பிரிவு :-(

22 மாதங்கள் அவர்களுடனான நட்பு

முடிவுக்கு வந்தது இந்த மாதத்தில்

எதோச்சையான நட்பு நண்பர்களாய் பின் சகோதரர்களாக்கியது

ஐந்து ஆண்டுகள் அடைக்கலம் புகுந்த அரபு மண்ணிலிருந்தும்,

அங்கு வந்து சேர்ந்த என்னிலிருந்தும்

விலகி சென்றுவிட்டனர்!

அவர்கள் பார்வையிலிருந்தது;

பல ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம் சொந்தங்களை பார்க்க செல்லும் ஆர்வம் உள்ளத்தில் மகிழ்ச்சி!

என் பார்வையில் இருந்துகொண்டிருப்பது;

பிரிந்து செல்பவர்களை அனுப்புகையில் இருந்த சந்தோஷம் சில மணி நேரங்களுக்குப்பிறகு கண்ணீராய்....

செல்லுங்கள் என் ஈழத்து உறவினர்களே

சொல்லுங்கள் எம்மை பற்றி உங்கள் உறவுகளுக்கு

காலம் எத்தனை கடந்தாலும் மீண்டும் காண்போம்

ஆனால் கண்டிப்பாய்

கனவுகளில் மட்டும் அல்ல....

நிச்சயம் நிஜமாய்.....!

:-(


பல முறை என் கணினியில் என் நண்பர்களுக்காய் ஒளி(லி)ர்ந்த பாடலுடன்....!


4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நிச்சயமாக அந்த வேளை வரும்... :)

said...

பு.த.செ.வி

said...

மீண்டும் சந்திப்பு சாத்தியமாகட்டும்.

said...

//காலம் எத்தனை கடந்தாலும் மீண்டும் காண்போம்

ஆனால் கண்டிப்பாய்

கனவுகளில் மட்டும் அல்ல....

நிச்சயம் நிஜமாய்.....!//