சுமார் 68000 ஆயிரம் பேரினை பலி வாங்கிய பூமி அன்னையின் செயலால் ஸ்தம்பித்துப்போய் நிற்கும் சீனாவிற்கு - இந்த காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளையும் வேறு நடத்தியாகவேண்டும் - கொஞ்சம் சிரமாமான காலகட்டம்தான்!
இந்த நேரத்தில்தான் கேன்ஸ் படவிழாவிற்கு வந்திருந்தா ஷெரான் ஸ்டோனிடம் ஒரு கேள்வியினை கேட்டிருந்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.
ப:- சீனா பூகம்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று? ( இதுவும் வழக்கமான பத்திரிக்கைக்காரர்களின் கொலவெறி கேள்விதான். ஸ்டேன் புத்தமதத்திற்கு மாறியவர். சமீபத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவிடம் அழகாய் வணங்கி ஆசி பெறுவதை அகில உலகமே ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றுதான்!)
இந்த கேள்விக்கு,மிக்க ஆர்வத்துடன் பதிலளித்த ஸ்டோன் ” எனக்கு முதலில் சீனா திபெத்திடம் நடந்துக்கொள்ளும் முறை வெறுப்படைய செய்கிர்றது. கருணையே இல்லாத செயலாக எனக்கு தெரிகிறது! எல்லா செயல்களும் எல்லா சோகங்களும் சீனாவிற்கு நிகழ்வதற்கு காரணம் கர்மா திபெத்தியர்களுக்கு அவர்கள் செய்த பாவச்செயலுக்கு பலன்தான் என்ற ரீதியில் கூறிச்செல்ல,- நீங்களும் இங்க போய் பார்க்கலாம்!
இப்ப அந்த மேட்டர்தான் சீன பத்திரிக்கைகளின் சூடான இடுகை பகுதிக்கு போயிருக்கு!
கிழிடா போஸ்டரை, படப்பொட்டியை தூக்கிட்டு போங்கடா அதையும் மீறி படத்தை போட்டிங்கன்னா தியேட்டரை எரிப்போம், அப்படின்னுல்லாம் மக்கள் மிரட்டாம, டைரக்டா கவர்ன்மெண்ட்டே சொல்லிடுச்சு இதையெல்லாம் செய்யாதீங்கடாப்பான்னு!?
இப்படிப்பட்டதொரு கடுமையான எதிர்ப்பினை கிளப்பிய இந்த செயலில் அதிகம் பாதிக்கப்பட்டது தியார் என்னும் அலங்கார பொருட்கள் சந்தைப்படுத்தும் நிறுவனம்தானாம்! ஏகப்பட்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஸ்டோனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததால் அனைத்து பொருட்கள் + விளம்பரத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்பு வந்து இப்போதைக்கு கம்பெனி ஸ்டோனை கழட்டி விட்டுவிட்டது!
சரி! அப்படி என்ன, கர்மாவில அப்படின்னு கேட்கறவங்களுக்கு கர்மா - இந்துக்களும் சீக்கியர்களும் புத்தமதத்தினை சார்ந்தவர்களிடையே அதிக புழக்கத்தில் இருக்கும் சொல்லாகும்!
கர்மா என்பதன் பொருள் வினை அல்லது செயல் என்று கூறலாம் (சரியான்னு சொல்லுங்கப்பா!)
ஏற்கனவே செய்த செயலுக்கான பலனாகவும் இந்த கர்மா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது!
ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது பொது!
கர்மா என்பது அவரவர் வினைப்பயன்,அதாவது அவரவர் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு ஏற்றாற்போல பலன் வந்து சேரும்! நம் தமிழில் இதற்கு ஊழ் வினை என்றும் கூட பெயருண்டு!
சரி இத விட்டுதள்ளுங்க அப்புறம் பார்த்துக்கலாம் ஷெரான் ஸ்டோனுக்கு என்னாச்சுன்னு சொல்லணும்ல....
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைச்சா கெட்டதுதான் நடக்கும்ங்கற விஷயத்தை தான் அந்தம்மா சொல்லியிருக்காங்கன்னு பலர் ஸ்டோனின் கருத்துக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க, கடைசியா ஸ்டோன் சொன்னது:
நான் எதுனா தப்பா சீனா மக்களை பத்தி சொல்லியிருந்தா அதப்பத்தி கண்டுக்காதீங்க! நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!
(அப்படின்னுத்தானே சொல்லியாகணும் இல்லாங்காட்டி தியார் எவ்ளோ காசு போட்டு விளம்பரம் எடுத்து எல்லாத்தையும் பொட்டியில போட்டு பூட்டி வைக்கறதுக்கா!?)
சீனா பூகம்பமும், ஷெரான் ஸ்டோனின் ”கர்மா”வும் மற்றும் இன்ன பிற சங்கதிகளும்!
Subscribe to:
Post Comments (Atom)
8 பேர் கமெண்டிட்டாங்க:
சரவணா ஸ்டோரின் புகைப்படம் அழகாயிருக்கிறது :))
//நான் எதுனா தப்பா சீனா மக்களை பத்தி சொல்லியிருந்தா அதப்பத்தி கண்டுக்காதீங்க! நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!//
அதெல்லாம் முடியாது. கிழிடா பதிவ. போடுறா பின்னூட்டத்த :))
//சுமார் 68000 ஆயிரம் பேரினை பலி வாங்கிய பூமி அன்னையின் செயலால் ஸ்தம்பித்துப்போய் நிற்கும் சீனாவிற்கு - இந்த காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளையும் வேறு நடத்தியாகவேண்டும் - கொஞ்சம் சிரமாமான காலகட்டம்தான்!
//
வருத்தம் தரக்கூடிய விஷயம் :(
//சென்ஷி said...
சரவணா ஸ்டோரின் புகைப்படம் அழகாயிருக்கிறது :))
//
நார்மல் வயசை தாண்டி வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க போல பார்க்கற ஃபிகரெல்லாம் உங்களுக்கு லோக்கல் பிகர் மாதிரி தெரியுது
அண்ணா! உங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ண வேண்டியதுதான் போல :))
:))))
:(((
//நான் எதுனா தப்பா சீனா மக்களை பத்தி சொல்லியிருந்தா அதப்பத்தி கண்டுக்காதீங்க! நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!//
அது நானில்லை.. என்னுடைய போலின்னு சொல்லியிருக்கலாம் அம்மணி...
//இன்ன பிற சங்கதிகளும்//
எந்த சங்கதியும் சொன்னாமாதிரி தெரியலியே.. விட்டுட்டீங்களா........:-)))))))))))
//ச்சின்னப் பையன் said...
//இன்ன பிற சங்கதிகளும்//
எந்த சங்கதியும் சொன்னாமாதிரி தெரியலியே.. விட்டுட்டீங்களா........:-)))))))))))
//
ரெண்டு லிங்க் கொடுத்து இருக்கு!
ஸ்டோன் நடிச்ச வெளம்பரம் இருக்கு
வேற என்ன சங்கதி வேணும் இன்னும் !????
Post a Comment