Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

வாழைக்காய்!

டிஸ்கி:- சமைத்த பொருட்களின் பெயர்களினை தலைப்புக்களாய் பல பதிவர்களால் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுவிட்ட பிறகு இனி சமைக்கும் பொருட்களின் பெயர்களினை வைத்து ஸ்டார்ட் மியூஜிக் செய்யும் முயற்சியின் வெளிப்பாடாய்...!

>>>>>>>>>

எளிதாய் கிடைக்கக்கூடிய விளை பொருளாக நம் இல்லங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடிந்த வாழைக்காய் முக்கிய விசேஷங்களின் கட்டாயம் சமையலில் சேர்க்கப்படும் ஒரு காய்! கனியாகவும் இருக்கும் - ரொம்ப கனிந்து போச்சுன்னா கண்றாவியாவும் இருக்கும்!

சுமாராக பல வருடங்களுக்கு முன்பு வரை எல்லோர் வீடுகளிலும் கொல்லையில் தோட்டம் போடுவதையும் அதில் வாழை போடுவதையும் ஒரு வழக்கமான பழக்கமாக வைத்திருந்தார்கள் நம் தமிழ் மக்கள்!

இன்றைய காலகட்டத்தில் 2400 சதுர அடி பிளாட்டில் கான்கீரிட் தவிர்த்து மணலை காண்பதே அரிதாகிப்போய்விட்டது! இன்னும் நெருக்கமாய் வீடுகள் அமைந்து, கொஞ்ச நாள் கழித்து அடுத்தவன் வீட்டு மூச்சுக்காற்று என் வீட்டிற்குள் வருகிறதே என்று மொத்தமாய் மூடிவிடும் வாய்ப்பும் அதிகம்!

சரி சிட்டியை விட்டுட்டு கிராமப்புற போகலாம்ன்னு பார்த்தா, அவ்வ்ப்போது வநது கொல்லும் பலத்தமழைக்கு பயந்து வாழைத்தோட்டம் என்ற ஒரு சொல்லினையே சொல்ல தயங்க ஆரம்பித்துவிட்டனர்!

ஏதோ இருக்கும் ஒரு சிலர் மட்டுமே மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு விளைவிக்கும் வாழைகள் அது தரும் கனிகள் தான் இன்றும் இந்த வாழையின் பெயர் மார்கெட்டுக்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்க காரணமாய் அமைந்திருக்கின்றன!

வாழைக்காய் இரும்புச்சத்து மாவுச்சத்து கொண்ட காய் என்பதால் சிறுவயது முதலே உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேணடிய பொருளாக நம் பெரியோர்கள் கட்டளை இட்டுவிட்டனர் போலும்!

ஆங்கில காய்கறிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு நம் சமையலறைகளினை ஆக்ரமித்து இருந்த காய்கறிகளில் வாழைக்காய்,வாழைப்பூ & வாழைத்தண்டு இவைகள்தான் ஸ்பெஷல்!

ஜஸ்ட் வாழைதண்டு போட்டு சாம்பார் வைச்சு,வாழைக்காய் பொரியல் செய்து,வாழைப்பூ போட்டூ கூட்டு வைத்து சமைத்து சாப்பிட்டாலே ஒரு பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரியான பீலிங்க் இருக்கும் அப்படின்னுயாரும் சொல்லலை ஆனா நான் அப்படி தின்னு நிறைய் தடவை ஃபீல் பண்ணியிருக்கேன் இப்ப கிடைக்காம, திங்க முடியாம ஃபீல்பண்றேன்!

சரி எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டங்கள் மட்டும் சொல்றேன்! உங்களுக்கு பிடிச்ச வாழைக்காய் ஐட்டம் எதாவது இருந்தா வாய்ப்பு கிடைச்சா செஞ்சு சாப்பிட்டு வந்து சொல்லுங்க ஒ.கே!



வாழைக்காய் காரக்கறி - அதுவும் கொஞ்சம் காரத்தோட மிளகு சீரகம் போட்டு வாழைக்காயை வில்லை வில்லையா நறுக்கிப்போட்டு செஞ்சா...! ச்சே சான்ஸே இல்லப்பா!( இப்ப அதிகம் உருளைகிழங்கு யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! :-( )

வாழைக்காய் பொறியல் - இது அதிகம் எல்லோருமே சாப்பிட்டிருக்ககூடும்! அழகிய ஸ்கெயர் டைப்புல வெட்டி அதுல தேங்காய் துருவிப்போட்டு.....!

வாழைக்காய் பஜ்ஜி- இது நீளமா வெட்டிபோட்டு பஜ்ஜி போட்டாலும் சரி இல்ல வில்லையாக்கினாலும் சரி சூப்பர் டேஸ்ட் அத்தோட கொஞ்சம் தேங்காய் சட்னி சைடுல உட்டுக்கிட்டா சூப்பரோ சூப்பர்! (வெளியே கடையில செக்கசெவேல்ன்னு விக்கிற பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பு!)

கூடுதல் தகவல்:-

தமிழ் பெயர்:- வாழைக்காய்
ஆங்கில பெயர்:- Plantain, green
அறிவியல் பெயர்:- Musa sapientum

வாருங்கள்..! சைவ உணவு வாரம் கொண்டாடுவோம் (மே 19 - மே 25 )

கொஞ்சமாய் கடினமான விஷயம் தான்!
ஒரு வாரத்திற்கு மட்டும்
21 வேளை மட்டும் உட்கொள்ளும் உணவில்,
தயவு செய்து அசைவம் சேர்க்காமல்,
அசைவத்திற்கு பயன்படும் விலங்குகளை,
ஒரு வாரத்திற்கு மட்டும் வாழ விட்டு பாருங்களேன்!

வாழ்க்கை ஒரு முறைதான்!
அதில் வாழும் முறைகள் பலவிதம்,
ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில்,
பரிவு நன்றி இரண்டையும் எப்போதும் காட்டவிட்டாலும் கூட,
இந்த ஒரு வாரத்திற்கு காட்டுங்களேன் தினமும் உணவாகும் பிராணிகளிடம்!
துடிக்க துடிக்க கொன்று பின் உண்பதை இந்த ஒரு வாரத்துக்கு துறந்து விட்டுப்பாருங்களேன்!

(உலகம் முழுவதும் பரவலாக மக்கள் இன்று மே 19ந்தேதி முதல் 25ந்தேதிவரையிலும் சைவ வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது!)