கேரளத்து ஆபரணங்கள் :-)

வளையல்கள்
கை சங்கிலிகள்
கழுத்து சங்கிலிகள்
தோடுகள்
வளையங்கள் என

அனைத்து ஆபரணங்களையும் தங்கத்தில் செய்து அதைப்போட்டுக்கொண்டு ஊர்கோலம் வரும் எம் தமிழகத்து சகோதரிகளுக்கு, தங்கம் அணியும் தங்கமணிகளுக்கு இனி மாறிக்கொள்ளுங்கள்!

தங்கத்திலான ஆபரணங்களை தேங்காய் நார் கயிற்றில் திரித்து கலை நயத்துடன் வழங்க எம் கடவுளின் தேசத்து தேவதைகள் தயாராகிவிட்டார்கள் (படிக்கிற தமிழ்நாட்டு தங்கமணிகளின் ரங்கமணிகள் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பாங்கல்ல!)

ஜெர்மனியிலிருந்து வந்திருந்து கிட்டதட்ட 10 நாட்களுக்கும் மேலாக தங்கியிருந்து தம் ஆபரண வடிவமைப்பு - கயிற்றில் உருவாக்கும் கலையினை - கடவுளின் தேசத்து கன்னியர்களுக்கு, ஒரு இனிய புதிய தொழில்நுட்பத்தினை வித விதமாய்....! 40க்கும் மேற்பட்ட ஆபரணங்களின் வடிவமைப்பினை கற்று தந்து சென்றிருக்கிறார் திருமதி வெரீனா

கேரளா காயர் போர்டின் இந்த புதுமையான அதே சமயத்தில் அதிக செலவுகள் இல்லாத ஆபரணங்கள் உற்பத்திக்கான முயற்சிகளுக்கு சிறப்பு நிதியினை ஒதுக்கி பல சுயதொழில் ஆர்வலர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்து இப்பயிற்சி முகாமினை வெற்றிகரமாக நடத்தியுள்ளது!

ஆனாலும் உள்ளத்தின் ஒரு ஒரத்தில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது!

இதெல்லாம் நம்ம ஊர்களுக்கு சரியாக வருமா என்று?


13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அப்ப அட்சய திருதியைக்கு தேங்காய் வாங்குனாப் போதுமா?

தினசரிகளில் விளம்பரங்கள் பார்த்தீங்களா?

அடையடையாய் தங்கம் போட்டுக்கிட்டு இருக்குறாங்க மாடல்கள் எல்லாம்..........

இனிமேல் தங்கமணிகள் இப்படியெல்லாம் போட்டுக்குவாங்கன்னு ரங்குகள் கனாக் காணலாம்:-))))

said...

அடச திருதியை அன்று இந்தியாவில் விற்பனையான தங்க நகைகளில் தமிழகத்தில் மட்டும் 50 சதமாம். எங்க நம்ம ஊர் பெண்கள் கேட்கப் போறாங்க...... :(

said...

தமிழ் பெண் போட்டோவா அது?.... பாவனா மாதிரியே இருக்காங்கன்னு சொல்ல வரலை.... ஏன்னா எனக்கு சினிமா நடசத்திரங்களைப் பற்றி தெரியாது... பாருங்க... :))

said...

ஆயில்ஸ் உங்கள் பதிவுகளில் சமீப காலமாக கடவுளின் தேசத்தின் மீதான பற்று வெளிப்படையாக தெரிகிறதே. காரணம் என்னவோ?

said...

//இனிமேல் தங்கமணிகள் இப்படியெல்லாம் போட்டுக்குவாங்கன்னு ரங்குகள் கனாக் காணலாம்:-))))//


துளசியக்கா கனா மட்டும்தான் காணமுடியுமா?????

(அப்பாவி ரங்குகளின் சார்பாய்)

said...

//தமிழ் பெண் போட்டோவா அது?.... பாவனா மாதிரியே இருக்காங்கன்னு சொல்ல வரலை.... ஏன்னா எனக்கு சினிமா நடசத்திரங்களைப் பற்றி தெரியாது... பாருங்க... :))///

என்ன தமிழ் சினிமா அப்படின்னா என்னா?????

அது என் சொந்தக்கார பொண்ணு போட்டோப்பா :-))))

said...

//நிஜமா நல்லவன் said...
ஆயில்ஸ் உங்கள் பதிவுகளில் சமீப காலமாக கடவுளின் தேசத்தின் மீதான பற்று வெளிப்படையாக தெரிகிறதே. காரணம் என்னவோ?
/

குட் கொஸ்டீன்!

இறைவனை தேட தொடங்கிவிட்டேன் :)))

said...

// துளசி கோபால் said...

அப்ப அட்சய திருதியைக்கு தேங்காய் வாங்குனாப் போதுமா? //

டீச்சர் !!! :))))))))))))))

ஆயில்,
தமிழ்நாட்டில் பிகர்வளம் கம்மிதான் அதுக்காக கேரளத்தைத் தூக்கிப்பிடிப்பதை கண்(ண)டிக்கிறேன் :))))

said...

//தங்கத்திலான ஆபரணங்களை தேங்காய் நார் கயிற்றில் திரித்து கலை நயத்துடன் வழங்க //

அவ்வ்வ்வ், அப்பவும் தங்கம் தானா? நல்லா இருங்கடே! :))

said...

//அது என் சொந்தக்கார பொண்ணு போட்டோப்பா //

உங்க சித்தி பொண்ணு போட்டோனு பட்டுனு சொல்லி இருக்க வேண்டியது தானே! எதுக்கு சுத்தி வளச்சுட்டு? :p

said...

////தங்கத்திலான ஆபரணங்களை தேங்காய் நார் கயிற்றில் திரித்து கலை நயத்துடன் வழங்க //

அவ்வ்வ்வ், அப்பவும் தங்கம் தானா? நல்லா இருங்கடே! :))//

அம்பி கரெக்டா ஒரு தப்ப கண்டுபிடிச்சீட்டீஙக் அங்க ஒரு இடைச்சொருகலாய் தங்கத்திலான ஆபரணங்களை ”போன்றே” இருக்கணும் :)

said...

//ambi said...
//அது என் சொந்தக்கார பொண்ணு போட்டோப்பா //

உங்க சித்தி பொண்ணு போட்டோனு பட்டுனு சொல்லி இருக்க வேண்டியது தானே! எதுக்கு சுத்தி வளச்சுட்டு? :p
///

நான் தித்திப்புன்னு பொண்ணுன்னு பட்டுன்னு சொல்லிக்கிறேன் :)))

said...

பாவனா போட்டோ சூப்பரு:)

(தம்பி மன்னிக்க)