பிறந்த நாள் - ரீவைண்ட ஆகும் மனசு!

ஒவ்வொருவரின் பிறந்த நாளுமே அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்! மற்றவர்கள் மகிழ்ச்சியினை வாழ்த்துக்களாய் கொடுக்கவேண்டிய நாள்!

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அதிகாலையிலேயே எழுந்து, ஆண்டவனை தொழுது, புத்தாடைகள் அணிந்து பெற்றோரை வணங்கி வாழ்த்துப்பெற்று, அக்கம்பக்கத்து வீட்டார்களிலிருந்து, பள்ளிக்கூடம் வரையிலாக பலருக்கும் மனம் மகிழ ஆசை ஆசையாக இனிப்புகளை தந்து மகிழ்ந்த நாட்களை நினைக்க தோன்றுகிறது!

இது நாள் வரையிலான எனது பழக்கத்தின்படி,கண்டிப்பாய் ஒவ்வொரு மாதமும் வரும் நண்பர்களின் பிறந்த நாட்களின் போது, அதிகாலையிலேயே எழுந்து போன் செய்து, போன் செய்யும்போதே முதலில் ஹலோ சொல்வதா? அல்லது பிறந்தநாள் வாழ்த்துசொல்வதா? எனத்திக்கி திணறி கடைசியில் இரண்டும் கலந்த ஹாப்பி ஹலோ பர்த்டே! என்று சொல்லுகையில் பரபரத்து மகிழும் மனது!

வாய்ப்புகள் வாய்த்த காலங்களில் நேரில் சந்தித்து, புத்தகங்கள் பரிசளித்து பதில் மரியாதையாக ஏதேனும் இனிப்புகளாகவோ அல்லது உணவகங்களிலோ நட்புகளுடன் இணைந்த மகிழ்ச்சியான உணவுப்பரிமாற்றங்களில் மனம் நிம்மதி பெற்றிருந்த காலம்!

சில பல ஆண்டுகளாய் இன்னும் அந்த முதல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பரபரக்கும் மனதுடனேயே வாழ்த்துக்களும் என் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது!

ஒவ்வொரு முறையும் எனது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் சொல்ல மறந்து தவறவிட்டு மீண்டும் நண்பர்கள் தாமதமாக சொல்லும்ப்போதும் கூட ஏனோ எனக்கு மனதில் பெரும் மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கிறது! நானா இருந்தா காலையிலேயே சொல்லியிருப்பேன்ப்பா! ?

வலைபக்கம் வந்து அதிலேயே உண்டு உறங்கி பின் விழித்தெழ ஆரம்பித்துவிட்ட பிறகு பிறந்த நாள் வாழ்த்து பதிவுகள் வந்தாலும் சரி சுவரொட்டினாலும் சரி ஓடிச்சென்று அட்டெண்டன்ஸ் போட மட்டும் ஆசை இன்னும் சிறகடித்து பறந்துக்கொண்டுதான் இருக்கிறது!

இன்று இனிய பிறந்த நாளை கொண்டாடுவது எம் கும்மி குடும்பத்து குழந்தைகள் அபி பாப்பா மற்றும் நிலா பாப்பா!


பறந்தோடி சென்றேன் பிறந்த நாள் வாழ்த்தி விட்டேன் நீங்களும் இங்கு சென்று வாழ்த்திவிட்டு வாருங்களேன்!

குறிப்பு:-

நண்பர்கள் எல்லாருக்கும் நிறைய ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சிருக்காராம் நம்ம அபி அப்பா & நிலா அப்பா ( அப்பான்னாலே இப்படித்தான் மகள்களின் பிறந்த நாளில் ரொம்ப மகிழ்ச்சியாக இனிப்பு கொடுப்பார்கள் போல! ) அதனால அவங்கவங்க அட்ரஸ் கொடுத்தீங்கன்னா பார்சல் அனுப்பி வைப்பார்கள் என்பதை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

இதுதான் ஸ்வீட் உங்களுக்காக பிரத்யோக சாம்பிள்:-)

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அபி பாப்பா மற்றும் நிலா பாப்பாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.ஆயில் உங்க பிறந்தநாள் எப்போ?

said...

அபி பாப்பா,சமத்துக்குட்டி.
நீ ரொம்ப நல்லா இருக்கணும். நிறைய புத்திசாலியான நீ அம்மாவுக்குத் தோழியாஅ இருந்து நட்டுவோடயும் அப்பாவோடயும் மகிழ்ச்சியாக இருக்க அந்த அபிராமியையெ வேண்டுகிறேன்.
நிலா பாப்பா உனக்கு இது முதல் பிறந்தநாளா. பாட்டியின் செல்ல முத்தங்கள்.& வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கள் அபிபாப்பா&நிலாச்செல்லம்.

ஆயில் மாம்ஸ் கேக் சைஸ் ரொம்ப சின்னதா இருக்கே:)))))) நீங்க ஊழல் பண்ணிப்புட்டிங்களோ?:P :)))

Anonymous said...

நிலா குட்டிக்கும், அபிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

வளைகுடாவிற்கு பார்சல் அனுப்பும் பொறுப்பு தங்களிடம் தரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது... சீக்கிரம் அனுப்பினால் தேவலை... இல்லையெனில்.... சொல்ல மாட்டோம்... செய்வோம்.. :)))

said...

///தமிழ் பிரியன் said...
வளைகுடாவிற்கு பார்சல் அனுப்பும் பொறுப்பு தங்களிடம் தரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது... சீக்கிரம் அனுப்பினால் தேவலை... இல்லையெனில்.... சொல்ல மாட்டோம்... செய்வோம்.. :)//

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

நானும்....

நீங்களும்....:)))