ஐயோ! ஐயோ! ஐயய்யோ.. !?

இந்த சொற்களை பெரும்பாலும் அதிகம் யாரும் பயன்படுத்த வீட்டில் எப்போதுமே தடை இருக்கும்! இந்த சொற்களை பயன்படுத்துதல் என்பது அமங்கலமான விஷயமாகவும் கருதப்படும் இது எல்லா வீடுகளிலுமே சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் கடுமையான ரூல்ஸ்!

கெட்ட பழக்கம் என்ற லிஸ்டில் இருக்கும் இந்த சொல்லை, அதிலும், ஐயோவினை சரியாக 23 முறையும், ஐயய்யோவினை சரியாக 26 முறையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடலில் ஏனோ துக்கத்தையும் துயரத்தையும் விட அதிக மகிழ்ச்சியும் அதிக உற்சாகமும் ஆட்டம் போடவைக்கும் அளவுக்கு வருவது ஏனோ என்று தெரியவில்லை?!

நீங்களும் கண்டு கேட்டுத்தான் பாருங்களேன்:-)



பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

பெண்:-: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஆண்:-: காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

பெண்:-: குங்கும வாசனைகள் ஹைய்யோ சந்தன வாசனைகள் ஐய்யோ என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ

ஆண்:-: கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ

பெண்:-: கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ

ஆண்:-: காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ

பெண்:-: காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஹய்யையோ

ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா

பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நே இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ

பெண்:-: ஐயோ

ஆண்:-: ஐயோ

பெண்:-: ஐயோ

ஆண்:-: உன் கண்கள் ஐயய்யோ

பெண்:-: ஹையோ

ஆண்:-: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஆண்:-: நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ

பெண்:-: நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹையோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

ஆண்:-: கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ

பெண்:-: குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

ஆண்:-: கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ

பெண்:-: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அருசுவை கூடுது ஐயய்யோ

ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா

பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: லல லல...

பெண்:-: தன நன...








நான் சொன்னது கரெக்ட்தானே ?

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஐயோ ஐயோ என்ன கொடுமை இது?

said...

ஐயோ! ஐயோ!!!
(வைகைப்புயலின் பாணியில் படிக்கவும்!!!)

said...

இந்த பதிவு ஆகாரத்துக்கு முன்பா இல்லை பின்பா!!!

(தினம் 6 பதிவு போடும் வலையுல புலி கத்தார் சிங்கம் அதிரடியாய் உங்கள் ஊரில் தோன்றுவார்)

said...

ஸ்ரேயா கோசலை மறந்து நான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படி கெட்டு குட்டிசுவாராய் போய்விட்டாயே தம்பி!!!:(((

said...

என்ன கொடுமை இதெல்லாம்..... இப்படியும் ஆராய்ச்சியா?..

said...

//குசும்பன் said...

ஸ்ரேயா கோசலை மறந்து நான் ஊரில் இல்லாத நேரத்தில் இப்படி கெட்டு குட்டிசுவாராய் போய்விட்டாயே தம்பி!!!:((( ///
இந்த வார ஞாயிறு ஸ்ரேயா கோசல் ஸ்பெசல் பதிவு போடாத கிளைகளைக் கண்டிக்கிறோம்.
சவுதி கிளை

said...

குசும்பா இன்னிக்கு இது ரெண்டாவது பதிவு, அதாவது மதியம் சாப்பாடு முடிஞ்சுதுன்னு அர்த்தம். ராத்திரிக்கு இன்னும் ஒண்ணு இருக்கு:-))

said...

அது ஐயோ ஐயோ ஐயய்யோ இல்லை
hiயோ hiயோ hihiயோ
:-)