ஸ்டாப் தம்!

மே 31 சனிக்கிழமை உலக முழுவதும், சிகரெட் குடிக்காதீங்கப்பா, அதுவும் வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் வாலிப பசங்களே நீங்க இந்த மோசமான பழக்கத்துக்கு அடிமையாகிடாதீங்கன்னு வற்புறுத்தும் விதமாக புகை பிடிக்ககூடாதுங்கறத ஞாபகத்துல வைச்சிக்கணும்ங்கற மாதிரி இன்றைய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது!

சிகரெட் சில மணித்துளிகள் குடிப்பதால் உண்டாகும் பலனை விட, அதை விட்ட அடுத்தடுத்த நிமிடங்களில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள்!

சிகரெட் பிடிப்பதை விட்ட 20 நிமிட நேரத்திற்குள்

ரத்த அழுத்தம் சீராகும்.
நாடித்துடிப்பு சாதரணமாகும்.
கை மற்றும் பாதங்களில் உடல் வெப்பம் சீராகும்.

எட்டு மணி நேரத்திற்குப்பிறகு,

ஏற்கனவே ரத்ததில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு நிக்கோடின் குறைய தொடங்கி பழைய நிலைமைக்கு திரும்ப ஆரம்பிக்கிறது!
ரத்ததில் ஆக்ஜிஜனின் உயர்ந்து சாதரண நிலைக்கு வருகிறது!

24 மணி நேரத்திற்கு பிறகு,

ஹார்ட் அட்டாக் ரிஸ்கிலிருந்து மெல்ல விடுபட ஆரம்பிக்கிறீர்கள்.
நுரையிரலீல் படர்ந்திருந்த விஷப்பொருட்கள் மெல்ல காலியாகின்றன!

48 மணி நேரத்திற்கு பிறகு,

உண்ர்வு நரம்புகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வாசனை மற்றும் சுவையுணர்வினை உணர முடியும்!

72 மணி நேரத்திற்கு பிறகு,

மூச்சு விடுதல் மிகச்சுலபமானதாக தோன்றும்
உடல் சக்தி வலுப்படும்.

2- 12 வாரங்களில்
ரத்தம் ஓட்டம் சும்மா அந்த மாதிரி இருக்கும் எப்பவுமே ஃப்ரஷா இருக்கறாப்ல ஃபீல் பண்ணுவீங்க!

இப்படியே நிறைய நல்ல விஷயங்கள் இருக்குங்க இதெல்லாம் ரொம்ப சிகரெட் குடிக்கிறவங்களுக்கு விட்டுடலாம்னு மனசு ஓரத்துல கொஞ்சமா எண்ணத்தை விதைக்கிற முயற்சிதான்!

இது நம்ம ஊரு நியூஸ்!

வரும் 2010ஆண்டிற்க்குள் சென்னை டெல்லி,மும்பை அகமதாபாத் ஆகிய நான்கு நகரங்களிலும் புகைப்பிடித்தலை தடைச்செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்போகிறதாம்! காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிப்பதற்குள் இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

அமைதியாக சொல்லி புரியவைப்பது,
அதட்டிச்சொல்லி புரியவைப்பது,
அதிகாரமாக சொல்லி புரியவைப்பது,
என வித விதமான வடிவங்களில் என்னதான் மெசேஜ் சொன்னாலும்,
மக்களே நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான்!
அவ்ளோதான் சொல்லலாம்!

( பய புள்ள என்னாமா ஃபீல் பண்ண வைச்சிருச்சுன்னு டென்ஷன்ல இப்ப போய் சிகரெட் பத்தவைக்கவேணாம்! அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!)

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்களுக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சிகரெட் குடிக்கிறதை நிறுத்தேன்யா.

(இன்னும் 18 நிமிஷம்தான் இன்னிக்கு(30-5)

said...

///அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!///
இவ்வளவு தீமைகள் இருக்கும் போது இன்னிக்கு மட்டுமில்ல என்னைக்கு சிகரெட் குடிக்கவே, மது அருந்தவோ மாட்டோம்னு உறுதியோடு இருப்போம்.

said...

//ILA said...
உங்களுக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் சிகரெட் குடிக்கிறதை நிறுத்தேன்யா.

(இன்னும் 18 நிமிஷம்தான் இன்னிக்கு(30-5)
///
இது ஒத்துக்க முடியாது 31.05.08 முழுநாளும் நிறுத்தணும்

நீங்க யூத் ரேஞ்சுல இருந்தீங்கன்னா நான் சொல்றத கேப்பீங்கன்னு நம்புறேன் :)))

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு!)

said...

//தமிழ் பிரியன் said...
///அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!///
இவ்வளவு தீமைகள் இருக்கும் போது இன்னிக்கு மட்டுமில்ல என்னைக்கு சிகரெட் குடிக்கவே, மது அருந்தவோ மாட்டோம்னு உறுதியோடு இருப்போம்.
///

வெரிகுட் தமிழ் பிரியன் !!!

எதோ இதுக்கப்புறமாவது விடணும்னு நினைப்பு வந்ததே :)))))))

said...

//அதை விட்ட அடுத்தடுத்த நிமிடங்களில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள்!
//

அப்ப என்னை மாதிரி நிறைய முறை தம்மை விட்டவங்களுக்கெல்லாம் நிறைய நன்மையா :))

ஆமாப்பா..விட்ருங்க..இன்னிக்கு மட்டுமாவது..முடிஞ்சா எப்பவும்..Be Careful..நான் எனக்கும் சேர்த்து சொன்னேன் :))

said...

நான் சிகரட் குடிப்பதில்லை, ஆனா பக்கத்தில இருப்பவங்க விடும் சுருளே போதுமே

said...

////ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!///
இவ்வளவு தீமைகள் இருக்கும் போது இன்னிக்கு மட்டுமில்ல என்னைக்கு சிகரெட் குடிக்கவே, மது அருந்தவோ மாட்டோம்னு உறுதியோடு இருப்போம்.
///

வெரிகுட் தமிழ் பிரியன் !!!

எதோ இதுக்கப்புறமாவது விடணும்னு நினைப்பு வந்ததே )))))////

ரிப்பீட்டேய்............

said...

/// நிஜமா நல்லவன் said...

////ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
///அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!///
இவ்வளவு தீமைகள் இருக்கும் போது இன்னிக்கு மட்டுமில்ல என்னைக்கு சிகரெட் குடிக்கவே, மது அருந்தவோ மாட்டோம்னு உறுதியோடு இருப்போம்.
///

வெரிகுட் தமிழ் பிரியன் !!!

எதோ இதுக்கப்புறமாவது விடணும்னு நினைப்பு வந்ததே )))))////

ரிப்பீட்டேய்............ ////
தம், தண்ணி அடிக்காத ஒரு நல்ல பிள்ளை அட்வைஸ் பண்ணினா கேளுங்கப்பா...... இப்படியா கலாய்ச்சு கொடுமை பண்ணூவது......
என்னது சின்னப்புள்ளைத்தனமா.... ;)