சவனாட்டம் உடைச்சுப்புட்டு ஓட கல்லெறி கலகங்கள் துவங்கும்!

சரி நீங்க கல் எடுக்கறதுக்கு முன்னாடியே இந்த கதையை அப்ரூட்டா கட் பண்ணிக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்!

நம்ம சா(ப்)ட்வேர் வேலையில் இருக்கறவங்களுக்கு,அல்லது இதே போன்றதொரு பணியிடங்களில் பணி ஆற்றுபவர்களுக்கு அதிக நோய் தொந்தரவுகள் வர்றதுக்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்களாம்!

வைட்டமின் டி இது அதிகம் வெய்யில்ல அடங்கியிருக்காம் இந்த டி நம்ம உடம்புல இருக்குற கால்சிட்டிரால்ங்கற ஹார்மோன் அனுதினமும் சாப்பிடற ஐட்டமாம்!

இந்த சாப்பாடு குறையறப்ப கால்சிட்டிராலோட வேலையும் குறையுது இதனால மத்த ஆளுங்க கெட்ட வேலை செய்யறதுக்காக நம்ம உடம்புல பூந்து விளையாட ஆரம்பிக்க நாம உடம்பு படாத பாடு படுது! கால்சிட்டிரால் ஒரு பாதுகாப்பு படை மாதிரி எந்த எதிரிகளையும் சீக்கிரத்தில அண்டவிடாது!அதுக்கு நாம சரியா சோறுபோடலைன்னா நம்ம கதி அதோகதியாகுது!

வெளியில அலைஞ்சு திரிஞ்சு வேலை பாக்குறவங்களவிட இப்ப ஏசி ரூம்ல இருந்துக்கிட்ட்டு வேலைபாக்குறவங்க எண்ணிக்கைத்தான் அதிகமாயிக்கிட்டிருக்குதாம் அதே நேரத்தில இந்த டி பிரச்சனையினால வியாதிகளும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வாழ்த்து சொல்லிக்கிட்டே வந்து சேருதாம்!

ஸோ மக்களே அப்பப்ப வெளியில வெய்யில்லயும் கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சுக்கோங்க! இல்லாங்காட்டி அதை ஈக்குவல் பண்றதுக்கு நிறைய மீன் மாத்திரைகளை சாப்பிட ஆரம்பியுங்க! ஒ.கேவா!

எல்லாம் உடம்புக்கு நல்லது :-)

ரீமிக்ஸ் ஆரவாரம்!



ரீமிக்ஸ் குஷியுடன் ஆரம்பிக்கட்டும் இந்த வாரம்

சமூக பிரச்சனைகளினூடாக ஒரு மொக்கை!

காவிரி in ஒகேனக்கல்

ஐயோ! ஐயோ! ஐயய்யோ.. !?

இந்த சொற்களை பெரும்பாலும் அதிகம் யாரும் பயன்படுத்த வீட்டில் எப்போதுமே தடை இருக்கும்! இந்த சொற்களை பயன்படுத்துதல் என்பது அமங்கலமான விஷயமாகவும் கருதப்படும் இது எல்லா வீடுகளிலுமே சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் கடுமையான ரூல்ஸ்!

கெட்ட பழக்கம் என்ற லிஸ்டில் இருக்கும் இந்த சொல்லை, அதிலும், ஐயோவினை சரியாக 23 முறையும், ஐயய்யோவினை சரியாக 26 முறையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடலில் ஏனோ துக்கத்தையும் துயரத்தையும் விட அதிக மகிழ்ச்சியும் அதிக உற்சாகமும் ஆட்டம் போடவைக்கும் அளவுக்கு வருவது ஏனோ என்று தெரியவில்லை?!

நீங்களும் கண்டு கேட்டுத்தான் பாருங்களேன்:-)



பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

பெண்:-: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஆண்:-: காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

பெண்:-: குங்கும வாசனைகள் ஹைய்யோ சந்தன வாசனைகள் ஐய்யோ என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ

ஆண்:-: கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ

பெண்:-: கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ

ஆண்:-: காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ

பெண்:-: காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஹய்யையோ

ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா

பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நே இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ

பெண்:-: ஐயோ

ஆண்:-: ஐயோ

பெண்:-: ஐயோ

ஆண்:-: உன் கண்கள் ஐயய்யோ

பெண்:-: ஹையோ

ஆண்:-: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஆண்:-: நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ

பெண்:-: நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹையோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

ஆண்:-: கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ

பெண்:-: குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

ஆண்:-: கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ

பெண்:-: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அருசுவை கூடுது ஐயய்யோ

ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா

பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: லல லல...

பெண்:-: தன நன...








நான் சொன்னது கரெக்ட்தானே ?

கோவில் இல்லாத ஊரில்.....

உள்ளூர்களில் அதிகம் அலைய வேண்டிய வாய்ப்பின்றி, அதிகமாய் கோவில்கள் அனைத்துமே பலருக்கு பல சமயங்களில் மன நிம்மதியினை அளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது!

இதுவே வெளி மாநிலங்களுக்கு சென்றாலோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்றாலோ பலருக்கும் இது போன்ற வாய்ப்புக்கள் எளிதில் கிடைப்பதில்லை, பெரும்பாலும் தனிமையில்தான் வாழ்ந்து வரும் அயலக வாழ்வில் இது போன்ற கோவில்கள் பொது இடங்களாக பலரையும் சந்திக்க வைக்கும் பலரோடும் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ளும் நல்லதொரு இனிய சூழலினையே கண்டிப்பாக கொடுக்கும்!

ஒரு முறை நான் புனேவில் இருந்தப்போது, தமிழ் புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு போக முடிவெடுத்திருந்தோம்! அங்கு நிறைய கோவில்கள் விநாயகர் கோவில்கள் இருந்தாலும் கூட,நகரிலிருந்து வெளியேறி சற்று தொலைவிலேயே ஒரு முருகன் கோவில் சிறு குன்றின் மீது இருப்பதை அறிந்து அங்கு சென்றிருந்தப்போது, அன்று தமிழ்புத்தாண்டும் என்பதால் பெரும்பாலான தமிழ்நாட்டுமக்களின் வரவில் கோவில் நிறைந்திருந்தது! எத்தனையோ தமிழ்நாட்டு மக்கள் பரிவுடனும் பார்த்து விசாரித்து சென்ற அனுபவம் மெல்ல எட்டிப்பார்க்கும் இந்த நேரத்தில் இதே சூழலை கொண்டுவரக்கூடிய ஒரு சேதியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

மிக அழகான வடிவமைப்பாக காணும்போதே மனதுக்கு மெல்லிய மகிழ்ச்சியினை தரும் அழகிய முன் கோபுர வாயில்

அரிசோனா மாநிலத்தில் முதல்முறையாக தென்னிந்திய சிற்பக்கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கோவிலாக காட்சியளித்துக்கொண்டிருக்கும், விநாயகர் கோவில் கோவிலினை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விநாயகர் ஆலயம் அரிசோனா மாகாணம்

தாயகத்தை விட்டு பிரிந்து அயலகம் வந்து சேரும் பெரும்பாலனவர்களின் தனிமை உறவுகளின் பிரிவு இவைகளினை கண்டிப்பாய் இது போன்றதொரு இடம் இறைவன் குடிக்கொண்டிருக்கும் இடமாக கோவில் அமைதியினையும் மனமகிழ்ச்சியினையும் கண்டிப்பாய் பெற்று தரும் என்பது நிச்சயம்!

