ஒவர் வெயிட்டா திரியாதீங்க...!


பொதுத்துறை தனியார் துறை அரசுத்துறை என எல்லா துறைகளிலுமே இருந்து பணி மேற்கொள்ளும் ஊழியர்களில் சுமார 50 சதவிகிதம் பேர் ஒவர் வெயிட்டாகத்தான் திரிகிறார்களாம்! ஒவர் வெயிட்டுன்னா தலைக்கனம் புடிச்சு திரியறதுல்லீங்க உடம்பு கனம்புடிச்சு திரியறாங்களாம்!

இது மட்டுமில்லாம சுமார 25% பேர் டென்ஷன் பார்ட்டீங்களாவும் இன்னும் ஒரு பத்து பர்சண்ட் பேர் சக்கரை வியாதிக்காரங்களாவும் இருக்காங்களாம்!ஆக மொத்தத்தில முன்ணணியில இருக்கறவங்க நம்ம டவுன்(சிட்டின்னு கூட வைச்சுக்கலாம்) பக்கமா வேலைப்பாக்குற ஆளுங்கத்தானாம்!

காலத்தோட சேர்ந்து வாழும் வாழ்க்கையையும் மக்கள் மாத்திக்கிட்டே போறதாலதான் இவ்ளோ பிரச்சனைகளுக்கும் காரணம்னு ஒரு ஆய்வுல சொல்லியிருக்காங்க!

தண்ணி அடிக்கிறது,தம்போடறது,தீனி தின்றது இப்படியாக கன்னா பின்னா செலவுகளால கன்னா பின்னான்னு உடம்பு பெருகி, அதனால கொஞ்ச காலத்திலேயே வாழும் வாழ்க்கை குறுகிப்போவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்காம்!

எவ்ளோ திங்கிறேன் ஆனா சதை ஒட்டமாட்டிக்குத்துப்பான்னு சொல்ற அபி அப்பா டைப் ஆளுங்களாகட்டும், கொஞ்சம் தான் திங்கிறேன் ஆனா கன்னா பின்னானு வெயிட்டு ஏறுதுன்னு சொல்ற என்னைய மாதிரி ஆளுங்களாட்டும் எல்லாருக்கிட்டயும் விளையாட்டு காட்றது இந்த mc4r தாங்க இந்த ஜீன்தான் வெயிட்டு சில பேருக்கு கூடறதுக்கும் சில பேருக்கு கூடாததுக்கும் காரணமான விஷயம்!

கூடாம இருக்கறதால அவ்ளோவா பிரச்சனையில்ல ஆனா ஓவரா கூடியிருக்கறதுதான் ரொம்ப பிராப்ளமான விஷயமாம்!

உடல் எடை கூடுறதால, பணக்கார வியாதின்னு நாம சொல்ற, அதாவது லைப்ஸ்டைல் வியாதியாக மாறிவிட்ட சர்க்கரை வியாதி,டக்குன்னு கோபம் வரவழைக்கும் ஹைப்பர் டென்ஷன்,இதய சம்பந்தமான வியாதிகள் நம்மளோட சொத்து மாதிரி வந்து சேர்ந்து கடைசியா சொத்தையாக்கிட்டு போய்டுமாம்!

ஸோ...! மக்களே நீங்களும் ஜாக்கிரதையா டயட்ல இருந்து வெயிட்ட கண்ட்ரோலா வைச்சுக்கோங்க!

ஒவர் வெயிட்டா திரியாதீங்க! (அட என்னைய சொல்லிக்கிட்டேன்ப்பா!)

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நானு அபி அப்பா மாதிரிப்பா.

said...

அப்பாடா..நான் என் வயசுக்கு ஏத்த எடையிலேயே இருக்கேன் :)

தலைக்கனம் மட்டும் ஜாஸ்தியா இருந்திச்சு.நேத்துத்தான் குறைச்சிட்டேன்..
அட நான் முடிவெட்டிக்கிட்டத சொன்னேன் பா..

said...

நமக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.... நாமெல்லாம் ஊதினாலே பறக்கிற ஆளுங்க....... ஹிஹிஹிஹிஹி

said...

நானும் நிஜமா நல்லவன் மாதிரிப்பா:-))

said...

ஒரு காலத்தில் அபி அப்பாமாதிரி இருந்து .....இப்ப உங்க லெவலுக்கு வந்துட்டேன்(-:

said...

நான் குண்டா? ஒல்லியா?

தெரியலேயேப்பா

said...

எழுத்தாளர் அனுராதா சொல்ற மாதிரி
கொஞ்சம் ""பூசினாப்ல"" ஆயிட்டோமேன்னு வருத்தப்பட்டு கிட்டு இருக்கேன்.

இப்ப தீவிரமா இறங்கி பழைய மாதிரி ஆயிடனும்னு முடிவே செஞ்சுட்டேன்.