ஒவ்வொரு முறை எங்கள் ஊரின் பெரிய கோவில்லுக்கு செல்கையில் கண்டிப்பாய் காண்பது கோவில் யானையைத்தான்!
ஏனோ பார்க்கும்போது பரிதாபமாகத்தான் தோன்றினாலும், பிரும்மாண்டம் நோக்குகையில் ஒரு பெரிய கெளரவமாகத்தான் இருக்கும், நம்மூரிலும் யானை இருக்கிறது என்று! (ஆனா பாருங்க வருஷா வருஷம் ஓய்வுக்குன்னு சொல்லி அழைச்சிட்டு போகும்போதுதான் நம்ம கண்ணுலயும் ,யானை கண்ணுலயும் கண்ணீர் வரும்...!)
கிட்டதட்ட வாழ்ந்துக்கொண்டே, வளர்ந்துகொண்டிருக்கும் எனக்கு இரண்டு ( கடைசி நேரத்தில ரெண்டு போட்டிக்கு அப்ளிக்கபிள் ஆகுமா??) கழுத வயதாகிவிட்டது ஆனாலும், யானைகள் பெரியதாக வளர்ந்து முதிய வயதாக போனால் என்னவாகும்? எங்கு இருக்கும்? என்றெல்லாம் அறியாத தெரிந்துக்கொள்ள நினைக்காத மனம்!
நம்மூரில் அவ்வளவாக யானைகள் இல்லாததால் யாருக்கும் இது சம்பந்தமாக எதுவும் நினைவுக்கு வருவதில்லை அல்லது பெரும்பாலும் தன் முதிய வயதிலும் கோவில் கோவிலாய் திரிந்து கடைத்தெருக்களில் காசுகள் வாங்கி மணமக்களை வாழ்த்தி எந்தவொரு ஒய்வுமின்றியே தன் நிரந்த ஒய்வுக்கு செல்கிறது!
ஆனால் கேரளாவிலே நிறைய பேர் வீட்டு செல்லமாக வளர்க்கிறார்கள். அவர்கள் யோசிக்கிறார்கள் அல்லது அங்கு இருக்கும் விலங்குகள் பாதுகாப்பாளர்களும் யோசிக்கிறார்கள்!
பெரும்பாலான யானை உரிமையாளர்கள் யானை முதிய வயதினை அடைந்ததும் கூடுமானவரை அதற்கான பராமரிப்புகளில் சிறிதளவு ஆர்வத்தை குறைத்துக்கொள்ள, கொள்ள கடைசியில் உடல் நலமின்மையால் கொல்லப்படுகின்றன யானைகள் என்பது அவ்வளவாக வெளியில் தெரிந்திராத சோகமான செய்தியாம்!
மாதச்செலவுகள் என்பது பெருந்தொகையாக, அதனுடன் அரசின் குறைந்த மானியம், இவைகளை கொண்டு யானைகளின் வயதான காலத்து தேவைகளை சமாளிக்க பெரும்பாலான உரிமையாளார்கள் விரும்புவதில்லை..!
பெரும்பாலான வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று வனவிலங்குகள் பாதுகாப்பு வாரியம் முதன்முதலாக கேரளாவில் யானைகள் ஓய்வு இல்லம் ஒன்றினை திறக்கப்போகிறது! எனபது ஒய்வுவெடுக்கும் வயதில் இருக்கும் யானைகளுக்கும், அதை வைத்து கஷ்டப்பட்டு,கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்திதான்!
இனி இங்கு செல்லும் வயதும் வாழ்வும் முதிர்ந்த யானைகளுக்கு இது செல்லகூடமாக செல்லங்களின் கூட்டமாக வாழும் வகையில் சுமார் 1000 ஏக்கர் காட்டுப்பகுதியில் ஒரு பிரத்யோக இடத்தினை நிர்ணயிக்கப்போகிறார்களாம்!
ரிடையர்மெண்ட் யானைகள் மட்டுமின்றி அவ்வப்போது வந்து தங்கி தங்களை ரிலாக்ஸ் செய்துக்கொள்ளவும் பிற யானைகளுக்கு வசதி செய்யப்போகிறார்களாம்!
எது எப்படியோ..? இயற்கையின் படைப்பினில் இனிய வாழ்வினை அதுவும் ஓய்வுக்காலத்தில் அனைவருமே பெறுவதுதானே நல்ல சிந்தனை!
யானை :-)
# ஆயில்யன்
Labels: விலங்கு
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் கமெண்டிட்டாங்க:
எனக்குப் பிடித்தமான முதல் இடத்தில் இருக்கும் விலங்கு யானை. அழகன் படத்தில் வாண்டுகள் சொல்வது போல் பேசாம நடிகர் ஜெயராம் வீட்டிலேயே நாம பிறந்திருக்கலாம். (அவர் யானை வளர்க்கிறார்).
யானை என்ற் அற்புதமான நாவலை நம்மூர் எழுத்தாளர் செங்கை ஆழியான் எழுதியிருக்கிறார்.
நல்ல சேதி!
கானா அண்ணாவுக்கு பிடிச்ச மாதிரி எனக்கும் பிடிச்ச விலங்கு யானை தான். பதிவுக்கு நன்றி ஆயில்ஸ்.
Post a Comment