அலுக்கவைக்காத ஆமைக்கதை - ரீப்பிட்டேய்!

முன்னொரு காலத்தில் "வேகம் மிக்கவர் யார்?" என்று ஆமையும் முயலும் விவாதித்துக்கொண்டன. ஒரு பந்தயத்தின் மூலம் அந்த விவாதத்திற்கு முடிவு கட்டத் தீர்மானித்தன. பந்தயத்தில் வேகமாக ஓடத் தொடங்கிய முயல்.... ஆமை நெடுந் தொலைவு பின் தங்கியிருப்பதைப் பார்த்து.... மரத்தடியில் சிறிது அமர்ந்து ஓய்வெடுத்து பின் ஓடத் தீர்மானித்தது. ஆனால் விரைவிலேயே உறங்கிப்போனது. தவழ்ந்து நடந்த ஆமையோ எந்தத் தொந்தரவுமில்லாமல் - தூங்கும் முயலைக் கடந்து சென்று பந்தயத்தை முடித்துக்கொண்டது. விழித்தெழுந்த முயல், தான் பந்தயத்தில் தோற்றுப் போனதை உணர்ந்து வருந்தியது.

கதை கூறும் கருத்து :- பொறுமையும், ஈடுபாடும் பந்தயத்தில் வெல்ல அவசியம் தேவை. மேலே சொன்னதுதான் நாம் கேட்டு வளர்ந்த கதை.

ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன சுவாரசியமான கதை இப்படிப் போகிறது.... பந்தயத்தில் தோற்ற முயல் மிகுந்த ஏமாற்றத்துடன் தோற்ற காரணத்தைத் தேடத் தொடங்கியது. அளவுக் கதிகமான நம்பிக்கையும், கவனக் குறைவுமே தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்து கொண்டது. தனக்கு வரமாகக் கிடைத்த "வேகத்தைப்" பயன் படுத்தி ஓடியிருந்தால்... ஆமை ஒரு போதும் வென்றிருக்காது என அறிந்தது.இப்படி நினைத்த முயல், இன்னொரு பந்தயத்திற்குச் சவால் விட்டது. ஆமையும் ஒப்புக் கொண்டது. இம்முறை முயல் நிற்காமல் வேகமாக ஓடிப் பல மைல்கள் வித்தியாசத்தில் ஆமையை வென்றது.

கதை கூறும் கருத்து:- வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். கதை இங்கே முடிந்துவிடவில்லை.

இப்போது ஆமை யோசித்தது. தற்போதுள்ள நிலையில் பந்தயத்தில் முயலை வெல்வது என்பது சாத்தியமல்ல. அதனால் சற்றே மாறுதலான ஒரு வழியைச் சிந்தித்து முயலைப் பந்தயத்திற்கு அழைத்து. முயலும் ஒப்புக்கொண்டது.ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி முயல் வேகமாயும், உறுதியாயும் ஓட ஆரம்பித்தது. ஆனால்.... ஓர் அகலமான ஆற்றை அடைந்தபோது நின்றுவிட்டது. பந்தய முடிவுக் கோடு ஆற்றின் அக்கரையில் இரண்டு கி.மீ. தொலைவில் இருந்தது. அதனால் என்ன செய்வதென்றறியாது வியப்புடன் முயல் அப்படியே உட்கார்ந்துவிட்டது. அதே சமயம் ஆமை மெதுவாகத் தவழ்ந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி எதிர்க்கரையை நீந்திக் கடந்து தொடர்ந்து நடந்து பந்தயத்தை முடித்துக் கொண்டது

கதை கூறும் கருத்து :- முதலில் உனது போட்டித்திறனின் தகுதி மையத்தைப் புரிந்துகொள். அதற்கேற்ப ஆடுகளத்தை மாற்றிக் கொள்.

இன்னமும்கூட இந்தக் கதை முடிவடையவில்லை. இக்காலக் கட்டத்தில் முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாகிவிட்டதால் ஒற்றுமையுடன் சிந்தித்துப் பார்த்தன. கடைசிப் பந்தயத்தை இன்னமும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று உணர்ந்துகொண்டன. அதனால் கடைசிப் பந்தயத்தை மீண்டும் நடத்தத் தீர்மானித்தன. இம்முறை இணைந்து ஓடத் துணிந்தன. பந்தயத்திற்குத் தயாராயின. இம்முறை முயலானது ஆற்றின் கரை வரை ஆமையைத் தன் முதுகில் சுமந்து கொண்டோடியது. ஆற்றை அடைந்ததும் ஆமை முயலைத் தன் முதுகில் சுமந்து ஆற்றை நீந்திக் கடந்தது. கரையில் மீண்டும் முயல், ஆமையைக் சுமந்து ஓடியது. இறுதியில் இரண்டும் ஒன்றாகவே பந்தயக் கோட்டைத் தொட்டன.

முன் எப்போதும் உணர்ந்திராத தன்னிறைவை இரண்டும் அதிகமாகவே உணர்ந்துகொண்டன. கதை கூறும் கருத்து:- பலமான போட்டித் தகுதிகளுடன் தனிப்பட்ட முறையில் புத்திசாலியாக இருப்பது நல்லதே. ஆனால் பிறரது தகுதியை மதித்து இணைந்து செயலாற்ற முடியாத பட்சத்தில் நமது திறமை வரையறுக்கப்பட்ட எல்லைக்குக் கீழாகவே இருக்கும். ஏனெனில் சில சூழலில் பிறர் நம்மை விடச் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.கூட்டு முயற்சியில் சூழல் சார்ந்தே தலைமை உருவாகிறது.

குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட் மனிதரைத் தலைமை ஏற்கும்படி விட்டுவிடுதல் நல்லது.
இந்தக் கதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு.

தோல்விக்குப் பிறகு முயலோ, ஆமையோ துவண்டு போய் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பிறகு, முயல் கவனத்துடன் முயன்று, கடுûமாய் உழைக்கத் தீர்மானித்தது.

ஆமை தனது போராடும் வியூகத்தை மாற்றிக்கொண்டது. ஏனெனில் அது ஏற்கெனவே இயன்றவரை கடினமாகவே உழைத்திருக்கிறது.

வாழ்வில் நாம் தோல்விகளைச் சந்திக்கும்போது, சில நேரங்களில் முயன்று கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் போட்டி வழிகளை மாற்றிக்கொண்டு மாறுபட்ட வழிகளைத் தேட வேண்டியுள்ளது. சில நேரங்களில் உழைப்பு வழிகள் இரண்டையும் மாற்றிப்பார்க்க வேண்டிய தாயுள்ளது.

முயலும், ஆமையும் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்:

எதிரியுடன் போட்டியிடுவதை விட்டுவிட்டு சூழலுக்கு எதிராகப் போட்டியிடும்போது... மிக மிகச் சிறப்பாக செயலாற்ற முடிகிறது.

நன்றி - சிஃபி அமுதசுரபி




நேற்று 23.05.08 ஆமைகள் பாதுகாப்பு தினம் - உலகம் முழுவதும் இயற்கை மாற்றங்களினாலும்,மனிதர்களின் பழக்கங்களிலும் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் ஆமைகளின் வாழ்வினை அவைகளின் பாதுகாப்பினை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.


