பாட்டி வடை சுட்டு காக்கா லவட்டிக்கிட்டு போன கதையை நீங்க போய் இங்க சொன்னீங்கன்னா, வரும் பதில் அடப்போய்யா இங்க எல்லாம் ஆளுங்கள தூக்காதது ஒண்ணுதான் கொறைச்சல் இதுல நீ இந்த கதையை சொல்லி என்னமோ பல வருடங்களா புழக்கத்தில் இருக்கும் நீதிக்கதையுன்னு சும்மா கதை வுட்டுக்கிட்டு திரியிறீங்களேன்னு கேப்பாங்க டெக்னாலஜி டெவலப்பண்ணிக்கிட்டிருக்கற ஜப்பான்காரங்க!அவ்ளோ இம்சை கொடுத்து டோக்கியோவை துவம்சம் பண்ணுதுங்களாம் இந்த காக்காக்கள்!
மனிதர்களுக்கு இணையாக போட்டிப்போட்டுக்கொண்டு தம் இனத்தை பெருக்கிக்கொள்ளும் காகங்களுக்கு தேவையான உணவினையும் மனிதர்களிடமிருந்து தட்டி பறித்து செல்கின்றன! இங்குதான் மனிதர்களுக்கும் காகங்களுக்கு கடும் சண்டை நிகழ்கிறதாம்! பலரின் தலையினை புண்ணாக்கி புண்ணியம் கட்டிக்கொள்கின்றனவாம்! (அந்த ஷார்ப்பான கடினமான காகங்களின் வாய்ப்குதியினை கொஞ்சம் பயத்துடனே விவரிக்கிறார்கள் ஜப்பானியர்!)
பள்ளி செல்லும் சிறுவர்கள் பள்ளியினுள் கையில் குடையுடன் நடமாடி தங்களையும் தங்களது மதிய உணவையும் பாதுகாக்கும் நிலைமைதான் இப்போது! தெருவில் நிம்மதியாக ஒரு சாக்லேட்டினை தின்று செல்ல முடியாமல் தவிக்கும் சிறுவர் சிறுமியரிலிருந்து பலரும் பலவிதமான வேதனைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றனவாம் காக்கை கூட்டங்கள்!
இவற்றின் அளவிடமுடியாத வளர்ச்சியினை கண்டு ஜப்பான் கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறது. (உத்தேசமாக 1.50 லட்சம் காக்கைகள் பறக்கின்றனவாம்!) கடும் கண்டனங்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு பொதுஇடங்களில் காக்காகளை ஒழிக்கும் வகையில் வாயுவினை கொண்டு பொறிகள் வைத்து அழித்தும் வருகிறது.
ஆனால் வன்முறையின் மீது நாட்டமில்லா ஜப்பான் காகங்களை இப்படி கொல்வதையும் மக்கள் விரும்பவில்லை!
சரி குஞ்சுகளை பொரிக்கும் இடங்களிலேயே, பயபுள்ளைகளின் மேட்டரினை முடிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டால் இவர்களை விட காகங்கள் கூடுதலாக யோசித்து சும்மா லொலலொலா கூடுகளை கட்டி எஸ்ஸாகிவிட்டு வேற இடங்களில் குடும்ப சகிதமாய் குதூகலமாய் வாழ வழி தெரிந்து வைத்திருக்கின்றனவாம்!
இந்த மாதிரியான முடிவுவினை கூட அரசு எடுக்க காரணம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கையில் ஒரு காகம் அவரின் தலையில் கொத்தி விளையாடி வினை தேடிக்கொண்டதுதானாம்!
வெளியே சொல்லிக்கொள்ள இயலாத அளவு கதறுகிறார்களாம் ஜப்பானிய விலங்கியல் அறிஞர்கள் கூட...!
காலையில் எழுவதற்கு முன்பே எழுப்பும் காகங்களின் இரைச்சல் சத்தங்களுக்காகவே காதில் எதையாவது திணித்துக்கொண்டு வேலைக்கு செல்ல எத்தனிக்கும் பலர் வேண்டிக்கொள்வது நிம்மதியாய் தலைக்கு எந்த தொந்தரவும் வந்துவிடாமல் இந்த நாளை இனிய நாளாக்கவேண்டும் சனீஸ்வர பகவான் என்றுதானாம்!
காக்கா - க்ரோ வித் ஜப்பான்!
Subscribe to:
Post Comments (Atom)
6 பேர் கமெண்டிட்டாங்க:
ஆயில்ஸ் நீங்க எப்பவும் பிஸியா இருக்கிறது இந்த மாதிரி தகவல்களை தேடுவதற்கு தானோ?
//அவ்ளோ இம்சை கொடுத்து டோக்கியோவை துவம்சம் பண்ணுதுங்களாம் இந்த காக்காக்கள்!//
ஜப்பான்ல காக்காங்கல்லாம் இருக்குதுன்னு கேள்விபடவே ஆச்சரியமா இருக்கு.
அந்த ஊரு காரங்க தான் கண்டதையும் திம்பாங்களே...பேசாம காக்கா பிரியாணி வச்சி தின்னுட்டா என்ன? இதை இன்னும் யோசிக்காமலா இருக்காங்க? ஆச்சரியமாத் தான் இருக்கு
:)
/கைப்புள்ள said...
//அவ்ளோ இம்சை கொடுத்து டோக்கியோவை துவம்சம் பண்ணுதுங்களாம் இந்த காக்காக்கள்!//
ஜப்பான்ல காக்காங்கல்லாம் இருக்குதுன்னு கேள்விபடவே ஆச்சரியமா இருக்கு.
அந்த ஊரு காரங்க தான் கண்டதையும் திம்பாங்களே...பேசாம காக்கா பிரியாணி வச்சி தின்னுட்டா என்ன? இதை இன்னும் யோசிக்காமலா இருக்காங்க? ஆச்சரியமாத் தான் இருக்கு
:)
//
உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம்தான் இன்னும் அவங்க காக்கா பிரியாணி சாப்பிடாம இருக்குறது ?!?!? :))
கா! கா! கா! கா! கா!...........
///நிஜமா நல்லவன் said...
ஆயில்ஸ் நீங்க எப்பவும் பிஸியா இருக்கிறது இந்த மாதிரி தகவல்களை தேடுவதற்கு தானோ? ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
:) நல்லா பிடிக்கிறீங்க காக்கா(விசயத்தை)...
Post a Comment