குட்டி பாப்பாக்களுக்கும் - கிரீன் கான்செப்ட்!


இயற்கையினோட இயைந்த வாழ்வினை இளம் வயதிலேயே துவக்கிவிட பல பல யோசனைகளோடு களமிறங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் சுற்றுசூழல் தன்னார்வலர்களும் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களிலும், முடிந்த மட்டும் மறு சுழற்சிக்கு உட்ப்படுத்தப்படுகின்ற பொருட்களையோ அல்லது இயற்கைக்கு இனி கேடு விளைவிக்காத வகையிலான பொருட்களையோ பயன்படுத்தும் வகையில் இவர்களின் முயற்சி இருந்து வருகிறது! அதுபோன்ற விஷயங்களில் ஒன்றுதான் இளம் குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிப்பும்!

டயாப்பர்கள் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள் பெரும்பாலும் தற்போது வெகு புழக்கமான விஷயமாக மாறிவிட்டது நம்மூர்களில்! முன்பெல்லாம் அதிகம் சாதாரண காட்டன் துணிகளினையோ அல்லது வேட்டி புடவைகளையோ உபயோகித்து ஒரு முக்கோண வடிவில் டயாப்பர்களாக பயன்படுத்தி வந்த நம்மூர் ஆட்கள் கூட இப்போது வெகு வேகமாக ரெடிமேட் டயாப்பருக்கு மாறிவிட்டனர்! ரொம்ப சிரமமே இல்லாத பணியாகவும் மாற்றம் பெற்றுவிட்டது!

பெரும்பலானோர் பயன்படுத்தும்,எளிதில் மக்கிப்போகாத பொருட்களால ஆன டயாப்பர்களை அவற்றின் உபயோகத்திற்கு பின்னர் கழிவுகளாக வெளியேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது! இந்த குறையினை நிறைவேற்றும் வகையில் புதிதாய் ஒரு கீரின் டயாப்பரினை அறிமுகப்படுத்தியுள்ளனர்! இதை பயன்படுத்திய பின் மிக எளிதிலேயே அப்புறப்படுத்திவிடமுடியுமாம் அது மட்டுமில்லாமல் குறைந்த காலத்திற்குள்ளேயே மண்ணுக்குள் மக்கி சிதைந்துவிடுவதால்,மற்ற பிளாஸ்டிக் லேட்டக்ஸ்களினை போல மண்ணுக்கு மாசு விளைவிப்பதில்லையாம்!(இந்த பொருட்கள் மண்ணுக்குள் மக்கிப்போவதற்கு நெடும் ஆண்டுகள் ஆகுமாம்! ஆனா கீரின் டயாப்பர்கள் ஒரு வருடத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடக்கூடியவையாம்!)

வாழ்க்கையின் தொடக்கம் முதலே வாழ்வது கீரினாக இருக்கட்டும் கிளீனாக இருக்கட்டுமே நம் இளைய தலைமுறை!

அட இதே கான்சாப்ட்டத்தான் நம்ம அம்மா பாட்டிகள் காலத்திலேர்ந்தே இருக்கு! ஆனாப்பாருங்க இப்ப ஊரு உலகமெல்லாம் சுத்தி வரும்போதுமட்டும்தான் நமக்கு ஒரு ஆசை வரும் சரி நாமளும் யூஸ் பண்ணுவோம்னு!

எது எப்படியோ நல்லதா இருந்தா சரி!

வீடியோ காட்சியாக இங்கு

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கோவணம் தான் நல்லது என்ற உண்மை எப்போது தான் இவங்களுக்கு உறைக்குமோ தெரியல. நீங்க பொறுப்புணர்வோடு சொல்லியிருக்கீங்க ;-)

said...

எது என்னவோப்பா? டயப்பரின் விலையை கொஞ்சம் குறைத்தால் நல்லா இருக்கும்
அனுபவம் பேசுது

said...

ஹே இது நல்ல concept !! ஆனால் ரொம்பவும் diaper குட்டிசுக்கு போட வேண்டாம். கொஞ்சம் ப்ரீ யாக விடலாம் . நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டாமா :)