வாருங்கள்..! சைவ உணவு வாரம் கொண்டாடுவோம் (மே 19 - மே 25 )

கொஞ்சமாய் கடினமான விஷயம் தான்!
ஒரு வாரத்திற்கு மட்டும்
21 வேளை மட்டும் உட்கொள்ளும் உணவில்,
தயவு செய்து அசைவம் சேர்க்காமல்,
அசைவத்திற்கு பயன்படும் விலங்குகளை,
ஒரு வாரத்திற்கு மட்டும் வாழ விட்டு பாருங்களேன்!

வாழ்க்கை ஒரு முறைதான்!
அதில் வாழும் முறைகள் பலவிதம்,
ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்து வாழும் வாழ்க்கையில்,
பரிவு நன்றி இரண்டையும் எப்போதும் காட்டவிட்டாலும் கூட,
இந்த ஒரு வாரத்திற்கு காட்டுங்களேன் தினமும் உணவாகும் பிராணிகளிடம்!
துடிக்க துடிக்க கொன்று பின் உண்பதை இந்த ஒரு வாரத்துக்கு துறந்து விட்டுப்பாருங்களேன்!

(உலகம் முழுவதும் பரவலாக மக்கள் இன்று மே 19ந்தேதி முதல் 25ந்தேதிவரையிலும் சைவ வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது!)

15 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:) :(

Anonymous said...

இப்படிக்கூட இருக்கா, தகவலுக்கு நன்றி

said...

ஒரு சிலருக்கு அசைவம் சாப்பிடலைனா கை எல்லாம் நடுங்க ஆரம்பிசுடுமாம் :-)) அவங்கெல்லாம் கடை பிடிக்க வாய்ப்பே இல்லை. எதோ இந்த வாரத்தால இன்னைக்கு போற உயிர் ஒரு வாரம் தள்ளி போகும்.

said...

தகவலுக்கு நன்றி ஆயில்யன்,

(அது என்ன எல்லோரு "ஆயில்"னு செல்லமா கூப்பிடறாங்க!!)

said...

//கிரி said...
எதோ இந்த வாரத்தால இன்னைக்கு போற உயிர் ஒரு வாரம் தள்ளி போகும்.
//
ம் அவ்ளோதான் :(

said...

//தமிழ் பிரியன் said...
:) :(
//

தகவல் கொடுத்ததுக்கு :)
இருக்குணும்னு நினைச்சா :( இருக்கா கவலைப்படாதீங்க ஒரு வாரம் தான் ஒன்லி 7 நாள்தான் :))))

said...

// சின்ன அம்மிணி said...
இப்படிக்கூட இருக்கா, தகவலுக்கு நன்றி
//

:)

said...

//புதுகைத் தென்றல் said...
தகவலுக்கு நன்றி ஆயில்யன்,//

நன்றி :)

//
(அது என்ன எல்லோரு "ஆயில்"னு செல்லமா கூப்பிடறாங்க!!)
//

அது செல்லமா இல்ல ”கள்ள”மா கூப்பிடுறாங்க ஒரு நாளைக்கு இருக்கு அதுக்கு வேட்டு :))))

said...

ஹிஹி...

said...

தல, முயற்சிசெய்கிறேன்...முட்டையாவது சாப்பிடலாம்ல? அது சைவமா? அசைவமா?

said...

//இளவஞ்சி said...
ஹிஹி...
//

என்ன சிரிப்பு!???

அதான்! போனவாரம் ஊருக்குப்போய் பிரியாணி புல் கட்டு கட்டியாச்சுல்ல ஸோ இந்த வாரம் நோ அசைவம் ஒ.கே :))))))

said...

//கிரிக்கெட் ரசிகன் said...
தல, முயற்சிசெய்கிறேன்...முட்டையாவது சாப்பிடலாம்ல? அது சைவமா? அசைவமா?
/

தல சாப்பிடக்கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சுல்ல அப்புறம் முட்டையா இருந்தா என்ன? பெட்டை கோழியா இருந்தா என்ன?
தொடப்படாது தொடவேப்படாது :))

said...

இந்த ஆட்டத்துக்கு நான் வரலேப்பா, சமையலில் அசைவம் இல்லாட்டாலும் கோழி அல்லது ஆடு படம் இருந்தாத் தான் சாப்பிடுவேன்,

வேணும்னா ஒவ்வொரு வெள்ளியும் வச்சுக்குவோம்.

said...

//கானா பிரபா said...
இந்த ஆட்டத்துக்கு நான் வரலேப்பா, சமையலில் அசைவம் இல்லாட்டாலும் கோழி அல்லது ஆடு படம் இருந்தாத் தான் சாப்பிடுவேன்,

வேணும்னா ஒவ்வொரு வெள்ளியும் வச்சுக்குவோம்.
//

மக்களே..! நீங்களே பார்த்துக்கோங்க!
என்னா டெக்னிக்கா டிமிக்கி கொடுக்கறாருன்னு! :) (வேணும்னா வெள்ளிக்கிழழை வைச்சுக்கலாமாமாம்!)

said...

//அசைவத்திற்கு பயன்படும் விலங்குகளை,
ஒரு வாரத்திற்கு மட்டும் வாழ விட்டு பாருங்களேன்!//

:)))))