கூர்க்கா!


நடுநிசிகளில் ஒலிக்கும் சைக்கிள் மணிகளின் சத்தத்தில் காண இயலும் இவர்களை! விசிலடித்துச்செல்கையிலேயே ஒவ்வொருவரி நிம்மதியான உறக்கத்தினூடாக தன் மாத சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு செல்லும் கூர்க்கா!

பெரும்பாலும் திரைப்படங்களில், வீடுகளின் வாயில்காப்பாளனாக வீட்டிருப்பவர்! தமிழ் திரைப்படங்களில் சேட்ஜிக்களுக்கு பிறகு இந்தி பேசியவர்கள் இவர்கள் மட்டும்தான்!

இது போன்று காட்சிப்படுத்தப்பட்ட கூர்க்காக்கள் உண்மையிலேயே வீர தீரத்துடன்,1850களிலிருந்து. ஆங்கிலேய ஆட்சியின் போதும் அதற்கு பிறகும் தற்போதும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்! கிட்டதட்ட 200 ஆண்டுகள் அயராத ராணுவ பணியில் தம் குடும்ப உறுப்பினர்களை அனுப்பி அர்ப்பணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது நேபாளம்!

சுதந்திரத்திற்கு பிறகான அண்டை நாடுகளுடனா போரில் மிகுந்த தீரத்துடன் போரிட்டதில் இவர்களுக்கு உள்ள பங்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!

இந்திய ராணுவத்தில் தற்போது 7 கூர்க்கா படைப்பிரிவுகளில் இருப்பவர்களையும் சேர்த்து சுமார் 30000 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்!

கூர்க்காக்களின் வாழ்க்கை இந்திய மண்ணில் இரு விதமாக உள்ளது ஒன்று அவர்கள் இந்திய மண்ணை நாடி வந்தவர்கள் மற்றொரு பிரிவினர் தாய் மண்ணை விட்டு வேலை தேடி இந்தியா வந்தவர்கள்! இந்திய நோபாள & பிரிட்டனின் முத்தரப்பு உடன்படிக்கையின் படி நேபாளத்து மக்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்!பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் மாவோயிஸ்ட் தலைவரின் சமீபத்திய அறிவிப்பில் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நேபாளத்து கூர்க்காக்கள் உடன் தங்களின் பணிகளை துறந்து தாய் நாட்டிற்கு திரும்பவேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளார்!

மாவோயிஸ்ட் தலைவரின் அறிவிப்பின்படி இந்தியா பாதுகாப்பு படை பிரிவில் இருந்து கூடிய விரைவில் நேபாளத்து கூர்க்காக்களின் பிரிவுகள் விலகிச்செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிக இருக்ககூடும்! இதன் மூலம் நேபாளத்தில் கண்டிப்பாக வேலை வாய்ப்பு பிரச்சனைகள் அதிகரிக்ககூடும் ஆனாலும் மாவோ தலைவர்களின் தீர்மானத்திற்கு உடன்பட வேண்டிய சூழ்நிலைதான் இப்போது கூர்க்கா படைப்பிரிவில் இருப்பவர்களுக்கு!

இந்திய அரசோ அல்லது ராணுவ அதிகாரிகளோ இது வரையிலும் இந்த பிரச்சனை சம்பந்தமாக எந்த கருத்தினையும் தெரிவிக்காமல் அமைதி காத்துவருகின்றனர்.நிலைமை மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்...!

எங்கோ எப்போதோ படித்தது!

விசில்
ஊதிக் கொண்டே செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

nalla post, kavithai kalakkal

said...

ஆமா தல, எங்க ஏரியா கூர்க்காவைப் பார்த்தா பாவமா இருக்கும்..... குடும்பத்தை விட்டு எப்படி இங்கு இருக்கிறார்கள் என்று....... இப்போது புரிகின்றது..... :))

said...

கூர்க்காக்களை பற்றிய பிரமிப்பைவிட அவர்களின் வாழ்க்கை நிலையின் பச்சாதாபமே மேலோங்கி நிற்கிறது. நல்ல பதிவு ஆயில்ஸ்.