குறிப்பு:- ஆமை வேகத்தில் வந்தாதால் கொஞ்சம் லேட்டு :-)

பிரிவு :-(

22 மாதங்கள் அவர்களுடனான நட்பு

முடிவுக்கு வந்தது இந்த மாதத்தில்

எதோச்சையான நட்பு நண்பர்களாய் பின் சகோதரர்களாக்கியது

ஐந்து ஆண்டுகள் அடைக்கலம் புகுந்த அரபு மண்ணிலிருந்தும்,

அங்கு வந்து சேர்ந்த என்னிலிருந்தும்

விலகி சென்றுவிட்டனர்!

அவர்கள் பார்வையிலிருந்தது;

பல ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம் சொந்தங்களை பார்க்க செல்லும் ஆர்வம் உள்ளத்தில் மகிழ்ச்சி!

என் பார்வையில் இருந்துகொண்டிருப்பது;

பிரிந்து செல்பவர்களை அனுப்புகையில் இருந்த சந்தோஷம் சில மணி நேரங்களுக்குப்பிறகு கண்ணீராய்....

செல்லுங்கள் என் ஈழத்து உறவினர்களே

சொல்லுங்கள் எம்மை பற்றி உங்கள் உறவுகளுக்கு

காலம் எத்தனை கடந்தாலும் மீண்டும் காண்போம்

ஆனால் கண்டிப்பாய்

கனவுகளில் மட்டும் அல்ல....

நிச்சயம் நிஜமாய்.....!

:-(


பல முறை என் கணினியில் என் நண்பர்களுக்காய் ஒளி(லி)ர்ந்த பாடலுடன்....!


சாராய சாவு - கண்டுபுடிச்சிட்டோம்ல!

கிட்டதட்ட 180 பேருக்கும் மேல் பலிவாங்கிய சாராய சாவின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த சாராயத்தில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளதாம்!

இது பற்றிய செய்தியாக...

தமிழகம், கர்நாடகத்தில் சாராயம் குடித்து 134 பேர் இறந்த சம்பவத்துக்கு, அதில் கலக்கப்பட்ட "மெத்தனால்'தான் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராய விற்பனையாளர்கள் போலீஸரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பழைய சாராய வியாபாரிக ளைக் கணக்கெடுத்து கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

100 மில்லி லிட்டர் கொண்ட எத்தில் ஆல்கஹால் அல்லது எரிசாராயம் ஆகியவற்றைக் கொண்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்தால் 1,000 மில்லி எத்தில் ஆல்கஹால் கிடைக்கும்.இதைக் குடிப்பதால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால் சிலர் எத்தில் ஆல்கஹாலுக்குப் பதிலாக மெத்தனாலை வாங்கி 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து குடிக்கின்றனர். இது முதலில் கண் எரிச்சலைக் கொடுக்கும். பின்னர் கண் பார்வை மங்கி உயிரைப் பறிக்கும்'' என்றார் ஒரு போலீஸ் அதிகாரி. "


இதோடல்லாமல் ஆய்வகங்களில் எப்படி சரியான முறையினில் சாராயம் தயாரிப்பது என்று கரெக்ட் பார்முலாவினை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழிமுறைப்படுத்தி கொடுக்கவும் ஏற்பாடு செய்ய *** உத்தரவிட்டுள்ளது!

இது நம்ம பாங்க் - STATE BANK OF INDIA


எப்போதோ சாதாரண விஷயமாகிவிட்ட செக் லீப் வாங்குவதற்கு கூட கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது?

அக்கவுண்ட் ஒபன் பண்ணவோ, அய்யோ வேண்டவே வேண்டாம்டா சாமின்னு ஓடி விடத்தான் தோன்றும் அந்தளவுக்கு கெடுபிடியான விதிகளை வைத்து அதற்கேற்றார் போலவே ஒரு அதிகாரியையும் நியமித்திருப்பார்கள்!(எப்படித்தான் புடிக்கிறாய்ங்கன்னே தெரியல!)

அப்படி ஒரு கடுமையான ரூல்ஸ்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் கறாரான பேங்க் STATE BANK IF INDIA அப்படிப்பட்ட பேங்குல ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கின கடனை, அத விட ரொம்ப கஷ்டப்பட்டு அடைக்க நினைக்கிற, விவசாய பொதுமக்கள்கிட்ட அரசியல் வாதிகள் இரண்டு பிட்ட போட்டுட்டு போனா,

பிட் 1 இனி விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிக கடன் வசதிகள் செய்து தரப்படும்.
பிட் 2 இது வரை நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்ய அரசு ஆரம்ப கட்ட முடிவு எடுத்துள்ளது.

அதை மக்களும் கப்புன்னு புடிச்சிக்கிட்டு,பர்ஸ்ட் முடிவு பண்ணுனது இனி கடன் திரும்ப அடைக்க வேண்டாம்னுத்தான்!?

இரண்டாவது முடிவு இனி ஈசியா கடன் வாங்கலாம்னு மக்கள் முடிவெடுக்கறதுக்கும் முன்னாடி கேப்ல பூந்துட்டாரு, ஸ்டேட் பேங்கு எம்.டி
கிட்டதட்ட 7000 ஆயிரம் கோடி கடன் வராமலே இருக்கு! இனி யாருனாச்சும் கடன் கேட்டு வந்தா கொடுக்காதீங்கன்னு!

மெசேஜ் பாங்குகளுக்கு போறதுக்கு முன்னாடியே முக்கியமான கட்சிக்காரங்களுக்கு போய் சேர்ந்துருச்சி அதுவும் இப்பத்தான் பெங்களூருவில தேர்தல் கூத்துகள் நடந்துக்கிட்டிருக்கு!

இந்த டைம்ல பாங்க் லோன் நிறுத்துன நியூஸ் கேட்டா அப்படியே மண்ணின் மைந்தனும் (அட கவுடாதாங்க!), இன்ன பிற பி.ஜேபி ஆளுங்களும்,காவிரி மாதிரி பொங்கி எழுந்து பொழப்பை கெடுத்துடுவாங்கன்னு டக்குனு ஃபீல் பண்ணுன வயலார் ரவி (இவர்தான் கர்நாடாக கண்காணிப்பாளர் ஓ....! இதுதான் கண்காணிப்பா??!!) உடனே மேடம் கிட்ட சொல்லி , அப்புறம் சிதம்பரத்துக்கிட்ட பேசி, அப்புறம் சிதம்பரம் ஸ்டேட் பாங்க் எம்.டியை கூப்பிட்டு, கடைசியா நிப்பாட்டுங்க கடனைன்னு சொன்ன பேப்பரை திருப்பிட்டாங்க! (அரசியல்வாதிகள்னா சிங்கம்ல!)

ஆனாலும் மக்களே இதே ஆப்பு திரும்ப ரீப்பிட்டு ஆகும் போது, பேங்க் பக்கம் போகாம நீங்க கொஞ்சம் நாளைக்கு அப்ப்பீட்டு ஆகிக்கோங்க!

எனக்கு வேல்யூ கூடுது :-)

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க:-)

மாதங்கள் போனதே தெரியலை!? ஆனாலும் உள்ளுக்குள் என்னைக்கிடா நம்ம வேல்யூ அதிகமாகும் இங்கன்னு எப்பவுமே ஒரு ஆர்வம்தான், இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்துக்கிட்டே வருது!

இப்படியே போனா நல்லாத்தான் இருக்கும்! ஆனா பாருங்க இந்த மாதிரி போனா ஊர்ல கஷ்டமாப்போயிடும் சொல்றாங்க!

நான் என்னங்கப்பண்றது! இது என்ன நம்ம கண்ட்ரோல்லயா இருக்கு ?

