விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்காக காரியாபட்டியில் ஒரு வளாக நேர்காணல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், பள்ளிக்கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு. சென்னையை மையமாகக் கொண்ட ஐம்பதுக்கும் அதிகமான நிறுவனங்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் இந்த நேர்காணல் தேர்வில் பங்கெடுக்கின்றனர். இதன் மூலம் பல படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர்.
இதைப் பின்பற்றி, இன்னும் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் இதுபோன்ற நேர்காணல்களை நடத்த முற்படுவார்கள் என்பது மட்டுமல்ல, பல்வேறு தொழில் நிறுவனங்களும் கிராமப்புறத் திறமைகளை அடையாளம் கண்டு வேலைவாய்ப்பு அளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் இந்த நேர்காணல் ஏற்படுத்தித் தரும் என்று நம்பலாம்.
நன்றி - தினமணி
மேலும் இவர்தம் சாதனைகளுள் சிலவாக,
பாடப்புத்தகங்கள் சிறப்பாக வடிவமைத்து அதை இணையத்தளங்களில் காணச்செய்தது!
எல்லோருக்கும் அடிப்படை கல்வி தேவையின் நலன் கருதி ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தலில் கொடுத்த முக்கியத்துவம்!
வெகுவிரைவிலேயே, அமல்படுத்தபடப்போகும் ஒவ்வொரு 5 கி.மீ சுற்றளவிலும் ஒரு பள்ளி அமைந்திருக்கவேண்டும்! என்றதொரு திட்ட முடிவு! கண்டிப்பாக கிராம புற மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சமாக இருக்ககூடும்!கிராமப்புறங்களில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் பெண் மாணவிக்களுக்கு நிச்சயம் நல்ல விஷயம்தான் இது!
தொடரட்டும் இவர்தம் சாதனைகள்!
தொடரட்டும் இவர்தம் எண்ணங்களை செயலாக்கும் அரசுத்துறையினரின் ஒத்துழைப்பு !
வாழ்த்துக்கள் அமைச்சரே! - தங்கம் தென்னரசு
# ஆயில்யன்
Labels: தமிழ் நாடு
Subscribe to:
Post Comments (Atom)
5 பேர் கமெண்டிட்டாங்க:
இப்போதிருக்கும் அமைச்சரவையில் நல்ல செயல்திறம் கொண்டவர்.நல்ல நோக்கங்களுக்காக விரைந்து ஒப்புதல் கொடுத்து பணியை விரைந்து முடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
என்னுடைய வாழ்த்துக்களும் அவருக்கு உரித்தாகட்டும்! சமச்சீர் கல்வித் திட்டத்திலும் இவரின் பங்கு போற்றத்தக்கது.
சீட்டை மட்டும் தேய்க்கும் அமைச்சராக இல்லாமல் பல நேரங்களில் களப்பணிகளில் காணக் கூடிய அமைச்சர்களில் ஒருவர். பணி தொடர வாழ்த்துக்கள்.
நல்ல பணி.
பலரும் பயனடைய வேண்டும்.
என்னுடைய வாழ்த்துக்களும் அவருக்கு உரித்தாகட்டும்
Post a Comment