இன்னிக்கு சனிக்கிழமை :-)

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுதும் உழைப்பாளர்கள் கொண்டாடி குதூகலிக்கும் மே மாதத்தில், வரும் இரண்டாவது சனிக்கிழமை நேர்மையான வணிகத்தினை வலியுறுத்தும் பொருட்டு கொண்டாப்படும் நாளாக மாறுகிறது!

இன்று ஒரு முக்கியமான நாள் அவ்வளவாக விளம்பரப்படுத்தபடாத,பொதுமக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத நேர்மையான வணிகம் செய்ய உலகம் முழுவதும் வணிகர்களை பொதுமக்களை விழிப்புணர்வு பெறச்செய்யும் நாள்!

உள்ளூர் பொருட்களையே உபயோகியுங்கள் சுற்றுசூழலுக்கும் உபத்திரவம் செய்யாமல் வாழப்பழகிக்கொள்ளுங்கள் என்பதுதான் இந்த வருடத்திய விழிப்புண்ர்வினை ஏற்படுத்தும் அடிப்படை அம்சம்!

உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு உரிய விலை கொடுத்து பெற்றுக்கொண்டு, உற்பத்தியாளர்களும் நுகர்வோர்களும் நலம் பெற்றால் நாடும் நலமோடு வளமாக வறுமையினை தவிர்த்துவிட செய்யும் வழிமுறைகளை எளிதில் அணுகிட முடியும்!

சரி இந்த நாளில் நாம் என்ன செய்ய முடியும் என்று வினா எழுப்புபவர்கள் முடிந்தால் உழவர் சந்தைக்கு போய் வாங்க! நான் அறிந்த வரையில் ஓரளவுக்கு நேர்மையான வணிகம் நடைப்பெறும் ஸ்தலம் நம் தமிழ்நாட்டில் உழவர்சந்தைகளதான்!

விளைவிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக விவசாயிகளே நுகர்வோர்க்கு நேர்மையான விலையுடன் கொடுத்து லாபம் பெற்று கொள்ளும் உழவர் சந்தைகளுக்கு இது வரைக்கும் நீங்கள் செல்லவில்லையென்றால், இன்று மட்டுமாவது சென்று வாருங்களேன்!

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லா இருக்கு :)

said...

//"இன்னிக்கு சனிக்கிழமை :-)"//

அடடா.. காலெண்டர் பாக்கறது மிச்சம்:P

//இன்று ஒரு முக்கியமான நாள் அவ்வளவாக விளம்பரப்படுத்தபடாத,பொதுமக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத நேர்மையான வணிகம் செய்ய உலகம் முழுவதும் வணிகர்களை பொதுமக்களை விழிப்புணர்வு பெறச்செய்யும் நாள்!//

அதானே பார்த்தேன். இன்னிக்கு என்ன நாளுன்னு நம்ம ஆயில்யன் பதிவுக்கு வந்தாலே தெரிஞ்சுக்கலாம்ங்கறது சரியாத்தான் இருக்கு.நன்றிகள் மாம்ஸ்:)

said...

///உழவர் சந்தைகளுக்கு இது வரைக்கும் நீங்கள் செல்லவில்லையென்றால், இன்று மட்டுமாவது சென்று வாருங்களேன்!///

இங்கேருந்து போகணுமா?

said...

///நேர்மையான வணிகம் செய்ய உலகம் முழுவதும் வணிகர்களை பொதுமக்களை விழிப்புணர்வு பெறச்செய்யும் நாள்!///

இப்படி ஒரு நாள் இருக்கிறதே இப்பதாங்க தெரியும்.

said...

//விளைவிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக விவசாயிகளே நுகர்வோர்க்கு நேர்மையான விலையுடன் கொடுத்து லாபம் பெற்று கொள்ளும் உழவர் சந்தைகளுக்கு இது வரைக்கும் நீங்கள் செல்லவில்லையென்றால், இன்று மட்டுமாவது சென்று வாருங்களேன்!//

வாங்க நான் ரெடி. அதை வச்சி சமைக்க ஆள் ரெடி பண்ணி தர முடியுமா யுவர் ஆனர்? :)

said...

// SanJai said...

//

இப்போதைக்கு எங்களால் இந்த செய்தியினை உங்கள் பெற்றோர்களுக்கு தகவலுக்காக அனுப்ப மட்டும் முடியும் ஜட்ஜ்மெண்ட் அட்ஜெர்ண்டூ!

said...

//இப்போதைக்கு எங்களால் இந்த செய்தியினை உங்கள் பெற்றோர்களுக்கு தகவலுக்காக அனுப்ப மட்டும் முடியும் ஜட்ஜ்மெண்ட் அட்ஜெர்ண்டூ!//
எதோ .. அறியாத புள்ள தெரியாம பேசிடிச்சி.. இதை போய் பெரிசா எடுத்துகிட்டு.. ஆளை விடுங்க சாமியோவ்.. :(((

said...

//"இன்னிக்கு சனிக்கிழமை :-)"//

அடடா.. காலெண்டர் பாக்கறது மிச்சம்

said...

///உழவர் சந்தைகளுக்கு இது வரைக்கும் நீங்கள் செல்லவில்லையென்றால், இன்று மட்டுமாவது சென்று வாருங்களேன்!///

இங்கேருந்து போகணுமா?

said...

/
SanJai said...

//விளைவிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக விவசாயிகளே நுகர்வோர்க்கு நேர்மையான விலையுடன் கொடுத்து லாபம் பெற்று கொள்ளும் உழவர் சந்தைகளுக்கு இது வரைக்கும் நீங்கள் செல்லவில்லையென்றால், இன்று மட்டுமாவது சென்று வாருங்களேன்!//

வாங்க நான் ரெடி. அதை வச்சி சமைக்க ஆள் ரெடி பண்ணி தர முடியுமா யுவர் ஆனர்? :)
/

ரிப்பீட்ட்ட்டேேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்

said...

/
SanJai said...

//இப்போதைக்கு எங்களால் இந்த செய்தியினை உங்கள் பெற்றோர்களுக்கு தகவலுக்காக அனுப்ப மட்டும் முடியும் ஜட்ஜ்மெண்ட் அட்ஜெர்ண்டூ!//
எதோ .. அறியாத புள்ள தெரியாம பேசிடிச்சி.. இதை போய் பெரிசா எடுத்துகிட்டு.. ஆளை விடுங்க சாமியோவ்.. :(((
/

இதுக்கும் ஒரு ரிப்பீட்டேேஏஏஏஏய்