எப்படின்னே தெரியல திடீருன்னு 1 அப்புறம் 2 சில சமயம் ஒரே நாள்ல் 3ன்னு எகிறுது !

இதெல்லாம் எதுக்காக நடக்குது எதை அடிப்படையா வைச்சு நடந்துக்கிட்டிருக்குன்னு ஒரு எளவும் புரியாட்டியும் கூட, இப்ப கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு!

ஒண்ணுமே புரியல! என்ன நடக்குது இங்கன்னு, கேட்கறவங்களுக்கு மறுபடியும் என் சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறேன்!


ஒரு ஸ்டெப் கீழ வாங்க!




இன்னிக்கு என்னோட மதிப்புல ஒரு ரியால் = 11.75 ரூபாய்கள்

இதே ஒரு ரியால் சில வாரங்களுக்கு முன்பு =10.81 ரூபாய்கள்

இதே போல துபாயிலும் இன்றைய மதிப்பில் ஒரு திர்ஹாம் = 11.48

இதே ஒரு திர்ஹாம் சில வாரங்களுக்கு முன்பு = 10.60



கடந்த இரு வாரங்களாக ரியாலின் மதிப்பிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது! (எது எப்படின்னாலும் நமக்கு நஷ்டம்தான் சொல்றாங்க அது எப்படின்னுத்தான் புரிய மாட்டிக்குது?)

கடந்த இரு வாரங்களாக ரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்கும் வேலையில் நிறையே பேர் வீட்டிற்கு சேர்த்து வைத்த பணங்களை டிரான்ஸ்பர் செய்து கொண்டிருக்கிறார்களாம்! ( சில பலே ஆளுங்க கடன் வாங்கி அனுப்பிவைக்கிறாங்கங்க!?)

இது சில காலமோ! சில வாரமோ! ஆனாலும், நாமும் சந்தோஷமா இருப்போம் மத்தவங்களையும் சந்தோஷமா இருக்க வைப்போம்!

டாஸ்மார்க் தண்ணி வுட்டு வளர்ந்தோம்! - தினமணி

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், இளைஞர்களின் கைகளில் மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் டாஸ்மாக் நிமிர்ந்து நிற்கிறது, இளைஞர்க ளின் எதிர்காலம் தள்ளாடுகிறது.

எதிர்கால வளம்மிக்க இந்தியாவில், உழைக்கும் சக்தியாக இருக்க வேண்டிய இன்றைய இளைஞர்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி நல்ல குணங்களை இழந்து, கெட்ட குணங்களை அதிகப்ப டுத்திக் கொண்டு, தன் எதிர்காலத்தை இருண்டகாலமாக மாற்றி, வாழ்க்கையைக் கசப்பாக மாற்றி வருகின்றனர்.

இன்று எந்த வரைமுறையுமின்றி, கிராமங்கள்தோறும் அரசு மூலம் மிக எளிதாக மது கிடைப்பதால், இளைஞர்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் மனஅழுத்தம் உடையவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் தான் மது குடிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளோம். அதுவும் இப்பழக்கம் உள்ளவர்களை கிராமங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் மட்டுமே குடிகாரர்களாக தெரிவர்.ஆனால் இன்றைய நிலைமையே வேறு.

மது குடிக்காதவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றைய இளைஞர்கள் மது குடிப்பதையே ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்கள். காதணிவிழா முதல், கல்யாணவிழா, கருமாதி வரை நடைபெறும் விருந்துகளில், மதுவே முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் விருந்து என்றால் அதில் இனிப்பு, காரம், காபி இருக்கும். இன்று சாதாரணமாக சிறுசிறு விஷயங்களுக்கு கூட விருந்தில் மதுவைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு திருமண நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அந்த வீட்டில் மாப்பிள்ளை செலவு பட்ஜெட்டில், மது விருந்து அளிப்பதற்கென்றே கணிசமான அளவு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே திருமண வீட்டில் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியும்.

முன்பெல்லாம் குடிப்பவனுக்கு பெண் கொடுக்கவே கூடாது என பெற்றோர்கள் நினைப்பார்கள். இப்போது குறைந்த பட்சம் பகலிலாவது குடிக்காமல் இருக்கிறானா என்று பார்ப்போம் என்கின்ற நிலைமை. எதிர்காலத்தில் மது அருந்தாத இளைஞர்களே இல்லை என்ற நிலை வரக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.

டாஸ்மாக் கடை 10 மணிக்குதான் திறக்க வேண்டும் என்றாலும், மதுக்கூட உரிமையாளர்கள் விரைவிலேயே திறந்துவிடுவதால், அதிக தொகை கொடுத்துகூட வாங்கிக் குடிப்பதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையிலேயே மதுக்கடையில் காத்துக் கிடக்கின்றனர்.

மது குடிப்பதால் சிந்தனைத் திறன், செயல் திறன் பாதிக்கப்படுகிறது. சோம்பலை ஏற்படுத்துகிறது. மனநிலம், உடல்நலத்தை பாதிப்பதோடு பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில் நல்ல இளைஞர்கள் உருவாகாமல் நல்ல குடிகாரர்களாக உருவாகுகிறார்கள். இதனால் அவர்களை ஜாதி, மத மோதல் மற்றும் வன்முறை, குடும்பங்களில் மனைவியுடன் தகராறு, போதையில் வாகன விபத்துகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.

பொழுதுபோக்கிற்காக மது குடிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களில் பலர், கடைசியில் அதற்கே அடிமையாகி விடுகின்றனர்.போதை தலைக்கேறும்போது வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள். அப்போது எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறாகவே முடிகிறது.

இதற்கு தீர்வுதான் என்ன...? ஒரே வழி அரசின் கையில்தான் உள்ளது. தமிழகம் முழுவ தும் முழுமையான மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே வருங்கால இளைஞர் சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்க முடியும்.சாராயம், லாட்டரிசீட்டு, கந்துவட்டி உள்ளிட்டவற்றுக்கு அரசு எடுத்த தடை நடவடிக்கையால் பலன் கிடைத்தது.

மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள். அரசு நினைத்தால் எவ்வளவு நிதியை வேண்டுமானாலும் எத்தனையோ வழிகளில் திரட்டி வருவாய் இழப்பை ஈடுகட்டலாம். ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை இழப்பை யாராலும் ஈடு கட்ட இயலாது.

குட்டி பாப்பாக்களுக்கும் - கிரீன் கான்செப்ட்!


இயற்கையினோட இயைந்த வாழ்வினை இளம் வயதிலேயே துவக்கிவிட பல பல யோசனைகளோடு களமிறங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் சுற்றுசூழல் தன்னார்வலர்களும் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களிலும், முடிந்த மட்டும் மறு சுழற்சிக்கு உட்ப்படுத்தப்படுகின்ற பொருட்களையோ அல்லது இயற்கைக்கு இனி கேடு விளைவிக்காத வகையிலான பொருட்களையோ பயன்படுத்தும் வகையில் இவர்களின் முயற்சி இருந்து வருகிறது! அதுபோன்ற விஷயங்களில் ஒன்றுதான் இளம் குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிப்பும்!

டயாப்பர்கள் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள் பெரும்பாலும் தற்போது வெகு புழக்கமான விஷயமாக மாறிவிட்டது நம்மூர்களில்! முன்பெல்லாம் அதிகம் சாதாரண காட்டன் துணிகளினையோ அல்லது வேட்டி புடவைகளையோ உபயோகித்து ஒரு முக்கோண வடிவில் டயாப்பர்களாக பயன்படுத்தி வந்த நம்மூர் ஆட்கள் கூட இப்போது வெகு வேகமாக ரெடிமேட் டயாப்பருக்கு மாறிவிட்டனர்! ரொம்ப சிரமமே இல்லாத பணியாகவும் மாற்றம் பெற்றுவிட்டது!

