பெட்ரோமாக்ஸ் லைட்!

கண்டுபிடிக்கப்பட்டது ஜெர்மனியில் இருந்தாலும், இந்தியாவில் ஒளிராத இடம் கொஞ்சம் தான் இருக்கும்போல அந்தளவுக்கு ரொம்ப பிரபலமானது

கோவில் திருவிழாக்கள்
கல்யாண ஊர்வலம்
முக்கிய விசேஷங்கள்
துக்க காரியங்கள்
என அனைத்து விழாக்களில்லும் கட்டாயம் முன்கூட்டியே புக் செய்து வைக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்!

என்னதான் கவர்ன்மெண்ட் கரெண்ட் இருந்தாலும் எப்பபோகும் எப்ப வரும்ணு அந்த ஆண்டவனுக்கும் மட்டும்தானே தெரியும்?!

கோவில்களில் திருவிழா சமயங்களிலும் சாமி புறப்பாடு நடக்கும்போது முன்புறம் நான்கு பேர்களும் பின்புறம் இருவருமாக லைட்டிங்க் செக்யூரிட் கொடுத்தப்படியே வருவதை இன்றும் கூட நீங்கள் பார்க்கலாம்!

கல்யாணத்தில் மாப்பிள்ளை ஊர்வலங்களில்லும் இதே ஸ்டைல் செக்யூரிட்டி கிடைக்கும் மாப்பிள்ளைக்கு! ( நிறைய இடத்துல பெரிய சண்டையாக கூட மாறும்! ஏன் நீங்க பெட்ரோமாக்ஸ் லைட் வைச்சு அழைச்சு வர்லை ஊர்வலத்துலன்னு!>))

மாறிவரும் உலகில் இது போன்ற பொருட்களை கையாள்வதில் கிஞ்சித்தும் பொறுமை இல்லாத காரணங்களால் விட்டொழிக்கப்பட்டு ஃப்ளோரசண்ட் பேட்டரி விளக்குகளுக்கு மாறிவிட்டனர் பெரும்பாலன மக்கள்!

அது மட்டுமல்லாமல் விலையினை ஒப்பீட்டு பார்க்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ய்க்கு சுமாராக 4 மணி நேரம் மட்டுமே எரியும் திறன்கொண்ட இந்த விளக்குகளை,மண் எண்ணெயின்ன விலை அதிகரிப்பில் பலருக்கும் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் கூடுதல் சுமையாக மாற அவர்களும் மாறிக்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது,இது மட்டுமல்லாமல் செந்தில் பிடித்து அமுக்கும் அதே அந்த மாண்டிலினை கூட அதிகம் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் கூட!

இன்னமும் கூட தாம் மாறாமல் விளக்கினை கேஸ் கொண்டு எரிக்கும் முறைக்கு மாறிவிட்ட பலரும் உண்டு ஆனாலும் அதுவும் கூட இன்னும் சில காலங்களுக்கு மட்டும்தான் நீடித்திருக்கும்!

சாலையோர கடைகளில், காய்கறி கடைகளில் என இன்னும் கூட இது போன்ற சில இடங்களில் பழமை மாறாமல் வெற்றிகரமாக ஒளித்துக்கொண்டிருக்கும் இந்த பெட்ரோமாக்ஸ்! (கொஞ்சம் அதிக வெப்பம்தான் உமிழப்படுகின்றது :()

நான் அதிகம் இது போன்ற விளக்குகளுடன் பழக்கப்பட்டது தருமபுரத்தில் நடக்கும் ஆதீனத்து விழாக்களில்தான் நடுநிசிகளில் புறப்பாடுகளில் கூடவே வரும் சுமார் 10 பெட்ரோமாக்ஸ் லைட்களின் வெளிச்சத்தில் சாமி தரிசனம்!

மிகுந்த வெளிச்சத்துடன், வெப்பம் + எண்ணெய்யின் வாசத்தோடு வெளிவரும் அந்த புகை உடம்புக்கு நல்லதோ அல்லது கெட்டதோ என்னவாக இருந்தாலும் ஏனோ அந்த வாசத்தை ரசித்துப்பார்க்க இப்போதும் ஏங்குகிறது மனம்!

பெட்ரோமாக்ஸ் லைட்கள், ஆண்டுகள் பல வந்தாலும்,லைட் பற்றிய செய்திகளை நாம் மறந்தே போனாலும் கூட மாறாத விஷயமாய் இருப்பது,இருக்கப்போவது இந்த படத்து காமெடி காட்சிதான் என்று சொன்னால் 100% உண்மைதானே!





3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பெட்ரோமாக்ஸ் என்றதுமே நினைவுக்கு வருவது இந்தக் காமெடி தானே!!

கவுண்டர் ஜோக் பாத்து எத்தனை நாளாச்சு.

சூப்பர் காமெடி, சூப்பர் தகவல்.

said...

எங்க ஊர்பக்கம் இன்னமும் புழக்கத்துல இருக்கு. காமடி கலக்கல். எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பு தாங்கலப்பா.

said...

ம்.. கடைசில கவுண்டர் ஜோக்கை போட்டு மேட்டரையே திசை திருப்பிட்டீங்க.