ILA - இளா 2008

ஒவ்வொரு முறையும் இவரின் நிகழ்வுகள்!
எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
நீண்ட காலமாக இவரின் செயல்பாடுகள் நம் பாரம்பரியத்தையும் சுட்டிகாட்டும் விதமாகவே இருந்துவந்துள்ளது!

சில காலங்கள் இயங்க முடியாத சூழல் இருந்தும் கூட, பெரும்பாலோனரின் முயற்சியில் மீண்டும் ஆட தொடங்கிவிட்டார்கள்!

சாரங்க் (மயிலாக மாறியவள்)


மயில் தோகை விரித்து ஆடும் இயந்திரபறவைகளாய் நம் இந்திய ஹெலிகாப்டர்கள் பறந்து ஆடிக்கொண்டிருக்கும் பெர்லின் நகரம்!

ஜெர்மனியின் பெர்லினில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விமான கண்காட்சியில் உலகில் சுமார் 37 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட விமானங்களின்,அணிவகுப்புகளுடன் தொடங்கி,போய்க்கொண்டிருக்கிறது!

உயர்ந்துக்கொண்டே இருக்கும் பெட்ரோலிய பொருடகளின் விலைகள் அதற்கேற்றார்போல மாற்றி அமைக்கவேண்டிய சூழலில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதுவே இந்த கண்காட்சியின் முக்கியமானதொரு அம்சமாக எதிர்பார்க்கப்படுகிறது!


புதிய ரக விமானங்களின் அறிமுகங்களும் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இந்த கண்காட்சியில் பல நாடுகளின் கொள்முதல் ஆர்வத்தை தூண்டு விதமாக புதிய வடிவமைப்பில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு சாம்பிள்தான் இந்த நியோ (குட்டியூண்டு ஹெலிகாப்டருங்க அனேகமா,கார் மக்களின் அடுத்த ஆர்வமிக்க பொருளாக மாறக்கூடும்!)

விமானங்களில் திங்கிறதுக்கு சோறும் குடிக்கிறதுக்கு கொடுக்கப்படும் தண்ணியும் வைக்க பயன்படுத்தப்படும் கண்டெய்னர்களுக்கு செலவிடப்படும் இடமும், மின் வசதியையும் குறைக்கும் நோக்கத்தில் பாக்கெட்வடிவில் கூல் ஆக்வும் ஹாட்டகவும் அதே சமயத்தில் குறைந்த இடவசதியோடும் இருக்கும் வகையிலான பேக்குகளும் கூட இந்த கண்காட்சியின் ஸ்பெஷல் ஐட்டங்களாம்!

ரொம்ப தூரம் நீண்ண்ட நேரம் பயணிப்பவர்களின் வசதிக்காக அதுவும் எகனாமிக் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அரெஸ்ட் ஆகி இருக்கும் நிலைமையை விடுவித்து, அங்க இங்க அலையறதுகும், அப்பப்ப உடம்பை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி சாதனங்களை நிரப்பப்போகிறார்களாம் அதுவும் கூட இந்த கண்காட்சியின் இன்னுமொரு ஸ்பெஷல்!





இன்னும் கூட நிறைய ஸ்பெஷல்கள் 1ண்ணு 1ணா வெளியே வரும் இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல :-)

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எலிவண்டிப் பதிவு நன்று, தலைப்பில் ஏன் விவசாயி பேர்?

said...

//கானா பிரபா said...
எலிவண்டிப் பதிவு நன்று, தலைப்பில் ஏன் விவசாயி பேர்?
//
அந்த விமானங்களின் திருக்கூட்ட நிகழ்வுக்கு பேரே அதானாம் ILA - 2008

(அத சொல்லலையா ஆயில்யா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

said...

நான் கூட எதோ ஹெலிகாப்டர் வச்சி விவசாயம் பண்ண போறாங்களோன்னு நினைச்சி படிக்க ஆரம்பிச்சேன்.

said...

ஆஹா.... அம்புட்டுதானே மேட்டரு. ஷ் ஷ்

said...

//ஒவ்வொரு முறையும் இவரின் நிகழ்வுகள்!
எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
நீண்ட காலமாக இவரின் செயல்பாடுகள் நம் பாரம்பரியத்தையும் சுட்டிகாட்டும் விதமாகவே இருந்துவந்துள்ளது!//
ithai padichavudane kanna kattiruchu. appuram .... sariyaathaan solli irukeenga :)

said...

அங்கே படுத்திருக்கிறவர்தான் இளாவா?

said...

//ILA said...
//ஒவ்வொரு முறையும் இவரின் நிகழ்வுகள்!
எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
நீண்ட காலமாக இவரின் செயல்பாடுகள் நம் பாரம்பரியத்தையும் சுட்டிகாட்டும் விதமாகவே இருந்துவந்துள்ளது!//
ithai padichavudane kanna kattiruchu. appuram .... sariyaathaan solli irukeenga :)
///

அவ்ளோதானா?????????

said...

//ச்சின்னப் பையன் said...
அங்கே படுத்திருக்கிறவர்தான் இளாவா?
//

நான் இளாவை பார்த்தது கிடையாதுங்கண்ணா!

ஒரு வேளை இருக்கலாம் :)))