பெரும்பலானோர் பயன்படுத்தும்,எளிதில் மக்கிப்போகாத பொருட்களால ஆன டயாப்பர்களை அவற்றின் உபயோகத்திற்கு பின்னர் கழிவுகளாக வெளியேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது! இந்த குறையினை நிறைவேற்றும் வகையில் புதிதாய் ஒரு கீரின் டயாப்பரினை அறிமுகப்படுத்தியுள்ளனர்! இதை பயன்படுத்திய பின் மிக எளிதிலேயே அப்புறப்படுத்திவிடமுடியுமாம் அது மட்டுமில்லாமல் குறைந்த காலத்திற்குள்ளேயே மண்ணுக்குள் மக்கி சிதைந்துவிடுவதால்,மற்ற பிளாஸ்டிக் லேட்டக்ஸ்களினை போல மண்ணுக்கு மாசு விளைவிப்பதில்லையாம்!(இந்த பொருட்கள் மண்ணுக்குள் மக்கிப்போவதற்கு நெடும் ஆண்டுகள் ஆகுமாம்! ஆனா கீரின் டயாப்பர்கள் ஒரு வருடத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடக்கூடியவையாம்!)

வாழ்க்கையின் தொடக்கம் முதலே வாழ்வது கீரினாக இருக்கட்டும் கிளீனாக இருக்கட்டுமே நம் இளைய தலைமுறை!

அட இதே கான்சாப்ட்டத்தான் நம்ம அம்மா பாட்டிகள் காலத்திலேர்ந்தே இருக்கு! ஆனாப்பாருங்க இப்ப ஊரு உலகமெல்லாம் சுத்தி வரும்போதுமட்டும்தான் நமக்கு ஒரு ஆசை வரும் சரி நாமளும் யூஸ் பண்ணுவோம்னு!

எது எப்படியோ நல்லதா இருந்தா சரி!

வீடியோ காட்சியாக இங்கு

ஒவர் வெயிட்டா திரியாதீங்க...!


பொதுத்துறை தனியார் துறை அரசுத்துறை என எல்லா துறைகளிலுமே இருந்து பணி மேற்கொள்ளும் ஊழியர்களில் சுமார 50 சதவிகிதம் பேர் ஒவர் வெயிட்டாகத்தான் திரிகிறார்களாம்! ஒவர் வெயிட்டுன்னா தலைக்கனம் புடிச்சு திரியறதுல்லீங்க உடம்பு கனம்புடிச்சு திரியறாங்களாம்!

இது மட்டுமில்லாம சுமார 25% பேர் டென்ஷன் பார்ட்டீங்களாவும் இன்னும் ஒரு பத்து பர்சண்ட் பேர் சக்கரை வியாதிக்காரங்களாவும் இருக்காங்களாம்!ஆக மொத்தத்தில முன்ணணியில இருக்கறவங்க நம்ம டவுன்(சிட்டின்னு கூட வைச்சுக்கலாம்) பக்கமா வேலைப்பாக்குற ஆளுங்கத்தானாம்!

காலத்தோட சேர்ந்து வாழும் வாழ்க்கையையும் மக்கள் மாத்திக்கிட்டே போறதாலதான் இவ்ளோ பிரச்சனைகளுக்கும் காரணம்னு ஒரு ஆய்வுல சொல்லியிருக்காங்க!

தண்ணி அடிக்கிறது,தம்போடறது,தீனி தின்றது இப்படியாக கன்னா பின்னா செலவுகளால கன்னா பின்னான்னு உடம்பு பெருகி, அதனால கொஞ்ச காலத்திலேயே வாழும் வாழ்க்கை குறுகிப்போவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்காம்!

எவ்ளோ திங்கிறேன் ஆனா சதை ஒட்டமாட்டிக்குத்துப்பான்னு சொல்ற அபி அப்பா டைப் ஆளுங்களாகட்டும், கொஞ்சம் தான் திங்கிறேன் ஆனா கன்னா பின்னானு வெயிட்டு ஏறுதுன்னு சொல்ற என்னைய மாதிரி ஆளுங்களாட்டும் எல்லாருக்கிட்டயும் விளையாட்டு காட்றது இந்த mc4r தாங்க இந்த ஜீன்தான் வெயிட்டு சில பேருக்கு கூடறதுக்கும் சில பேருக்கு கூடாததுக்கும் காரணமான விஷயம்!

கூடாம இருக்கறதால அவ்ளோவா பிரச்சனையில்ல ஆனா ஓவரா கூடியிருக்கறதுதான் ரொம்ப பிராப்ளமான விஷயமாம்!

உடல் எடை கூடுறதால, பணக்கார வியாதின்னு நாம சொல்ற, அதாவது லைப்ஸ்டைல் வியாதியாக மாறிவிட்ட சர்க்கரை வியாதி,டக்குன்னு கோபம் வரவழைக்கும் ஹைப்பர் டென்ஷன்,இதய சம்பந்தமான வியாதிகள் நம்மளோட சொத்து மாதிரி வந்து சேர்ந்து கடைசியா சொத்தையாக்கிட்டு போய்டுமாம்!

ஸோ...! மக்களே நீங்களும் ஜாக்கிரதையா டயட்ல இருந்து வெயிட்ட கண்ட்ரோலா வைச்சுக்கோங்க!

ஒவர் வெயிட்டா திரியாதீங்க! (அட என்னைய சொல்லிக்கிட்டேன்ப்பா!)

பெட்ரோமாக்ஸ் லைட்!

கண்டுபிடிக்கப்பட்டது ஜெர்மனியில் இருந்தாலும், இந்தியாவில் ஒளிராத இடம் கொஞ்சம் தான் இருக்கும்போல அந்தளவுக்கு ரொம்ப பிரபலமானது

கோவில் திருவிழாக்கள்
கல்யாண ஊர்வலம்
முக்கிய விசேஷங்கள்
துக்க காரியங்கள்
என அனைத்து விழாக்களில்லும் கட்டாயம் முன்கூட்டியே புக் செய்து வைக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்!

என்னதான் கவர்ன்மெண்ட் கரெண்ட் இருந்தாலும் எப்பபோகும் எப்ப வரும்ணு அந்த ஆண்டவனுக்கும் மட்டும்தானே தெரியும்?!

கோவில்களில் திருவிழா சமயங்களிலும் சாமி புறப்பாடு நடக்கும்போது முன்புறம் நான்கு பேர்களும் பின்புறம் இருவருமாக லைட்டிங்க் செக்யூரிட் கொடுத்தப்படியே வருவதை இன்றும் கூட நீங்கள் பார்க்கலாம்!

கல்யாணத்தில் மாப்பிள்ளை ஊர்வலங்களில்லும் இதே ஸ்டைல் செக்யூரிட்டி கிடைக்கும் மாப்பிள்ளைக்கு! ( நிறைய இடத்துல பெரிய சண்டையாக கூட மாறும்! ஏன் நீங்க பெட்ரோமாக்ஸ் லைட் வைச்சு அழைச்சு வர்லை ஊர்வலத்துலன்னு!>))

மாறிவரும் உலகில் இது போன்ற பொருட்களை கையாள்வதில் கிஞ்சித்தும் பொறுமை இல்லாத காரணங்களால் விட்டொழிக்கப்பட்டு ஃப்ளோரசண்ட் பேட்டரி விளக்குகளுக்கு மாறிவிட்டனர் பெரும்பாலன மக்கள்!

