ஓ மனமே...! ஓ மனமே...! - SUNDAY SONG

onமழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எறிந்தது யார்?

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..

கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்

கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..

இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே ஏணியடி..

இங்கயும் போய் கேட்கலாம் இந்த பாட்டை!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சன்டே ஸ்பெஷல் ன்னு நினைச்சி வந்தேன். இப்படி ஒரு பாட்டு போட்டு பீல் பண்ண வச்சிட்டீங்களே?

said...

ரொம்ப நல்ல பாட்டு ஆயில்யன்...