இன்னிக்கு வியாழக்கிழமை :-)


காலையில் கடிகாரம் எழுப்பும்போதே, தோன்றும் ஒரு இனிய உற்சாகம்!
அடுத்தடுத்து வரும் நேரம் எல்லாம், காத்திருக்கும் காலங்கள் பராக்கு பாத்திருக்கும் நேரங்களாகி ஓடிக்கொண்டிருக்க., சரியாக 12 மணிக்கு அலுவலகத்தை விட்டு விலகி பறந்தோட துடிக்கும் மனது !

சென்று நிற்கும் இடம் மலையாளத்தான் ஹோட்டலில் ”சாருக்கு ஒரு வெஜ் பாரிக்”

பருப்பு என்ற பெயரில் ஒரு வஸ்துவாக கரண்டி கைகளிலிருந்து,வந்து விழுவதை சாதத்துடன் பிசைந்து நுகருகையில், வரும் வாசம் - வீட்ல ஒரு வேளை நல்லா சமைக்கலன்னா என்ன ஆட்டம் போட்டாடா டேய்....! - என்றுதான் நினைக்கத் தோணும்!.

நிதானித்து வயிற்றினை நிரப்பிக்கொண்டு கடைசியாக, சீரகம்,மற்றும் இன்ன பிற வகையறாக்களினை கொண்டு சூடான தண்ணீரோடு வரும் ஜவ்வரிசி பாயசம் தப்பு! தப்பு! ஜவ்வரிசி தண்ணியையும் வயிற்றுக்கு அனுப்பி, இம்மியளவு கேப்பின்றி நிரப்பி விட்டு நேராக படுக்கையறைக்கு வந்து அப்படியே கட்டையை சாய்க்கையில்.....

உறவுகளின் பிரிவு;

தூரமாகிப்போன நட்புகளின் பிரிவு;

வெறுமையான வெளிநாட்டு வாழ்க்கை;

தனிமை தந்த அக்கம் பக்கத்தினர்;


போன்ற எந்த கவலையுமில்லாமல், ஒரே உற்சாகம் தரும் நினைப்பாய் இனிப்பாய் வருவது....

நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!






இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை எந்த திசையையும் குறி வைக்காமல்...!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

"உறவுகளின் பிரிவு
தூரமாகிப்போன நட்புகளின் பிரிவு
வெறுமையான வெளிநாட்டு வாழ்க்கை
தனிமை தந்த அக்கம் பக்கத்தினர்
போன்ற எந்த கவலையுமில்லாமல்
ஒரே உற்சாகம் தரும் நினைப்பாய்
இனிப்பாய் வருவது....
நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!"

ஆயில்யன்,
உங்களை அறியாமல் ஒரு புதுக்கவிதையே எழுதிவிட்டீர்கள்.
பொருத்தமான தலைப்பு கொடுத்துவிட்டால் இது ஒரு புதுக்கவி்தையே!
பொருள் பொதிந்த புதுக்கவிதை!
நீங்களே கவிதை எழுதலாமே. அதை விட்டுவிட்டு ஏன் இரவல் கவிதை இரண்டை (பழைய பதிவுகள்)போட்டிருகிறீர்கள் ?
அழையா விருந்தாளியாக வந்ததற்கு வருந்துகிறேன்.
இருந்தாலும் ஒரு நல்ல வலைப்பதிவை அறிமுகம் கொண்டதற்கு மகிழ்கிறேன்.
அன்பெழிலன்
http://musicalheart-arr.blogspot.com/

said...

//போன்ற எந்த கவலையுமில்லாமல், ஒரே உற்சாகம் தரும் நினைப்பாய் இனிப்பாய் வருவது....

நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!






இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை எந்த திசையையும் குறி வைக்காமல்...!
//

சேம் ப்ளட்...இப்படித் தான் ஏழு வருஷம் டெல்லியிலும், இந்தூரிலும் என் பேச்சிலர் வாழ்க்கை கழிந்தது.

//நாளைக்கு லீவுடோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
//

அந்த ஒரு நாள் லீவு அன்னிக்கு ஏண்டா லீவு விட்ட்டாங்கன்னும் பல நாள் தோணிருக்கு.

பழசை எல்லாம் அசை போட வச்சிட்டீங்க. நல்லாருக்கு உங்க
1ம்இல்லை

said...

நன்றி அன்பெழிலன் (சரியாத்தான் சொல்லியிருக்கேனா?)

//அழையா விருந்தாளியாக வந்ததற்கு வருந்துகிறேன்//

வருத்தங்கள் எதுவும் வேண்டாம்!

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

said...

//சேம் ப்ளட்...இப்படித் தான் ஏழு வருஷம் டெல்லியிலும், இந்தூரிலும் என் பேச்சிலர் வாழ்க்கை கழிந்தது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எல்லாருக்கும் இப்படித்தானா?

/அந்த ஒரு நாள் லீவு அன்னிக்கு ஏண்டா லீவு விட்ட்டாங்கன்னும் பல நாள் தோணிருக்கு.//

ஆமாம் ஆமாம்! நீங்க சொல்வது கரெக்ட்த்தான்:)))

said...

:))

நல்லா எழுதியிருக்கீங்க ஆயில்யன்.

அன்பெழிலன் (அழகான பெயர்!) சொன்னது போல புதிதாக எதையும் நீங்கள் முயற்சிக்கலாம். கவிதையாக்கி அழகு பார்க்க நாங்கள் எதற்கிருக்கிறோம் :))

said...

happy week end.

enjoy maadi

said...

அடடா நல்லா கவிதை எழுதி இருக்கீங்களே!!!
வாழ்த்துக்கள்!

said...

////சென்ஷி said...
:))

நல்லா எழுதியிருக்கீங்க ஆயில்யன்.

அன்பெழிலன் (அழகான பெயர்!) சொன்னது போல புதிதாக எதையும் நீங்கள் முயற்சிக்கலாம். கவிதையாக்கி அழகு பார்க்க நாங்கள் எதற்கிருக்கிறோம் :))///

ரிப்பீட்டே...


இவன்...

''சென்ஷி''பின்னூட்ட ரசிகர்கள் சங்கம்.

தென்கிழக்காசிய கிளை.