அது மட்டுமல்லாமல் விலையினை ஒப்பீட்டு பார்க்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ய்க்கு சுமாராக 4 மணி நேரம் மட்டுமே எரியும் திறன்கொண்ட இந்த விளக்குகளை,மண் எண்ணெயின்ன விலை அதிகரிப்பில் பலருக்கும் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் கூடுதல் சுமையாக மாற அவர்களும் மாறிக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது,இது மட்டுமல்லாமல் செந்தில் பிடித்து அமுக்கும் அதே அந்த மாண்டிலினை கூட அதிகம் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் கூட!

இன்னமும் கூட தாம் மாறாமல் விளக்கினை கேஸ் கொண்டு எரிக்கும் முறைக்கு மாறிவிட்ட பலரும் உண்டு ஆனாலும் அதுவும் கூட இன்னும் சில காலங்களுக்கு மட்டும்தான் நீடித்திருக்கும்!

சாலையோர கடைகளில், காய்கறி கடைகளில் என இன்னும் கூட இது போன்ற சில இடங்களில் பழமை மாறாமல் வெற்றிகரமாக ஒளித்துக்கொண்டிருக்கும் இந்த பெட்ரோமாக்ஸ்! (கொஞ்சம் அதிக வெப்பம்தான் உமிழப்படுகின்றது :()

நான் அதிகம் இது போன்ற விளக்குகளுடன் பழக்கப்பட்டது தருமபுரத்தில் நடக்கும் ஆதீனத்து விழாக்களில்தான் நடுநிசிகளில் புறப்பாடுகளில் கூடவே வரும் சுமார் 10 பெட்ரோமாக்ஸ் லைட்களின் வெளிச்சத்தில் சாமி தரிசனம்!

மிகுந்த வெளிச்சத்துடன், வெப்பம் + எண்ணெய்யின் வாசத்தோடு வெளிவரும் அந்த புகை உடம்புக்கு நல்லதோ அல்லது கெட்டதோ என்னவாக இருந்தாலும் ஏனோ அந்த வாசத்தை ரசித்துப்பார்க்க இப்போதும் ஏங்குகிறது மனம்!

பெட்ரோமாக்ஸ் லைட்கள், ஆண்டுகள் பல வந்தாலும்,லைட் பற்றிய செய்திகளை நாம் மறந்தே போனாலும் கூட மாறாத விஷயமாய் இருப்பது,இருக்கப்போவது இந்த படத்து காமெடி காட்சிதான் என்று சொன்னால் 100% உண்மைதானே!





வாருங்கள்..! சைவ உணவு வாரம் கொண்டாடுவோம் (மே 19 - மே 25 )

கொஞ்சமாய் கடினமான விஷயம் தான்!
ஒரு வாரத்திற்கு மட்டும்
21 வேளை மட்டும் உட்கொள்ளும் உணவில்,
தயவு செய்து அசைவம் சேர்க்காமல்,
அசைவத்திற்கு பயன்படும் விலங்குகளை,
ஒரு வாரத்திற்கு மட்டும் வாழ விட்டு பாருங்களேன்!

வாழ்க்கை ஒரு முறைதான்!
அதில் வாழும் முறைகள் பலவிதம்,
ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில்,
பரிவு நன்றி இரண்டையும் எப்போதும் காட்டவிட்டாலும் கூட,
இந்த ஒரு வாரத்திற்கு காட்டுங்களேன் தினமும் உணவாகும் பிராணிகளிடம்!
துடிக்க துடிக்க கொன்று பின் உண்பதை இந்த ஒரு வாரத்துக்கு துறந்து விட்டுப்பாருங்களேன்!

(உலகம் முழுவதும் பரவலாக மக்கள் இன்று மே 19ந்தேதி முதல் 25ந்தேதிவரையிலும் சைவ வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது!)

இனிய ஞாயிறு! - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)

ஓ மனமே...! ஓ மனமே...! - SUNDAY SONG

on



மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எறிந்தது யார்?

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..

கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்

கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..

இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே ஏணியடி..

இங்கயும் போய் கேட்கலாம் இந்த பாட்டை!

எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி


இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்காவது போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அழிவுப்பாதையில் விலங்குகள் - காப்போம் & காண்போம்!

மனிதன் தன்னை தவிர்த்த, மற்ற உயிரினங்களை கொல்வதை அல்லது துன்புறுத்துவதை அல்லது இந்த மாதிரியான விஷயங்களுக்கு உடந்தையாக இருப்பதை சுட்டிகாட்டி வேண்டாம், இனியும் இது வேண்டாம் என்று சொல்லும் விதமாக,அழியும் விலங்குகளை அழிவிலிருந்து காக்க முயற்சி மேற்கொள்வோம் என்ற விழிப்புணர்வினை அளிக்கும் விதமான நாளாக இன்று மே 16 வெள்ளி

மனிதன் தன் உயிரினை தவிர மற்ற உயிர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது அன்பினால் மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய அழிப்பதற்காக இருக்க கூடாது இது முதலில் அடிப்படையான விஷயமாக கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்!


இயற்கையினோடு இயைந்த வாழ்வு இனி அவசியம்!

இயற்கையினை இயல்பாக்கி, இருக்கும் வாழ்க்கையினையும்,இனிமையாக்கி,

வாழ்க்கையில் நாம் விலங்குகளாய் மாறாமல்,

விலங்குகளின் வாழ்க்கையினையும் மாற்றாமல்,

மகிழ்ச்சியோடு வாழ்வோம்!

பீடி- இது எப்படி இருக்கு?


அப்படிப்பட்ட விஷயம்:-

இந்தியாவில் தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் சுமார் 53 சதவிகிதம் பேர் பீடி பழக்கம் உள்ள மக்கள் அதாகப்பட்டது நடுத்தரத்திலிருந்து வறுமைகோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் இருக்கும் இவர்கள்தான் எப்பாடுபட்டாவது புகைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகம் புழக்கத்தில் விடும் புகை பீடியால் மட்டுமே! கிட்டதட்ட ௮00 மில்லியன் பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறதாம் வருடம்தோறும்!

சிறுவயதிலேயே சிக்கென பிடித்தேன் பீடியை என்று பிடித்துக்கொள்ளும் இந்த பழக்கம், ஆர்வத்தின் அடிப்படையில் உண்டாகிறதாம்,பிறகு விடும் புகை, பெறும் புகை என பலதரப்பட்ட புகைகளினால் அதிகம் நோய்களுக்கு ஆட்பட்டு அவதியடைந்து சரியான மருத்துவசதிகள் பெற முடியாமல் அல்லது பெற வசதி இல்லாமல் கடைசியில் இயற்கையை மீறி தம் உயிர் மூச்சினை விடும் காலத்திற்கு முன்பே தாங்களே புகையோடு புகையாக விட்டுச்செல்கின்றனர்!

மத்திய அரசு சுத்தமாக தடுக்காவிட்டாலும் கூட மண்டை ஓட்டு படங்களினை பீடிக்களில் வரைந்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாம்! (வரையறது ரொம்ப கஷ்டமான விஷயம்தான்!)


இப்படியான நிலைமை:--

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பீடி உற்பத்தி செலவு அதிகம். பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் இங்கு அதிகம்.

