ராஜாளி

ரொம்ப பாரம்பரியமான பறவையாக பக்தி மார்க்கத்திலும் ரொம்ப பயனுள்ள பறவையாக விவசாய நிலத்திலும் பணி புரிந்த புரிந்துக்கொண்டிருக்கு எதிர்காலத்தில் பார்க்கவே முடியாமல் போகப்போகும் பறவையினம்தான் ராஜாளி!

அற்புதமானதொரு கடவுளின் படைப்பில் ஒரு துப்புரவாளனாக,சுற்றுசுழலுக்கு பாதுகாவலனாக,இதன் பணி அமைகின்றது.

கேட்பாரற்று கிடக்கும் மிருகங்களின் சிதைவுகள் எச்சங்களை டிஸ்போஸ் செய்யும் பணி இதற்கு மிக முக்கியமான ஒரு பணியாகும். இதன்மூலம் அந்த கழிவுகளால் பரவும் நோய்களின் எண்ணிக்கைகள் குறைகின்றன!

பெரும்பாலும் ஏதோனும் அழிந்த தேசங்கள் அல்லது இயற்கை சீரழிவுகளை காட்டப்படும்போது கணடிப்பாக அல்லது சிம்பாலிக்காக ராஜாளிகள் தனித்து அமர்ந்திருக்கும் படங்கள் கண்டிப்பாக இருக்கும்!

ஆம் இவைகளின் பணிகளால்தான் அந்த பிரதேசங்கள் முழுமையான சுத்தம் அடைகின்றன! தேடிதேடி சென்று சுத்தம் செய்யும் இவைகள் சாதாரணமாக மேம்போக்காய் சுத்தம் செய்யும் நம் மனிதர்களை போலன்று!

ஆனால்....!

இப்போது இவைகள் தம் அழிவிப்பாதை நோக்கி வெகு வேகமாக சிறகு அடித்து பறந்துக்கொண்டிருக்கின்றன அவற்றை துரத்திக்கொண்டிருப்பதலில் அழித்துக்கொண்டிருப்பதில் மனித இனத்துக்குத்தான் முதலிடம்

பெருகிவரும் நாகரீக வாழ்க்கையின் தேவைகள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயன உரங்களின் ஆதிக்கம் சமீபத்தில் கூட இறந்த ராஜாளிகளின் உடல்களில் மருத்துவசோதனை செய்கையில் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்ப்டும் ரசாயன உரங்களிலுள்ள டிடிடீ,அல்டீரின்,டயல்டீரின் போன்றவைத்தான் இவைகளின் அழிவுக்கு காரணம் என்று CSE (centre of Science & Environment) தெரிவித்துள்ளது! இதில் டிடிடீ ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஐட்டமாக இருந்தாலும் கூட விலை குறைவாக வெளியே விற்கப்பட்டுத்தான் வருகிறது!

இந்த ரசாயனங்கள் நேரிடையாக உடனடியாக ராஜாளிகளை பாதிக்காவிட்டாலும் கூட பின்விளைவுகளாய் பறவைகளின் வளர்ச்சி விகிதத்தை தடை செய்கிறது! ராஜாளிகளின் முட்டையிடும் திறனை குறைப்பதோடு,உடல் நிலையிலும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன!

இதுமட்டுமல்லாமல் விமான போக்குவரத்துக்கள் அதிகரிப்பால், உருவத்தில் பெரிய ராஜாளிகளால் விமானங்களுக்கு பாதிப்பு நேரலாம் என்ற நோக்கில் சுட்டு வீழ்த்தப்படும் ராஜாளிகள் (இதற்கெனவே தனியாக ஒரு குழு இயங்குகிறதாம் விமான நிலையங்களில்)

இனி வரும் காலங்களில் இந்திய அரசு விழித்துக்கொண்டு ராஜாளிகளை பாதுகாக்கும் திட்டத்தை பரிசீலிக்கக்கூடும்!(ஒரு நம்பிக்கைதான்!)ஏதோ நம்மால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டு, ரசாயன உரங்களின் பயன்பாடுகள் விவசாயத்திற்கு தேவையில்லை என்பதினை தெளிவாக்கி மக்கள் மத்தியில் ராஜாளிகளாய் வாழ்வோம்!

ராஜாளிகளை வாழ வைப்போம்!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//பெரும்பாலும் ஏதோனும் அழிந்த தேசங்கள் அல்லது இயற்கை சீரழிவுகளை காட்டப்படும்போது கணடிப்பாக அல்லது சிம்பாலிக்காக ராஜாளிகள் தனித்து அமர்ந்திருக்கும் படங்கள் கண்டிப்பாக இருக்கும்!//

மாமேய் ..அப்போ அவங்க காட்டறது கழுகு இல்லியா?:)

said...

//ரசிகன் said...
//பெரும்பாலும் ஏதோனும் அழிந்த தேசங்கள் அல்லது இயற்கை சீரழிவுகளை காட்டப்படும்போது கணடிப்பாக அல்லது சிம்பாலிக்காக ராஜாளிகள் தனித்து அமர்ந்திருக்கும் படங்கள் கண்டிப்பாக இருக்கும்!//

மாமேய் ..அப்போ அவங்க காட்டறது கழுகு இல்லியா?:)

//


எல்லாமே ஒண்ணுதான் :)

said...

கழுகு. இராஜாளி, பருந்து எல்லாம் ஒன்றா?.... ஆனாலும் அபூர்வமாகி விட்ட பறவைகள் காக்கப்பட வேண்டும்...

said...

//தேடிதேடி சென்று சுத்தம் செய்யும் இவைகள் சாதாரணமாக மேம்போக்காய் சுத்தம் செய்யும் நம் மனிதர்களை போலன்று!///
:)

said...

இயற்கை சமன்பாடுகள் மாறிகிட்டே வருது. இறுதியில் என்னவோ?