குடிப்பது ”சுகமே”! - தினமணியிலிருந்து..


பயணங்களின் போதும், வெளியிடங்களில் தங்கும்போதும் மினரல் வாட்டர் அல்லது பேக்கேஜ்ட் வாட்டரைப் பயன்படுத்தும் கலாசாரம் சுகாதார விரும்பிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

மக்களின் உடல்நலனைக் குறிவைத்து இன்று ஏராளமான நிறுவனங்கள் மினரல் வாட்டர் தயாரிப்பில் இறங்கி லாபம் சம்பாதித்து வருகின்றன. இதில், முழுக்க முழுக்க மகளிரே தயாரிக்கும் "சுகம்' பேக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர், தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுமைக்குமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்குட்பட்ட ஊமப்பாளையத்தில் தயாராகிறது "சுகம்' பேக்கேஜ்ட் குடிநீர். மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 48 மகளிர் (4 குழுக்களாக) இத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.

ஓடந்துறை ஊராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு வரும் பவானி ஆற்று நீரிலிருந்து "சுகம்' தயாராகிறது!.

2006-ல் மகளிர் சுய உதவிக் குழுவால் துவக்கப் பட்ட "ஓடந்துறை பேக்கேஜ்ட் டிரிங்கிங் வாட்டர்' தொழிற்சாலைக்கு, ரூ.15 லட்சம் வங்கிக் கடன் கிடைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். எந்தவிதப் பின்புலமும் இல்லாத பெண்களின் உழைப்பின் மீது வங்கி வைத்த அசாத்திய நம்பிக்கையின் அடையாளம் இது. வங்கிக் கடனைத் தவறாமல் திருப்பிச் செலுத்தி, மாதத்துக்கு ஒவ்வொரு மகளிரும் தலா ரூ.2000 வீதம் சம்பாதித்து வருகின்றனர்.

குடிநீர் தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள், சுத்தம், சுகாதாரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கையுறை, வாயுறை அணிந்தே தொழிற் சாலைக்குள் நுழைகின்றனர்.

""எங்கள் தயாரிப்பை அதிகப்படுத்தி, மார்க்கெட்டிங்கிற்கென்று தனியாக ஒரு பிரிவைத் துவக்கத் திட்டமிட்டுள்ளோம். பெரிய கம்பெனிகளுக்கு நேரடியாக நாங்களே விற்பனை செய்யும் எண்ண முள்ளது. தினசரி 18,000 லிட்டர் வரை "சுகம்' குடிநீர் தயாரிக்கும் திறன் கொண்டது இத்தொழிற் சாலை. கடன்கள் முழுவதும் அடைந்தபிறகு, கூடுதல் தயாரிப்பில் கவனம் செலுத்துவோம்'' என்று வருங்காலத் திட்டங்களை விவரிக்கின்றனர் பிர மோதினியும், யசோதாவும்.

நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலிருந்தெல்லாம்கூட உயர் அதிகாரிகள் இங்கு வந்து இத்தொழிற்சாலையை பார்வையிட்டுச் செல்கின்றனர். இதுவே "சுகம்' குடிநீரின் 100 சத வெற்றிக்குக் கிடைத்திருக்கும் "ஐஎஸ்ஐ' அடையாளம்!.

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நான் தினமும் பேப்பர் படிக்கிற பழக்கத்தையே விட்டுட்டேன். கடகம் படிச்சாலே எல்லா விஷயமும் தெரிஞ்சிடுது. நன்றி ஆயில்ஸ்.

said...

///குடிப்பது ”சுகமே”! - ///


நல்லா வைக்கிறாங்க தலைப்பு. நல்லா இருங்கப்பு.

said...

மகளிர் சுய உதவிக்குழுக்கள் எல்லா துறைகளிலும் நுழைந்து கலக்குறாங்கப்பா.

said...

சுகாதாரமுறையில் கிடைத்தால் இது போன்ற அடைக்கப்பட்ட தண்ணீர் நல்ல வியாபாரத்தைப் பெறும்... நல்ல முயற்சி.... :)

said...

நான் தினமும் பேப்பர் படிக்கிறதே இல்லை. கடகம் ஓப்பன் பண்ணி பாத்தா எல்லா விசயமும் தெரிஞ்சிடுது.

said...

/
"குடிப்பது ”சுகமே”! -
/

நல்லா வைக்கிறாங்கய்யா தலைப்பு

said...

நல்லா இருங்கப்பு

said...

தலைப்பு சூப்பர்!!!

said...

//மங்களூர் சிவா said...
நான் தினமும் பேப்பர் படிக்கிறதே இல்லை. கடகம் ஓப்பன் பண்ணி பாத்தா எல்லா விசயமும் தெரிஞ்சிடுது.
//

ஏம்ம்ப்பா ஒண்ணும் உள்குத்து இல்லையே???? :))