மத்திய அரசின் புதிய உத்தரவு பீடி உற்பத்தி செலவை மேலும் அதிகரிக்கும். இது தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.புகை பிடிக்கும் பழக்கத்தை ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது.

அதே வேளையில் மத்திய அரசின் புதிய உத்தரவு லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பீடிகளில் மண்டை ஓடு சின்னம் வைக்கும் திட்டத்தை கைவிடும்படியும் லட்சக்கணக்கான பீடி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர் காலத்தையும் காப்பாற்று மாறும் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் - கருணாநிதி..

அப்புறம் ரிசல்ட் எப்படி?

கூர்க்கா!


நடுநிசிகளில் ஒலிக்கும் சைக்கிள் மணிகளின் சத்தத்தில் காண இயலும் இவர்களை! விசிலடித்துச்செல்கையிலேயே ஒவ்வொருவரி நிம்மதியான உறக்கத்தினூடாக தன் மாத சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு செல்லும் கூர்க்கா!

பெரும்பாலும் திரைப்படங்களில், வீடுகளின் வாயில்காப்பாளனாக வீட்டிருப்பவர்! தமிழ் திரைப்படங்களில் சேட்ஜிக்களுக்கு பிறகு இந்தி பேசியவர்கள் இவர்கள் மட்டும்தான்!

இது போன்று காட்சிப்படுத்தப்பட்ட கூர்க்காக்கள் உண்மையிலேயே வீர தீரத்துடன்,1850களிலிருந்து. ஆங்கிலேய ஆட்சியின் போதும் அதற்கு பிறகும் தற்போதும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்! கிட்டதட்ட 200 ஆண்டுகள் அயராத ராணுவ பணியில் தம் குடும்ப உறுப்பினர்களை அனுப்பி அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது நேபாளம்!

சுதந்திரத்திற்கு பிறகான அண்டை நாடுகளுடனா போரில் மிகுந்த தீரத்துடன் போரிட்டதில் இவர்களுக்கு உள்ள பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!

இந்திய ராணுவத்தில் தற்போது 7 கூர்க்கா படைப்பிரிவுகளில் இருப்பவர்களையும் சேர்த்து சுமார் 30000 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்!

கூர்க்காக்களின் வாழ்க்கை இந்திய மண்ணில் இரு விதமாக உள்ளது ஒன்று அவர்கள் இந்திய மண்ணை நாடி வந்தவர்கள் மற்றொரு பிரிவினர் தாய் மண்ணை விட்டு வேலை தேடி இந்தியா வந்தவர்கள்! இந்திய நோபாள & பிரிட்டனின் முத்தரப்பு உடன்படிக்கையின் படி நேபாளத்து மக்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்!பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் தலைவரின் சமீபத்திய அறிவிப்பில் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நேபாளத்து கூர்க்காக்கள் உடன் தங்களின் பணிகளை துறந்து தாய் நாட்டிற்கு திரும்பவேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்!

மாவோயிஸ்ட் தலைவரின் அறிவிப்பின்படி இந்தியா பாதுகாப்பு படை பிரிவில் இருந்து கூடிய விரைவில் நேபாளத்து கூர்க்காக்களின் பிரிவுகள் விலகிச்செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிக இருக்ககூடும்! இதன் மூலம் நேபாளத்தில் கண்டிப்பாக வேலை வாய்ப்பு பிரச்சனைகள் அதிகரிக்ககூடும் ஆனாலும் மாவோ தலைவர்களின் தீர்மானத்திற்கு உடன்பட வேண்டிய சூழ்நிலைதான் இப்போது கூர்க்கா படைப்பிரிவில் இருப்பவர்களுக்கு!

இந்திய அரசோ அல்லது ராணுவ அதிகாரிகளோ இது வரையிலும் இந்த பிரச்சனை சம்பந்தமாக எந்த கருத்தினையும் தெரிவிக்காமல் அமைதி காத்துவருகின்றனர்.நிலைமை மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்...!

எங்கோ எப்போதோ படித்தது!

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

இனி இல்லாமல் போகும் இன்னிசை?! - தினமணி

இசையோடு இயைந்த வாழ்வு தமிழர்களுடையது என்று கூறிப் பெருமைப்படுகிறோம். உலகமே நமது இசையைக் கேட்டு மயங்குகிறது என்பது நிஜம். ஆனால், நகரங்களில் மேல்தட்டு மக்களுக்கு மட்டும்தான் இசையைப் பற்றிய ஞானம் இருக்கிறதே தவிர, மாவட்டங்களில் அடுத்த தலைமுறையினர் இசையைப் பற்றிய ஞானம் என்பதே இல்லாமல் அல்லவா வளர்கிறார்கள்.

இதைப்பற்றி யாராவது கவலைப்பட்டிருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆரம்பப் பள்ளிகளில் பாட்டுக்கென்று வகுப்பு இருக்கும். பாட்டுப் படித்தால் வேலை கிடைக்குமா என்று இப்போது பல பள்ளிக்கூடங்களில் பாட்டு வகுப்பு என்பதே இல்லாத நிலைமை.

சங்கீதம் என்பது வேலைக்காக மட்டுமல்ல. மனசாந்திக்கும், ஒரு மனிதனின் ரசனை உணர்வைத் தூண்டுவதற்கும் இசை மிகப்பெரிய மருந்தாக இருக்கும் என்பது சான்றோரும் முன்னோர்களும் கண்டறிந்து சொன்ன விஷயம்.

பாட்டு என்று சொன்னால் அது சினிமாப் பாட்டு என்றாகி விட்டிருக்கிறது. சொல்லப்போனால், அத்தனை திரை இசையமைப்பாளர்களும் - எம்.எஸ். விஸ்வநாதன் ஆனாலும், இளையராஜா ஆனாலும், ஏ.ஆர். ரஹ்மான் ஆனாலும், ஹாரிஸ் ஜெயராஜாக இருந்தாலும் - ஒத்துக்கொள்ளும் விஷயம் தங்களது பாடல்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது கர்நாடக சங்கீதம்தான் என்பது.

நல்ல குரல் வளம் இருந்தாலும், அது முறையான பயிற்சியின் மூலம்தான் வளம் பெறுகிறது. ஸ்ருதி, லயம் போன்றவை எந்த சங்கீதமாக இருந்தாலும் இன்றியமையாத விஷயங்கள். இது தெரிந்ததால் தான் நமது முன்னோர்கள் குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி அளித்தனர்.

இசை ரசனை என்பது பரபரப்பான நாகரிக வாழ்வில் மனதுக்கு இதமளிக்கும் இன்றியமையாத விஷயம் என்று மேலைநாடுகளில் கூட உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருவையாறு என்று நான்கு இடங்களில் இசைக் கல்லூரிகள் இருக்கின்றன.

இவை தவிர நாகசுரம், தவில், பரதம் மற்றும் வாய்ப்பாட்டுப் பயிற்சி அளிக்கும் பள்ளிக்கூடங்கள் 17 இருக்கின்றன. இந்த இசைக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் போதிய மாணவர்கள் சேர்வதில்லை என்பது மட்டுமல்ல, முறையாகப் பயிற்சி அளிக்கப் போதுமான ஆசிரியர்களும் இருப்பதில்லை.

