கோவில் இல்லாத ஊரில்.....

உள்ளூர்களில் அதிகம் அலைய வேண்டிய வாய்ப்பின்றி, அதிகமாய் கோவில்கள் அனைத்துமே பலருக்கு பல சமயங்களில் மன நிம்மதியினை அளிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது!

இதுவே வெளி மாநிலங்களுக்கு சென்றாலோ அல்லது வெளிநாடுகளுக்கு சென்றாலோ பலருக்கும் இது போன்ற வாய்ப்புக்கள் எளிதில் கிடைப்பதில்லை, பெரும்பாலும் தனிமையில்தான் வாழ்ந்து வரும் அயலக வாழ்வில் இது போன்ற கோவில்கள் பொது இடங்களாக பலரையும் சந்திக்க வைக்கும் பலரோடும் அறிமுகம் ஏற்படுத்திக்கொள்ளும் நல்லதொரு இனிய சூழலினையே கண்டிப்பாக கொடுக்கும்!

ஒரு முறை நான் புனேவில் இருந்தப்போது, தமிழ் புத்தாண்டு தினத்தில் கோவிலுக்கு போக முடிவெடுத்திருந்தோம்! அங்கு நிறைய கோவில்கள் விநாயகர் கோவில்கள் இருந்தாலும் கூட,நகரிலிருந்து வெளியேறி சற்று தொலைவிலேயே ஒரு முருகன் கோவில் சிறு குன்றின் மீது இருப்பதை அறிந்து அங்கு சென்றிருந்தப்போது, அன்று தமிழ்புத்தாண்டும் என்பதால் பெரும்பாலான தமிழ்நாட்டுமக்களின் வரவில் கோவில் நிறைந்திருந்தது! எத்தனையோ தமிழ்நாட்டு மக்கள் பரிவுடனும் பார்த்து விசாரித்து சென்ற அனுபவம் மெல்ல எட்டிப்பார்க்கும் இந்த நேரத்தில் இதே சூழலை கொண்டுவரக்கூடிய ஒரு சேதியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

மிக அழகான வடிவமைப்பாக காணும்போதே மனதுக்கு மெல்லிய மகிழ்ச்சியினை தரும் அழகிய முன் கோபுர வாயில்

அரிசோனா மாநிலத்தில் முதல்முறையாக தென்னிந்திய சிற்பக்கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கோவிலாக காட்சியளித்துக்கொண்டிருக்கும், விநாயகர் கோவில் கோவிலினை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விநாயகர் ஆலயம் அரிசோனா மாகாணம்

தாயகத்தை விட்டு பிரிந்து அயலகம் வந்து சேரும் பெரும்பாலனவர்களின் தனிமை உறவுகளின் பிரிவு இவைகளினை கண்டிப்பாய் இது போன்றதொரு இடம் இறைவன் குடிக்கொண்டிருக்கும் இடமாக கோவில் அமைதியினையும் மனமகிழ்ச்சியினையும் கண்டிப்பாய் பெற்று தரும் என்பது நிச்சயம்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆமாம்,நிச்சயமாக.

said...

குட், நல்ல விஷயம் தான்!!!

said...

கோயில் இல்லாத ஊருக்கு குடிபோகாதே என்று அதனால் தான் சொன்னாகள் போலும்.

என் தோழி ஜப்பானிலிருந்த போது
இந்துக்கோயில் ஒன்று கூட இல்லாததால் மனது வெருமையாக இருப்பாதாக கூறுவார்.