ரொம்ப சந்தோஷமா இருக்குங்க:-)
மாதங்கள் போனதே தெரியலை!? ஆனாலும் உள்ளுக்குள் என்னைக்கிடா நம்ம வேல்யூ அதிகமாகும் இங்கன்னு எப்பவுமே ஒரு ஆர்வம்தான், இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்துக்கிட்டே வருது!
இப்படியே போனா நல்லாத்தான் இருக்கும்! ஆனா பாருங்க இந்த மாதிரி போனா ஊர்ல கஷ்டமாப்போயிடும் சொல்றாங்க!
நான் என்னங்கப்பண்றது! இது என்ன நம்ம கண்ட்ரோல்லயா இருக்கு ?
எப்படின்னே தெரியல திடீருன்னு 1 அப்புறம் 2 சில சமயம் ஒரே நாள்ல் 3ன்னு எகிறுது !
இதெல்லாம் எதுக்காக நடக்குது எதை அடிப்படையா வைச்சு நடந்துக்கிட்டிருக்குன்னு ஒரு எளவும் புரியாட்டியும் கூட, இப்ப கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு!
ஒண்ணுமே புரியல! என்ன நடக்குது இங்கன்னு, கேட்கறவங்களுக்கு மறுபடியும் என் சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறேன்!
ஒரு ஸ்டெப் கீழ வாங்க!
இன்னிக்கு என்னோட மதிப்புல ஒரு ரியால் = 11.75 ரூபாய்கள்
இதே ஒரு ரியால் சில வாரங்களுக்கு முன்பு =10.81 ரூபாய்கள்
இதே போல துபாயிலும் இன்றைய மதிப்பில் ஒரு திர்ஹாம் = 11.48
இதே ஒரு திர்ஹாம் சில வாரங்களுக்கு முன்பு = 10.60
கடந்த இரு வாரங்களாக ரியாலின் மதிப்பிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது! (எது எப்படின்னாலும் நமக்கு நஷ்டம்தான் சொல்றாங்க அது எப்படின்னுத்தான் புரிய மாட்டிக்குது?)
கடந்த இரு வாரங்களாக ரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்கும் வேலையில் நிறையே பேர் வீட்டிற்கு சேர்த்து வைத்த பணங்களை டிரான்ஸ்பர் செய்து கொண்டிருக்கிறார்களாம்! ( சில பலே ஆளுங்க கடன் வாங்கி அனுப்பிவைக்கிறாங்கங்க!?)
இது சில காலமோ! சில வாரமோ! ஆனாலும், நாமும் சந்தோஷமா இருப்போம் மத்தவங்களையும் சந்தோஷமா இருக்க வைப்போம்!
எனக்கு வேல்யூ கூடுது :-)
Subscribe to:
Post Comments (Atom)
10 பேர் கமெண்டிட்டாங்க:
க்கும் , நம்ம ஆஸ்திரேலியன் டாலரோட போட்டி போட வாறீங்களா?
இங்கேயும் ரியாலின் மதிப்பு கூடுகின்றது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பிரச்சினைகளால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டமாயிடுச்சு. இனியாவது இப்படியே நீடிக்கட்டும்.
நான் ஆயில்யன் வேல்யூவோன்னு பாத்தேன்..
பணம் வேல்யூவா.. :)
என்னமோ ஏதோன்னு ஓடிவந்தேன். :)
//புதுகைத் தென்றல் said...
என்னமோ ஏதோன்னு ஓடிவந்தேன். :)///
நானும் தான்.
எங்க சிங்கப்பூர் ல யும் தான் இன்னைக்கு 31.5 :-)
உங்க வேல்யு கூடிட்டுச்சு-ன்னு எதோ படிக்க வந்தா.. நல்லா கிளப்புறீங்கப்பு பீதிய!
நானும் ஆயில்தனுக்குத்தான் வேல்யூஅதிகமாயிடுச்சோன்னு நினைச்சா...
உங்களுக்கு கொழுப்புதான்யா அதிகமாயிடுச்சு...
//சில பலே ஆளுங்க கடன் வாங்கி அனுப்பிவைக்கிறாங்கங்க!?)
//
:-))))))))))))))
பயந்திட்டேன்.... :P
Post a Comment