இசைக்கல்லூரிகளிலும், இசைப்பள்ளிகளிலும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் இசைத்துறையில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதில் அதிசயம் இல்லை. இதுபோன்ற துறைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அரசு கொடுத்தால்தான், தமிழகத்துக்கே உரிய கலைகளைக் காப்பாற்ற முடியும். தமிழுக்குத் தரும் முக்கியத்து வம் இசைக்கும் தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

நாகசுரம் மற்றும் தவில் பயிற்சிக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக அதிகமாக ஆர்வம் காட்டி வந்தனர். இதுபோன்று பள்ளிகளில் தேர்வு பெற்று, பல ஆலயங்களில் வித்வான்களாக அவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது அதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டிருக்கிறது.

இன்றைய நிலையில், பள்ளிக்கூடங்களில் மீண்டும் இசை வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று கல்வித்துறை முனைப்புக் காட்டினால் ஒழிய, இந்தப் பாரம்பரிய இசை என்பது பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பாக இருக்குமே தவிர, அடித்தட்டிலிருந்து ஒரு எம்.எஸ். சுப்புலட்சுமியோ, எம்.எல்.வசந்தகுமாரியோ உருவாக வாய்ப்பே இல்லாத நிலைமை தொடரும்.

கலைத்துறையிலும், இசையிலும் நாட்டமும், அவைகளின் வளர்ச்சியில் ஆர்வமும் உள்ள முதல்வர், ஏன் இசைக் கல்லூரியின் வளர்ச்சியிலும், அடித்தட்டு மக்களுக்கு இசைப்பயிற்சி அளிப்பதிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது!

ரொம்ப ஈசியான போட்டி!

நிறைய போட்டிகள் நடக்குது! நம்ம பதிவுலகத்துல சரி நாமாளும் இதை டிரைப்பண்ணி பார்த்துடுவோம்னு ஒரு எண்ணம்தாங்க இந்த போட்டிக்கு அடிப்படையான காரணம்!

போட்டி அப்படின்னு சொன்னதுமே எஸ்ஸாகிடாத மாதிரி இது ரொம்ப ரொம்ப ரொம்ப்ப்பா சிம்பிளான போட்டி!

ஸோ எல்லாரும் கண்டிப்பாக கலந்துக்கோணும்!

ஆடீயோ இருக்கு!

வீடியோ இருக்கு!

கேட்டு பார்த்துட்டு நான் கீழ கேட்டிருக்கற கேள்விக்கு பதில சொல்லுங்க! அவ்ளோதான்!



இந்த பாடலில் உங்களை கவர்ந்த, பிடித்த, ரசித்த,அனுபவித்த பாடல் வரிகள் எது?

பரிசு உண்டான்னு கேட்குறீங்களா?

உங்க மனசாட்சியை தொட்டுப்பார்த்துக்கிட்டு, அப்புறமும் இந்த மாதிரி கொஸ்டீன்ஸ் ரைஸ் ஆச்சுன்னா....?

லேபிளத்தான் பார்க்கணும்!

கல் உப்பு

தாத்தா...! இந்த மூட்டை எப்பவுமே வெய்யிலா இருந்தாலு சரி மழையா இருந்தாலும் சரி வெளியிலயே கிடக்கு அத யாரும் திருடிட்டு

போயிடமாட்டாங்களா?

கொத்ததெரு தாத்தா கடையின் வாசலில் எப்போதுமே எந்த பாதுகாப்புமே இன்றி இருக்கும் இந்த மூட்டையை பார்த்தபோதெல்லாம் எனக்குள் எழுந்த கேள்விகள்?

டேய்...! அது கல் மூட்டைடா அத, போய் எவன் எடுக்கப்போறான்! என்ற அலட்சிய பதிலில் எனக்கு அதன் மதிப்பு தெரியவந்தது.ஒண்ணுத்துக்கும் பேராத விஷயம்போல நம்மள மாதிரின்னு ( ஆமாங்க! அடிக்கடி ஏண்டா உப்பு மூட்டை மாதிரி நிக்கிறேன்ல எங்க பாட்டி கேட்பாங்க!)

எந்த கடையிலும் வெளியிலேயே வீட்டிருக்கும் இந்த கல் உப்பினை மட்டும்தான் நாம் நம் விருப்பப்படி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பார்கள் கடைக்காரர்கள். ( தம்பி ரெண்டு படி நீயே அளந்து எடுத்துக்கோ..!)

இன்னும் சில இடங்களில் உப்பு மூட்டைகளுக்கென தனியாக ஒபன் டூ ஏரில் குடோவுன்களும் இருந்ததை நான் கண்டதுண்டு! அப்பக்கூட யாரும் அதை திருடிக்கிட்டு போக முயற்சி பண்ணது கிடையாதுங்க!?

பெரும்பாலான வீடுகளில் சாம்பார் ரசம் என பலதரப்பட்ட விஷய்ங்களுக்கும் இந்த கல் உப்புத்தான் பயன்படுத்தப்பட்டுவந்தது,அய்யய்யோ அயோடின் இல்லை இதுல என்று பயமுறுத்தியும் கூட இன்னும் கல் உப்பு பயன்படுத்தும் குடும்பங்கள் ஏராளம்!

ஊறுகாய் ஜாடி என்ற பெயரில் சீனக்களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு பானை, கீழே மஞ்சள் நிறத்திலும் மேலே வெளிர்ந்த நிறத்திலுமான இந்த பீங்கான் பானையில் ஊறுகாய் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பலரது வீடுகளிலும் கல் உப்புக்கள் நிறைந்திருக்கும். சிலர் வீடுகளில் அதனுள்ளேயே புளியையும் அடைத்திருப்பார்கள்!

டீஸ்பூன் அளவு கதையெல்லாம் எந்த அம்மாக்களுக்குமே அவ்வளவாக புரிபடாத விஷயம்! கல் உப்பினை பொறுத்த வரையில் விரல் நுனியளவு சில விரல் அளவு கையளவு இந்த விகிதங்களில்தான் கலக்கப்படும் கல் உப்புக்கள்!

பொழுதே போகத ஞாயிறுகளின் மத்தியானங்களில் சீக்கிரமாய் வந்து தொலைக்கும் பசியினை சற்றும் பொருட்படுத்தாமல் சமையலோடு வாரமலரின் வாசகி ஆக மாறியிருக்கும் அம்மாவிற்கு, என் பசி தெரியாத சமயங்களில் வரும் பலத்த குரலினை கேட்டு அக்கம்பக்கத்தினர்கள் வருவதற்குள்,அரைச்சொம்பு அரிசி சாத கஞ்சியில் சில கல் உப்பினை போட்டு கரைத்து வாயில் ஊற்றி, குரைக்கும் சத்ததை குறைக்கும் அம்மாவின் சாதுர்யம்!

இன்று என்னை நினைக்க மட்டுமே வைக்கிறது!
கண்களை கண்ணீரில் நனைக்க மட்டுமே வைக்கிறது!

பயம் :-( & :-)


நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.

பயம் எல்லோருக்குமே இயற்கைதான்! ஆனால் கண்டபடி பயப்படுவதும் அளவுக்கு அதிகமாக பயப்படுவதுன் தினப்படி பயப்படுவதும் உடல்நிலை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் உள்ள விஷயங்களாம்!

பயத்திற்கான காரணம் என்ன?

அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

என்ன மாதிரியான தீர்வுகள் உண்டு?

என்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்

இப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து
காயப்போட்டால் பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்!

நம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்!

பயம் கண்டு ஓடாதீர்கள்!

பயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்!

இன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரனும்ப்பா!? அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே!

ஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது? நாம் என்ன தவறு செய்தோம்? என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்!

சரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது!

ஆன்மீகம் காதல் நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!