நம்மளோட நிலைமை;
பூமியோட நிலைமை;
நாட்டோட நிலைமை;
இதையல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்தா கஷ்டமாத்தான் இருக்கு! :-(
எவ்ளோ பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க! உங்க லைப் ஸ்டைல மாத்திக்கோங்கப்பா! மாத்திக்கோங்கப்பான்னு, ஆனாலும் அக்கம்பக்கத்தில் கடனை வாங்கியாவது வண்டி வாங்கி ஊர சுத்த சொல்லுது மனசு!
இப்ப வண்டி வாங்குறதுக்கு கடன் கொடுத்த காலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இனி பெட்ரோல் வாங்குறதுக்கு பங்க்ல பாங்க் ஒபன் பண்ணி கடன் கொடுக்கற நிலைமை வர்ற வரைக்கும் ஆடுங்க மக்கா ஆடுங்க அப்படின்னுத்தான் சொல்லத்தோணுது! நம்ம ஆளுங்க விதவிதமான ஸ்பீடுகளில் & ஸ்டைல்களில் வண்டி மாடல் பார்த்து பார்த்து வாங்கறதுல்ல ஆர்வமா இருக்கோம்!
பெரிய பெரிய நாட்டுல இருக்கறவங்களெல்லாம் இப்ப சைக்கிள் சவாரி தான் அதிகம் செய்யிறாங்க! சைக்கிள் சவாரிகள் அதிகமான அதுக்கேத்த மாதிரி பார்க்கிங், பிராப்ளங்களையும், சைக்கிளை பத்திரமாவும் பாதுகாத்து அதே சமயத்தில் நல்ல இடவசதியோடயும் ரொம்ப ஈசியாக்கிற மாதிரி விதவிதமாவும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க!
எது எப்படியோ போனாலும் ஒரு காலகட்டத்தில நாமும் இந்த மாதிரி ஒரு நிலைமைக்கு கண்டிப்பா வரப்போற நாளும் வரக்கூடும்ல அப்ப நமக்கும் இது மாதிரியான ஒரு ஏற்பாடும் வேண்டியிருக்கும்!
அதனாலதான் மக்களே! இப்பவே வெளிநாட்டுக்காரனுங்க ஐடியாவை மேலோட்டமா நான் சொல்லிடுறேன்! அப்புறம் உங்க திறமையில இத நீங்க நல்ல டெவலப் பண்ணி வைச்சீங்கன்னா வரும் கால வரலாற்று புத்தகத்தில உங்க பேர நல்ல அழுத்தமா பதிக்க முடியும்!
1.வண்டியை அப்படியே மேலாக்க நிப்பாட்டிடணும்
2.முன்னாடி சக்கரத்தோட லாக் ஆகிடுடற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு அது அப்படியே ஆட்டோமேடிக்கா லாக் பண்ணிக்கும்!
3.இப்ப நீங்க ஸ்டார்ட் பண்ணனும்
4.இப்ப நீங்க ஒரு கைரேகை வைக்கணும் ( இது திருட்டு போகாம இருக்க)
5.ஒ.கே பண்ணுனா வண்டி சர்'ருன்னு மேலே போயிடும்! (ஒரேடியா இல்லைங்க கொஞ்ச தூரத்துக்குத்தான்!)
குறிப்பு :- ”நான் அப்பவே சொன்னேன்ல” இது என்னோட ஹிஸ்டரி ரெபரன்ஸ்க்கு! :-)
5 பேர் கமெண்டிட்டாங்க:
ஒ.கே பண்ணுனா வண்டி சர்'ருன்னு மேலே போயிடும்! (ஒரேடியா இல்லைங்க கொஞ்ச தூரத்துக்குத்தான்!)
:-))))
in future in our country face the problem soon that time bike rate very cheep compare to cylce rate.
and New Marriage means mappaniki pudu cylce vannki theranum.. :-)))
puduvai siva.
ஒரு காலத்தில் விமானத்துல போறது கர்வமான விஷய்ம்.
அப்புறம் அதுவே ஐய்யோ உன் மாப்ப்ளை விமானத்துலையா போறாருன்னு விகடனில் ஜோக் போடுவும் அளவுக்கு விமான நிலையங்கள் பஸ் ஸ்டாண்ட் மாதிரி ஆகி இருக்கிறது.
இப்போது வண்டி வைத்திருப்பது சாபம் தான். பெட்ரோலுக்கான காசு கம்பெனி கொடுத்தால் சரி. இல்லாட்டி
பர்சில் பெரிய ஓட்டை தான்.
நீங்க சொல்ற நாளும் வரும். :)))
\\பங்க்ல பாங்க் ஒபன் பண்ணி கடன் கொடுக்கற நிலைமை \\
இந்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை:))
\\ஒ.கே பண்ணுனா வண்டி சர்'ருன்னு மேலே போயிடும்! (ஒரேடியா இல்லைங்க கொஞ்ச தூரத்துக்குத்தான்!)\\
ROTFL:))
சிந்திக்க வைக்கும் கருத்துக்களை கூட , நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் உங்கள் திறனுக்கு என் பாராட்டுக்கள்!!
//சிந்திக்க வைக்கும் கருத்துக்களை கூட , நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக சொல்லும் உங்கள் திறனுக்கு என் பாராட்டுக்கள்!!/
repeatu repeatu
//பெரிய பெரிய நாட்டுல இருக்கறவங்களெல்லாம் இப்ப சைக்கிள் சவாரி தான் அதிகம் செய்யிறாங்க! சைக்கிள் சவாரிகள் அதிகமான அதுக்கேத்த மாதிரி பார்க்கிங், பிராப்ளங்களையும், சைக்கிளை பத்திரமாவும் பாதுகாத்து அதே சமயத்தில் நல்ல இடவசதியோடயும் ரொம்ப ஈசியாக்கிற மாதிரி விதவிதமாவும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க!//
உண்மைதான் இரண்டாக மடித்து பஸ்ஸிலும் ட்ரெயினிலும் கொண்டுபோகக்கூடிய சைக்கிள்களும் வந்துவிட்டன.
நல்ல பதிவுக்கு நன்றி!
Post a Comment