பீடி- இது எப்படி இருக்கு?


அப்படிப்பட்ட விஷயம்:-

இந்தியாவில் தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் சுமார் 53 சதவிகிதம் பேர் பீடி பழக்கம் உள்ள மக்கள் அதாகப்பட்டது நடுத்தரத்திலிருந்து வறுமைகோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் இருக்கும் இவர்கள்தான் எப்பாடுபட்டாவது புகைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகம் புழக்கத்தில் விடும் புகை பீடியால் மட்டுமே! கிட்டதட்ட ௮00 மில்லியன் பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறதாம் வருடம்தோறும்!

சிறுவயதிலேயே சிக்கென பிடித்தேன் பீடியை என்று பிடித்துக்கொள்ளும் இந்த பழக்கம், ஆர்வத்தின் அடிப்படையில் உண்டாகிறதாம்,பிறகு விடும் புகை, பெறும் புகை என பலதரப்பட்ட புகைகளினால் அதிகம் நோய்களுக்கு ஆட்பட்டு அவதியடைந்து சரியான மருத்துவசதிகள் பெற முடியாமல் அல்லது பெற வசதி இல்லாமல் கடைசியில் இயற்கையை மீறி தம் உயிர் மூச்சினை விடும் காலத்திற்கு முன்பே தாங்களே புகையோடு புகையாக விட்டுச்செல்கின்றனர்!

மத்திய அரசு சுத்தமாக தடுக்காவிட்டாலும் கூட மண்டை ஓட்டு படங்களினை பீடிக்களில் வரைந்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாம்! (வரையறது ரொம்ப கஷ்டமான விஷயம்தான்!)


இப்படியான நிலைமை:--

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பீடி உற்பத்தி செலவு அதிகம். பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் இங்கு அதிகம்.

மத்திய அரசின் புதிய உத்தரவு பீடி உற்பத்தி செலவை மேலும் அதிகரிக்கும். இது தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.புகை பிடிக்கும் பழக்கத்தை ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது.

அதே வேளையில் மத்திய அரசின் புதிய உத்தரவு லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பீடிகளில் மண்டை ஓடு சின்னம் வைக்கும் திட்டத்தை கைவிடும்படியும் லட்சக்கணக்கான பீடி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர் காலத்தையும் காப்பாற்று மாறும் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் - கருணாநிதி..

அப்புறம் ரிசல்ட் எப்படி?

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

sudachchuda news tharum ayilanuku oru sabash.

said...

தலைகீழ் விகிதம் :) :(

said...

நல்லா இருக்கு.

said...

//புதுகைத் தென்றல் said...
sudachchuda news tharum ayilanuku oru sabash.
//

நாலு இடத்துல பாக்குற விஷயத்தை நம்ம இடத்துல பகிர்ந்துக்கிறேன் அவ்ளோதான் :))
நன்றி!

said...

//தமிழ் பிரியன் said...
தலைகீழ் விகிதம் :) :(
//

ஆமாம் அதுதான் :) அல்லது :( தெரியல!

said...

//நிஜமா நல்லவன் said...
நல்லா இருக்கு.
//

நீங்க எதை சொல்றீங்க???

:))))))))))))))))

said...

/
புதுகைத் தென்றல் said...

sudachchuda news tharum ayilanuku oru sabash.
/

உங்களுக்கு தெரியாதா நாங்கல்லாம் பேப்பர் படிக்கறதில்லை டெய்லி ஆயில் ப்ளாக் பாக்கறதோட சரி!!!!

said...

/
நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு.
/

எது நல்லா இருக்கு காஜா பீடியா , கணேசா பீடியா!?!?!?